Thursday, April 13, 2006

@ 6:22 PM எழுதியவர்: வரவனையான்


எப்பா இந்த கருமத்த எப்படிப்பா குடிக்கறாய்ங்க ! சை , ஒரு கட்டிங்க போடுருதக்கே கால் கிலோ மிச்சர திங்கனும்போல, கருனாநிதி சொல்லுரது நாயந்தான்யா. இந்த பொம்பள நமக்கு புடிச்ச அயிட்டத்த பூரா நிப்பாட்டிட்டு அது சரக்கா அனுப்புதுய்யா, ஊரு பூர தேடுனாலும் ஓல்டு மங்கு கிடைக்கிறதுல்ல, எவய்ன்ட போ பவரு ,கேப்புடனு தான் இருக்குங்குறான். அத வாங்கி குடிக்கறதுக்கு குருனை மருந்த குடிச்சிட்டு படுத்தரலாம் ஒரேடியா போயிரலாம். செரி வேர வழி, சாராயத்த குடிச்சா எட்டுரூக்கு முன்னாடி வரும்போதே வாசன வீட்டுல போயி நிக்குது. கண்ட எழவ குடிச்சு கண்னு காது போயி தடவியீட்டு திரியப்போறன்னு அப்பப்ப திகில கெளப்புரா ஏய்ன் பொண்டாட்டி .அட அந்த இசும என்னானு சொல்ல மறந்துட்டேன் பாத்திங்களா. அன்னைக்கி பாருக்குள்ள போனேனா மொத ரவுண்ட போட்டுட்டு நிமுந்து பாக்கறேன் எதுத்த டேபிளுல முருகனும்,சீனியும் வந்து உக்காராய்ங்க , அப்பவே அடிவவுத்த கலக்குச்சு. எங்கிட்டோ போற மாரியாத்த எம்மேல வந்து ஏறாத்தாங்குர மாதிரி நம்ம எந்த கடைக்கு போனாலும் மை வைச்சு விட்ட மாதிரி பின்னாடியே திரியிராய்ங்கப்பான்னு நெனச்சேன். இவங்க கத உலக கத, மொத்தமே டவுனுல இவங்க கூட்டாளிக 10 பேர தாண்டுனா அதிகம்.ஆனா அவிய்ங்க அடிகிற கூத்திருக்கே ஒவ்வொருத்தனும் தன்னை பின்னவினத்துவவாதிய்ம்பாய்ங்க , ராத்திரில பிள்ளையாரு கோயிலுமேல மொன்டுவைக்கிறது ஜிப்பு போடாம பிரண்டு கல்யானத்துக்கு போயி அதிர்ச்சிய கொடுக்குறதுனு இவய்ங்க அட்டகாசம் தாங்காது. அவைங்க போதைல இருக்குறப்ப சிக்குனோம் செத்தோம். நம்மல ஒன்னுன் செய்யமாட்டாய்ங்க. ஆனா வேற எவனாவது மாட்டுனா அவெ அன்னைக்கு பார்த்திபன்ட மாட்டுன வடிவேலு கததான்.அதிலேயும் இந்த கம்னுஸ்டு கச்சிக்காரனுங்க சிக்கினா அன்னைக்கு ராத்திரி அவன் தென்னமர மாத்திரைய திங்க வேண்டியதுதான். "தோழர் எங்க நிலைப்பாடு என்னனா" அப்படின்னு எவனாச்சும் கேனத்தனமா மாட்டினா அவ்வளவுதான்."லெனினை உடுங்க மார்க்ஸ் மருமகன் ஒரு புத்தகம் எழுதிருக்காரு தெரியுமா? பெயரு - உழைப்பை ஒழிப்போம் அத படிங்க தோழர்" அப்படின்னு அந்த புத்தகத்த கையில கொடுதனுப்பிட்டு குண்டிக்கு பின்னாடி கொல்லுன்னு சிரிப்பாய்ங்க . அடுத்த வாரம் அந்த "தோழர்" இவய்ங்களோட பாருல உக்காந்து "தத்துவங்கள் செத்துவிட்டன" அப்படினு புலம்பிகிட்டு இருப்பாரு , இன்னைக்கும் எங்க ஊரு கம்னுஸ்டு கச்சில உள்ளவய்ங்க இவிங்க கூட நின்னு பேசினாக்கூட பேசுனவனை ஒரு மணிநெரம் வெசாரிச்சு இனிமே அவ்ங்க கூடசேரக்கூடாதுன்னு சொல்லி அனுப்புவாய்ங்க. நா கெடந்து சிரிச்சுக்கிறது வக்காலி வர வர இவங்களுக்கு மொத எதிரி அமெரிக்காகாரன் கெடையாது போல இவனுங்கதான்னு. ஆனா இவங்களும் அப்படித்தான் பன்னுறாய்ங்க பாருங்க போன மாசம் கம்மினுஸ்டு கச்சி கக்கூஸ்ல " தோழர்களே ஜாமயுங்கள் - ஜபர்ஜஸ்து ஜிங்காரோ பீர்" இந்த வெளம்பர ஸ்டிக்கர போயி ஒட்டிட்டு வந்துட்டாய்ங்க. செத்தவேன் ******* சொமந்தவேன் தலையிலங்கற கதையா அவய்ங்க கனேசன கூப்பிட்டு லெப்டு,ரைட்டு மன்னிச்சுக்கோங்க லெப்டு- லெப்டு வாங்கிட்டாய்ங்க.( கனேசன் புரட்சி வரும்னு இன்னமும் நம்புற விளிம்பு*) அடச்சை,என்னவோ சொல்ல வந்திட்டு எங்கையோ போயிட்டுருக்கேன் பாருங்க. அப்புறம் என்னாச்சுனா ,முருகேன் என்னைய பாத்துபுட்டு என்னப்ப ரொம்ப நாளா ஆள கானோம்னான் . நா எங்கப்ப போப்போறேன் இங்கிட்டுதான் திரியுறேனு சொன்னேன். அப்பறொம் அவிய்ங்களுக்குள்ளையே பேசி கெக்கெ பிக்கேன்னு சிரிச்சுக்கிருந்தாய்ங்களா, நானு வாயிருக்க மாட்டாமெ ஏப்ப என்னான்னு சொல்லு நானும் சிரிப்போமுல்ல அப்படினேன் அப்பதாய்ன்யா சொன்னான் ஒரு ஜோக்க, அவன் பிரண்டு ஒருத்தேன் ஒரு தோழர்கூட வழக்கபோல பேசிக்கிருந்திருக்கான் தோழர் வழக்கமான தயிர்சாத தோழர் இல்ல அவுரு மொளக பஜ்ஜி( மார்க்சிய லெனிஸ்டு) தோழர் . இவேன் பேச பேச கடுப்பாகி அவுரு சொல்லிருக்காரு புரட்சி வந்தா மொதல்ல உங்களத்தான் கழுவுல ஏத்துவோம்னு அதுக்கு அவய்ன்சொன்னானாம் .புரட்சி வராது அப்படியே வந்தாலும் நான் அண்ணா திமுக வுக்கு போயிருவேன், அப்பவும் அந்த கட்சியிருக்கும்னு. எனக்கு சிரிச்சு பொற ஏறிக்கிச்சு உங்களுக்கு.........

( மாட்டுக்கு தன்னிவச்சுட்டு வாரேன் )

3 மறுமொழிகள்:

 1. 7:11 PM  
  Anonymous said...

  super . i love your country slang

 1. hello from murcia-spain

 1. //ஆனா அவிய்ங்க அடிகிற கூத்திருக்கே ஒவ்வொருத்தனும் தன்னை பின்னவினத்துவவாதிய்ம்பாய்ங்க , ராத்திரில பிள்ளையாரு கோயிலுமேல மொன்டுவைக்கிறது ஜிப்பு போடாம பிரண்டு கல்யானத்துக்கு போயி அதிர்ச்சிய கொடுக்குறதுனு இவய்ங்க அட்டகாசம் தாங்காது. //


  வரவணை...உங்களொட அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படிச்சிட்டேன்..சூப்பர்யா..

  நிறைய எழுதவும்.


  இந்த பதிவை மறுமொழியிடப்பட்ட பின்னூட்டங்ளில் சேர்க்க காசிக்கு எழுதவும்.