Saturday, May 13, 2006

@ 6:59 PM எழுதியவர்: வரவனையான்மிகுந்த ஆவலாய் எதிர்பாத்துகிட்டு இருந்ததை வாங்கிட்டு வந்து கொண்டிருப்பதாக மியாமி ஏர்போர்ட்டிலிருந்து மயில் போன் செய்தவுடன் மனசு பரபரப்பாகி அதை எப்படி கொண்டாடுவது என யோசிப்பதிலேயே பொழப்பு பூராம் கெட்டு போச்சு. ஒரு ரெண்டுநாளு கழிச்சு மும்பை வந்திட்டேன் பங்காளின்னு திரும்பவும் போனு." ஏலே இவேன் ஒருத்தேன் ரயிலு கணக்க அங்க வந்துட்டேன், இங்க வந்துட்டேனுகிட்டு" வாரவேன் ஊருக்கு வந்துட்டு கூப்பிடவேண்டியதுதானே. அத விட்டுபோட்டு சும்ம இசுமைய கூட்றாய்ங்க " அப்படின்னு சொல்லி போன வச்சுட்டேன்.

அடுத்த நாளு மதுர வந்துட்டு கூப்பிட்டான் போயி நலம் விசாரிச்சுட்டு அப்படியே நான் சொல்லிவிட்டு அவன் வாங்கிட்டு வந்த மேட்டரை வாங்கிட்டு கெளம்பும்போது டேய் இந்த இதயும் எடுத்துட்டு போன்னு சொன்னான், என்னானு பாத்தா ஜானி வொக்கர் ரெட் லெபிள். இதல்லாம் இங்க விக்கிற சுப்பர் ஸ்டார் ரேஞ்சுப்பா . வேற என்னா வச்சுருக்கேன்னு கேட்டேன்.

திருதிருன்னு முழிச்சான் சரி இனி விடக்கூடாதுன்னு நோண்டி துருவுன, அப்புறம் சொல்றான் பக்கார்டி சூப்பிரீயர்னு ஒன்னு மட்டும் இருக்கு மத்ததெல்லாம் வேற பிரண்ட்ஸ்க்கு கொடுக்கனும்டான்னு சொல்லிட்டு அதையும் எடுத்து கொடுமையேன்னு கொடுத்துத்தொலைச்சான். வாங்கிட்டு ஊருக்கு வந்து பாத்தா அது "மெய்ட் இன் போர்ட் டோ ரிகா'ன்னு போட்டு இருந்துச்சு அத பார்க்கவும் நமக்கு மேலும் கிளுகிளுப்பா ஆகிபோச்சு ஆகாதா பின்ன. அதுதான் நம்ம J.LO ஊராச்சே . அந்த made in என்கிற வார்த்தை என் கண்ணுக்கு maid in manhattan ந்னு தான் தெரிஞ்சுச்சுனா பாத்துகோங்களேன்.


அன்னைக்கு சாயுங்காலமே அந்த பக்கார்டி சுப்பீரியருக்கு போத்தலில் இருந்து விடுதலைப்பெருவிழா நடத்தி முடிச்சு வாயெல்லாம் வாழைப்பழ மணம் கமழ வீட்டு போயி மாத்து வாங்கிட்டு படுத்தேன். ( .... எம்பூட்டு ஒசத்தி சரக்கடிச்சாலும் கண்டு பிடிச்சுப்புடுறாய்ங்கப்பா )

மறுநாள் மதியம் "வெட்டும்புலி" தீப்பட்டி படம் வச்சுருகிற பிரண்ட தேடிப்போயி கடன் கேப்போமே அது மாதிரி போண்டா கணேசன் , தோழர் கற்பனையரசு ரெண்டு பேரும் கணேசனின் டூபாக்குர் டிவிஎஸ் 50 ல வந்தாய்ங்க. வந்த உடனே எங்க வீட்ல ரெய்டு அவனுங்களுக்கு அதும் எப்படி " என் கூட சேர வேண்டாம்னு " அப்பப்ப எங்க வீட்ல இப்படித்தான் திகில கெளப்புவாய்ங்க. டயலாக்க கேளங்க உங்களுக்கே புரியும். " ஏண்டா கனேசா உனக்கென்ன வயசு,அரசு உனக்கும் அவனுக்கும் 15 வயசி வித்தியாசம், ஏண்டா அவன் பின்னாடி அலையிறிங்க, அவவேன் கூட சேர்ந்து எவனும் உருப்பிட்டதா சரித்திரமே கெடயாது" இம்பூட்டு பேச்சும் வாங்கியும் மழையில நிக்கிற எருமை கணக்க என் ரூமையே பார்த்துகிட்டு இருந்தாய்ங்க. அப்பதான் குளிச்சிட்டு வெளியே வந்தேன். " சமஸ்தானம் தூங்கி எந்திரிச்சு வர நேரத்த பாரு, இதல்லாம் வெளங்குமா" எங்க வீட்டின் தினமும் வரும் வசனமாகியதால் சாப்பிட உக்காந்தேன் .


டேய் டக்கீலா வச்சுருக்கியமே, எடுத்துட்டு வாடா போலாம்னு ஆரப்பிச்சான் கம்யூனிஸ்ட் கனேசன் ( எ) போண்டா. சாப்பிட்டு வீட்டருகே தம்மடிக்கும் போது.கூட தோழர். கற்பனையரசும் ஊம் கொட்டினார்.

"யோவ் நான் என்ன ரஷ்யன் ஓட்கா வா வச்சுருக்கேன், காம்ரேட் ரெண்டு பெரும் இப்படி அலையிறிங்கன்னு" கலாய்தேன்.

இல்லடா டக்கீலா இன்னும் அடிச்சதே இல்லப்பா அதான் கேட்டேன்'னான் கற்பனை.

நாங்க மட்டும் என்ன டெய்லி ரெண்டு "ஹாட் ஷாட் " அடிச்சுட்டுதான் வெளியேவே கிளப்புறேனாக்கும். நானே கொடைக்கானலில் அந்த பிரெசில்காரியோட அடிச்சது. அதுக்கபுறம் போன வருசம் மயிலை பிளைட் ஏத்தும்போது சொல்லிவிட்டு அது இப்பதான் வந்துருக்கு i am going to drink lonely என்றேன்.இந்த வாக்கியம் முடிக்கும் போது தோழர் கற்பனையரசுவின் கண்களில் ஒரு வெறி வந்து மறைந்தது. சரக்கு தரமாட்டேனு சொன்னதுக்கு அவரு கோபப்படலை, அந்த "பிரெசில்காரி" காரிங்கிற வார்த்தை அவர டென்சனாக்கியது . ( தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர் மாதிரி பிரேசில்காரியும் மேட்டரும் ஒரு நல்ல மூடில்தான் எழுதனும் விரைவில் )

காரணம் அவரு பிரெசிலின் சகல வெளிப்பாடுகளுக்கும் ரசிகர், பிரேசில் புட்பால்,ரொனால்டொ,ரிவால்டொ,ரொமாரியோ என அவரின் கதாநாயகர்கள் மாறியபடியே இருப்பார்கள். அந்த கர்லி பிரெசிலியன் பொண்ணுகள் தான் அவரின் ஆதர்ச நாயகிகளே. இதுமில்லாம அப்பப்ப சம்பா,ஸல்சான்னு ஆடியோ சிடி வாங்கி வந்து இயக்கத்திக்கு (அவரின் மொழியில் - ஸ்தாபனம்) தெரியாமல் கேட்பார். என்கிட்ட அடிக்கடி அவரு மனம் நொந்து போய் சொல்லும் வார்த்தை. வீ மிஸ் காம்ரெட், லத்தின் அமெரிக்காவில் பிறக்காமல் போய்விட்டோம் என்று .

அங்க பிறந்தாலும் இப்ப இருக்கிற மாதிரி ஒரு வீணாப்போன இயக்கத்தில தான் நீங்க இருப்பீங்க தோழர்னு கிண்டலடிப்பேன் சரி மேட்டருக்கு வருவோம்

அழுது அடம் புடிச்சி டக்கீலாவை எடுத்துட்டு வர வச்சுட்டானுங்க. எங்கடா போறது குடிக்கன்னு கேட்டேன். அது நாங்க பாத்துகிறோம் அத எப்படி குடிக்கிறது அத சொல்லு,அதுவுமில்லாம இந்த டக்கீலாக்கு மட்டும் அப்படி என்ன தனி சிறப்பு அதையும் சொல்லுனான் கணேசன்.

அதாவது கணேசா, டக்கிலாங்கிறது மெக்ஸிக்கோவில் மட்டும் கிடைக்கும் சரக்கு எப்படி நம்ம வெள்ளோடு சாராயம் ( 150 ஆண்டுகளாக சாராயச்சாவே நடந்ததில்லை) வேற எங்கையும் கிடைக்காதோ அது மாதிரித்தான் அதுவும் அந்த நாட்டு அரசே உற்பத்தி செஞ்சுட்டு இருக்குது. ரெண்டு,முணு தனியார் கம்பெனிங்க மட்டுமே தனியாக உற்பத்தி செய்யுது.

"நீல அகேவ்" என்கிற கத்தாழைக்கிழங்கு வகையில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான மெக்சிக்கோ நாட்டு சரக்கு இது. நாலு டேஸ்ட்தான் இதுல இருக்கு . பிளான்கா, கோல்ட், ரெஸ்பாடோ , ஆனெஜோ அப்படின்னு பேரு.இது இல்லாம 5 வதா ஒன்னு இருக்கு அது "ரிசேர்வ" அது 8 வருசம் ஊரல் போட்டு வாரது. கொஞ்சம் காஸ்ட்லி.


குடிக்கும் போது நவ்வாப்பழம் உப்பு போடாம சாப்பிட்டா ஒரு மாதிரி துவர்க்குமே அது போல இதுவும் துவர்க்கும். அதுனாலதான் ராவா டக்கீலா அடிச்சா கையில உப்ப வச்சுகிட்டு நக்குவானுங்க, அதுக்கு பேரு தான் "ஹாட் ஷாட்" . சொல்லி முடிக்கிறேன் போண்டா வீடு வந்துருச்சு. ஏண்டா நம்ம இங்கையா குடிக்கபோறோம்னேன். ஆமா இதுதான் செலவுமில்லா அப்படியே பிளாட் ஆனாலும் கவலையில்ல என்றார்கள் .

கணேசன் வீடு என்று சொன்னது தவறு அது ஒரு வணிகவளாகம். நகரின் இதய.... ம்கூம் அதையும் தாண்டி வென்டிரிக்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு சொத்து இருப்பதால்தான் அவனை மனிதனாக மதித்தார்கள்.அதன் பின்புறம் கிழே இரண்டு அறைகள் மேலே இரு அறை அதுதான் அவன் வீடு, கீழே கணேசனின் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள் . தாத்தாவுக்கு 96, பாட்டிக்கு 84. அவர்களுக்கு யார் வருகிறார் போகிறார் என்றேல்லாம் தெரியாது. ஆனால் கணேசனின் வண்டி எழுப்பும் வினோத சத்தம் மட்டும் நன்கு கேட்க்கும். அவன் வண்டி ஓடத்துவங்கினால் தப்பு சத்தம் கேட்க்கும்.

மேலே போயி உக்காந்தோம், ஏண்டா வரவனை இந்த காக்டெய்ல்'னு சொல்லுறாய்ங்களே அது நீ செய்வியாடான்னு கேட்டார் தோழர் கற்பனையரசு. ஓ நிறைய படிச்சிருக்கேன் , குடிச்சும் இருக்கேன் ஆனா இந்த பிராண்ட்ல போட்டதில்ல. ஒரு டைப் இருக்கு இன்னைக்கு போடலாம்.


ஆனா அப்படி குடிச்சா கணேசனுகே இந்த புல் பத்தாவது அதை நம்ம ஸ்டைலில் மாத்திபோடுவோம். ஒகே.

சரி முதலில் போய் திராட்சையும்,ஆரஞ்சும் வாங்கிட்டு வா. அப்படியே கொறிக்க ஏதாவது வாங்கிட்டு வாடா, என்னாலைலாம் உன்ன மாதிரி கட்டிங்க ராவா அடிச்சிட்டு செவுத்த நக்கிட்டு போக முடியாதுன்னு சொல்லி அனுப்பினேன்.

போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சு வந்தான் சொல்லிவிட்ட மாதிரியே எல்லாம் வாங்கி வந்தவன். கொஞ்சம் டல்லா இருந்தான் என்னாடனு கேட்டேன்.


"தாத்தா செத்து போயிட்டாருடா"ன்னான்

உடனே பக்கதுல இருந்த தோழர் கற்பனைஅரசு முஷ்டி மடக்கி செவ்வணக்கம் வச்சாரு,

யோவ் நீ ஒருத்தேன் நேரங்கெட்ட நேரத்துல,அவங்க தாத்த காங்கிரசு காரருயா'ன்னு எரிச்சலா சொல்லிட்டு " கணேசா நீ பாத்தியா"ன்னு கேட்டேன்.

"பாத்தேண்டா அவரே சொன்னாருடா'ன்னான்.


( விரைவில் முடிக்கிறேன் )

இனிமேல் குடித்ததை எழுத போவதில்லைனு நண்பர்களுகு கொடுத்த உறுதி வன்மையாக மீறப்பட்ட பதிவு இது. நண்பர்கள் மன்னிக்கவும்.என் பதிவை இன்னும் தமிழ்மணம் எடுத்துக்கொள்வதில்லை என்பதால் பழைய பதிவு ஒன்றை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இதைப்பொருத்தி யுள்ளேன்.


9 பேர் வந்து வெளுத்துட்டு போயிருக்காங்க:
Majiliragu said...
அய்யே குடிகார பய புள்ளைகளா இருக்கியளே!

3:02 PM
லிவிங் ஸ்மைல் said...
பிச்சிப்..புடு..வேன் ராஸ்கல் அதென்ன... சின்னப்..புள்ளத்த..னமா பாதியில, பாதியில நிறுத்துறது...

சட்டுனு முழுசயும், முழுசாப் போடனும்.. புரிஞ்சுதா...?!

5:42 PM
த.சேசுராஜா.தூத்துக்குடி. said...
//அன்னைக்கு சாயுங்காலமே அந்த பக்கார்டி சுப்பீரியருக்கு போத்தலில் இருந்து விடுதலைப்பெருவிழா நடத்தி முடிச்சு//

தூத்துக்குடில கிறிஸ்துவ வியாபாரிக.,
(அதாங்க ஊழியக்காரனுங்க)
விடுதலைப்பெருவிழா நடத்துவாக.
அதுல கலந்து கொண்டு ஆடலாம்...பாடலாம்..கதைகள் கேட்கலாம் .....

அது போல உங்க,
விடுதலைப்பெருவிழால
ஆடலாமா?...பாடலாமா?..கதைகள் கேட்கலாமா?... ....

நிங்க நடத்துற விடுதலைப்பெருவிழால,
நானும் உங்க கூட கலந்து கொள்ளலாமா?..

//இனிமேல் குடித்ததை எழுத போவதில்லைனு நண்பர்களுகு கொடுத்த உறுதி வன்மையாக மீறப்பட்ட பதிவு இது. நண்பர்கள் மன்னிக்கவும்//

தல... உங்க பெயரில்(செந்"தில்")
மாத்திரம் இல்ல உண்மையிலே உங்களுக்கும் "தில்" இருப்பதை
ஒத்துக்கொள்றேங்கோ.

செந்"தில்" ரசிகர் மன்ற ரசிகர்.
த.சேசுராஜா.தூத்துக்குடி.

(சத்தியமா நான் உங்க ரசிகர்தானுங்கோ,
நடிகர் செந்தில் ரசிகர் இல்லங்கோ
நம்புங்கோ)

9:25 PM
Pot"tea" kadai said...
மெக்சிகோ ஓகே அந்த மெட்ராஸ் மேட்டர அன்லீஷ் பன்னுங்க தல...

நீங்க போட்டிருக்கற படத்த பாத்தவுடன் நமக்கும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு ஆயிடுச்சி தல :((

ஆனா எப்படியும் ஒரு கள்ளத்தோனி ஏறியாவது ஏதாவது ஒரு லத்தீன் அமேரிக்க நாட்டுக்கு போயி கொஞ்சம் "நாமும் மனுசங்க தான்"ன்னு நிரூபிச்சிடுவோம்ன்ற நம்பிக்கையில தான் வாழ்க்கையே ஓடுது.

தெக்கீலா பற்றிய மேலதிக தகவட்கு நன்றி :))))

11:12 PM
PRABHU RAJADURAI said...
very very interesting...இணையத்தில் இன்னுமொரு சாருநிவேதிதாவா?

(சரி, இதை மதுரை வரும் பொழுது சொல்லியிருக்கலாமே! கொண்டாடியிருக்கலாமே!!)

4:23 AM
செந்தில் said...
//PRABHU RAJADURAIசைட்...
very very interersting இணையத்தில் இன்னுமொரு சாருநிவேதிதாவா?

(சரி, இதை மதுரை வரும் பொழுது சொல்லியிருக்கலாமே! கொண்டாடியிருக்கலாமே!!)//
தலைவா, நீங்கதான் கிளம்பிட்டிங்க, இல்லைனா கிளப்பிருக்கலாம்

4:39 AM
luckylook said...
//ரெட்டைச்சுழி //??????????????????????


:-(((((((((((

5:27 PM
ராம் said...
இதே படிச்சிடவுடனே ஒரு கிக்'காகி போச்சு... ம் அடுத்த நம்மோட சந்திப்பு மதுரை சுலோசனா பேலஸ்'லே தான்... ஹி ஹி

டக்கிலா மேட்டரு சூப்பரப்பு!!!! :-))))))))))))

5:42 PM
முத்து(தமிழினி) said...
//சரி, இதை மதுரை வரும் பொழுது சொல்லியிருக்கலாமே! கொண்டாடியிருக்கலாமே//

சொல்லவே இல்லை :)))

11 மறுமொழிகள்:

 1. பார்க்கப் போனால் அனுபவம் வாய்ந்த கருணாநிதி, தான் சபாநாயகராகி, ஸ்டாலினை முதல்வராக்கி, சபையை வழி நடத்திச் சென்றிருக்க வேண்டும்!

  ம்ம்ம்ம்ம்..பதவி ஆசை யாரை விட்டது?

  இதில் முதன்முறையாக சட்டசபைக்குச் செல்லும் வி.கா. பேரில், காழ்ப்பும், கிண்டலும்!

  தேவையில்லாமல், திருமாவையும் இழுத்து........,
  கஷ்டம்டா சாமி!

 1. murukaa !!!!

 1. 9:31 PM  
  Swamy Red Bull said...

  daaaaaaaaaai

  Intha satta mamdrathulla

  oru pambaram vidurathukku kuda idam illai suhaniyava konduvangada

  daaaaaaaaaaaaaaai


  vijay wife: yevaruda athu suhaniya thongana kodukaa...

  vijay: onum illa amni.....
  pakisthaaan,kasmir
  jey hind

  Screen play : swamy red bull
  Music : Admk n dmk members
  special effect:mrs.vijaykanth
  produced by : வரவனையான்

  A sk film

 1. 9:32 PM  
  Swamy Red Bull said...

  daaaaaaaaaai

  Intha satta mamdrathulla

  oru pambaram vidurathukku kuda idam illai suhaniyava konduvangada

  daaaaaaaaaaaaaaai


  vijay wife: yevaruda athu suhaniya thongana kodukaa...

  vijay: onum illa amni.....
  pakisthaaan,kasmir
  jey hind

  Screen play : swamy red bull
  Music : Admk n dmk members
  special effect:mrs.vijaykanth
  produced by : வரவனையான்

  A sk film

 1. hahahahaha

 1. நகைச்சுவையான கற்பனை.

  ஆனாலும் தனி மனிதனாய் இரு மாபெரும் கூட்டணிகளை எதிர்த்து 9% வாக்கு வாங்கியிருக்கும் கேப்டன் ஹீரோ தான். மக்களும் ஏதொ மாற்றத்தை எதிர்பார்ப்பதையே இது காட்டுகிறது. அடுத்த தேர்தல் வரை (பொருளாதார ரீதியாக) தாக்குப்பிடிப்பாரா?

  -குப்புசாமி செல்லமுத்து

 1. 12:55 PM  
  முத்து(தமிழினி) said...

  இது தனிமடல்
  *************


  http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113860019909079240.html

  இதை படியுங்கள்..இதில் உள்ளது திராவிட ராஸ்கல்கள் எப்படி வந்தது என்று?

 1. test test test

 1. //இது தனிமடல்
  *************


  http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113860019909079240.html

  இதை படியுங்கள்..இதில் உள்ளது திராவிட ராஸ்கல்கள் எப்படி வந்தது என்று?//

  தனிமடலை வெளியிடலாமா வரவனையாரே?

 1. லக்கி அப்பல்லாம் எனக்கு அவ்வளவு வெவரம் தெரியாது.... வலைப்பதிவை பற்றி.

  சென்னைக்கு வந்து உங்களை பார்த்துப்பேசிய பின் தான் கொஞ்சம் கொஞ்சம் பின்னூட்டத்தினை கையாளும் வகை தெரிந்தது.

  தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கோர எந்த தயக்கமும் இல்லை எனக்கு.

  ( அப்புறம் ரெட்டைச்சுழி என்பது சேட்டைக்கார பிள்ளை என்கிற பொருளில் வைத்தேன்)

 1. //சென்னைக்கு வந்து உங்களை பார்த்துப்பேசிய பின் தான் கொஞ்சம் கொஞ்சம் பின்னூட்டத்தினை கையாளும் வகை தெரிந்தது.//

  நக்கல் தானே? :-)