Saturday, July 08, 2006

@ 11:26 AM எழுதியவர்: வரவனையான்
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார், எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் , அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து......

கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே?

வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் , முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை

( நிருபர் : என்னமோ பெரிய இவன் மாதிரிதான் பேசுரான். மூனுச்சிட்டு வெளையாடிட்டு இருந்துச்சு நாயி, கூப்பிட்டு உட்காரவச்சா எகத்தாளத்தை பாறேன்)


கே: சமீபத்தில் பில் கேட்ஸின் அறக்கட்டளைக்கு வாரன் பப்பட் 3000 மில்லியன் டாலர்களை கொடுத்து , இந்த பணம் ஒவ்வொரு டாலரும் ஏழைகளுக்கு பயன்படும்னு வாழ்த்தி இருக்காறே அது பற்றி ?

வர: கழுதைக்கு கழுதை ஆசீர்வாதம்.நிரு: இதுதான் பதிலா
வர : இதுதான் உண்மை


கே: உங்களின் அரசியல் எதைச்சார்ந்து இயங்குகிறது ?

வர: என்னுடைய அரசியல், அதிகாரங்களுக்கு எதிராய் , அது யாருடைய அதிகாரமாய் இருந்தாலும் அதற்கு எதிராக இயங்குவதே ஆகும். அதே வேளை எம்மின் அதிகார எதிர்ப்பு வேறு சில மையங்களுக்கு ஆதராவாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்

கே: அதிகார எதிர்ப்பு குறித்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் போக்கு திமுக வையும் அதன் தலைமைகளையும் சார்ந்தே இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு " நாகு " போன்ற வைகோ ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறதே?

வர : அதை நான் எந்தச்சூழலிலும் மறுக்கவில்லை அதே வேளை கருணா நிதி குடும்ப அரசியலை தமிழக அரசியற்களத்தில் விமர்சிக்க இங்கு இருக்கும் வேறு யாருக்கும் தகுதியில்லை என்கிற காரணத்தால்தான் வலிந்து சென்று ஆதரித்து எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு வைகோ வின் பழைய பேட்டிகளை பார்த்தீர்களானால் அவர் திமுக வின் கடைமட்ட பேச்சாளர்களை விட " ரொம்ப ஓவராக " ஜால்ரா அடித்திருப்பார். ஜால்ர அடிக்கவென்றே சில இசை கருவிகள் புழக்கத்தில் உள்ளன ஆனால் அவர் அதை வைத்து அடித்தால் ஓசை கிட்டாது என்று தாம்பாளத்தில் அடிப்பார்,
ஒரு போர்முரசே
ஜால்ரா அடிக்கிறதே
அடடே !
என்று புதுகவிதை எழுதுவதற்கு வாய்ப்பெற்படுத்தி குடுத்தார். ஆனால் அணி மாறுவதற்கு தூரோகத்தின் தந்தை கருணா நிதி எந்த விதமான வாய்ப்பும் வழங்கும் முன் சொந்த செலவில் தனக்கு மட்டுமல்ல தன் கட்சிக்கும் சேர்த்து சூனியம் வைத்து கொண்டார். வைகோ ஒரு மாதம் மேற்கொள்ளும் விமான பயணத்தின் கட்டணங்களை செலுத்துவது யார்? இப்படி கேட்பதால் திமுக வை சார்ந்து பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் . நான் நெருப்பு, நீர் என்றேல்லாம் சொல்லுபவர்களயினும் தமிழ் நாட்டு அரசியலில் இருந்தால் மாசு பட்டுத்தான் ஆகவேண்டும் , திமுக வினரும் திருடத்தான் செய்வார்கள், நான் மட்டும் பத்தினி என்கிற டயலாக்கை மறந்து விட்டு அரசியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும்

( இவன் என்னத்தை தான் சொல்ல வரான்னு தெரியலையே- நிருபர் )

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

[ இந்த கேள்விக்கும் , இன்னும் ஷோபா சக்திக்கு தான் விடுத்த கொலைமிரட்டல் குறித்தும் மனம் திறந்த பேட்டி நாளை தொடரும்...... ]

11 மறுமொழிகள்:

 1. varavanai back with a bang :))


  i enjoyed this dear

 1. வாருங்கள் வரவணை,
  முனுசீட்டில் பயங்கர பிசியோ?

  வரவணையானின் பேட்டி தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.:-))

 1. 4:35 PM  
  Anonymous said...

  wow varanavai, superb

  :))))

 1. கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி

 1. 9:27 AM  
  Anonymous said...

  வரவானை, எங்க போயிட்டிங்க ரொம்ப நாளா ஆளை காணோம்

  - பாலன்

 1. அதுதான் அந்த பத்திரிக்கைகாரன் போட்டு இருக்கான்ல முணு சீட்டு விளையாடிட்டு இருந்தேன்னு நம்ப மாட்டிங்களா :)))

 1. //கழுதைக்கு கழுதை ஆசீர்வாதம்//

  அப்டி.

  //அதை நான் எந்தச்சூழலிலும் மறுக்கவில்லை அதே வேளை கருணா நிதி குடும்ப அரசியலை தமிழக அரசியற்களத்தில் விமர்சிக்க இங்கு இருக்கும் வேறு யாருக்கும் தகுதியில்லை //

  அது!!

  பேட்டி தொடருங்க....

 1. மூன்று சீட்டா?
  அப்படி என்றால்?

 1. 10:02 AM  
  Anonymous said...

  // திமுக வினரும் திருடத்தான் செய்வார்கள், நான் மட்டும் பத்தினி என்கிற டயலாக்கை மறந்து விட்டு அரசியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும் //
  இதுவரை கிடைத்த இலாபம் போதவில்லையா என்ன ?
  :-)

 1. அன்பு செந்தில்,
  வரவனையான் நேர்கா"ன"ல் என்பதை நேர்கா"ண"ல் என மாற்றிவிடுங்கள்.
  மறக்காமல் இப்பின்னூட்டத்தை அழித்துவிடுங்கள்

 1. கொடுமை !!!