Wednesday, April 12, 2006

@ 6:50 PM எழுதியவர்: வரவனையான்


அதாவதுங்க நம் ஊர்ல அரசியலு எப்பவுமே இந்த சினிமா மாதிரிதாங்க, மசாலா கொஞ்சம்,
சென்டிமன்டு கொஞ்சம்(உபயம்: வைகோ ),சண்ட கொஞ்சம்,சிரிப்பு கொஞ்சம்னு நம்ம
விஜய்,ரஜினி படம் மாதிரி விட்டா 200நாள் நிக்காம ஒடுற கண்டிசனுல இருக்குது.
இநத வருசமும் அதுக்கு கொறவு இல்லாம ஊரே களைகட்டுது.
கதாநாயகர்களோ கதநாயகிகளோ பபூன் காமிக்கோ ஒரே கூத்துதான் போங்க !
சரி இன்னையில இருந்து இந்த திருவிழாவில என்ன கூத்துதான் நடக்குதுன்னு பார்க்கலாம்னு முடிவு பன்னி காலைல 3 ருவா சாம்புக்கு பதில 2 ருவா சாம்பூ வாங்கிட்டு மீதி 1 ருவாய்க்கு 1ரூவா பேப்பர்(எங்க ஊருபக்கம் இப்ப தினகரனின் பெயர் 1 ரூவா பேப்பர்) வாங்கிட்டு வரும்போது சுன.பன.வைபார்த்தேன் "என்னடா புதுசா தமிழ்பேப்பர வாங்கிட்டு அலையற அப்படின்னான் சும்மாதாம்ப தேர்தல்வருதுல சரி ஒரு மாசத்துக்கு வாங்கிப்பாப்பமினுதான்ணேன். "அப்ப முடிவு பன்னிட்ட சூரியனுக்கு குத்தற்துனு " என்றான். என்னடா சொல்லுறன்னு கேட்டேன் சிரிச்சுகிட்டே போயிட்டான். நம்ம ஊரு அரசியல் வாதிகள்ளேயே வைகோ கொஞ்சம் வித்தியாசமானவ்ர் மாதிரி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சாரு, மாநாடுகள்ல அவர் மேடைக்கு வாரதும் ,தமிழ்நாடு
முழுக்க இருக்கிற 368 ஒன்றிய செயலாளர்களையும் 150 நிர்வாகிகளையும் எடுத்த எடுப்புல மைக்குல
பேச ஆரம்பிச்சவுடனே ஒருத்தர விடாம அவர்களே, இவர்களேன்னு சொன்னா நமக்கே தல சுத்தும், உர மூட்டைக்கு காசு கொடுத்தோமே அதுல நூறு ருவா சேர்த்து கொடுத்தமாதிரி இருக்கேன்னு வீட்டுக்கு வார வரைக்கும் கணக்கு பார்க்குற என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இதுலாம் என்னமோ ஜாலக்கு வித்த மாதிரி தெரியும்.அப்படியே ஒலக வாரலாறுல இருந்து உள்ளுர் தகராறு வரைக்கும் பொளந்துகட்டுவாரு, இந்திராகாந்திய கேள்வியாக்கேட்டு கொடஞ்சது,ராசீவகாந்திய இங்குலிசுலேயே ராவுனதுன்னு பட்டைய கெளப்புவாரு. கூட்டம் முடிஞ்சி வரும்போது ஓல்டுமங்கு கோட்டர ராவா (யாராவது இழுத்து பார்த்திருக்கீர்களா) இழுத்த மாதிரி இருக்கும். ஒழுங்க இருந்த மனுசன ஒரு நா கலைஞரு கச்சிய விட்டு விரட்டிடாருனாய்ங்க. அடப்பாவமே இப்படியெல்லாம் பண்ணலாமா? அந்த கச்சி- கச்சி தானே கெடந்தான் அந்த மனுசன்னு கவலபட்டேன். சரி அதுலாம் பழய கத. அது நடந்தும் ஆயிடுச்சி 13 வருசம் இப்ப பேப்பர பாத்தா இவரு அந்தம்மா பக்கம் இருந்துகிட்டு பழைய
மாதிரியே "ரிட்டையரான ராஜபார்ட்டு" போல ஜங்கு ஜங்குனு குதிக்கிறாரு. " என்னை சன் டீவில காட்டல, முரசொலி மாறன் குடும்பம் கொள்ளையடிக்குது, என்னை பெயிலில் வரவச்சசுது ஒரு அரசியல் சதி நான் சிறையில் நல்லாத்தான் இருந்தேன் " என்னாடா இந்த மனுசன் இப்படி ஆகிபோய்ட்டாரேன்னு நினைச்சுகிட்டு இருந்தப்பதான், எங்க ஊருக்கு பிரச்சாரத்திற்கு வந்தாரு . சரி சினிமாக்கு போயியும் ரொம்பநாளாச்சே, வைகோ மீட்டிங்காவது பார்க்கபோகலாம்னு போனா, அடக்கழுத ஒரு வாரம் ஊர் முழுக்க புலம்புனததாம்பா இப்பவும் புலம்புராரு. முந்தீ கச்சியை விட்டு துரத்துனபோது நீதி கேட்கிறேன்னு சொல்லி ஊர் ஊராய் வந்தாரு நாங்களாம் அப்போ அவரு பக்கம் தான் அப்பவும் இப்படித்தான் பேசுவாரு அப்போ சொல்லுவாரு " மகாபாரதத்திலே மாமன்
சகுனி ,கோபாலபுரத்திலே மருமகன் சகுனின்னு" நல்லா இருக்கும் பேச்சு அப்போ , வெள்ளோட்டுச்சாராயத்தை சுடச்சுட குடிச்ச மாதிரி, அதல்லான் ஒரு காலம். அப்புறோம் ஒரு நா எந்த மாறன "சகுனி சண்டாளப்பாவி" ன்னு திட்டினாரோ அந்தமாறன் செத்தன்னைக்கு டீவில பார்த்தா உடம்பங்காளி சின்னவயசுலெயே பிள்ளை குட்டியேல்லாம் விட்டிட்டு திடீருனு செத்த மாதிரி எழவுவீடே பொணத்த கவனிக்கறத விட்டிட்டு இவரா தூக்கிற மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பன்னுனாரு, இப்ப பழைய படி "தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா" ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு. இப்படியே பேசிட்டே போயி கடைசில சொல்லுவாரு பாருங்க நான் சூரியன் FM க்கு போன் பன்னி எம்ஜிஆர் பாட்டு கேட்டேன் அவுங்க போடல இது எனக்கு எதிரான சதின்னு......... . இதுல இன்னோரு புதிய புத்தர் சரத்குமார், அது ஒரு தனிக்கத ,அவரு ஏன் விலகனேன்னு சொல்லுற காராணத்த கேட்ட எவனும் வாய்ல சிரிக்கமாட்டான், மெர்க்கன்டைல் பேங்கு பிரச்சினைல அவரு சரியா நடந்துக்கல, ராதிகாவுக்கு பாதுகாப்புபில்லைனு விடுராருப்பா ரீலு. நீங்களே சொல்லுங்க நம்ம நெலம சிரிக்கிறதா அழுவுறதா. ராதிகாவுக்கு பாதுகாப்பிலைங்கற மேட்டருக்காவே ஒரு நாள் லாட்ஜ்"ல ரூம் போட்டு சிரிக்கனும் , இது போக அந்த பேங்கு பிரச்சினை முடிஞ்சி 5 வருசமாக போகுது இப்ப சொல்லுறாருப்பா அதுல எனக்கு மனவருத்தம்னு. ஏப்பா வுட்டா கலைஞரு சின்னப்புள்ளையா இருக்கும்போது செஞ்ச தப்பகூட காரணம் சொல்லுவிங்க போல. ரெண்டு பேரும் உக்காந்து யோசிச்சிருக்காய்ங்க போல........................ காரணத்த.

(சரி நாளைக்கு பேசுவோம் மீதிக்கதைய )

7 மறுமொழிகள்:

 1. 4:57 PM  
  Anonymous said...

  ithaiyum padingka

 1. தலைப்புத்தான் புரியவில்லை. ஆனால் எழுததில் நன்றாக நையாண்டி வருகிறது.வாழ்த்துக்கள்.

 1. is this ur first post??

 1. ஏன் ராசா வைகோவை வம்புக்கு இழுக்கலேன்னா தூக்கம் வராதா?

  இப்படிக்கு
  வைகோ வெறியன் குஜாலி

 1. is this ur first post??

  --இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா...

  என்னங்க தூயா...கி.மு.ல போட்ட பதிவுக்கெல்லாம் கொமெண்ட் போடுறீகளே....

 1. நல்ல போஸ்ட்.. ஆமா பின்நவீனம் னு சொல்லலனா உங்களுக்கெல்லாம் தூக்கம் வராதா?..:)

 1. இது ...!

  இது .. வரவனையான் எழுத்து ... இத உட்டுப் போட்டு ...