Sunday, July 09, 2006

@ 5:34 PM எழுதியவர்: வரவனையான்

Exclusive பேட்டி தொடர்கிறது -


கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது , நடந்தது என்னவென்றால் ஒரு நாள் "போண்டா" கனேசனும் நானும் மூவேந்தர் புத்தக கடையில நின்று கொண்டிருந்தோம். அப்போது அவன் இடுப்பில் எதோ புத்தகம் சொருகி வைத்திருந்ததுபோல் இருந்தது, அவன் வழக்கமா அவனுடைய கட்சி அலுவலகத்துக்கு போகும் முன் அ.மார்க்ஸ் வகை புத்தகங்களைத்தான் அப்படி மறைத்து கொண்டு செல்வான்( கம்யூனுஸ்டு கட்சி அலுவலகத்துள் கலக எழுத்துகள் கொண்ட புத்தகங்களுக்கு அறிவிக்க படாத தடை உள்ளது, கலகத்தை அனுமதித்தால் புரட்சி பின் தங்கி விடும் என்ற பயம் போலும்) அது போல நினைத்துக்கொண்டு " என்ன புத்தகம்டா அது" என்றேன். அதற்கு "எங்க எம்.எல்.ஏ கேட்டாங்க அதான் கொண்டு போறேன்" என்றான். ஆபிஸ்-க்கு தானே போற அப்புறம் ஏன் அதை சரோஜா தேவி புத்தகம் போல் மறைத்து கொண்டு போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் நீ பார்த்துட கூடதுன்ன்னு தான் அப்படி வச்சுருக்கேன்னு சொன்னான் "அப்படி என்னாட நான் பார்க்க கூடாத புக்கு" சொல்லி பிடிங்கி பார்த்தேன் அது ஷோபாசக்தியோட "கொரில்லா" நாவல். சும்மா ஒரு நாள் விவாதம் பன்னிகிட்டு உக்கார்த்திருந்தப்போ நாய் கவிதை படிச்ச வெறுப்பில "சுகன்" என் கையில் மாட்டுனா பிரிச்சு பேன் பார்க்க போறேன்னு போதைல சொல்லிட்டேன், அதுல இருந்து ஈழப்பிரச்சினைல மாற்று குரல்களின் கருத்துகளை எல்லாம் நம்மகிட்ட தெரிவிக்கமாட்டனுங்க நம்ம பயலுக. அதுனாலதான் உங்கிட்ட காட்டல ஏன்ன இது புலிகளுக்கு எதிரான நாவலுன்னு எங்க ஆபிஸுல சொன்னாங்க அப்படியென்றான். சரி குடு நான் படிச்சுட்டு தாரன்டா"ன்னு சொன்னதுக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அன்னைக்கு சாயுங்காலம் நண்பர்கள் மத்தியில் இதைச்சொன்னேன், அவுனுங்களும் சேர்ந்துகிட்டு என்னைய நக்கலடிக்கும் நோக்கில் இந்த நாவல பற்றி ரொம்ப புகழ ஆரம்பித்தாங்க. நானும் ஒரு புது நாவல் படிக்க கிடைக்காத வெறுப்பில ஷோபாசக்தி கையில் கிடைத்தால் அவர் மண்டையை உடைப்பேன்னு சபதம் போட்டேன் . கூட இருந்த நண்பர்கள் "இது வன்முறை" மற்றதின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்னு இலக்கியம் பேச ஆரம்பிச்சானுங்க. நானும் காலைல அத மறந்துட்டேன்.

அப்போ என்னுடன் இருந்த கவிஞன்.சுகுணாதிவாகர் இதை அ.மார்க்ஸிடம் சொல்லியிருக்கான் போல , இதுல்லாம் முடிஞ்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு மதியம் என் மொபைலுக்கு போன் வந்தது.

ஹலோ என்றேன்

வணக்கம் வரவனையானோ ? என்றது குரல்

ஆம் என்றேன்

நான் ஷோபசக்தி பேசுறேன். என்னை நினைவிருக்கா

ம்ம் சொல்லுங்கள் நலமா? என்றேன்

நலம்தான் , நீங்கள் தானே என் மண்டை உடைப்பது என்று அறிவித்துள்ளீர்கள், எப்படி உடைப்பிங்கள்.கையிலா தடியிலா, என்றார்

அது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்து என்றேன்

நான் இப்போது இன்டியால தான் இருக்கேன், பிரான்ஸுக்கு உங்களை அலைய விடாமல் இங்கையே வந்து விட்டேன் வேண்டுமாயின் உடைத்து விட்டு போங்கள் என்றார்.

பிறகு அவர் பேசிய எண் போதிய பணமில்லாமல் இணைப்பு துண்டிக்கபட்டது

இதுதான் நடந்தது


கே : இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

வர : மிகவும் வருத்தமடைந்தேன்

கே: தேவையில்லாமல் அடுத்தவரை புண்படுத்திவிட்டோமென்றா ?

வர : இல்லை அவர் அழைத்தும் நம்மால் சென்று அடிக்க முடியவில்லையே என்று.


சரி உங்களின் மார்க்சீய தோழர் திரு. கனேசனுக்கு போண்டா என்கிற அடைமொழி எவ்வாறு ஏற்பட்டது?

சமுதாய நலனுக்கு பலம் சேர்க்கிற கேள்வி இதற்கு விரிவான விடையை நாளை அளிக்கிறேன்.

( நாளை தொடரும் )

11 மறுமொழிகள்:

 1. 5:20 PM  
  Anonymous said...

  :-)))

  expecting the next issue

 1. கண்டிப்பாய் எழுதுவேன் அனானி

  ஆனால் சர்ச்சைகுரிய கருத்தை எழுதும்போது அனானியாக வந்தால் போதும் , இப்போதும் ஏன் அனானி அவதாரம் :)

 1. 12:21 AM  
  Anonymous said...

  யார் உங்களப் பேட்டி காண்கிறது

 1. ' ஈ ' என்கிற இலக்கிய கால் நூற்றாண்டிதழ் நிருபர் கொட்டாவி வாயன் என்னை பேட்டி காண்கிறார் ( அவர் தலையெழுத்து )

 1. //எப்படி உடைப்பிங்கள்//

  ஈழ தமிழாக்கும்...:))

  நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்

 1. // ' ஈ ' என்கிற இலக்கிய கால் நூற்றாண்டிதழ் நிருபர் கொட்டாவி வாயன் என்னை பேட்டி காண்கிறார் //

  கால் நூற்றாண்டிதழா...? ம் ம் நடத்துங்க... வரவனயான்.. ரொம்ப தான் கிண்டலா போச்சு உங்களுக்கும்....

 1. முத்து(தமிழினி) said...

  //எப்படி உடைப்பிங்கள்//

  ஈழ தமிழாக்கும்...:))

  நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்


  உண்மையில் முத்து, அவர் அப்படித்தான் பேசினார், அவரின் ஈழத்தமிழ் உச்சரிப்பு நன்றாகத்தான் இருந்தது.

 1. லிவிங் ஸ்மைல் said...
  // ' ஈ ' என்கிற இலக்கிய கால் நூற்றாண்டிதழ் நிருபர் கொட்டாவி வாயன் என்னை பேட்டி காண்கிறார் //

  கால் நூற்றாண்டிதழா...? ம் ம் நடத்துங்க... வரவனயான்.. ரொம்ப தான் கிண்டலா போச்சு உங்களுக்கும்....


  மன்னிக்கவும் லிவிங் ஸ்மைல், நான் எப்பவும் கிண்டலாகவெல்லாம் எழுதுவதில்லை. ;) நீங்கள் அதை கிண்டலாக எடுத்து கொண்டு போவதால்தான் நம் சமூகம் இப்படி இருக்கிறது :P

 1. வரவனை,

  நீங்கள் தான் சாருவோ? எழுத்து நடையெல்லாம் அவரைப் போலவே இருக்கிறதே...
  ;)

  மன்னிக்கவும்,
  வலையுலகில் இப்படி கேட்கப்படாவிட்டால் வலையுலகில் புனைபெயரிட்டு எழுதுவதற்கு தகுதியற்றவராய் நீங்கள் ஆகி விடுவீர்கள்...:-))...

  போன்டாவின் பெயர் காரணத்திற்காக வெயிட்டிங்.

 1. நன்றி பொட்டிக்கடை,

  நல்லவேளை நான் சாரு இல்லை ! ;))


  போண்டா இன்னும் சரியாய் வேகவில்லை, அனேகமாய் நாளை கிடைக்கும்

 1. நன்றி பொட்டிக்கடை,

  நல்லவேளை நான் சாரு இல்லை ! ;))


  போண்டா இன்னும் சரியாய் வேகவில்லை, அனேகமாய் நாளை கிடைக்கும்