Monday, July 17, 2006

@ 3:48 PM எழுதியவர்: வரவனையான்

உங்களின் மார்க்சீய தோழர் திரு. கனேசனுக்கு போண்டா என்கிற அடைமொழி எவ்வாறு ஏற்பட்டது?

நிச்சயமாக நல்ல கேள்வி, பொதுவாக பொதுவுடமை இயக்கதாரிடம் காணப்படும் பண்புகள் கணேசனிடமும் காணப்படும், அதாவது எப்போது பார்த்தாலும் குளிச்சு முணு நாள் ஆனவன் போன்றும்,மதிய சாப்பாட்டுக்கு ஈரத்துணி கட்டி படுப்பவன் போலவும், சில வருடங்களாய் ஒரே சட்டையை மட்டும் போட்டு திரிபவன் போன்றும்.ஒரே வார்த்தையில் சொல்லுவதானால் பரம்பரை ஆண்டி போலவே இருப்பான். பஸ்ஸாண்டில் நின்று தனது இயக்கத்திற்கு நிதி வேண்டி உண்டியல் குலுக்கும் போது பார்த்தால் இவன் நிலையை பார்த்து நிறைய நிதி கிடைக்கும் , அவர்கள் கட்சியில் கணேசன் போனால் வசூல் ஓகோ, "ராசியானவன் " என்கிற கருத்து முதல்வாத எண்ணம் தலை தூக்கியதற்கு இதுவே காரணம். இதை மாற்ற என்னை போன்ற திராவிடச்சார்பான "வெள்ளுடை வேந்தர்கள்" நிறைய முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை . இது போன்ற ஒரு தோற்றத்தில் இருந்தால்தான் மக்களை அனுகமுடியும் என்கிற தவறான எண்ணம் இப்போதும் இருக்கிறது. ஆனால் மார்க்சீயர்கள் தமிழ்நாட்டில் நன்கு காலுண்ட முடியாத முக்கிய காரணியாக விளங்குவது இந்த 'தோற்றபிழை'தான். கணேசன் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பதை பெருமையாக கூறித்திரிவான். எ.க. "[ நேத்து நீ பி.பி கால் பன்னும்போது குளிச்சிட்டு இருந்தேன்' - " சுடுதண்ணில குளிகற சுகமே சுகம் " போன்று இருக்கும் அவன் பேச்சு.

இப்படி இருப்பதை மறைந்த மார்க்சீய முன்னோடித்தலைவர் திரு.வி.பி.சிந்தன் வண்மையாக கண்டிப்பார் . இதை மார்க்சீய தோற்றம் என்று கிண்டலடிப்பார். ஆனாலும் இவன் யார் சொன்னாலும் கேட்காமல் "சூதாடி சித்தன்" மாதிரியே இருப்பான். அதே போன்று இன்னொரு குறிப்பிடத்தக்க பண்பு படுக்கும் இடத்தை சொல்ல மாட்டான் . வீட்டை அடிக்கடி மாற்றுவான் கேட்டால் காவல்துறை கண்கானிப்பில் நாம் இருக்ககூடாது என்பான். யாருமே தேடாமல் இவனாக தலைமறைவாக இருக்க சொல்லி உத்தரவு என்று ஏதாவது லாட்ஜில் ரூம் போட்டு நல்ல சரக்கடிச்சுட்டு பிளாட் ஆகிவிடுவான். இப்படித்தான் ஒரு முறை அவனின் இயக்கமும் எங்களின் இயக்கமும் இணைந்து மறியல் போராட்டம் அறிவித்து இருந்தது. போராட்டத்துக்கு முதல் நாள் தடுப்புகாவல் சட்டபடி காவல்துறை எங்களை தேட ஆரம்பித்துவிட்டது. நான் எஸ்கேப் ஆகிவிட்டேன். போராட்டத்தின் போது வந்து கலந்து கொண்டு கைதானேன், பின் காவல் நிலையத்தில் இருக்கும் போது சொன்னேன் " கணேசன் பாருவேன் பைபாஸ்ல பஸ் மறியல் பன்னி நல்ல டப் குடுப்பான் போலிசுக்கு என்றேன். அப்போது அங்கிருந்த காவலர் சொன்னார் ,"உங்காள முந்தாளே கைது பன்னியாச்சுன்னு". அடப்பாவி சும்மாநாளுல இவன தலைமறைவா இருப்பான் இப்போ போயி மாட்டிகிட்டாணேன்னு நினைத்தேன். அப்பதான் சொன்னாரு அந்த பொலிசுகாரரு " ஏப்பா இவனுகு ஒளியத்தெரிஞ்சதே முணு இடம் ,அது மூணும் எங்களுகும் தெரியும், முதல் அரஸ்டே உங்காளுதான்னு"னாரு. உள்ள போயி கணேசன பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சேன், அதுக்கு அவன் " எவனோ மாற்று இயக்கத்துக்காரனுஙக் எங்க கட்சியில ஊடுருவிட்டானுங்க என்றான். "தூ" என்று ஒரு செல்லத்துப்பு துப்பிவிட்டு வந்தேன்.

இவன் இருப்பதோ தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்ட கம்முணுஸ்டு கட்சி ஆனால் கணேசனோ மக்கள் யுத்தகுழு தலைவர் " கொண்டபள்ளி சீதாரமையா" ரேஞ்சுக்கு தன்னை நினைப்பவன். இப்படித்தான் ஒரு முறை நானும் சீனியும் கணேசனும் நின்று கொண்டிருந்தோம், அப்போது ஒரு நண்பர் கல்யான பத்திரிக்கை வைக்க வந்தார், அப்போதுதான் கணேசனுக்கும் திருமணம் (அவன் கல்யாணம் பற்றி விரைவில் ஒரு தனிப்பதிவு வரும் ) ஆன புதிது. பத்திரிக்கை வைக்க வந்தவர் கணேசனிடம் " உங்க வீடு எங்க நண்பா" என்று கேட்டார். அதுக்கு அவன் எதுக்கு என்றான். இல்ல உங்க கல்யானத்துக்கு என் வீட்டுல வந்து பத்திரிக்கை வச்சிங்க அதுனாலதான் உங்க வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கனும்ல என்றார் . பராவாயில்லை இங்கவே குடுங்க, நான் வீட்டு அட்ரஸ யாருக்கும் சொல்லருதில்லை என்றான். சீனி கடுப்பாயிட்டான் ஏண்டா உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு ஒருத்தன் அழைப்பிதழ் அனுப்பறதே பெரிசு அதுல என்னடா பிகுன்னு சொல்லி கணேசன் கையில வைத்திருந்த நோட்டை பிடுங்கி கணேசன் வீட்டு முகவரியை எழுதப்போனான் அப்போ கணேசன் " நான் வச்சுருக்க எத வேணும்னாலும் படிச்சு பாரு அந்த நோட்ட மட்டும் விட்டு விடு அது எங்க கட்சி தகவல் இருக்கு" என்று கோபித்து கொண்டான்.

அப்போழுதான் சீனி சொன்னான் " ஒரு போண்டா வாங்கி கொடுத்தா கட்சியை காட்டி கொடுக்கறவேன் நீயி, உனக்கு எதுக்குட இந்த பில்டப்புனு"

அன்று முதல் அழுக்கு கணேசன் போண்டா கணெசனாக பரிணமித்தார்.


வர : சரி இந்த பேட்டி எப்ப வரும் நண்பா?

நிரு : யாருக்கு தெரியும் . நாலு ஈளிச்சவாயன பாத்து பேட்டி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாரு ஆசிரியரு நீங்கதான் மொத போணி................

6 மறுமொழிகள்:

 1. போண்டா கணேசனைக் கேட்டதாகக் கூறவும்.. நாட்டுக்கு மிக முக்கியமான பதிவிட்ட நண்பர் வானவராயனுக்கு நன்றிகள்..

  விரைவில் அவர் கல்யாணப் பதிவைப் படிக்க ஆவல்...


  // வர : சரி இந்த பேட்டி எப்ப வரும் நண்பா?

  நிரு : யாருக்கு தெரியும் . நாலு இளிச்சவாயன பாத்து பேட்டி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாரு ஆசிரியரு நீங்கதான் மொத போணி... //

  மொத போணியேவா..?! வெளங்கிறும்!!!....

 1. கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி, தோழரே?!

  ஆனால் இவ்ளோ சப்பை மேட்டராய் இருக்கும்னு நெனைக்கல. நா ஏதோ கனேசன் நால் ரோட்டு முக்கில் போண்டா கடை போடுவதற்கு தடை விதித்த பொலீஸை எதிர்த்து சிறை சென்றதால் "போண்டா"வானார் என நினைத்தேன். :-))

  அந்த காலாண்டு இலக்கிய சிற்றிதழ் எப்போ சந்தைக்கு வருது? :-))

 1. கட்சியைக்காட்டி கொடுப்பதில் உள்ள நேர்மை பிறழ்வையும் அதனால் அவன் அவ்வளவு காலமும் ஏசுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு உண்மையான கிருஸ்துவர் போல் "புரட்சிக்காக" காத்திருக்கும் ஒரு நேர்மையான கம்னுஸ்ட் அவன். ஆனால் அவணே ஒரு போண்டாவிற்காக காட்டிக்கொடுக்க தயங்காதவன் என்கிற சீனியின்( அனார்சிஸ்ட்- என் ஆரம்ப பதிவுகளில் இருப்பார்) கிண்டல் புகழ் பெற்றதுக்கு நியாயமான காரணங்கள் உண்டு.

  பொட்டீக்கடை ! உண்மையில் கணேசனே சப்பை பார்ட்டிதான்................

  :))

 1. கட்சியைக்காட்டி கொடுப்பதில் உள்ள நேர்மை பிறழ்வையும் அதனால் அவன் அவ்வளவு காலமும் ஏசுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு உண்மையான கிருஸ்துவர் போல் "புரட்சிக்காக" காத்திருக்கும் ஒரு நேர்மையான கம்னுஸ்ட் அவன். ஆனால் அவணே ஒரு போண்டாவிற்காக காட்டிக்கொடுக்க தயங்காதவன் என்கிற சீனியின்( அனார்சிஸ்ட்- என் ஆரம்ப பதிவுகளில் இருப்பார்) கிண்டல் புகழ் பெற்றதுக்கு நியாயமான காரணங்கள் உண்டு.

  பொட்டீக்கடை ! உண்மையில் கணேசனே சப்பை பார்ட்டிதான்................

  :))

 1. கட்சியைக்காட்டி கொடுப்பதில் உள்ள நேர்மை பிறழ்வையும் அதனால் அவன் அவ்வளவு காலமும் ஏசுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு உண்மையான கிருஸ்துவர் போல் "புரட்சிக்காக" காத்திருக்கும் ஒரு நேர்மையான கம்னுஸ்ட் அவன். ஆனால் அவணே ஒரு போண்டாவிற்காக காட்டிக்கொடுக்க தயங்காதவன் என்கிற சீனியின்( அனார்சிஸ்ட்- என் ஆரம்ப பதிவுகளில் இருப்பார்) கிண்டல் புகழ் பெற்றதுக்கு நியாயமான காரணங்கள் உண்டு.

  பொட்டீக்கடை ! உண்மையில் கணேசனே சப்பை பார்ட்டிதான்................

  :))

 1. no new post..?

  its so sad...

  come on varavaniyaan, we are expecting u r useful posts..

  tq...