Monday, April 24, 2006

@ 1:19 PM எழுதியவர்: வரவனையான்

// 'ஆகவேதான் நாம் அப்படி சிந்திக்க வேண்டியுள்ளது , நம் தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத நடிகராக ,அதே வேளை அதிகம் சாதித்த மனிதராய் தனக்கான இடத்தை இதுவரை எவரும் எட்டி பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியும், தான் வாழும் காலத்திலேயே தன் பிடிவாதத்தால் அல்லது தனக்கென்று தானே உருவாக்கிகொண்ட தொழிற்ச்சார்ந்த விதிகளால் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னமும் ஆளில்லாமல் தானே , தன் பழம் பிரதிகளே அதை நிரப்பிக்கொண்டிருக்கும் நிலையை ரசித்தபடியே தன் சுயத்தை உறுதிசெய்த மனிதனை நாம் அவ்வளவு சுலபமாக தாண்டிச்செல்ல முடியாது.திரைப்படங்களில் விளிம்புகளின் மையத்தை நோக்கிய எள்ளல் மிகுந்த விமர்சனங்களாகவும்,அபத்தமான காட்சியமைப்புகளிலும் அவர் வீசுகின்ற ஒற்றை சொல்லின் அதிர்வுகள் இன்றைக்கும் "நகைச்சுவை" நேரங்களின் தயவால் மீண்டும் மீண்டும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது பயணத்தை தொடர்ந்தபடியே உள்ளது //


மேலேயுள்ளது தமிழிலக்கிய உலகை புரட்டி(இப்பவே சிரிக்காதிங்க) போடப்போகும் எனது 42வது படைப்பு. புத்தகத்தின் பெயர் " கலகக்காரர் கவுண்டமணி ". இப்போதைக்கு நம்ம புது அரசியல்வாதி கம் பழைய இலக்கியவாதி ரவிக்குமார் புன்னியத்துல மறுவாசிப்புங்கிற பேர்ல யாரையாவது வம்பிழுத்து அதன் மூலமா இன்னும் அதிகமா "ரீச்" ஆகுறதுதான் லேட்ட்ஸ்ட் டிரண்ட். ரவிக்குமார் ரேஞ்சுக்கு பெரியார் கிடைத்தார், நம்ம ரேஞ்சுக்கு கவுண்டமணிதான் மாட்டுனாரு.இந்த புத்தகத்துக்கு கிடக்கிற வரவேற்ப பொருத்துதான் என் அடுத்த புத்தகமான " கட்டுடைப்புத்தளத்தில் கவுண்டமணியின் பங்கு" வெளியிடும் தேதிய நிர்னயம் செய்யலாம்ன்னு திட்டம். முதல் பிரதியை பெற்றுக்கொள்ள infosys நாரயனமூர்த்தியையும்(சாருநிவேதிதாக்கு நல்லி குப்புசாமின்னா நமக்கு இவருதான்) வெளியிட நம்ம ஷகீலாக்கா. ஆகவே என் இனிய இலக்கிய ரசிக மகா ஜனங்களே உங்களால் இயன்ற நிதியுதவியை அளிப்பதாக முன்வந்திர்கள் என்றால் நீங்கள் லண்டனில் இருந்தாலும் உங்கள் செலவிலேயே வந்து நேரில் பெற்றுக்கொள்ள சித்தமாய்யுள்ளேன்.

குறிப்பு: தலைப்புள்ள உள்ள Hexa லார்ஜ பத்தி எழுதலையேன்னு பாக்குறிங்களா அது நேற்று அடித்த அளவு

10 மறுமொழிகள்:

 1. ச்சே, நான் எழுதலாம்னு நினைச்சேன், நீங்க முந்திகிட்டீங்க.. சரி விடுங்க..

  எப்ப வெளியிடுவீங்க... ரொம்ப ஆவலோட காத்திட்டிருக்கேன்

 1. இருமைகளாலான இப்பிரபஞ்சத்தில், கவுண்டமணியுடன் இணைந்து தன்னிரக்கம் தேடிப்புகும் மனித இச்சையை; விரும்பிப்பெரும் அடியின் சுய இன்பத்திற்கு ஈடான அனுபவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய செந்திலை விட்டுவிட்டு கவுண்டமணியை மட்டும் தேர்ந்திருப்பதான உங்கள் புறக்கணிப்பின் அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 1. HEXA லார்ஜ் தவிர இன்னபிற சமாச்சாரங்கள் ஏதும் இப்பின்நவீனத்துவ மண்டைக்கு விளங்கவில்லை.

 1. தொப்புளான் said...
  இருமைகளாலான இப்பிரபஞ்சத்தில், கவுண்டமணியுடன் இணைந்து தன்னிரக்கம் தேடிப்புகும் மனித இச்சையை; விரும்பிப்பெரும் அடியின் சுய இன்பத்திற்கு ஈடான அனுபவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய செந்திலை விட்டுவிட்டு கவுண்டமணியை மட்டும் தேர்ந்திருப்பதான உங்கள் புறக்கணிப்பின் அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. //

  ஆகா..... கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்க.....  ஒற்றை வாழைப்பழத்தில் பகுத்தறிவுவாதத்தின் அபத்தங்களையும் கருத்துமுதல்வாதத்தின் விடையற்ற கேள்விகளையும் தத்துவ அரங்கில் எழுப்பி "திகிலை" கிளப்பிய அடிமை அறத்தின் சின்னம் அண்ணன் செந்திலைப்பற்றி எழுதாமல் இருப்பது உண்மையில் தவறுதான்.

 1. வரவணை,

  சூப்ப்ப்பர்..

  இத்தனை நாள் என் கண்ணில் படாமல் எங்கிருந்தீங்க?

  அடுத்த வாரம் நான் செய்யவேண்டிய காரியம் ஏராளம்.

 1. 7:04 PM  
  Anonymous said...

  hey ! varavanai are you from karur.me allso from there

 1. ஹலோ விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கேங்க....


  இருந்தாலும் ரவிக்குமாரை வெருமனே கொறையும் சொல்லிட முடியாது.. இலக்கியவாதிங்க சும்மா தங்களத் தானே சொரிஞ்சு சொரிஞ்சு அந்த ரத்தத்தப் பார்த்து (ரசிச்சு) அழுதுட்டு இருக்க நிலமையில் atleast அரசியல் களத்துல இருங்கியிருப்பது நல்ல விசயம் தானே..

  பி.கு. நான் ரவிக்குமாரை இதுவரைக்கும் துளி கூட படிச்சது கிடையாது.. நான் அவர் ரசிகையும் கிடையாது இலக்கியம் அரசியலுக்கும் வருதேன்னு ஒரு மகிழ்ச்சி அவ்வளவே.. மத்த படி சாரு மாதிரி dryயா அவரை கிண்டலடிப்பதிலும் எனக்கு உடண்பாடில்லை..

  இருந்தாலும் உங்க நக்கலை ரசிக்கிறேன்...

 1. ஹலோ விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கேங்க....


  இருந்தாலும் ரவிக்குமாரை வெருமனே கொறையும் சொல்லிட முடியாது.. இலக்கியவாதிங்க சும்மா தங்களத் தானே சொரிஞ்சு சொரிஞ்சு அந்த ரத்தத்தப் பார்த்து (ரசிச்சு) அழுதுட்டு இருக்க நிலமையில் atleast அரசியல் களத்துல இருங்கியிருப்பது நல்ல விசயம் தானே..

  பி.கு. நான் ரவிக்குமாரை இதுவரைக்கும் துளி கூட படிச்சது கிடையாது.. நான் அவர் ரசிகையும் கிடையாது இலக்கியம் அரசியலுக்கும் வருதேன்னு ஒரு மகிழ்ச்சி அவ்வளவே.. மத்த படி சாரு மாதிரி dryயா அவரை கிண்டலடிப்பதிலும் எனக்கு உடண்பாடில்லை..

  இருந்தாலும் உங்க நக்கலை ரசிக்கிறேன்...

 1. எப்படிங்க இதெல்லாம்... இவவளவு இயல்பா நகைச்சுவை... தானா வருது போல.

  நானெல்லாம் உக்காந்து யோசிச்சா கூட ஒன்னும் தேற மாட்டேங்குது. ஒரு வேளை அந்த Hexa large செய்யற வேலையோ?

  //
  மேலேயுள்ளது தமிழிலக்கிய உலகை புரட்டி(இப்பவே சிரிக்காதிங்க) போடப்போகும் எனது 42வது படைப்பு.
  //

  அப்ப இந்த மாதிரி 41 தடவை Hexa large போட்டு தமிழிலக்கியத்தை உண்டு இல்லை-னு ஆக்கியிருக்கீங்க :-))

  உங்கள் புத்தகம் மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

 1. 9:21 PM  
  Anonymous said...

  // செந்திலை விட்டுவிட்டு கவுண்டமணியை மட்டும் தேர்ந்திருப்பதான உங்கள் புறக்கணிப்பின் அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. //
  //
  "திகிலை" கிளப்பிய அடிமை அறத்தின் சின்னம் அண்ணன் செந்திலைப்பற்றி எழுதாமல் இருப்பது உண்மையில் தவறுதான்
  //
  எழுதுபவரே செந்தில்தானேங்க ? தன்னைப்பற்றி தானே பிறகு எழுதுவார் என்று பொறுமையாக இருங்கள் :-))