Monday, July 17, 2006

@ 3:48 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

உங்களின் மார்க்சீய தோழர் திரு. கனேசனுக்கு போண்டா என்கிற அடைமொழி எவ்வாறு ஏற்பட்டது?

நிச்சயமாக நல்ல கேள்வி, பொதுவாக பொதுவுடமை இயக்கதாரிடம் காணப்படும் பண்புகள் கணேசனிடமும் காணப்படும், அதாவது எப்போது பார்த்தாலும் குளிச்சு முணு நாள் ஆனவன் போன்றும்,மதிய சாப்பாட்டுக்கு ஈரத்துணி கட்டி படுப்பவன் போலவும், சில வருடங்களாய் ஒரே சட்டையை மட்டும் போட்டு திரிபவன் போன்றும்.ஒரே வார்த்தையில் சொல்லுவதானால் பரம்பரை ஆண்டி போலவே இருப்பான். பஸ்ஸாண்டில் நின்று தனது இயக்கத்திற்கு நிதி வேண்டி உண்டியல் குலுக்கும் போது பார்த்தால் இவன் நிலையை பார்த்து நிறைய நிதி கிடைக்கும் , அவர்கள் கட்சியில் கணேசன் போனால் வசூல் ஓகோ, "ராசியானவன் " என்கிற கருத்து முதல்வாத எண்ணம் தலை தூக்கியதற்கு இதுவே காரணம். இதை மாற்ற என்னை போன்ற திராவிடச்சார்பான "வெள்ளுடை வேந்தர்கள்" நிறைய முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை . இது போன்ற ஒரு தோற்றத்தில் இருந்தால்தான் மக்களை அனுகமுடியும் என்கிற தவறான எண்ணம் இப்போதும் இருக்கிறது. ஆனால் மார்க்சீயர்கள் தமிழ்நாட்டில் நன்கு காலுண்ட முடியாத முக்கிய காரணியாக விளங்குவது இந்த 'தோற்றபிழை'தான். கணேசன் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பதை பெருமையாக கூறித்திரிவான். எ.க. "[ நேத்து நீ பி.பி கால் பன்னும்போது குளிச்சிட்டு இருந்தேன்' - " சுடுதண்ணில குளிகற சுகமே சுகம் " போன்று இருக்கும் அவன் பேச்சு.

இப்படி இருப்பதை மறைந்த மார்க்சீய முன்னோடித்தலைவர் திரு.வி.பி.சிந்தன் வண்மையாக கண்டிப்பார் . இதை மார்க்சீய தோற்றம் என்று கிண்டலடிப்பார். ஆனாலும் இவன் யார் சொன்னாலும் கேட்காமல் "சூதாடி சித்தன்" மாதிரியே இருப்பான். அதே போன்று இன்னொரு குறிப்பிடத்தக்க பண்பு படுக்கும் இடத்தை சொல்ல மாட்டான் . வீட்டை அடிக்கடி மாற்றுவான் கேட்டால் காவல்துறை கண்கானிப்பில் நாம் இருக்ககூடாது என்பான். யாருமே தேடாமல் இவனாக தலைமறைவாக இருக்க சொல்லி உத்தரவு என்று ஏதாவது லாட்ஜில் ரூம் போட்டு நல்ல சரக்கடிச்சுட்டு பிளாட் ஆகிவிடுவான். இப்படித்தான் ஒரு முறை அவனின் இயக்கமும் எங்களின் இயக்கமும் இணைந்து மறியல் போராட்டம் அறிவித்து இருந்தது. போராட்டத்துக்கு முதல் நாள் தடுப்புகாவல் சட்டபடி காவல்துறை எங்களை தேட ஆரம்பித்துவிட்டது. நான் எஸ்கேப் ஆகிவிட்டேன். போராட்டத்தின் போது வந்து கலந்து கொண்டு கைதானேன், பின் காவல் நிலையத்தில் இருக்கும் போது சொன்னேன் " கணேசன் பாருவேன் பைபாஸ்ல பஸ் மறியல் பன்னி நல்ல டப் குடுப்பான் போலிசுக்கு என்றேன். அப்போது அங்கிருந்த காவலர் சொன்னார் ,"உங்காள முந்தாளே கைது பன்னியாச்சுன்னு". அடப்பாவி சும்மாநாளுல இவன தலைமறைவா இருப்பான் இப்போ போயி மாட்டிகிட்டாணேன்னு நினைத்தேன். அப்பதான் சொன்னாரு அந்த பொலிசுகாரரு " ஏப்பா இவனுகு ஒளியத்தெரிஞ்சதே முணு இடம் ,அது மூணும் எங்களுகும் தெரியும், முதல் அரஸ்டே உங்காளுதான்னு"னாரு. உள்ள போயி கணேசன பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சேன், அதுக்கு அவன் " எவனோ மாற்று இயக்கத்துக்காரனுஙக் எங்க கட்சியில ஊடுருவிட்டானுங்க என்றான். "தூ" என்று ஒரு செல்லத்துப்பு துப்பிவிட்டு வந்தேன்.

இவன் இருப்பதோ தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்ட கம்முணுஸ்டு கட்சி ஆனால் கணேசனோ மக்கள் யுத்தகுழு தலைவர் " கொண்டபள்ளி சீதாரமையா" ரேஞ்சுக்கு தன்னை நினைப்பவன். இப்படித்தான் ஒரு முறை நானும் சீனியும் கணேசனும் நின்று கொண்டிருந்தோம், அப்போது ஒரு நண்பர் கல்யான பத்திரிக்கை வைக்க வந்தார், அப்போதுதான் கணேசனுக்கும் திருமணம் (அவன் கல்யாணம் பற்றி விரைவில் ஒரு தனிப்பதிவு வரும் ) ஆன புதிது. பத்திரிக்கை வைக்க வந்தவர் கணேசனிடம் " உங்க வீடு எங்க நண்பா" என்று கேட்டார். அதுக்கு அவன் எதுக்கு என்றான். இல்ல உங்க கல்யானத்துக்கு என் வீட்டுல வந்து பத்திரிக்கை வச்சிங்க அதுனாலதான் உங்க வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்கனும்ல என்றார் . பராவாயில்லை இங்கவே குடுங்க, நான் வீட்டு அட்ரஸ யாருக்கும் சொல்லருதில்லை என்றான். சீனி கடுப்பாயிட்டான் ஏண்டா உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு ஒருத்தன் அழைப்பிதழ் அனுப்பறதே பெரிசு அதுல என்னடா பிகுன்னு சொல்லி கணேசன் கையில வைத்திருந்த நோட்டை பிடுங்கி கணேசன் வீட்டு முகவரியை எழுதப்போனான் அப்போ கணேசன் " நான் வச்சுருக்க எத வேணும்னாலும் படிச்சு பாரு அந்த நோட்ட மட்டும் விட்டு விடு அது எங்க கட்சி தகவல் இருக்கு" என்று கோபித்து கொண்டான்.

அப்போழுதான் சீனி சொன்னான் " ஒரு போண்டா வாங்கி கொடுத்தா கட்சியை காட்டி கொடுக்கறவேன் நீயி, உனக்கு எதுக்குட இந்த பில்டப்புனு"

அன்று முதல் அழுக்கு கணேசன் போண்டா கணெசனாக பரிணமித்தார்.


வர : சரி இந்த பேட்டி எப்ப வரும் நண்பா?

நிரு : யாருக்கு தெரியும் . நாலு ஈளிச்சவாயன பாத்து பேட்டி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாரு ஆசிரியரு நீங்கதான் மொத போணி................

Sunday, July 16, 2006

@ 8:25 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்

எழுதிக்கொண்டிருக்கும் பதிவுகள் :

போண்டா கணேசன் பெயர்க்காரணம் - நேர்கானல் தொடர்ச்சி

சிங்கள பைலாவும் செந்தூர் முருகனும்.....
போண்டாவுக்கு பொட்டிகடை பறப்பதால் கண்டிப்பாய் நாளை அவருக்கு பார்சல் செய்து தரப்படும்.

Tuesday, July 11, 2006

@ 12:10 AM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்


வாழ்க்கையிலேயே இம்சையானது எதாவது ஒரு வட்டத்தபோட்டு அதுக்குள்ள வண்டிய ஓட்டுன்னு சொல்றதுதான் என்னைய பொறுத்தவரைக்கும். ஆனா பாருங்க சாயுந்தரம் ஆச்சுனா நமக்கு ஃபர்ஸ்ட்டு மூண ( மதுரை ஸ்லாங் - குவாட்டரில் பாதி ) போட பிடிக்குமே தவிர இந்த ஆறு போடுறதுதெல்லாம் அதுக்கு அப்புறம்தான்,

சரி ஊரே ஆறப்போட்டு தள்ளாடிகிட்டு இருக்கும் போது நம்ம மட்டும் மூண போட்டு ஏன் செவனேனு இருக்க்கனும்னு நான் போட்ட ஆறுதாம்பா இது

பிடித்த கவிஞர்கள் :

மாலதி மைத்ரி
திருவள்ளுவர்
அவ்வை - சிறிகட் பெறினும் எழுதியவள்
கோபி
சுகுணாதிவாகர்
அறிவுமதி

பிடித்த எழுத்தாளர்கள்:

பா.சிங்காரம்
கேத்தி ஆக்கர் - நன்றி சாரு
நதி - எரிமலை இதழ்
சினுவா ஆச்சிபி
அ,மார்க்ஸ்
க. மார்க்ஸ்

பிடித்த திரைபடங்கள் :

செவன் சாமுராய்
ஏ பிஷ் கால்டு வாண்டா
பிதாமகன்
பிகைன்டு தீ மூன் - பிரென்ச் மூவி
நண்டு
பம்மல்K சம்மந்தம்

பிடித்த பார்கள் :

திருச்சி ஹேப்பி ஓயின்ஸ்
மதுரை பழைய சன் ஓயின்ஸ்- பஸ்ஸான்டு
திரு நெல்வேலி - நயாகரா
திண்டுக்கல் பஸ்ஸாண்டு மாடி
சென்னை - வேலு மிலிட்டரி அருகில்
கரூர் - அம்மன் நைட் கிளப்

பிடித்த விளிம்புகள் :

சீக்காளி - திறமைமிகு பிட்பாக்கெட் ( பத்துவருடத்தில் மாட்டியது இரண்டே முறை )
கவுண்டன் - பஸ்ஸாண்டில் போதையில் கிடப்பவரை மாமன் மச்சான் என சொந்தம் கொண்டாடி அவரிடம் திருடுவது
மென்டல் ஜேம்ஸ் - உணவு பொருட்கள் மட்டும் திருடுபவர்( பிஸ்க்கேட் என்றால் உயிர் )
யாக்கோபு - பாலியல் தொழிலில் உள்ள திரு நங்கை ( நன்றி - வித்யா)
மேட்டுபட்டி லாரன்ஸ் - தொழில் முறை அடியாள்
வசந்தி - வருடம் மூன்று முறை கர்ப்பமாகி விட்டு வருத்தப்பட்டு கருக்கலைக்கும் பாலியல் சேவகர்

பிடித்த சரக்குகள் :

டக்கீலா வித் லெமன் கார்டி( மெக்ஸிகன்)
ஸிரீலங்கன் மெண்டிஸ் வித் ஸ்வீட் சோடா
வெள்ளோடு சாராயம் வித் வாத்து கறி (ஆர்) அவியல் முட்டை
வி.எஸ்.ஒ.பி பிரென்ச் ஸ்பிரிட் ( அப்படியே சாப்பிடுவேன்)
எம்.சி. பிராண்டி வித் ஆல் இன்குளுடிங் சிக்கன் சூப்
மை கிரேட் பேவரைட் - ஓல்டு மங்க் வித் பாக்கேட் வாட்டர் ( ஒபனர் பற்கள்தான்)

போதும்மென்று நினைக்கிறேன்.


பிடிச்சிருந்தா பின்னூட்டமிடுங்கள் படிக்கிறேன்

Sunday, July 09, 2006

@ 5:34 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

Exclusive பேட்டி தொடர்கிறது -


கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது , நடந்தது என்னவென்றால் ஒரு நாள் "போண்டா" கனேசனும் நானும் மூவேந்தர் புத்தக கடையில நின்று கொண்டிருந்தோம். அப்போது அவன் இடுப்பில் எதோ புத்தகம் சொருகி வைத்திருந்ததுபோல் இருந்தது, அவன் வழக்கமா அவனுடைய கட்சி அலுவலகத்துக்கு போகும் முன் அ.மார்க்ஸ் வகை புத்தகங்களைத்தான் அப்படி மறைத்து கொண்டு செல்வான்( கம்யூனுஸ்டு கட்சி அலுவலகத்துள் கலக எழுத்துகள் கொண்ட புத்தகங்களுக்கு அறிவிக்க படாத தடை உள்ளது, கலகத்தை அனுமதித்தால் புரட்சி பின் தங்கி விடும் என்ற பயம் போலும்) அது போல நினைத்துக்கொண்டு " என்ன புத்தகம்டா அது" என்றேன். அதற்கு "எங்க எம்.எல்.ஏ கேட்டாங்க அதான் கொண்டு போறேன்" என்றான். ஆபிஸ்-க்கு தானே போற அப்புறம் ஏன் அதை சரோஜா தேவி புத்தகம் போல் மறைத்து கொண்டு போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் நீ பார்த்துட கூடதுன்ன்னு தான் அப்படி வச்சுருக்கேன்னு சொன்னான் "அப்படி என்னாட நான் பார்க்க கூடாத புக்கு" சொல்லி பிடிங்கி பார்த்தேன் அது ஷோபாசக்தியோட "கொரில்லா" நாவல். சும்மா ஒரு நாள் விவாதம் பன்னிகிட்டு உக்கார்த்திருந்தப்போ நாய் கவிதை படிச்ச வெறுப்பில "சுகன்" என் கையில் மாட்டுனா பிரிச்சு பேன் பார்க்க போறேன்னு போதைல சொல்லிட்டேன், அதுல இருந்து ஈழப்பிரச்சினைல மாற்று குரல்களின் கருத்துகளை எல்லாம் நம்மகிட்ட தெரிவிக்கமாட்டனுங்க நம்ம பயலுக. அதுனாலதான் உங்கிட்ட காட்டல ஏன்ன இது புலிகளுக்கு எதிரான நாவலுன்னு எங்க ஆபிஸுல சொன்னாங்க அப்படியென்றான். சரி குடு நான் படிச்சுட்டு தாரன்டா"ன்னு சொன்னதுக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அன்னைக்கு சாயுங்காலம் நண்பர்கள் மத்தியில் இதைச்சொன்னேன், அவுனுங்களும் சேர்ந்துகிட்டு என்னைய நக்கலடிக்கும் நோக்கில் இந்த நாவல பற்றி ரொம்ப புகழ ஆரம்பித்தாங்க. நானும் ஒரு புது நாவல் படிக்க கிடைக்காத வெறுப்பில ஷோபாசக்தி கையில் கிடைத்தால் அவர் மண்டையை உடைப்பேன்னு சபதம் போட்டேன் . கூட இருந்த நண்பர்கள் "இது வன்முறை" மற்றதின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்னு இலக்கியம் பேச ஆரம்பிச்சானுங்க. நானும் காலைல அத மறந்துட்டேன்.

அப்போ என்னுடன் இருந்த கவிஞன்.சுகுணாதிவாகர் இதை அ.மார்க்ஸிடம் சொல்லியிருக்கான் போல , இதுல்லாம் முடிஞ்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு மதியம் என் மொபைலுக்கு போன் வந்தது.

ஹலோ என்றேன்

வணக்கம் வரவனையானோ ? என்றது குரல்

ஆம் என்றேன்

நான் ஷோபசக்தி பேசுறேன். என்னை நினைவிருக்கா

ம்ம் சொல்லுங்கள் நலமா? என்றேன்

நலம்தான் , நீங்கள் தானே என் மண்டை உடைப்பது என்று அறிவித்துள்ளீர்கள், எப்படி உடைப்பிங்கள்.கையிலா தடியிலா, என்றார்

அது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்து என்றேன்

நான் இப்போது இன்டியால தான் இருக்கேன், பிரான்ஸுக்கு உங்களை அலைய விடாமல் இங்கையே வந்து விட்டேன் வேண்டுமாயின் உடைத்து விட்டு போங்கள் என்றார்.

பிறகு அவர் பேசிய எண் போதிய பணமில்லாமல் இணைப்பு துண்டிக்கபட்டது

இதுதான் நடந்தது


கே : இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

வர : மிகவும் வருத்தமடைந்தேன்

கே: தேவையில்லாமல் அடுத்தவரை புண்படுத்திவிட்டோமென்றா ?

வர : இல்லை அவர் அழைத்தும் நம்மால் சென்று அடிக்க முடியவில்லையே என்று.


சரி உங்களின் மார்க்சீய தோழர் திரு. கனேசனுக்கு போண்டா என்கிற அடைமொழி எவ்வாறு ஏற்பட்டது?

சமுதாய நலனுக்கு பலம் சேர்க்கிற கேள்வி இதற்கு விரிவான விடையை நாளை அளிக்கிறேன்.

( நாளை தொடரும் )

Saturday, July 08, 2006

@ 3:52 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

வர : மன்னிக்கவும் திமுக விற்கு இலங்கை பிரச்சினையில் தான் ஈடுபாடு உண்டே தவிர 'ஈழ பிரச்சினையில்' அதற்கு ஏதும் நிலைப்பாடு இருப்பதாக தெரியவில்லை

( நிருபர் : தூத்தெறி நல்ல அனுப்பி விட்டான்டா எடிட்டரு, அம்மாவாசை கிறுக்கனா பார்த்து பேட்டி எடுத்துருக்காலாம், இந்த இம்சைட்ட மாட்டினதுக்கு)

நிரு : கேள்வி என்னவென்றால்......

வர : கேள்வியெல்லாம் புரியுது , உனக்கு முதல்ல திமுக நிலைப்பாடுன்னா என்னான்னு தெரியுமா?

நிரு : மத்திய அரசின் நிலைபாடுதான்னு கருணா நிதி சொல்லிருக்காரே.

வர : அப்படி வாடா என் கருப்பட்டி வாயா, வழிக்கு, மத்திய அரசின் நிலைப்பாடு சும்மா வேடிக்கை பார்க்குறதுதான். அப்ப இவரும் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்கு தமிழ் , தமிழன், கண்ணகி. கடல் நீர் ஏனடா உப்புகரிக்கிறது? அது கடல் கடந்து வாழும் தமிழன் விடும் கண்ணீரடா தம்பி ! சொன்னவுரு அறிஞர் அண்ணா , அவரோட தம்பி வேடிக்கை பார்ப்பேன்னு சொன்னா அது எப்படி ஏத்துகிற முடியும்.

நிரு : அப்போ புலிகளை ஆதரிக்கனும்னு சொல்லுறிங்களா?

வர : புலி சிங்கத்தையெல்லாம் நாங்க ஆதரிச்சுகிறோம், மொதல்ல அவரு நம்ம ஊரு மீனவன்களை சிங்கள கடற்படை அடிக்கடி தாக்குவதை கடுமையா கண்டிச்சு ஒரு அறிக்கை விடட்டும் , அவரோட மத்திய அரசு மூலமா அவங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்யாகுமரி மாவட்டம் முட்டத்திற்கு தெற்கே இன்னும் இந்திய கடல் பகுதியை கையகபடுத்தி வைத்திருக்கும் சிங்கள கடற்படை பற்றிய விழிப்புணர்வு வரட்டும் நம்ம அரசுகளுகும் அரசர்களுக்கும் . புலிகள் ஒன்றும் கையேந்தவில்லை அவர்களின் கோரிக்கை உங்களின் பார்வையை மாற்றுங்கள் என்பதுதான்.

நிரு : சிறு பத்திரிக்கை உலகில் உங்களை அதிகம் கவர்ந்தவர் யார் ?

வர : என்னை கவர்ந்தவர் என்பதை என்னிடம் கவர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு அதனால் அது குறித்து பேச விரும்பவில்லை

( டேய் டேய் , இதுல்லாம் ரொம்ப ஓவர்டா)

நிரு: நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட், பகுத்தறிவுவாதி.... ( இடைமறிக்கிறார்)

வர : பெரியாரிஸ்ட் என்பதை ஏற்று கொள்கிறேன் ஆனால் பகுத்தறிவுவாதி என்பதில் உடன் பாடில்லை. ஒருவன் என்று பெரியாரிஸ்ட் என்கிற நிலை எடுக்கிறனோ அன்றே அவன் பகுத்தறிய துவங்கிவிட்டான் என்பது நம் சமூக விஞ்ஞானம். ஆனால் பெரியாரிசம் என்பது ஒரு சிந்தனை முறை தானே தவிர அதை தத்துவமாக கொள்ளமுடியாது, இன்னமும் இந்த பின் நவீன சூழலில் லெனினின் மேற்கோள்களின் அடிப்படையில் பிரச்சினையை அனுகும் மார்க்சீயர்களின் அவல நிலை பெரியாரிஸ்டுகளுக்கு ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. பெரியாரிஸம் இறுதி தீர்வு குறித்தெல்லாம் மிகவும் சிரத்தை எடுத்து சிந்திக்கவில்லை, இப்படியெல்லாம் வாழ்ந்தோமானால் கடைசியில் எல்லோரும் இப்படி ஒரு நிலைக்கும் போவோம் என்றேல்லாம் அது பரிந்துரை செய்வதில்லை , நவீன வடிவில் சொல்லவேண்டுமானால் " அவரு உக்காந்து யோசிக்கலையோ" என்றே தோன்றுகிறது. அவரின் சிந்தனை போக்கில் பிரச்சினைகளை அனுகுவதே பெரியாரிஸ்டாக இருப்பவனின் ஒற்றை செயல்திட்டமாக இருக்கமுடியும். அது ஒரு சகல ரோக நிவாரணி. அதே வேளை அது என்றைக்கும் ஒற்றை தீர்வை முன்வைக்க வில்லை

( டேய் இம்சை, நான் என்ன கேக்க வந்தேன் நீ என்னடா சொல்ற. நீங்க ஒரு பெரியாரிஸ்டு, பகுத்தறிவுவாதின்னு சொல்லறங்களே உண்மையான்னு கேட்க வந்தா , மொன்னை பிளேடு போடுறானே )

நிரு: நீங்கள் சமீபத்தில் ரசித்த விடயம் ?

வர : நயந்தாரா

( நிரு: அதை ஏண்டா வாயில ஜொள்ளு ஒழுக சொல்ற )

நிரு : அது இல்லிங்கா நீங்கள் சமீபத்தில் ரசித்த பொதுவான விஷயம்?

வர : ஓ நீ அப்படி கேட்கிறாயா , அன்பு அம்மா நிச்சயம் இலங்கை அரசை கண்டித்து நடத்தும் போராட்டத்துகு தலைமை தாங்குவார்கள் என்று அன்புத்தோழி கதை நாயகன் ,அன்புத்தம்பி திருமாவளவன் , சொன்னதும் அதை அன்பு அண்ணன் வைகோ புன்சிரிப்புடன் ஆமோதித்ததையும் நான் ரொம்ப ரசித்தேன்.

( நிரு : இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள இவன் முதுகுல யாராவது டின் கட்ட போவது உறுதி )

கே : ஈழ எழுத்தாளர் திரு. ஷோபாசக்தியை மண்டையை உடைப்பேன் என்று நீங்கள் முன்பு போட்ட சபதம் என்னாவாயிற்று ? நடந்தது என்ன?

வர : சபதம் அப்படியே தான் இருக்கிறது என்ன நடந்தென்றால்

( இன்னும் சில மணிகளில் தொடரும்)

@ 11:26 AM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார், எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் , அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து......

கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே?

வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் , முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை

( நிருபர் : என்னமோ பெரிய இவன் மாதிரிதான் பேசுரான். மூனுச்சிட்டு வெளையாடிட்டு இருந்துச்சு நாயி, கூப்பிட்டு உட்காரவச்சா எகத்தாளத்தை பாறேன்)


கே: சமீபத்தில் பில் கேட்ஸின் அறக்கட்டளைக்கு வாரன் பப்பட் 3000 மில்லியன் டாலர்களை கொடுத்து , இந்த பணம் ஒவ்வொரு டாலரும் ஏழைகளுக்கு பயன்படும்னு வாழ்த்தி இருக்காறே அது பற்றி ?

வர: கழுதைக்கு கழுதை ஆசீர்வாதம்.நிரு: இதுதான் பதிலா
வர : இதுதான் உண்மை


கே: உங்களின் அரசியல் எதைச்சார்ந்து இயங்குகிறது ?

வர: என்னுடைய அரசியல், அதிகாரங்களுக்கு எதிராய் , அது யாருடைய அதிகாரமாய் இருந்தாலும் அதற்கு எதிராக இயங்குவதே ஆகும். அதே வேளை எம்மின் அதிகார எதிர்ப்பு வேறு சில மையங்களுக்கு ஆதராவாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்

கே: அதிகார எதிர்ப்பு குறித்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் போக்கு திமுக வையும் அதன் தலைமைகளையும் சார்ந்தே இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு " நாகு " போன்ற வைகோ ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறதே?

வர : அதை நான் எந்தச்சூழலிலும் மறுக்கவில்லை அதே வேளை கருணா நிதி குடும்ப அரசியலை தமிழக அரசியற்களத்தில் விமர்சிக்க இங்கு இருக்கும் வேறு யாருக்கும் தகுதியில்லை என்கிற காரணத்தால்தான் வலிந்து சென்று ஆதரித்து எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு வைகோ வின் பழைய பேட்டிகளை பார்த்தீர்களானால் அவர் திமுக வின் கடைமட்ட பேச்சாளர்களை விட " ரொம்ப ஓவராக " ஜால்ரா அடித்திருப்பார். ஜால்ர அடிக்கவென்றே சில இசை கருவிகள் புழக்கத்தில் உள்ளன ஆனால் அவர் அதை வைத்து அடித்தால் ஓசை கிட்டாது என்று தாம்பாளத்தில் அடிப்பார்,
ஒரு போர்முரசே
ஜால்ரா அடிக்கிறதே
அடடே !
என்று புதுகவிதை எழுதுவதற்கு வாய்ப்பெற்படுத்தி குடுத்தார். ஆனால் அணி மாறுவதற்கு தூரோகத்தின் தந்தை கருணா நிதி எந்த விதமான வாய்ப்பும் வழங்கும் முன் சொந்த செலவில் தனக்கு மட்டுமல்ல தன் கட்சிக்கும் சேர்த்து சூனியம் வைத்து கொண்டார். வைகோ ஒரு மாதம் மேற்கொள்ளும் விமான பயணத்தின் கட்டணங்களை செலுத்துவது யார்? இப்படி கேட்பதால் திமுக வை சார்ந்து பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் . நான் நெருப்பு, நீர் என்றேல்லாம் சொல்லுபவர்களயினும் தமிழ் நாட்டு அரசியலில் இருந்தால் மாசு பட்டுத்தான் ஆகவேண்டும் , திமுக வினரும் திருடத்தான் செய்வார்கள், நான் மட்டும் பத்தினி என்கிற டயலாக்கை மறந்து விட்டு அரசியல் தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும்

( இவன் என்னத்தை தான் சொல்ல வரான்னு தெரியலையே- நிருபர் )

கே : சரி அப்போ ஈழப்பிரச்சினையில திமுக வின் நிலைப்பாடுதான் உங்க நிலைபாடா ?

[ இந்த கேள்விக்கும் , இன்னும் ஷோபா சக்திக்கு தான் விடுத்த கொலைமிரட்டல் குறித்தும் மனம் திறந்த பேட்டி நாளை தொடரும்...... ]