Friday, September 29, 2006

@ 5:21 PM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்


விழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் திரைக்கு பின் நடப்பவைகளை பார்ப்பதே ஒரு கிக்'தான். இதோ "எக்மோர் சியர்ஸ் பார்" வழங்கும் வலைப்பதிவர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் . விழாவின் போது விருது பெற வந்திருந்த பதிவர்களின் சுவாரஸ்யமான சந்திப்பு.

மணி :05.48.45
வர: ஏய் எல்லாரும் வந்தாச்சா ? லக்கி வாசல்ல நிக்காதிங்க உள்ள வாங்க . இப்பதான் போன் வந்துச்சு "உங்கள தூக்கிட்டு போயி ஒரு வாரம் மூச்சு திணர திணர வெளுக்க" ஒரு குரூப் அலையுதாம்.

முத்து: அதாங்க நானும் சொல்றேன் ,

என்றதும் லக்கி அவரை கலவரமாக பார்க்கிறார்.

வர: என்ன தலைவா , நீங்களே "நம்ம" லக்கிய இப்படி சொல்லிட்டீங்க. "உள்குத்து"தான் குத்திட்டு இருந்திங்க, "இப்ப வெளிகுத்து குத்தவும் ஆள் செட் பண்ணிடிங்களா?

முத்: ஏய் ஏய் இல்லப்பா , நான் சொல்லவந்தது எனக்கும் போன் வந்துச்சு , அதான் உள்ள வர சொன்னேன்

வர: சரி நீங்க விழா ஏற்பாடெல்லாம் சரியான்னு பாருங்க . நான் இப்ப வந்துடுறேன்

முத்: வரவனை "அதுல்லாம்" ராத்திரி பாத்துக்குவோம் இப்பவே ஆரம்பிச்சுடாதிங்க , என பாரா உஷார் விசிலடித்தார்.அவர் சொன்ன பிறகுதான் எனக்கும் கட்டிங்போடும் மூடே வந்தது.வூடு ஜுட்

மணி: 06.12.31

முத்து : வரவனை எங்கய்ய போயி தொலைஞ்சிங்க , நீங்க பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டிங்க

வர : (பல்லை இளித்தபடி) சும்மாதான் அப்படியே வெளியே.......

முத்: என்ன சரக்கடிச்சிங்க ? இந்த நாத்தம் நாறுது

வர: அது வந்துங்க.....

முத்து: (மறித்து) வேணாம் இங்கையே ஒரு ஆறு பதிவு போட ஆரம்பிச்சுடுவிங்க விடுங்க அந்த மேட்டர, சரி போகும் போது டிரஸ்சிங் ரூமை பூட்டிட்டு போனிங்களா?

வர: ஆமா என் சூட்கேஸ் இருக்கு அதுனாலதான் பூட்டினேன்

முத்து: அது சரி, லைட்ட ஆஃப் பன்னிட்டுதானே போனிங்க ,ஆனா நீங்க பூட்டுனது பாத்ரூமை , உள்ள பாலா இருக்குறாரு . பார்க்காம பூட்டிட்டு போயிட்டிங்க. பாவங்க அவரு.

வர: (குஜாலாகி) மாம்ஸ் இங்கதான் இருக்காரா ஆஹா !

டாய்லட் வாசலில் லக்கி நிற்கிறார், ம்ம் ம்ம் என்று உம் கொட்டியபடியே நின்றவரிடம் யாரிடம் பேசிகிட்டு இருக்கிங்க என்றேன் . பாலாவிடம் என்றார். கையிலிருந்த சாவியால் கதவை திறந்து விட்டேன். வெளியே வந்த பாலா யாரையும் கண்டுகிடாமல் ஈசானிய மூலையில் நின்று கொண்டு வழக்கம் போல் "கடலை வறுவல் செய்வது எப்படி " என்று "யாரிடமோ" விளக்கிகொண்டிருந்தார்.

லக்கி : ச்சை நீங்க தாழ்ப்பாள் போட்டு போயிட்டிங்களா , சரி ஒரு கம்பெனிக்கு பேசிக்கிட்டு இருப்போம்ன்னு பேசிக்கிட்டு இருந்தேன் இப்பதான் தெரியுது, இவ்வளவு நேரம் வேற யார்கூடவோ பேசிகிட்டு இருந்திருக்காருன்னு, என லக்கி பாலாவை பார்த்து டென்சனானார்.

வர: வுடுங்க லக்கி மாம்ஸ் " எப்பவுமே இப்படித்தான்"

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வாசலுக்கு போனால், பொட்"டீ"க்கடை, குழலி உள்ளிட்ட கீழை மார்க்சீய ச்சை தூரக்கிழக்கு நண்பர்கள் விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினார்கள். கானா பிரபா, பேஃன்ட் போட்டிருந்தாலும் கையில் ஒரு சிறுபையில் திருநீறு வைத்துக்கொண்டு எதிர்வருபவர்களின் நெற்றியில் பூசிவிட்ட படி இருந்தார். பக்கத்தில் ஒருவர் குதிரையில் வந்து இறங்கினார் யார் என்று பார்த்தால் சின்னக்குட்டி. நட்சத்திர வாரம் கொண்டாடி கொஞ்சம் ஆள் பூரிப்பில் இருந்தார்.

முத்துக்குமரன்,பரஞ்ஜோதி எல்லாம் ஒரு கும்பலாய் கும்மி அடித்துகொண்டிருக்க, அவர்களுக்கு அனானி ஆஃப்சனின் நன்மை தீமைகளை விளக்கிகொண்டிருந்தார் லக்கி.

மாம்ஸ் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்

பாலா: மாப்ளை ஒரு நிமிசம் இங்க வா ,

வர: என்ன மாம்ஸ் பங்சன் ஆரம்பமாக போகுது மூணாவது ஆள் நீயிதான் இன்னும் இங்க திரியுற

பாலா : பவுடர் ஒகே யா, சொல்லு என்று கண்ணைமூடி முகம் காட்டினார்

வர : கன்னத்தில் திருஷ்டி பொட்டு ஒன்னுதான் பாக்கி. மாம்ஸு போயி மொகத்த கழுவிட்டு மேடைக்கு போங்க. இவ்வளவு பவுடரு அடிச்சுகிட்டு போனா நீதான் அனானி சங்க தலைவன்னு நினைச்சுக்க போறய்ங்க என்றேன்

பால: அப்ப பொட்டு வச்சுகிட்டு போகனுங்கிற ஒகே, என்றபடி நகல வரவனை தலையில் அடித்து கொள்கிறார்

வர: இன்னைக்கு எத்தனை பேருக்கு "இருள்" அடிக்க போகுதோ

டோண்டு மற்றும் குழுவினர் உள்நுழைய அவசரமாக யாரோ பின்வழியால் குதித்து ஓடுவது தெரிகிறது.

(இந்த டரியலும் தொடரும்)

@ 12:41 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

எதிர்பார்த்ததைவிட அதிக கும்மிகள் அடிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு வெற்றிகரமான பதிவு என்றே கொள்ளலாம். அதே வேளையில் நான் குறிப்பிட்டுள்ள பாலா,பிரியன், செந்தழல் ரவி ஆகியோர் எதிர்வினை ஆற்றாத காரணத்தால் வரும் பதிவுகளில் அவர்கள் மீதான காலய்த்தல் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் ( இதில் பாலா எனது பதிவை படித்து விட்டு "வக்காலி மாப்ளே உனக்கு இருக்கு" என்று கறுவியதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது ) சரி இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் பா.க.ச அங்கத்துவராக முடியுமா?

போட்டி முடிவுகளுக்கு போவோமா........

1) முதன் முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்து எஸ்.வி.ரங்காராவ் & எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இரு பட்டங்களை தக்க வைக்கிறார் முத்து(தமிழினி)

2) லக்கிலுக் - தனக்கு வழங்கபட்ட கமலஹாசன் என்கிற பட்டத்தையும் இதயக்கனி என்கிற விருதையும் பெருமிதத்தோடு வாங்கி செல்கிறார்

3) எஸ்.பாலாபாரதி - (.......சிரிப்பை அடக்கமுடியவில்லை) "ஜெமினி" பட கலாபவன் மணி ஸ்டைலில் அனகோண்டா போல் வந்து விருது வாங்குகிறார்.

4) பிரியன் - தமிழ்படங்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல் கோட் சூட்டில் வந்து விருது வாங்கி பார்வையாளர்களை பார்த்து கை அசைத்து செல்கிறார்

5) செந்தழல் ரவி - MARRY ME என்கிற எழுத்துள்ள பனியன் போட்டு பெர்முடாஸுடன் மேடைக்கு வருகிறார். வருது ச்சை விருது வாங்கி "பெண்கள்" பக்கம் பார்த்து கையசைத்து, மாதவன் & "தென்னகத்து ஜேம்ஸ் பான்ட்" ஜெய்சங்கர் ஆகிய விருதுகளை வாங்கி செல்கிறார்

6) டோண்டு மெல்ல மேடையேறி வருகிறார். ஓம்காளி, ஜெய்க்காளி என்று "சாமி" வந்தவர் போல் ஒருவர் பார்வையாளர் வரிசையில் இருந்து கத்திக்கொண்டு குதிக்கிறார். SCREAM பட வில்லன் கெட்டப்பில் ஒருவர் அவரைனோக்கி ஓடிவருகிறார்.இருவரையும் அமரவைக்க காவலர்கள் படாத பாடு படுகின்றனர்.கடைசியில் அவர்கள் இருவரும் முறையே ம்யூஸ் மற்றும் விடாது கருப்பு என்று தெரியவருகிறது.ஜெமினி கணேசன் & சாவலே சமாளி பட்டங்களை பெற்று கேண்டின் நோக்கி மெல்ல நடை போடுகிறார்

( டரியல் தொடரும் )

Wednesday, September 27, 2006

@ 1:03 PM எழுதியவர்: வரவனையான் 42 மறுமொழிகள்

"தத்துவ தரிசனம்" என்பார்களே அது போல் வாசகர்களுக்கு படிக்கும் பொழுது உள்ளுக்குள் சில மாற்றங்கள் நிகழம்,அது எந்த எழுத்தாளர்களை படிக்கிறார்கள் என்பதை பொறுத்து மாறும். உதாரணமாய் எனக்கு எஸ்.ராமகிருஷ்னனை படிக்கும்போது முதுகில் வெயில் அடிப்பதை போல் உணர்வேன். அதுபோல் ஜெயமோகனை படித்தால் காட்டுக்குள் ஆந்தைகளின் அலறலோடு படிப்பதுபோலும் மை டியர் சாருநிவேதிதாவை படித்தால் ஒரு நல்ல டாஸ்மார்க் பாரில் உட்கார்ந்து இருப்பதை போன்றும் தோன்றும் இதே விடயத்தை நமது வலைப்பதிவர்களிடம் பொறுத்தி பார்க்கும் பொழுது நினைவுக்கு வருவது சினிமா நடிகர்கள். ஆகவே நம் பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டபெயர் அளிக்கலாம் என்றும் இதில் நான் மட்டுமல்லாமல் அனைத்து வலைப்பதிவர்களும் பங்கு பெறலாம். ஆனால் தாங்கள் வைத்த பெயரையும் அதற்கான காரணத்தையும் சிறு அளவில் எனக்கு பின்னூட்டமிட்டால் உங்கள் பெயரில் ( அனானிகளும் வரவேற்க படுகிறார்கள்) எனது பதிவில் இனைப்பேன். முதல் கும்மாங்குத்தை ஆரம்பிக்கிறேன்.


முத்து(தமிழினி) - எஸ்.வி.ரங்காராவ் ( எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதால்,டோண்டுவிலிருந்து போலி டோண்டு வரை "எல்லாருக்கும் நல்லன்" அடுத்தவர்களின் கருத்துகளுக்கு இவர் மதிப்பளிக்கும் தன்மை மிகச்சிறந்த நற்பண்பு )

லக்கிலுக் - கமலஹாசன் (உபயம்: தம்பியுடையான்) இவருக்கு அவர் பெயர் சூட்டியது மிக பொருத்தமாய் உள்ளது(அடிக்கடி கெட்டப் மாற்றுவதாலும் ). வயது மூத்த வலைபதிவாளர்களின் சார்பாய் நான் கேட்க விரும்புவது "தம்பி நீங்க நல்லவரா கெட்டவரா?" லக்கியிடம் நான் வியக்கும் விடயம் அவரின் கருத்துகளுக்காக போராடும் குணம்.

எஸ்.பாலபாரதி - கலாபவன் மணி (சமயத்தில் வில்லனாகவும், ஹிரோ போல் பதிவிட்டாலும் பா.க.ச'வின் அட்டகாசத்தால் காமெடியனாக்கபடும் பரிதாபத்துக்குரிவர்) ஒருவரிடம் முதல் சந்திப்பிலேயே இவர் கொள்ளும் சினேகத்தன்மை வியக்கவைக்கிறது. எல்லாத்தளங்களிலும் இயங்குவதால் இவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

பிரியன் - அமெரிக்க மாப்பிளை(தமிழ் சினிமா) பல்வேறு பணி நெருக்கடியிடையே இவரிடம் வெளிப்படும் கவிதைகள் அற்புதம். இயல்பான இந்த "கோவைத்தம்பி" என் அன்புக்குரியவர்.

செந்தழல் ரவி - மாதவன் ( கொஞ்சம் ஜொள்ளுப்பார்ட்டிதான் இருந்தாலும் என்னை போல் வெட்டி அரட்டை அடிக்காமல் உருப்படியான பதிவுபோடும் இவருக்கு நன்றிகள், கீப் இட் அப் யுவர் ஜொள்ளு & ஃபைன் ஆர்டிக்கல்ஸ் )

அனானிகளே & அன்பான பதிவர்களே இனி நீங்களே "வூடு கட்டி அடிங்கள்" இறுதிப்பட்டம் "காலாய்த்தல் கிங்" எனது கையால் வழங்கப்படும்.

( "கலக மொழி பேசும் ஸ்ஃபூபி சினிமாக்கள் " என்கிற சிரியஸ் கட்டுரை எழுதுவதால் கொஞ்சம் காமெடிக்கு இது )

Tuesday, September 26, 2006

@ 2:28 PM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

நானும் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவன் என்கிற காரணத்தினாலும், அலோபதி மருத்துவத்தில் இதற்கு பாரசிடமால் மற்றும் டைக்குளொஃபெனாக் என்கிற வலிநிவாரனியைத்தவிர வேறு குறிப்பிட்ட மருந்துகள் இந்நோய்க்கு கிடையாது என்பதினாலும் இத்தகவலை இங்கு பதிவு செய்கிறேன்.

அது போல் இந்த நோய் ஒரு ஆட்கொல்லி நோயல்ல என்பதனையும், அதீத காய்ச்சலினால் மட்டுமே உயிராபத்து நிகழம் வாய்ப்பு ஏற்படும் என்பதனையும்.சாதாரண காய்ச்சல் மாத்திரை உட்கொண்டாலே போதும் உயிர் போகும் வாய்ப்பு ஏற்படாது என்கிற தகவலையும் திரு.வைகோ அவர்களுக்கு பிரத்தியோகமாய் தெரிவித்து கொள்கிறேன்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் வைகோ


( சரியான காரணத்திற்கு போராடும் போராட்டமே மக்களுக்கானது )


Single-dose-cure for CHIKUN GUNYA disease


Go to any homoeopathic medical store and show the matter given below:

5 ml pills
POLYPORUS PINICOLA-200
(or)
POLYPORUS OFFICINALIS-200


Both the above names mean one and the same medicine. Dont ask orally.
Either he gets confused or he will confuse you.
WRITE DOWN on paper and ask.

5 ml pills contains about 250 pills. Give two pills (chewable) for a dose;
just one dose (irrespective of age) any time, not necessarily before/after food.
This one dose completely cures fever and body pain of Chikun Gunya.

No need to take repeatedly. Just one dose! Fever subsides,
so also joint pains. Myself and my students have so far cured
hundreds of cases of Chikun Gunya with
just one single dose of Polyporus Pinicola-200.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

In rare cases (say one in 300), fever subsides but joint pain continues.
In that case only, just give one dose
(2 pills for a dose chewable, irrespective of age)
of another homoeopathic medicine called
Kali-Mur-1000. In the homoeo drug store ask as under:

5 ml pills
KALI MUR - 1000

[See Calvin B. Knerr's Repertory: Fever, sequelae: Kali-mur.]

Thousands of cases of Chikun Gunya are being cured by
my students with one dose of (2 pills)
POLYPORUS PINICOLA-200

(sometimes called POLYPORUS OFFICINALIS).

Monday, September 18, 2006

@ 6:01 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

பல நாள் தேடுகைக்கு பின் , மிகுந்த சிரமத்திற்கு பிறகு மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டருக்கு பின்னால் கஞ்சா வித்து கொண்டிருந்த வரவனையானை கண்டு பிடித்து நமது சிறப்பு நிருபர் பேட்டிக்கு நேரம் கேட்டார்.வியாபாரம் வெகு பிசியாக இருப்பதால் தன்னால் பேட்டிக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றும் வேண்டுமானால் லக்கிலுக்கின் முகவரி தருவதாகவும் சொன்னார். அவரை கண்டுபிடிக்க நாம் பட்ட சிரமங்களை சொன்னதும் ஒரு மினி பேட்டிக்கு மட்டும் ஒப்புதலளித்தார்.

குரங்கு : வணக்கம், வரவனையான்

வர : வணக்கம்

குர : நாங்கள் குரங்கிலிருந்து வருகிறோம்

வர: நாங்க மட்டும் என்ன கழுதையில இருந்தா வர்றோம், நாங்களும் குரங்குல இருந்து வந்தவைங்கதான்

குர: மன்னிச்சுக்குங்க, நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்கன்னு நெனைக்கிறேன். நாங்க "குரங்கு"கிற இலக்கிய பத்திரிக்கைல இருந்து வர்றோம்.

வர: என்னாது குரங்குன்னு ஒரு பத்திரிக்கையா? ஏன்யா வேற பேரு ஏதும் கிடைக்கலையா? உங்க பத்திரிக்கை வாங்க போறேன்னு சொல்லக்கூட முடியாதே,

இப்ப பேட்டி குடுத்துகிட்டு இருக்கேன், நாளைக்கி படிச்சிட்டு வேணுமுன்னே "போண்டா கனேசேன்" போன் போட்டு " நீ குரங்குக்கு குடுத்த பேட்டி சூப்பர்ன்னு" சொல்லுவான்.

குர: இல்லைங்க ரொம்ப நாளாவே வருது.

வர: என்னாது குரங்கா ? எங்கேருந்து.......


( பேட்டி தொடரும் )

Wednesday, September 13, 2006

@ 12:43 PM எழுதியவர்: வரவனையான் 28 மறுமொழிகள்


இதுவும் ரொம்ப நாளைக்கு முன்னால நடந்த கதை. நம்ம சியர்ஸ் ! பார்ட்டி ஊரில் கிறிஸ்த்துமஸ் விழா. நம்மாளுக்குத்தான் கடவுள் பிடிக்காதே தவிர கலை ஆர்வம் அதிகமாச்சே . கிறிஸ்த்துமஸ் விழாவில் நாடகம் நடத்த அழைக்கபட்ட அழைப்பை ஏற்று . யூப்ரிட்டிஸ் , சேக்ஸ்பியரை எல்லாம் ஒரு வாரமாய் கரைத்து குடித்து கொண்டிருந்தார்.

நவீன நாடகம் மீதான தனியாத ஆர்வத்திற்கு கிடைத்த பெருந்தீனியாய் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முனைந்து நிறைய ஹோம் ஒர்க்கெல்லாம் செய்து கொண்டிருந்தார். 'மெடியா' நாடகத்திற்கான ஒத்திகையும் தனியாக பார்த்துக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்து ஆட்கள் தேர்வு செய்து தரும் படி சர்ச் நிர்வாகத்திடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது நடக்கபோவது ஏசுவின் கடைசி விருந்து நாடகம் என்று. நம்மாளுக்கு கடும் அதிர்ச்சி.அதை விட அதிர்ச்சி அதில் இவருக்கு ஒரு சிறு வேடம் மட்டுமே. ஏசுவை சிலுவையில் அறைந்து விட்டு இறங்கி போகவேண்டும். இருந்தாலும் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு நாடகம் நிகழும் நாளுக்கு காத்திருந்தார். இடையில் அவ்வப்போது ஒத்திகை வேறு .


நாடகத்திற்கான நாளும் வந்துச்சு, மனிதர்களின் பாவத்திற்கு சிலுவை சுமந்து கொண்டு ஏசு வருகிறார் அங்கு கூடியிருக்கும் மக்கள் கண்ணீர் வழிய ஏசுவை பின் தொடர்கின்றனர். பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் கண்ணீர் வழிய காட்சிகளை உள்வாங்கி கொண்டிருந்தனர்

ஏசுவின் சிலுவை நடப்படுகிறது. ரோமானிய படைவீரன் வேடமிட்டு நமது டவுசர் ஆயுத்தமாயிருந்தார். இவர் நின்றிருந்த பக்கம் அதிவெளிச்ச விளக்கு போடப்பட்டதும் "நம்மாளு"க்குள் "சிவாஜி" உட்புகுந்து விட்டது போல் ஒரு ஃபீலிங். உண்மையாகவே ஏசுவை சிலுவையில் அடித்தவன் கூட அவ்வளவு நேர்த்தியாய் அடித்திருக்கமாட்டான். அந்தப்பக்கம் நின்றிருந்த இன்னொரு படைவீரன் தொடர்ந்து ஒரு வாரம் "வயித்தாலே" போனவன் மாதிரி இருந்தான். இதைப்பார்த்தும் நம்மாளுக்கு உள்ளுக்குள் லேசா ஒரு அல்ப சந்தோசம். நாம் எவ்வளவு மிடுக்காய் இருக்கிறோம் என்று.

ஏசு ஏற்றப்படுகிறார். இவரும் ஒரு ஸ்டூலில் ஏறி "சிவாஜி கனேசன் " போல் ஆணியின் கூர்மை எல்லாம் சரி பார்க்கிறார். இயேசுவின் தலைக்கு மேலிருந்து ஒரு மைக் தொங்குகிறது. இயேசு "ஏலீ ஏலீ லாமா சமக்தாமி" என்று முனகிக்கொண்டு இருக்கிறார். இயேசுவின் கை இருக்கும் இடம் நம்மாளுக்கு எட்டவில்லை,குதிகாலை தூக்கி அடிக்க துவங்குகிறார். அப்பவும் எட்டவில்லை .இவர் நின்றிருந்த இடத்துக்கு அருகே சிலுவை மரத்தில் இயேசுவைக்கட்டிய கயிற்றின் பின் பகுதில் கால்வைத்தார் அது கொஞ்சம் வாகாய் இருந்தது.

ஆனால் இவர் கயிறில் கால் வைக்கிறோம் என்று நினைத்து இயேசுவின் அரை முழ வேட்டியில் கால் வைத்து கொண்டிருந்தார். இயேசுவாக நடிப்பவரினால் சொல்லமுடியவில்லை . முன்னால் மைக் வேறு இருக்கிறது. காட்சியோ மிக முக்கியமானது.லேசாக முணு முணுக்கும் குரலில் இயேசு இவரிடம் சொல்லிபார்த்தார். ஆனால் இவர்தான் உண்மையில் ரோமானிய படைவீரனாக மாறி நெடு நேரமாகி இருந்ததே.

இரண்டு ,மூன்று முறை இயேசுவும் "கிசு கிசு"க்கும் மொழியில் சொல்லி பார்த்தும் இவர்காதில் ஏறவில்லை பொறுமை இழந்த இயேசுவாக நடிப்பவர் மைக்கில் அடுத்த ஊருக்கும் கேட்கும் டெசிபளில் சொன்னது

"வேட்டி அவுருதுடா தா............ழி"

அன்னைக்கு ஊரே சேர்ந்து இயேசுக்கும் இவருக்கும் கொடுத்த மாத்து இருக்கே அது ரெண்டு கிருத்துமஸுக்கு தாங்கும்( god bless them)

Tuesday, September 12, 2006

@ 5:55 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்


"பொது மாத்து" என்று மதுரைப்பகுதில் பரவலாக வழங்கப்படுகிற சொல் தமிழ்கூறும் உலகெங்கும் " தர்ம அடி " என்னும் வடமொழி கலந்த சொல்லாக பயன்படுத்த படுகிறது. இதனை பெறுவதும் அல்லது வழங்குவதும் கொஞ்சம் கிளு கிளுப்பான விடயம் தான். பொதுவாய் பேருந்துகளில் பெண்களை உரசுவோர்,இருக்கையின் இடைப்பகுதில் கையைவிட்டு மாட்டிக்கொள்ளுபவர்கள் நையப்புடைக்கபடுவார்கள். அதுவும் அந்த பெண் கொஞ்சம் சுமாரான பிகராய் இருந்து மாட்டிக்கொள்ளுபவர்கள் நிலை பரிதாபம்தான். தனியாய் நிற்க முடியாத பெருசு கூட ஏறி ஏறி மிதிப்பார்.இது பற்றி ஆராய்ச்சி கட்டுரையே ( பஸ்+பெண்+தர்ம அடி ) எழுதும் அளவுக்கு "ஞானம்" இருந்தாலும் ( ஞானம் என்பது சொந்த அனுபவம் மட்டும் கிடையாது;) ) அதை பற்றி வேறு ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருப்பதால் இப்போதைக்கு நான் வாங்க போகிற பொது மாத்து குறித்து விளக்கிவிடுகிறேன் . எனது பதிவுகளில் நான் வழமையாக இலக்கியவாதிகளையும் மார்க்சீய தோழர்களையும் என்னாலான கிண்டல் தொனியில் எழுதுவதற்கான காரணம் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும் ,மரியாதையும் தான் காரணம். அதே வேளை சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை போல் வாழும் இந்த எளாக்கியவாதிகளையும் அவர்களுடனான எனது அனுபவங்களும் கிஞ்சித்தும் அவர்களை அறியாத பதிவர்களும் படிப்போருக்கும் வாழ்வின் சுவை கூட்டும் நம்பிக்கையென்றி வேறு ஏதும் கள்ள உணர்வு இல்லை. பொது மாத்து கட்டுரையினால் பாதிக்கப்படும் எளாக்கியவாதி ஏதோ பாரில் சந்தித்து எனக்கு வழங்குவார் என்கிற நம்பிக்கையுடன் முதல் பகுதியான நம் செல்ல டவுசர் பாண்டிகளின் ரவுசுகளுடன் துவங்குவோம்.


சியர்ஸ் வித் டவசர்ஸ்

அம்பேத்கர்2000 என்கிற நிகழ்ச்சி நண்பன் சிவா கட்டுரை வாசிக்கவிருக்கிறான் பல தாசப்தங்களுக்கு பிறகு, பரீட்ச்சைக்கு ரெடியாகிற பையனைப்போல் கட்டுரைய மொத நா சாயங்காலத்துல இருந்து மனப்பாடம் பன்ன வேண்டியது, அப்புறம் ஒப்புச்சு பார்க்கவேண்டியதுன்னு இப்படியே போச்சு ஒரு நாளு . நிகழ்ச்சி அன்னைக்கும் சும்மாதானே இருக்க நீயும் வாடா'ன்னு என்னையும் கூட்டிட்டு போனான் . போயி கொஞ்ச நேரம் உங்காந்து இருந்தேன். கரைக்ட்டா 7 மணி ஆச்சு மண்டைக்குள்ள குருவி கத்த ஆரம்பிச்சது "டைம் டூ டிரிங் " என்று . சிவாவை பார்த்தா இரட்டை வாக்குரிமை வாங்கிட்டுத்தான் மேடையை விட்டு வருவான் போலிருந்தது. நானும் கீழ நின்னு பிகர பிக்கப் பன்னுற மாதிரி மேடைய பார்த்து சைன(sign ) போட்டுகிட்டே இருக்கேன் அவேன் கவனிக்கவேயில்ல. அப்புறம் ஒரு வழிய தம்மடிக்க கீழே வந்தவன் கிட்ட போயி போலாம்பா "மண்டைக்குள்ள மணி அடிக்க" ஆரம்பிச்சுருச்சுன்னு சொன்னேன்
எனக்கும் தான் என்று சொன்னவன் " நம்ம " கடைய நோக்கி நடைய போட்டான். உள்ள போயி பாத்தாக்க,ஊரே இங்கதான் இருக்குங்கிற மாதிரி பயங்கர கூட்டம். அதுல நம்ம மக்களும் இருந்தாய்ங்க "சரி வாடா அந்த டேபிளுக்கு போவோம்னு" அவய்ங்களோட போயி உக்காந்து சரக்கு வாங்கறதுக்கு எங்க பங்கு காச கொடுத்தோம். சரக்கும் வந்துச்சு . டம்முளருல ஒரு டவுசரு ஊத்தினாரு , சோடா வாராதுக்கு முன்னாடி ஒரு தோழர் தன்னோட கிளாச மட்டும் எடுத்துகிட்டு ஓரமாய் போயிட்டு வந்தாரு(ஈழத்து father). இங்க இருந்த நம்மாளு அந்த தோழர கோவிச்சுகிட்டான் . எங்களுக்கு இன்னும் சோடா வரலை அதுக்கு முன்னாடி உங்களுக்கு மட்டும் என்ன அவசரம் தோழர்" அப்படின்னும் அதுக்கு அவரு சொன்னாரு ஒரு மருத்துவகுறிப்பு ' தோழர் நீங்க அடிக்கிற சரக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா? லிவர், கிட்னி, எல்லாம் வீக்காயிடும்" அதான் ஒரு மாற்று மருத்துவத்தையும் சேர்த்து நான் குடிப்பேன் நீங்க வேனும்னா முயற்சி செய்து பாருங்கள் என்றார்.

வாயி சும்மாருக்க மாட்டாமெ என்னான்னு நான் கேட்டுப்புட்டேன். அவரு சொன்னதுக்கப்புறம் யாரும் எங்களுக்குள்ள சியர்ஸ் சொல்லிக்கில்ல, அவ்வளவு ஏன், அதுக்கப்புறம் அவேன் அவேன் கிளாசைக்கூட கீழ வைக்கல.


மாறிகிச்சுனா என்ன பன்னறதுன்னுதான்.

வரு சொன்ன மருத்துவ குறிப்பு : முதல் கட்டிங்யுடன் கொஞ்சம் சிறுநீர் சேர்த்துக்கொண்டால் சாராயத்தின் தீங்குகள் அண்டாது என்பதாகும். அதுக்குத்தான் நான் ஓரமாய் போய் வந்தேன் என்பதாகும்

அதுக்கப்புறம் அந்த பாரில் எவனுமே கிளாச கீழ வைக்கல சியர்ஸ்சும் சொல்லிக்கல....


(சியர்ஸ், சீ யூ ஸார்ட்லீ)

Sunday, September 10, 2006

@ 3:37 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

11) அமைப்பாக்கம்,வன்முறை, அபத்தம், நிறுவனமயமாக்கல், கட்டமைப்பு , கட்டுடைத்தல்,முரண், நகைமுரண், விளிம்பு,தொல்லை, பெருங்கதையாடல், நுண் அரசியல், பேரரசியல், அதிகாரம், மாற்றுக்கான தேடல் போன்ற வார்த்தைகளை 4ஆம் வாய்ப்பாடு போல் மனப்பாடம் செய்து வைத்து கொள்ளவேண்டும்.( நடுவில் ஆங்காங்கே மானே, தேனே , பொன்மானே என்று போட்டுக்கொண்டாலும் ஒ.கே)

12) திருமண வயது தாண்டும் தருவாயில் கண்டிப்பாய் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். மனைவி அரசுப்பணியில் இருப்பவராய் இருந்தால் நீங்கள் இலக்கியவாதியாய் தொடரலாம் இல்லையெனில் "இயல்பு வாழ்க்கைக்கு" திரும்பநேரிடும் அவலம் ஏற்படும்.

13)நல்ல மப்பில் தான் செய்யும் அனைத்து அட்டகாசங்களுக்கும் காலையில் தெகிரியமாய் விளக்கம் சொல்லும் திறமை வேண்டும். "யாரு ஒழுங்குன்னு சொல்லு நான் தப்பு பன்னினேனு ஒத்துக்கிறேன்"என்று கேள்வி கேட்டவரிடம் கடைசி ஆயுதத்தை பயன் படுத்தலாம்

14) 10 கிலே மீட்டர் பயணமானலும் கையில் குறைந்தது இரண்டு புத்தகம் எடுத்துச்செல்லவேண்டும். பக்கத்து சீட்டுகாரர் படிக்க கேட்டால் புன்சிரிப்புடன் கொடுத்துவிடவேண்டும்.தமிழ்புத்தகமாயினும் அதை இரண்டு பக்கங்கள் புரட்டிவிட்டு "இருள்" அடித்தது போல் அவர் திரும்பதரும் அழகை ரசிக்க கண்கோடி வேண்டும்.

15)குடியிருக்கும் தெருவில் பிச்சைகாரனிடம் கூட கடன் பாக்கிவைத்திருக்க வேண்டும். எ.க: என் நண்பரொருவர் காலையில் வீட்டை விட்டு கிளம்பி 50 மீற்றரில் இருக்கும் பேருந்து நிறுத்ததை அடைய 1 கிலோ மீற்றர் சுற்றி வருவார். எனக்கு விளங்காமல் ஒரு நாள் கேட்டே விட்டேன், " ஆமாங்க வீட்டுக்கு பக்கத்தில் பொட்டிகடையில் சிகரெட் பாக்கி கொஞ்சம் இருக்கு அந்த பக்கம் போனா தொல்லை அதான்" என்றார். குடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் எவ்வளவுங்க ஒரு 200 ரூபாய் இருக்குமா " நானே தந்துடுறேன்" என்றேன் . அதுக்கு அவரு சொன்னாரு 3800 ரூபாய் தரனும் என்று. அன்னையில இருந்து அவரை பார்ப்பதில்லைன்னு முடிவு செய்திட்டேன்.

16) கண்டிப்பாய் புலிகளை எதிர்க்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு புலி எதிர்ப்பாளராக நீங்கள் இருப்பது உங்களின் மேதைமைகு மெருகு சேர்க்கும். அரச பயங்கரவாதம் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வது எப்படி என்று "பாதுகாப்பான சூழலில்" நல்ல பார்களில் உட்கார்ந்து நாலு லார்ஜ் போட்டுகொண்டு சாவுகாசமாய் விவாதிக்கவேண்டும்.

17) மார்க்சீயத்தை கடுமையாக விமர்சிக்கவேண்டும். "மார்க்ஸ் செத்து போனது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை மார்க்சீயம் செத்துப்போனதும் " என்று "கலகம்" செய்யவேண்டும்.

18) அதே நேரத்தில் பிரபாகரன் ஏன் ஒரு காஸ்ட்ரோ போல் இல்லை , அவர் கம்யூனிசத்தை பின்பற்ற வேண்டியதுதானே என்று அபத்த கருத்துகளையும் முன் வைக்க வேண்டும். அப்போதான் நீங்க இலக்கியவாதி குறிப்பா பின்நவீனத்துவவாதி

19) வெள்ளாள பாசிசம், கவுண்டர் பாசிசம், செட்டிமார் பாசிசம் என்று வர்த்தைகளை பேசாத நாள் ஒரு நாளா என்கிற கொள்கையுடன் இருக்க வேண்டும்

20) காஃப்கா, டெரித்தா, நீட்ஷே,ஹெய்டெக்கர், காண்ட்,பூக்கோ, துப்ரோவ்ஸ்கி, டிராட்ஸ்கி, நெருதா, மார்ட்டின் லூதர்,ஹெகல்,பிக்கேல் , சாண்டி ஸ்டோன்,எட்வர்டு செய்த், ல்க்கான்,ஃபிராய்ட், ஜங்,குபான்,ஹாரவே ,பிரெய்ன் ழாக்ஸ்,கிட்லர் , லாண்டான், எக்கோ,ஹாசன் , ஜாய்ஸ் , பெல் ஹுக்ஸ். இது போல இன்னும் ஒரு இருபது பெயர்கள் மனனம் செய்து கொண்டு நீங்கள் கந்த சஷ்டி கவசம் சொன்னால்கூட இந்த பெயர்களையும் சேர்த்து சொல்லிவிட்டீர்கள் ஆனால் கண்டிப்பாய் நீங்களும் இலக்கியவாதிதான்.(தொல்லை தொடரும்)

Friday, September 08, 2006

@ 3:54 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்
நான் என்னமோ டாஸ்மாக் 5 கிலொ மீட்டரு தாண்டி இருக்குன்னு வண்டியெல்லாம் எடுத்து கிளம்பினா, அது இந்த பார்ல இருந்து வாக்கபிள் ஸாரி கிராவபிள் ( போகும் போதே போதையில் போனால் அது கிராவபிள் டிஸ்டர்ன்ஸ் தானே) டிஸ்டர்ன்ஸ்ல தான் இருந்தது. உள்ளே போயி எம்சி குவாட்டர் என்றேன். அவன் ஜானெக்க்ஷா தான் இருக்கு என்று கொடுத்தான். லக்கி இதையேல்லாம் திருவிளா பார்க்குற குழந்தை மாதிரி "பே"ன்னு பார்த்துக்கிட்டு இருந்தாரு. சரின்னு மேட்டர "அவசர அடி ரங்கா" மாதிரி டக்குன்னு முடிச்சிட்டு வாங்க அவங்க தேடிகிட்டு இருக்கபோறாங்கன்னு திரும்ப சியர்ஸ் பாருக்குள்ள போயி பாத்தா அப்பவும் சாயந்திரமே "அவசர" பட்ட பார்ட்டி இன்னும் அந்த ஒத்த பீர வச்சுக்கிட்டு முத்தம் கொஞ்சிகிட்டு இருந்தாரு. நாம வேற ஏற்கனவே கிச்ன்னு இருக்கமா , லக்கி' என்றேன். இப்போ எங்கே கூட்டிட்டு போயி கழுத்த அறுக்க போறனோன்னு நினைச்சுகிட்டே பரிதாபமாய் ,சொல்லுங்க என்றார்.

"பக்கத்துலுல எங்கையாவது ஜெனரல் ஸ்டோர் திறந்திருக்குமா" என்றேன். ஏங்க எதுனா வேனுமா எக்மோர் போனால் இருக்குங்க என்றார். 'ஆமா லக்கி , நிப்பிள் வாங்கனும்' என்றேன். லக்கிக்கு புரியவில்லை , அப்படின்னு புதுசா பாக்கு வந்திருக்கா என்று கேட்டார். இல்லப்பா இந்த குழந்தைங்க பீடிங் பாட்டிலில் மாட்டுவாங்களே அது வாங்கனும் என்றேன்.

'பால் ரப்பரா' அது கிடைக்குங்க வாங்கிறலாம் போகும் போது என்றார். இல்ல லக்கி அத வாங்கிட்டு வந்தாத்தான் நாம போகமுடியும் என்றேன். இதுக்கு மேலும் குழப்ப விரும்பாமல் விளக்கினேன்.

மொதல்ல அந்த நிப்பிளை வாங்கி அந்த பீர் பாட்டிலில் மாட்டிவிடுங்க அவரு சாவுகாசமா வீட்ல போயி தொட்டிலில் படுத்துக்கிட்டே குடிக்கட்டும் , பாத்தா இப்பைக்கு முடிக்கிறமாதிரி தெரியலைன்னேன். சிரிச்சு சிரிச்சு லக்கிக்கு வயித்த வலி வந்திருக்கும்.

பில்லு வந்துச்சு போயி எட்டிபார்த்தேன் தலை சுத்திருச்சு தொகைய பார்த்து இல்ல மொத்தமே நானும் அந்த பீர் பார்ட்டியும் தான் சரக்கடிச்சுருக்கோம் அடப்பாவி "திராவிட ராஸ்கல்லுகளா" எல்லாரும் தண்ணிய போட பாருக்கு போனா நீங்க சாப்பிட வந்திருக்கீங்களே இதுலாம் வெளங்குமா...........
**************************************************************************************


இதுக்கிடையில முத்து கூட பேசிகிட்டு இருக்கும் போது அவரு குஷ்பு-வோட தீவிர ர்ர்ர்ரசிகர்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பேச்சு அப்படியே கற்பு- பெரியார் - தமிழர் பண்பாடு என்று நீண்டு கொண்டே போனது. அப்பத்தான் ரொம்பநாளைக்கு முன்னால நடந்த சம்பவம் ஒன்னை சொன்னேன் மெய்சிலிர்த்துட்டாரு.

சென்னை லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்க அ.மார்க்ஸும் வளர்மதியும், கூட அல்லக்கையா நானும் போயிருந்தோம் . அவங்க ரெண்டு பேரும் 2000 ரூவாய்க்கு குறைஞ்ச புத்தகத்த கையில கூட தொட மாட்டடோம்னு சத்தியம் செய்ஞ்சவுங்க மாதிரி அங்கேயே தேடிகிட்டு இருந்தாங்க. சின்ன பரபரப்பு எழுந்து அடங்குச்சு. என்னான்னு பாத்தா நம்ம குஷ்பு ' புத்தகம் வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள்ள எனக்கு "நாட்டிங்ஹாம் ஹில்" ஹு கிரான்ட்'னு நினைப்பு வந்துருச்சு போய் பக்கத்துல நின்னு ஸ்டீவ் மூர் எழுதிய ஜஸ்ட் கிஸ் புத்தகத்தை கொடுத்து படிங்க நல்லாயிருக்கும் என்று ஜொள்ளினேன். அவங்க அத பார்த்துட்டு ஸாரி படிச்சிட்டேன் என்றபடி நகர்ந்து போனார்.

இதப்போயி வளரிடமும் மார்க்ஸிடமும் சொன்னேன் ஃபயர் அலாரம் கேட்டதுபோல் ரெண்டு தடதடன்னு ஓடிப்போயி குஷ்பு விடம் இருவரும் கையெழுத்து வாங்கினார்கள், தங்கள் கையில் வைத்திருந்த புத்தகங்களில். இதைப்பார்த்து சிரித்துக்கொண்டேன். இரண்டு புத்தக ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய சூழலில் நன்கு இயங்குபவர்கள் இப்படி ஒரு செலிபிரட்டிக்கு ஆலாய் பறக்குகிறார்களே என்று.

இதைச்சொல்லி முடித்தபின் ஒரு ஏக்க பெருமூச்சு விட்டு முத்து(தமிழினி) சொன்னார் " ஹீம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த புத்தகம்" என்று.

5 நிமிட ஆழ்ந்த மௌனத்திற்கு பிறகு நான் சொன்னேன் வளர்மதி கையெழுத்து வாங்கிய புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா?
promiscuities தமிழில் "வரையற்ற பாலுறவுகள்" என்று அர்த்தம்.

Thursday, September 07, 2006

@ 1:41 PM எழுதியவர்: வரவனையான் 15 மறுமொழிகள்

பின்நவினத்துவவாதி என்று அழைத்துக்கொள்வதுதான் இப்போ லேட்டஸ்ட் டிரண்ட். அதன் நீட்சியாக அதற்க்கான தகுதிகளை(!) வளர்த்து கொள்ள உதவும் குறிப்புகள் தான் அடியில் நீங்கள் காண்பது.

1) முதலில் உங்களை வீட்டில் தலையில் தண்ணிர் தெளித்து விட்டிருக்கவேண்டும். அல்லது சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாறு ( அ )துடைப்ப கட்டையால் அடித்து ஊர் எல்லைவரை உங்கள் குடும்பத்தினரோ அல்லது ஊர்ப்பெரியவர்களோ வந்து வழி (?) அனுப்பி வைத்திருக்கவேண்டும்.

2) ஓரளவுக்கு கல்வித்தகுதி இருக்கவேண்டும். குறைந்தது இளங்கலை.

3) சென்னையில் வீணாய் போன நாலு எழுத்தாளர்களையோ அல்லது கவிஞர்களையோ கண்டிப்பாய் அறிமுகம் இருக்கவேண்டும்

4)தனது காசானுலும் அடுத்தவன் காசானுலும் வஞ்சனையே இல்லாமல் குடிக்க பழகி இருக்கவேண்டும். குறைந்தது ஒரு ஆஃப்.

5) தமிழில் ஒரு முழுமையான நாவல் இன்னும் வரவில்லை என்கிற வார்த்தையை தினமும் படுக்க போகுமுன் 1000 முறை உச்சாடணம் செய்யவேண்டும் ( ஏற்கனவே மப்ஃபில் இருப்பதால் உளறுவதாக அருகே இருப்பவர் நினைத்துக்கொள்ளும் நன்மையும் இதில் உண்டு)

6) எவனோ ஒரு அரை லூசு எடுத்த 13 3/4 நிமிட குறும்படத்தை பற்றி 2 மணி நேரம் கட்டுரை வாசித்து பீதியைக்கிளப்ப வேண்டும்

7) அகிரோ மாதிரி இன்னோருத்தர் சான்ஸே இல்ல. மலையாள 11 மணிக்காட்சி வாசலில் நின்றாலும் கெத்து குறையாமல் டயலாக் உடனும்.

8)மார்க்சீய-லெனிய கம்முனிஸ்ட் இயக்கங்களில் சிறிதுகாலம் பணியாற்றி இருக்கவேண்டும்.

9)அந்த ஆபீஸுக்கு டீ கொண்டு குடுக்கும்போது அவய்ங்க தாடிய பார்த்து ஈர்க்கபட்டதை மறைத்து விட்டு. லெனின் தான் என்னை ஈத்தார் என்று பீலா விடவேண்டும்

10) "நானும் ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவன் தான் தோழர்" என்று அகஸ்த்மாத்தாக சிக்கிக்கொண்ட தோழரிடம் "கட்டிங்குக்கு" அடி போட வேண்டும்

( இன்னும் 100 குறிப்புகளுக்கு மேல் இருக்கு கண்டிப்பாய் தருகிறேன்)

Tuesday, September 05, 2006

@ 7:08 PM எழுதியவர்: வரவனையான் 27 மறுமொழிகள்

நேற்றைய பதிவு எழுதி தமிழ்மணத்தில் இணைத்த இரண்டாவது நிமிடம் அன்பு மாம்ஸ் பாலபாரதியிடமிருந்து போன்.அதை அப்படியே உங்களுக்காக இங்கு பதிவு செய்கிறேன். ;)

டிரிங் டிரிங்

வர: (சென்னை நம்பரா இருக்கு எவன் கூப்பிட்டு கழுத்தறுக்க போறானோ)

வர: ஹலோ. வரவனை ஹியர்

பால : யோவ் மாப்பிள்ளை இதல்லாம் நல்லா இருக்கா. இப்படியா பன்னுவ?

வர: ஏப்பா என்னாச்சு?

பால: எதை எழுதுறதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா? ச்சை

வர: மாம்ஸ் என்னா இப்ப நடந்துருச்சுன்னு இப்ப இப்படி குதிக்கிற?

பாலா: ஏற்கனவே நம்மளை எப்படி வம்பிழுக்குறதுன்னு அவேன் அவேன் ரூம் போட்டு டீப் டிஸ்கர்சன்ல இருக்காய்ங்க, இதுல நீ வேற ஒலப்பாய்ல ஒன்னுக்கு இருந்த மாதிரி எதையாவது எழுதிட்டு போய்டுற....

வர: யோவ் மாம்ஸு நான் என்னமோ போலி டோண்டு ரேஞ்சுக்கு எழுதி புட்ட மாதிரில்ல இப்படி சவுண்ட குடுக்குற.என்ன பிரச்சினைன்னு சொல்லுயா?

பால: நீ தானே எழுதுன உனக்கே தெரியலியா. நான் நிம்மதி இருக்குறது உனக்கு புடிக்கலியா. இதுதான் நீ ஆசைபடுறியா? ( குரல் தழுதழுத்தது)

வர: மாம்ஸ் பீலிங் ஆவாத. அப்புறம் நானும் அழுதுடுவேன். அடுத்தவுங்க அழுதா எனக்கு மனசு தாங்காது .......

மாம்ஸ் உனக்கே தெரியும் நான் உன்னை விட டூயுப் லைட்டு , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா

பால: (லேசாக செருமிக்கொண்டு ) ம்ம்ம்... நான் கடலை போட்டத பாத்தேலே அதோட விட வேண்டியதுதானே அதப்போயி ஏன்யா பிளாக்ல போட்ட? நீ பாட்டுக்கு அனானி கமென்ன்ட்டு ஓவரா வருதுங்குற பகுமானத்துல நடந்த உண்மைய எழுதுறேன்னு என்னைய மாட்டிவிட்டுட்ட. இன்னும் கொஞ்ச நேரத்துல என் ஆளு அத படிச்சிடுவா, என் கதி
இன்னைக்கு கந்தல்தான்.

வர: மாம்ஸ் நீ பேசுனது மட்டும்தானே எழுதிருக்கேன். யாரு கூட கடலை ஒடைச்சேன்னா எழுதிருக்கேன்.

பாலா: மாப்பிள்ளை அன்னைக்கு ஏன் ஆளுகூட நான் பேசலப்பா....

வர: பின்னே யாரு கூட அப்படி ஜொள்ளுவிட்டுகிட்டு இருந்தீக

பாலா: இல்லப்பா நாந்தான் அவ ஆளு

வர: அப்போ அன்னைக்கு நீ பேசலைன்னு சொல்லுறது

பாலா: ஏய்ன் ஆளு

ஃபோன தூக்கி தண்ணிக்குள்ள போட்டுட்டேன். இப்பவே வீட்ல டவுட்ட பார்க்குறய்ங்க , அப்புறம் கன்பார்மே பன்னிடுவாய்ங்க. இதுக்கு மேல இவருகிட்ட பேசினா .... அது

சொந்த செலவுல சூனியம் வச்சுகிற மாதிரி

**************************************************************************************

@ 1:54 PM எழுதியவர்: வரவனையான் 21 மறுமொழிகள்

அப்புறோம் ஒரு தோழர் பேச ஆரம்பிச்சாரு. வலைத்தளத்தில் குழுமனப்பான்மை எழுந்துள்ளது வருத்ததிற்க்குரியது என்றார் . என்னை பொறுத்தவரை குழுவாதம் என்பதோ அல்லது குறுங்குழு வாதம்( உள்குத்தை புரிந்தவர்கள் சிரிக்கலாம்-விளக்கம் தரப்படமாட்டாது) அதன் தேவைகளை பொறுத்தே எழுகிறது அதை தவிர்ப்பது என்பது அதை வளர்க்கும் மற்றோரு செயலாகும். அதை எதிர்கொண்டு அதன் கருத்துக்களை உள்வாங்குவதும் , மதிப்பளிப்பதுமே நேர்மையான செயலாகும். பெரியாரையும் அண்ணாவையும், திராவிடத்தையும் எதிர்ப்பது மட்டுமே தங்கள் கடமையாக சிலர் செயல்படுவதுதான் குழுவாதத்தை தோற்றுவித்திருக்கிறது. என்பதுதான் உண்மை. என்னை பொறுத்தவரை நடுநிலை என்பது மோசடித்தனம். போர்வெறியன்"ஜார்ஜ் புஷ்" வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் 'எங்களோடு இருங்கள் ,இல்லையேனில் நீங்களெங்கள் எதிரியாக கருதப்படுவீர்கள்' .

அகவே தோழர் அவர்களே! அன்று நான் சொன்ன அதே கருத்தை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். என் அரசியல் எது என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

முத்துக்குமரன் ராணுவமிடுக்கோடு இருக்கிறார் நான் எனது 20- 21 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே அவர் இருக்கிறார்.

மதியம் நண்பர் ஒருவரிடம் கூட்டம் பற்றி சொல்லியிருந்தேன். மாலை அவர்களும் அவர்தம் சக பத்திரிக்கையாளர்களும் வந்து இருந்தார்கள். அவர்களில் நண்பர் வளர்மதியும் ஒருத்தர்.அவர் திராவிட ராஸ்கல் எனும் வார்த்தையில் ஈர்க்கபட்டு வந்திருந்தார். ஒரு சில வார்த்தை பேசுகிறேன் என்று அனுமதி கேட்டார்' அவரின் கண்ணிர்புகை பேச்சு பற்றி அறியாத வலைப்பதிவாளர்களும் பேசுங்கள் என்றார்கள்.கூட்டம் இனிதே கலைக்கபட்டது, ஆம் கண்ணீர்புகை போட்டால் கூட்டம் தொடருமா என்ன?

பொதுவாய் இலக்கிய கூட்டங்கலில் வளர்மதி பேச எழுந்தால் , ஒரு குரூப் தம்மடிக்க கிளம்பும். அவ்வளவு ராசி ஆனவரு. ஆனால் ஒன்றை மற்றும் இங்கு பதிய வைக்க விரும்புகிறேன். தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத சிந்தனையாளன் அவர்.

கூட்டம் முடியும் முன் வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்த நேரத்திலேயே "மசால்வடை" சப்ளை துவக்கினார் பொன்ஸ். அவ்வளவு பிஸி-யிலும் எனக்கும் ஒரு வடை வைத்திருங்கள் என்று முன்பதிவு செய்தேன். பேசிவிட்டு வந்து பார்த்தால் ஆளையும் கானோம் வடையையும் கானோம்.

அப்புறம் டீ ரசிகர்கள் மற்றும் நண்பர்களும் தேனீர்கடையில் ஒரு கூட்டம் போட்டு அரட்டை ஆரம்பித்தனர்.

இதற்கிடயே ஒரு பதிவாளர் 'ஏய் 11 மணிக்கெல்லாம் பார் மூடிருவாய்ங்கப்பா சீக்கிரம் கிளப்பு" என்று துடித்து கொண்டிருந்தார். வீனையூக்கியை அழைத்துச்செல்லாம் என்று நான் காத்திருந்தேன், அவரு உஷார் பார்ட்டி போல எஸ்கேப் ஆகி ஆட்டோ பிடித்து தப்பினார்.

அதுக்கப்புறம் எங்கே போவது என்று ஒரு அரை மணி நேரம் டிஸ்கசன். நண்பர் வாட்ச்சை பார்க்க என்னைய பார்க்க என்று தவித்துக்கொண்டிருந்தார். ஒரு வழியாய் எக்மோர் சியர்ஸ் பார் என்று முடிவாகியது


அங்கே போயி அடிச்ச கூத்த கேளுங்க. நானும் தமிழினியும் குப்புசாமியும் போய் பார்வாசல்ல நிக்கிறோம். முத்து(தமிழினி)க்கு குப்புன்னு வேர்க்குது . என்ன மேட்டருன்னு பார்த்தா அவரு மனைவியோட எந்த விடுதியில் தங்கியிருக்கிறாரோ அதற்கு நேர் எதிரே இருந்தது பார். அதுவும் அவர் அறையில் இருந்து பார்த்தால் தெளிவாய் தெரியும். பாதி பேரக்காணாம்ம்னு தேடிகிட்டு வாசலேயே போச்சு ஒரு 10 நிமிஷம்.அந்தா இந்தா என்று 10.20க்கு உள்ளபோயி உக்காந்தா அவ்வளவு பேருக்கு இடம் இல்லைனு அதுல போச்சு ஒரு பத்து நிமிசம்.

கிழிஞ்சது போ ! இன்னைக்கு சரகடிச்சமாதிரித்தான்னு முடிவு பன்னி ,அப்பைனு வந்த ராங்கால் அழைப்பை ISD என்று பொய் சொல்லி வெளியே வந்து தம்மடிச்சுட்டு நின்னுகிட்டு இருந்தேனா. அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா).

சீக்கிரம் உள்ளவாங்கப்பான்னு அவ்வளவு நேரம் அமைதியா இருந்தவரு கூப்பிட்டாரு. ஆரம்பம் ஆச்சு ஜமா.

யாரு 8 மணியில இருந்து துடிச்சாரோ அவரு 1 பீர வாங்கிட்டு பேய் முழி முழிச்சுகிட்டு இருந்தாரு குடிக்க முடியாம.

எனக்கு ஒரு லார்ஜ் சொல்லி உங்காந்தேன். வந்துச்சு குடிச்சிட்டு "ரீபிட் திஸ்" என்றேன் ஸாரி டைம்ஸ் அப் என்றான்.வந்ததே கோவம். 'லக்கி வண்டி எடுங்க' என்றேன். வண்டி நிறுத்தம் அருகே வந்து வாந்திதான் எடுத்தார். என்னப்பா ஆச்சு என்றேன்.செவன் அப் ஒத்துக்கல என்றார் "அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" பிளாக்ல அந்த குதி குதிக்கிற. இரு உன்னை வச்சுகிறேன் என்றபடி வண்டி வழக்கம் போல் டாஸ்மாக் போனது.


(சத்தியமா நாளைக்கு முடிக்கிறேன்)

Sunday, September 03, 2006

@ 1:20 PM எழுதியவர்: வரவனையான் 34 மறுமொழிகள்

தலைப்பை பார்த்தே "தலை"க்கு வவுத்த கலக்குறது தெரியுது. ஆனா அதுக்கும் விஷயம் இருக்குல்ல, வாழ்க்கைல யாரவது கெடா வெட்டுக்கு கூப்பிட்டா எப்படி குளு குளுன்னு இருக்குமோ அது மாதிரி இருந்துச்சு முத்து சென்னைக்கு வாங்கன்னு கூப்பிட்டபொழுது. சென்னை மேல அப்படி ஒரு ஆச. ஒரு வேலையுமே இல்லாம இருந்தாலும் எவனாவது திருப்பிக்கேக்காத நண்பனா பார்த்து ஒரு 5000 ரூவா கடன் வாங்கிட்டு சென்னை வந்து ஒரு வாரம் கும்மி அடிச்சிட்டு போற என்னை மாதிரி ஆள சென்னைக்கு கூப்பிட்டா எப்படியிருக்கும். சரின்னு ஒத்துகிட்டாலும் தலை கால் புரியலை, ஆபீஸ்ல இருக்கிற மாடயெல்லாம் யாரு மேய்க்கிறதுன்னு சண்டை வந்து என் தலைல கட்ட பார்த்தாய்ங்க. சிக்குவனா நானு " சாரி பாஸ் பிளைட்ல டிக்கட்டு போட்டுட்டேன் சனிக்கிழமை காலை மொத பிளைட்ட பிடிச்சு வந்திடுறேன்னு அல்வா கிண்டி " ஆ சொல்லும்மா கண்ணுல "ன்னு கொஞ்சி பாஸ்'க்கு ஊட்டிவிட்டு கிளம்பினேன் .


சென்னைக்கு போயி இறங்கி வழக்கமா தங்குற மாஸா ஹோட்டலில் ரூம் கேட்டால் , நம்ம பரம்பரை வரலாற பூராம் கேக்குறாய்ங்க, 'பாய் தெரியலையா என்றேன் . வரவேற்பாளரிடம் . அவரும் சிம்பிளா "தெரியலைனு" முடிச்சுகிட்டாரு பேச்ச. "அண்ணே ஏண்ணே இப்பலாம் முன்ன மாறி வரதுதில" என்று கேட்டு என் வயிற்றில் பீரை வார்த்தான் ரூம்பாய் சலீம். கொஞ்சம் பிஸி'பா என்று பீலா விட்டு அறை எடுத்தேன். என் மீது என்ன கோபமோ அந்த வரவேற்பாள பாய்'க்கு. சேலம் ஜெயிலத்தான் பனிஷ்மன்ட் ஜெயில் என்று சொல்வார்கள், இந்த ரூமோ அதைவிட கொடியதாய் இருந்தது. சரி இங்கு வரும் நல்ல தண்ணீகாக பொறுத்துபோவோம் என்று தங்கி விட்டேன்.

மதியம் موثو (تاميليني) க்கு ( இது யார் பெயர் என்று சொல்பவர்களுக்கு இரண்டு பரிசுகள்) போன் செய்து என் வருகை அறிவித்தேன்.மிகவும் மகிழ்ந்தார்.இன்னும் என் சக கும்மியாளர்களுகும் என் வருகை அறிவித்தேன் .

முத்து(தமிழினி) மாலை 5 மணிக்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தார். இருவரும் கிளம்பினோம். இருவரும் அப்போதுதான் சந்தித்து இருந்தாலும். ஒரு பால்ய நண்பரை சந்தித்த உணர்வே ஏற்பட்டது.

பூங்காவை அடைந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி, வாசலில் பர்தா அணிந்து நின்ற ஒரு பெண் சிரித்தாள். ஆகா ஒரு வலைப்பதிவாளர் நம்மை அடையாளம் கண்டுவிட்டார் என்று அருகில் போனேன்.முத்து 'மசால் வடை" ஆர்டர் செய்ய கடை தேடிக்கொண்டிருந்தார். அருகே போனதும் " ரூம் இருக்கு ஆளுக்கு 1000 ரூபாய் போலாமா என்றார்" .

பொதுவாக உலக இலக்கியம் பேசினாலும், நெட்டில் ஜல்லி அடித்து பிழைப்பை ஓட்டினாலும் இது போன்ற விடயங்களில் " நான் ஒரு கண்விடுக்காத பூனைக்குட்டி" கெண்டைக்கால் லேசாக நடுங்குவது உணர்ந்தேன். அபத்தமாக நாகேஸ்ராவ் பூங்கா இதுதானே என்றேன் அவளிடம் " இன்னாது" என்றாள். நல்லவேளையாக முத்து என்னை அழைத்தார் இல்லையென்றால் அன்று எனக்கு குளிர் காய்ச்சல் வந்து இருக்கும். சரி என்று உள்ளே நுழைந்தோம். நுழைவாயில் தாண்டியது ஒரு சிறு கும்பல் நின்று கொண்டிருந்தது. ஒருவர் கண்ணாடி போட்டு தோளில் லெதர் பேக் போட்டு செல்போன் "பில் கலெக்டர்" போல் நின்று கொண்டிருந்தார். அவர்களை தாண்டிப்போனோம். பின்னாடியே ஓடி வந்தார். நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர் போல என்று நினைத்து " டிக்கட் வாங்காம வந்திட்டோம்ல" என்றேன் முத்துவிடம். அவர் வந்து வாங்க வணக்கம் என்றார் .நீங்க என்றோம், பாலபாரதி என்றார் எனக்கோ ஆச்சர்யம். நான் எதிர்பார்த்திருந்தது " தாடியுடன், ஒரு ஜிப்பா, ஜோல்னா பை, சோமாலியா பஞ்சத்தில் அடிபட்ட மனிதனை" ஆனால் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி திம்முனு இருந்தார்.

பிரியன்,மற்றும் கவிதா இருந்தார்கள் அங்கே, அதன் பின் வலைப்பதிவளர்கள் பலரும் வந்து சேர. மொத பஞ்சாயத்தே அனானி பின்னூட்டங்களை பற்றியதாய் இருந்தது. நமக்கு வர கமெண்டே மொத்தம் நாலுதான் இதுல நம்ம என்னடா கருத்து சொல்லி கிழிக்க போறம்னு கம்முனு இருந்துட்டேன்


(மீதி கும்மியை நாளை கொட்டுறேன்)