Thursday, April 13, 2006

@ 3:32 PM எழுதியவர்: வரவனையான்


இது கெடக்க, முந்தாநா சாயங்காலமா காந்தி மார்க்கட்டு பக்கம் போயிருந்தேன் ,தக்காளில்லாம் இப்போ நல்ல வெலைக்கு போகுது சரி கமிசங்கடையில காச வாங்கிட்டு வரலாம்னு கெளம்பனேன். எம்பொண்டாட்டி பஸ்ஸாடப்புக்கே வந்து" காச வாங்கீட்டு ஒழுங்க வீட்டுக்கு வந்து சேரு" எவய்ன் கூடவாவது சுத்துனேனு தெரிஞ்சுச்சு அவனுக்கும் வெளக்கமாத்து அடிதான்" அம்பா சொல்லிட்டு போனா. தெக்கதானே போற நானு வாரேன்னு எங்கூட நின்டுக்கிட்டிருந்த பெருமாளு இதக்கேட்டதும் எதித்த பஸ்ஸ்டாப்புக்கு போயி வந்த வண்டில ஏறி வடக்க போயிட்டான். சும்மாயிர்ந்தத ஏதோ செஞ்சு கெடுத்த கணக்க இவ வேற ஞாபக் படுத்துறாளென்னு நொந்து போயி பஸ் ஏருனேன். அங்க போயி எறங்கனா எம் மகனும் அவன் கூட ஒரு நால பயலுகளும் காசு வாங்க நிக்கிறாய்ங்க. எப்போய் அம்மா தாம்பா காச என்னைய வாங்கிட்டு வர சொல்லுச்சு நாந்தான் வாங்கீட்டு போவேனு கடக்காரய்ன் முன்னாடியே நம்மள கேவலபடுத்துராய்ங்க. செரிடா இருந்து வாங்கீட்டு போன்னு சொல்லிட்டு அவய்ன் கிட்டேயே 100 கடனா வாங்கீட்டு ,டீ குடிக்கலாம்னு போனேன் - கொரங்க நெனச்சுகிட்டு மருந்த குடிக்காதங்கற கதையா நூர வாங்குனொனே காலு நேரா முனியான்டி மெடிக்கலுக்கு( டாஸ்மார்க்) தாம்பா போவேங்குது . அங்கெ போயிதான் ஆரம்பிச்சது பாரு ஒரு இசும -



(கொஞ்சம் பொரு ஒர் ரவுண்ட போட்டுக்குறேன்)

0 மறுமொழிகள்: