Tuesday, July 11, 2006

@ 12:10 AM எழுதியவர்: வரவனையான்


வாழ்க்கையிலேயே இம்சையானது எதாவது ஒரு வட்டத்தபோட்டு அதுக்குள்ள வண்டிய ஓட்டுன்னு சொல்றதுதான் என்னைய பொறுத்தவரைக்கும். ஆனா பாருங்க சாயுந்தரம் ஆச்சுனா நமக்கு ஃபர்ஸ்ட்டு மூண ( மதுரை ஸ்லாங் - குவாட்டரில் பாதி ) போட பிடிக்குமே தவிர இந்த ஆறு போடுறதுதெல்லாம் அதுக்கு அப்புறம்தான்,

சரி ஊரே ஆறப்போட்டு தள்ளாடிகிட்டு இருக்கும் போது நம்ம மட்டும் மூண போட்டு ஏன் செவனேனு இருக்க்கனும்னு நான் போட்ட ஆறுதாம்பா இது

பிடித்த கவிஞர்கள் :

மாலதி மைத்ரி
திருவள்ளுவர்
அவ்வை - சிறிகட் பெறினும் எழுதியவள்
கோபி
சுகுணாதிவாகர்
அறிவுமதி

பிடித்த எழுத்தாளர்கள்:

பா.சிங்காரம்
கேத்தி ஆக்கர் - நன்றி சாரு
நதி - எரிமலை இதழ்
சினுவா ஆச்சிபி
அ,மார்க்ஸ்
க. மார்க்ஸ்

பிடித்த திரைபடங்கள் :

செவன் சாமுராய்
ஏ பிஷ் கால்டு வாண்டா
பிதாமகன்
பிகைன்டு தீ மூன் - பிரென்ச் மூவி
நண்டு
பம்மல்K சம்மந்தம்

பிடித்த பார்கள் :

திருச்சி ஹேப்பி ஓயின்ஸ்
மதுரை பழைய சன் ஓயின்ஸ்- பஸ்ஸான்டு
திரு நெல்வேலி - நயாகரா
திண்டுக்கல் பஸ்ஸாண்டு மாடி
சென்னை - வேலு மிலிட்டரி அருகில்
கரூர் - அம்மன் நைட் கிளப்

பிடித்த விளிம்புகள் :

சீக்காளி - திறமைமிகு பிட்பாக்கெட் ( பத்துவருடத்தில் மாட்டியது இரண்டே முறை )
கவுண்டன் - பஸ்ஸாண்டில் போதையில் கிடப்பவரை மாமன் மச்சான் என சொந்தம் கொண்டாடி அவரிடம் திருடுவது
மென்டல் ஜேம்ஸ் - உணவு பொருட்கள் மட்டும் திருடுபவர்( பிஸ்க்கேட் என்றால் உயிர் )
யாக்கோபு - பாலியல் தொழிலில் உள்ள திரு நங்கை ( நன்றி - வித்யா)
மேட்டுபட்டி லாரன்ஸ் - தொழில் முறை அடியாள்
வசந்தி - வருடம் மூன்று முறை கர்ப்பமாகி விட்டு வருத்தப்பட்டு கருக்கலைக்கும் பாலியல் சேவகர்

பிடித்த சரக்குகள் :

டக்கீலா வித் லெமன் கார்டி( மெக்ஸிகன்)
ஸிரீலங்கன் மெண்டிஸ் வித் ஸ்வீட் சோடா
வெள்ளோடு சாராயம் வித் வாத்து கறி (ஆர்) அவியல் முட்டை
வி.எஸ்.ஒ.பி பிரென்ச் ஸ்பிரிட் ( அப்படியே சாப்பிடுவேன்)
எம்.சி. பிராண்டி வித் ஆல் இன்குளுடிங் சிக்கன் சூப்
மை கிரேட் பேவரைட் - ஓல்டு மங்க் வித் பாக்கேட் வாட்டர் ( ஒபனர் பற்கள்தான்)

போதும்மென்று நினைக்கிறேன்.


பிடிச்சிருந்தா பின்னூட்டமிடுங்கள் படிக்கிறேன்

11 மறுமொழிகள்:

 1. 2:24 AM  
  Anonymous said...

  enjoy kanna enjoy. life is a game.
  drink until last drop  ur german friend

 1. ஏப்பா தம்பி , ஜெர்மன் பிரண்டுக்ங்கிற அப்புறம் ஏம்பா பெயரை போடாம விட்டுருக்க,

  என்னமோ போ ! ஒரு மெயிலாவது போட்டுருக்கலாம்ல

 1. பம்பல் கே சம்பந்தம் படத்தைச் சொல்லியிருக்கிறியள்.
  நான் பிடித்த ஆறில் ஒன்று என்றுகூடச் சொல்லவில்லை, அந்தப்படமும் பிடிக்கும் என்று சொன்னதற்கே வேண்டிக்கட்டிக் கொண்டது ஏராளம். துணிஞ்சு சொல்லியிருக்கிறியள்.

 1. //ஓல்டு மங்க் வித் பாக்கேட் வாட்டர் ( ஒபனர் பற்கள்தான்)//

  சேம் ப்ளட் :))

  பிதாமகன் எனக்கும் பிடிக்குமுங்கோவ்

 1. ம்ம்ம்ம்ம் நீர் திருந்தாத ஜென்மம்!!!

 1. ஹலோ பிரபா ஒயின் ஸாப்பா?..
  ....
  ....

  கடைய எப்ப சார் திறப்பீங்க?..
  ...
  ...
  சரி.

 1. இப்படி ஆறு போடவே தில்லு வேணும் தல.
  ஒரு சந்தேகம் இவ்வளவு சரக்கு போட்டதால நியாயமா நீங்க எனக்கு பிடிச்ச 12 போட்டிருக்கணும்

 1. 4:49 PM  
  Anonymous said...

  சாரே நீ எழுதினதில நம்ம அயிட்டம் ஒன்னே ஒன்னுதான் இருக்கு
  அதுதான் ஒல்டு மாங்க்.
  வாட்டர் பாக்கெட்லாம் எதுக்கு?
  அப்பிடியே அடிக்கனும்

  அமா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு கட்டிங் கணக்கு பாக்கியிருக்கு - மறந்துட்டியா
  அதான்பா நீ நடத்தின பட்டம்ளிப்பு விழாவுல (மொத்தம் 30 பெருக்கு)
  யாராருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்னு ரோசனை சொன்னேனே - கம்முனு கண்டுக்காம இருக்கியே
  நியாமா கண்ணு?

  சின்னப்ப தாஸ்

 1. மூணுக்கே இவ்வளவு சவுண்டா?
  நாங்கள்ளாம் ஆப்படிச்சாலும் கன் மாதிரி
  நிப்போம்.

 1. 6:25 PM  
  Anonymous said...

  ம்ம்

 1. Hmmm Hmmmm What was going on here?