Sunday, May 07, 2006

@ 1:56 PM எழுதியவர்: வரவனையான்


தனது இறுதிப்பிரச்சாரத்தில் ஜெயா டிவீ அதிபுத்திசாலித்தனமாய் செயல்படுவதாய் நினைத்து "மறுபடியும்" ஒரு 91' உருவாக்கலாமா என்கிற நப்பாசையுடன் கீழ்த்தரமான விளம்பர உத்திகளோடு 'கலைஞரின் கைமாறு'(கலைஞர் எனும் வார்த்தை முதன் முதலாய் ஜெயா டிவீயில் வருகிறது,அனேகமாய் "அதுவும்" பக்குவம் அடைந்திருக்கலாம்) என்கிற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதன் சாரம் ஒரு குற்றவாளியுடனோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவருடனோ யாரும் அவரின் தண்டணை காலத்துக்குபின்னும் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்கிற ரீதியில் இருந்தது.

நானாவித அறங்களின் வழியாக சிந்தித்தாலும் இக்கருத்து திமுக வை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் கண்டிக்கதக்கவையாகவே இருக்கிறது. ராசிவ் வழக்கு உண்மையான( ! ) விசாரனையின் அடிப்படையில் தீர்ப்பளித்திருந்தாலும் அக்குற்றவாளிகளின் தண்டனையின் காலத்துக்கு பிறகு அவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது எவ்வகையிலும் நியாயமில்லை அதுவும் தினகரன் என்கிற காபிபோசா குற்றவாளியின் மனைவி இயக்குனராய் உள்ள தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் அறவுரிமை(moral right ) அறவே கிடையாது.

இன்னோரு பக்கம் இந்த நிகழ்ச்சி ஆளும்கூட்டணியில் எவ்வித விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்த்தால் அது எதிர்மறை பயன்களையே உண்டாக்கியிருக்கிறது.இன்று காலை நண்பன் ஒருவனை தொலைபேசியில் அழைத்து ஊரின் தேர்தல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.(அவன் மதிமுக - வில் ஒன்றிய செயலாளராக இருப்பவன்). அவனின் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில்தான் இருந்தான், ராசிவ் விவகாரம் பற்றி கேட்கவும் அது வரை தனது கூட்டணி வெற்றி பெறும் என்று பேசிக்கொண்டிருந்தவன், "ஏண்டா கேட்கிற காலையில இருந்து எங்க கட்சிக்காரனுக்கு பதில் சொல்ல முடியல , வாராவேன் எல்லாம் இதத்தாண்டா புலம்புறாய்ங்க" என்று அவனும் புலம்ப ஆரம்பித்தான். நல்ல வேளை நிறுத்திட்டாய்ங்க இல்லன்னா இந்த தடவையும் எங்க வேட்பாளர் கதி அவ்வளவுதான் என்றான்.

தன்னுடைய வெற்றிக்காக 'யாரையும்" பலிகொடுக்க தயங்காத கூட்டணீயில் சிக்கியுள்ள வைகோ இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் . திமுகவின் ஊடக அரசியலால் 'கோமாளி'
என்று சித்தரிக்கப்பட்டு ஏறத்தாழ அதில் வெற்றியும் அவர்கள் கண்டுவிட்ட நிலையில் வரப்போகும் நாட்களை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதில் இருக்கிறது அவரின் எதிர்காலம். ஏனெனில் இனி திமுக வென்றால் இவர் மீதான லேசான கவர்ச்சியும் பொது வாக்காளர் மத்தியில் அடிபட்டு போகும். தோற்றுப்போனாலோ திமுக தலைமைக்கு மட்டுமல்ல அடிமட்ட தொண்டன் வரைக்கும் இவரை ஜென்ம பகையாகத்தான் தெரிவார்.

ஈழப்பிரச்சினயில் இவர் கொண்டுள்ள நிலைப்பாடு வேறு இரு திராவிட கட்சிகளும் எடுக்காத ஒன்று இவர் மீதான தமிழ் ஆர்வலர்களின், திராவிட இயக்க இளைஞர்களின் மனரீதியிலான ஆதரவு இவருக்கு முன்பிருந்ததும் அதனால்தான் அந்நிலையை வரும்காலத்தில் தக்கவைக்க வைகோ நிறைய மெனக்கெடவேண்டுமென்றே தெரிகிறது.இன்னொரு பக்கம் புலிகள் சார்பு ஊடகங்கள் திருமாவளவனை உயர்த்திப்பிடித்து வருகிறன,அவரும் ஜெயலலிதா மகிந்தாவை சந்திக்க மறுத்ததை ஜெ'வின் "கலக" செயல்பாடு போல் சித்தரித்து வருகிறார். தமிழ்நாட்டு அரசியலை கடந்த 15 ஆண்டுகாலம் நன்கறிந்தவர்கள் ஜெ-வின் மனப்போக்கையும் நடவடிக்கைகளையும் அவதானிக்க முடியும், எந்த ஒரு சூழலிலும் தான் எடுத்த நிலைபாட்டை அறிவியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீமை விளைந்தாலும் மாற்ற முன்வராதவர் (அப்படியே அவர் மாறவேண்டுமாயின் ஒரு படு தோல்வியைக்கண்டுவிட்டால் சகலுமும் ஒடுங்கியவராய் " நான் திருந்திவிட்டேன், சசிகலாவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" "பக்குவமடைந்துவிட்டேன்' போன்ற முத்துக்களை உதிர்ப்பார் ). அதன் காரணமாய்த்தான் இது போன்ற எல்லாக்கேவலங்களுக்கும் அவர் 'தான்' ஆயுத்தம் என்பது போல் பிரச்சாரத்தினை நிறைவு செய்திருக்கிறார்.

இனியும் வைகோ குடும்ப அரசியல், ஆதிக்கம் போன்ற "செல்லாத நோட்டுக்களை" புழக்கத்தில் விடுவது அர்த்தமற்ற வேலை.என்று அவர் திமுகவுடன் கூட்டணி என்று உள்ளே சென்றாரோ அன்றே திமுக குறித்த அவரின் அனைத்து குற்றச்சாட்டுகளும் முனைமழுங்கி போயின. தயாநிதி மாறன் பற்றியும் வைகோ தரம்தாழ்ந்தே இத்தேர்தலில் கருத்துகளை முன்வைத்தார். 78 ஏப்பிரல் மாநிலங்களவை உறுப்பினராகிய வைகோ தம் பணிகளை திறம்படவே ஆற்றினார் ,ஆனாலும் 90ல் சிவகாசி நாடாளுமன்ற வேட்பாளராக மக்களிடம் "ஓட்டு" வாங்கி வெற்றியை சுவைக்க முடியவில்லை.பிறகு வந்த 96தேர்தலிலும் தோல்வியே, 98 ஜெயலலிதா புண்ணியத்தில் வென்றார். ஆனால் போட்டியிட்ட முதல் தேர்தலில் "மக்களிடம்" வாக்குகளை பெற்றே நாடாளுமன்ற உறுப்பினரானார் திரு.தயாநிதி மாறன். அவரின் அமைச்சரவை செயல்பாடுகளும் மெச்சும்படியாகவே உள்ளன."டாட்டா பிர்லா" போன்ற பிரம்மாஸ்திரங்கள் இலவச டிவியின் முன்(அமெரிக்கர்களீன் பிரபலமான Missed Target டையும் இதையும் பொறுத்தி பார்த்தால் நான் பொறுப்பல்ல) இலக்கு தவறி விழுகின்றன. ஸ்டெர்லைட் தனது பாவனைக்காக தூத்துக்குடி துறைமுகத்தில் தனியாக ஒரு பர்த் கேட்டு டிஆர் .பாலுவுடன் மல்லுக்கட்டிவரும் இந்த வேளையில் "ஸ்டெர்லைட்டை" எதிர்த்து வைகோவுடன் நான் நடைபயணம் போன நாட்கள் ஒரு "கெட்ட கனவாய்" இப்போதும் நினைவுக்கு வருகிறது.

20 மறுமொழிகள்:

 1. 'வைகோ வின் பழைய பேச்சினை' ஒளிபரப்பிய தமிழ்மாலையின் செயல் சரியென்றால், ஜெயா தொ லைகாட்சியின் செயலும் சரியே!

 1. This comment has been removed by a blog administrator.
 1. இரண்டு டிவிக்களின் குயுக்தியான பிரச்சார உத்திகளும் கீழ்த்தரமாக, முகம் சுளிக்கும் படி தான் இருக்கின்றது.

  வைகோவை கோமாளியாக சித்தரிக்கும் பிரச்சாரம் ஏறத்தாழ வெற்றியும் பெற்று விட்டதாக எதை வைத்து கூறுகிறீர்கள்?.

  மக்கள் இரண்டு பிரச்சாரங்களையும் comedy time போலத்தான் பார்க்கின்றார்கள். அனைத்து தலைவர்களும் முன்னுக்குப்பின் முரணாகத்தான் அரசியல் செய்து வந்துள்ளனர், கடந்த கால நிகழ்வுகளை ஒளிபரப்ப ஆரம்பித்தால் எல்லாருடைய மதிப்பும் சந்தி சிரித்து போகும்!

 1. வணக்கம் வரவனையான்

  அருமையானதொரு பார்வை. சிந்திப்பார்களா இவர்கள்?

 1. 4:55 PM  
  Anonymous said...

  கலைஞரின் கைமாறு' மூலம் எதை எதிர்பார்த்ததார்கள் இவர்கள்? ஏற்கெனவே ராஜீவ் மரணத்தில் இவர்கள் குளிர்காய்ந்ததைப்போல மற்றொருமுறை குளிர்காயவா?

 1. //ராசிவ் வழக்கு உண்மையான விசாரனையின் அடிப்படையில் தீர்ப்பளித்திருந்தாலும் அக்குற்றவாளிகளின் தண்டனையின் காலத்துக்கு பிறகு அவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது எவ்வகையிலும் நியாயமில்லை அதுவும் தினகரன் என்கிற காபிபோசா குற்றவாளியின் மனைவி இயக்குனராய் உள்ள தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் அறவுரிமை(moral right ) அறவே கிடையாது.//

  பின்னிட்டீங்க, சகோதரரே!

 1. //வைகோவை கோமாளியாக சித்தரிக்கும் பிரச்சாரம் ஏறத்தாழ வெற்றியும் பெற்று விட்டதாக எதை வைத்து கூறுகிறீர்கள்?//

  சமீப காலமாக என் மகன் காமடி ஷோ பார்த்துக் கொண்டிருந்தால் கூட வைகோ பேசுகிறார் என்றால் அந்த சேனலுக்கு மாறிவிடுகிறான். இந்தக் காமடி நன்றாக இருக்கிறதாம். சிலசமயம் நாமும் உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

 1. //சமீப காலமாக என் மகன் காமடி ஷோ பார்த்துக் கொண்டிருந்தால் கூட வைகோ பேசுகிறார் என்றால் அந்த சேனலுக்கு மாறிவிடுகிறான். இந்தக் காமடி நன்றாக இருக்கிறதாம்.//

  இன்னும் ஜெயலலிதா,கலைஞர், தயாநிதி, இளங்கோவன் பேச்சுக்களையும் கேட்கச் சொல்லுங்கள், அவையும் comedy தரத்தில் ச்ற்றும் குறைந்ததில்லை.

 1. ராசிவ் வழக்கு உண்மையான விசாரனையின் அடிப்படையில் தீர்ப்பளித்திருந்தாலும் அக்குற்றவாளிகளின் தண்டனையின் காலத்துக்கு பிறகு அவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது எவ்வகையிலும் நியாயமில்லை.

  We accept your statement. In jaya case, karunanidhi is repeatedly talking about tansi case,action against govt.employee,anti-conversion law etc.even these cases were closed. Is it correct. You may be strong supporter of karunanidhi. It is not correct that you have to blame only jaya and her partners.

  In jaya TV, they never told that helping to nalini is improper. They told that why karunanidhi did not help openly.

  If karunanidhi is really have the affection on tamilans, he should not have joined his hands with Congress who sent IPKF to Sri Lanka to suppress the tamilans.

 1. வைகோ -வை வாடகை மைக் செட் அப்படின்னு சொல்றது எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க.

 1. வைகோ -வை வாடகை மைக் செட் அப்படின்னு சொல்றது எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க.

  வைகோ ஜெயா பக்கம் போனதால் அவர் வாடகை மைக் செட் அப்படின்னு சொல்வது உண்மையானால், மு.க சோனியாவை புகழ்வத்தால், அவரும் வாடகை மைக் செட் என்று சொல்லலாமா.

  வைகோ ஜெயாவுடன் சேர்ந்தால் அவர் கோமாளி. ஆனால் மு.க சோனியாவுடன் சேர்ந்ததால் அவர் கோமாளி இல்லையா?

  தி.மு.க, இலங்கை தமிழனுக்கு துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி வைத்தது கருனாநிதி தமிழனுக்கு செய்த துரோகம் இல்லையா.

 1. நல்லதொரு பதிவு.
  ....
  இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றால் மதிமுகவின் வீழ்ச்சியும் ஆரம்பித்துவிடும் என்பதுதான் மிகவும் கவலைக்குரியது. ஒரு நேர்மையான அரசியல்வாதி, தன் தொண்டர்களின் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் தலைவர் என்ற 'இமேஜை' வைகோவும் கடைசியில் இழந்துகொண்டிருப்பதுதான் இன்னும் அவலமானது.

 1. அழகான அலசல்

  ஜெயா டிவியின் 'கலைஞரின் கைமாறு' செத்து போன மாட்டிற்கு தண்ணி காட்டுறது போலத்தான்.
  ஏன் சன் டிவியின் professionalism இன்னும் இவர்களுக்கு வரமாட்டேங்குது.
  சன் டிவி செய்த விளம்பரத்தை காண இங்கே
  சொடுக்காவும்
  http://dmkvilambaram.blogspot.com/

 1. This comment has been removed by a blog administrator.
 1. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி !!!

 1. நல்ல அலசல்..கலாநிதி மாறன் அட்டூழியம் என்ற பெயரில் நானும ஒரு பதிவு பொட்டுள்ளேன்..

 1. 11:36 AM  
  Anonymous said...

  ennappa sollavaara
  nalla katturai

 1. //அவரின் அமைச்சரவை செயல்பாடுகளும் மெச்சும்படியாகவே உள்ளன."டாட்டா பிர்லா" போன்ற பிரம்மாஸ்திரங்கள் இலவச டிவியின் முன்(அமெரிக்கர்களீன் பிரபலமான Missed Target டையும் இதையும் பொறுத்தி பார்த்தால் நான் பொறுப்பல்ல) இலக்கு தவறி விழுகின்றன//
  நல்ல கற்பனை...நல்ல சால்ஜாப்பு!

 1. 2:48 PM  
  Anonymous said...

  அப்படியா.....

 1. 10:29 AM  
  Anonymous said...

  nadamadum pinam.

  Vaiyaga Komaali.