Saturday, July 08, 2006

@ 3:52 PM எழுதியவர்: வரவனையான்

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

வர : மன்னிக்கவும் திமுக விற்கு இலங்கை பிரச்சினையில் தான் ஈடுபாடு உண்டே தவிர 'ஈழ பிரச்சினையில்' அதற்கு ஏதும் நிலைப்பாடு இருப்பதாக தெரியவில்லை

( நிருபர் : தூத்தெறி நல்ல அனுப்பி விட்டான்டா எடிட்டரு, அம்மாவாசை கிறுக்கனா பார்த்து பேட்டி எடுத்துருக்காலாம், இந்த இம்சைட்ட மாட்டினதுக்கு)

நிரு : கேள்வி என்னவென்றால்......

வர : கேள்வியெல்லாம் புரியுது , உனக்கு முதல்ல திமுக நிலைப்பாடுன்னா என்னான்னு தெரியுமா?

நிரு : மத்திய அரசின் நிலைபாடுதான்னு கருணா நிதி சொல்லிருக்காரே.

வர : அப்படி வாடா என் கருப்பட்டி வாயா, வழிக்கு, மத்திய அரசின் நிலைப்பாடு சும்மா வேடிக்கை பார்க்குறதுதான். அப்ப இவரும் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்கு தமிழ் , தமிழன், கண்ணகி. கடல் நீர் ஏனடா உப்புகரிக்கிறது? அது கடல் கடந்து வாழும் தமிழன் விடும் கண்ணீரடா தம்பி ! சொன்னவுரு அறிஞர் அண்ணா , அவரோட தம்பி வேடிக்கை பார்ப்பேன்னு சொன்னா அது எப்படி ஏத்துகிற முடியும்.

நிரு : அப்போ புலிகளை ஆதரிக்கனும்னு சொல்லுறிங்களா?

வர : புலி சிங்கத்தையெல்லாம் நாங்க ஆதரிச்சுகிறோம், மொதல்ல அவரு நம்ம ஊரு மீனவன்களை சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குவதை கடுமையா கண்டிச்சு ஒரு அறிக்கை விடட்டும் , அவரோட மத்திய அரசு மூலமா அவங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்யாகுமரி மாவட்டம் முட்டத்திற்கு தெற்கே இன்னும் இந்திய கடல் பகுதியை கையகபடுத்தி வைத்திருக்கும் சிங்கள கடற்படை பற்றிய விழிப்புணர்வு வரட்டும் நம்ம அரசுகளுகும் அரசர்களுக்கும் . புலிகள் ஒன்றும் கையேந்தவில்லை அவர்களின் கோரிக்கை உங்களின் பார்வையை மாற்றுங்கள் என்பதுதான்.

நிரு : சிறு பத்திரிக்கை உலகில் உங்களை அதிகம் கவர்ந்தவர் யார் ?

வர : என்னை கவர்ந்தவர் என்பதை என்னிடம் கவர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு அதனால் அது குறித்து பேச விரும்பவில்லை

( டேய் டேய் , இதுல்லாம் ரொம்ப ஓவர்டா)

நிரு: நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட், பகுத்தறிவுவாதி.... ( இடைமறிக்கிறார்)

வர : பெரியாரிஸ்ட் என்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் பகுத்தறிவுவாதி என்பதில் உடன் பாடில்லை. ஒருவன் என்று பெரியாரிஸ்ட் என்கிற நிலை எடுக்கிறனோ அன்றே அவன் பகுத்தறிய துவங்கிவிட்டான் என்பது நம் சமூக விஞ்ஞானம். ஆனால் பெரியாரிசம் என்பது ஒரு சிந்தனை முறை தானே தவிர அதை தத்துவமாக கொள்ளமுடியாது, இன்னமும் இந்த பின் நவீன சூழலில் லெனினின் மேற்கோள்களின் அடிப்படையில் பிரச்சினையை அனுகும் மார்க்சீயர்களின் அவல நிலை பெரியாரிஸ்டுகளுக்கு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. பெரியாரிஸம் இறுதி தீர்வு குறித்தெல்லாம் மிகவும் சிரத்தை எடுத்து சிந்திக்கவில்லை, இப்படியெல்லாம் வாழ்ந்தோமானால் கடைசியில் எல்லோரும் இப்படி ஒரு நிலைக்கும் போவோம் என்றேல்லாம் அது பரிந்துரை செய்வதில்லை , நவீன வடிவில் சொல்லவேண்டுமானால் " அவரு உக்காந்து யோசிக்கலையோ" என்றே தோன்றுகிறது. அவரின் சிந்தனை போக்கில் பிரச்சினைகளை அனுகுவதே பெரியாரிஸ்டாக இருப்பவனின் ஒற்றை செயல்திட்டமாக இருக்கமுடியும். அது ஒரு சகல ரோக நிவாரணி. அதே வேளை அது என்றைக்கும் ஒற்றை தீர்வை முன்வைக்க வில்லை

( டேய் இம்சை, நான் என்ன கேக்க வந்தேன் நீ என்னடா சொல்ற. நீங்க ஒரு பெரியாரிஸ்டு, பகுத்தறிவுவாதின்னு சொல்லறங்களே உண்மையான்னு கேட்க வந்தா , மொன்னை பிளேடு போடுறானே )

நிரு: நீங்கள் சமீபத்தில் ரசித்த விடயம் ?

வர : நயந்தாரா

( நிரு: அதை ஏண்டா வாயில ஜொள்ளு ஒழுக சொல்ற )

நிரு : அது இல்லிங்கா நீங்கள் சமீபத்தில் ரசித்த பொதுவான விஷயம்?

வர : ஓ நீ அப்படி கேட்கிறாயா , அன்பு அம்மா நிச்சயம் இலங்கை அரசை கண்டித்து நடத்தும் போராட்டத்துகு தலைமை தாங்குவார்கள் என்று அன்புத்தோழி கதை நாயகன் ,அன்புத்தம்பி திருமாவளவன் , சொன்னதும் அதை அன்பு அண்ணன் வைகோ புன்சிரிப்புடன் ஆமோதித்ததையும் நான் ரொம்ப ரசித்தேன்.

( நிரு : இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள இவன் முதுகுல யாராவது டின் கட்ட போவது உறுதி )

கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது என்ன நடந்தென்றால்

( இன்னும் சில மணிகளில் தொடரும்)

6 மறுமொழிகள்:

 1. //அவரின் சிந்தனை போக்கில் பிரச்சினைகளை அனுகுவதே பெரியாரிஸ்டாக இருப்பவனின் ஒற்றை செயல்திட்டமாக இருக்கமுடியும். அது ஒரு சகல ரோக நிவாரணி. //

  நாசம்!!!:-))

  //அன்பு அம்மா நிச்சயம் இலங்கை அரசை கண்டித்து நடத்தும் போராட்டத்துகு தலைமை தாங்குவார்கள் என்று அன்புத்தோழி கதை நாயகன் ,அன்புத்தம்பி திருமாவளவன் , சொன்னதும் அதை அன்பு அண்ணன் வைகோ புன்சிரிப்புடன் ஆமோதித்ததையும் நான் ரொம்ப ரசித்தேன்.//

  நானும் ரொம்ப ரசித்தேன் ! :-))

  //கன்யாகுமரி மாவட்டம் முட்டத்திற்கு தெற்கே இன்னும் இந்திய கடல் பகுதியை கையகபடுத்தி வைத்திருக்கும் சிங்கள கடற்படை பற்றிய விழிப்புணர்வு வரட்டும் நம்ம அரசுகளுகும் அரசர்களுக்கும்.//

  வெந்தையத்தேவன் சாரி வந்தியத்தேவன் வந்துருவாருங்கோ...சாக்கிரதையா வாய வுடுங்க...

  //சபதம் அப்படியே தான் இருக்கிறது என்ன நடந்தென்றால்...//

  எதிர்பார்த்து காத்துக் கிடக்கிரேன்...:-))

 1. ராசா,


  கலக்கல்...கலைஞரை இன்னும் கொஞ்சம் தாக்கியிருக்கலாம்...

 1. ///
  புலி சிங்கத்தையெல்லாம் நாங்க ஆதரிச்சுகிறோம், மொதல்ல அவரு நம்ம ஊரு மீனவன்களை சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குவதை கடுமையா கண்டிச்சு ஒரு அறிக்கை விடட்டும்
  ///

  கண்டிப்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும்...

 1. படிச்சு சிரிச்சுட்டு பின்னூட்டம் இடாம போனா நல்லாயிருக்காது இல்லியா .....
  கலக்கல் போங்கள்....

 1. //புலி சிங்கத்தையெல்லாம் நாங்க ஆதரிச்சுகிறோம், மொதல்ல அவரு நம்ம ஊரு மீனவன்களை சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குவதை கடுமையா கண்டிச்சு ஒரு அறிக்கை விடட்டும் , அவரோட மத்திய அரசு மூலமா அவங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்யாகுமரி மாவட்டம் முட்டத்திற்கு தெற்கே இன்னும் இந்திய கடல் பகுதியை கையகபடுத்தி வைத்திருக்கும் சிங்கள கடற்படை பற்றிய விழிப்புணர்வு வரட்டும் நம்ம அரசுகளுகும் அரசர்களுக்கும் . புலிகள் ஒன்றும் கையேந்தவில்லை அவர்களின் கோரிக்கை உங்களின் பார்வையை மாற்றுங்கள் என்பதுதான்.
  //

  நேற்றைய தினம் கூட இருமீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டதாக செய்தி பார்த்தேன்..  நயந்தராவையா இப்பொழுதும் ரசிக்கின்றீர்கள்?!!!

 1. கடுமையான காமெடிக்கு நடுவில் கருத்துக்கள் (#$%#$%) இருந்ததை மறுக்க முடியவில்லை...