Saturday, April 15, 2006

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான்செரிடா... நகராட்சி சேர்மனுக்கு நிக்க போறேன்னுட்டு உங்க ஆபிஸ்ல சொல்லிட்டியான்னே. "இந்தா ஆரம்பிச்சிட்ட பாத்தியா சத்தாய்க்குறதுக்கு,நான் எப்படா சொன்னேன் சேர்மனுக்கு நிக்கரேன்னு" - நான் கவுன்சிலருக்கு நிக்க போறேன்டான்னான். அப்படியா , செரி எந்த வார்டுக்கு நிக்க போற அதச்சொல்லு மொதல்லன்னேன். ஏன் நான் இருக்குற வாடுக்குதான் நிப்பேன், அசால்டா ஜெயிப்பேன்னான். நலத்திட்டங்களை திரும்ப வழங்கிய ஜெயலலிதா கணக்கா.

ஓன் வார்டுல எத்தன ஓட்டுடா இருக்குன்னுதான் கேட்டேன்.அவேன் போய்ட்டாய்ன்யா 1956க்கு.அப்பயிருந்து நடந்த எலெக்சேன் ரிசல்ட்ட பூரா "ரமணா" விஜயகாந்து மாறி விளக்கிகிட்டு இருந்தான். நானும் உட்டுடேன் நீ பேசுரா மகனேன்னு - நான் அவேய்ன் கணக்குல இன்னொரு கோட்டர வாங்கி சித்தேன் போக்கு செவேன் போக்குன்னு ஊத்திக்கிர்ந்தேன் நடுவுல அப்பைகப்ப "ம்ம்ம்ம்.....ஒ செரி.... ஆமான்ல .." அப்படினின்னு அவனுக்கும் வாங்கன கோட்டருக்கு வஞ்சனையில்லாம ஒத்து ஊதிகிட்டுருந்தேன். இப்ப புரியதா நான் நின்டாக்க ஈசியா ஜெயிச்சுருவேன்னு முடிச்சான்.சத்தியமா அவேன் பேசுனது எதுமே என் மண்டையில ஏறல . என் நெனப்பெல்லாம் முட்டை பொரியலு சொல்லி காம்மண்னேரம் ஆச்சு இந்த சனியென் புடிச்ச சப்ளையர கானாமேதான் இருந்துச்சு. எடேல ஒன்னு ரெண்டு வார்த்த நாபகோம் இருந்துச்சு, அத வச்சு சமாளிச்சேன், "அப்ப உங்க தாத்தா பேருல உங்க தெருவு இருக்குறனால ஜெயிப்பேங்கிற"ன்னேன். அது மட்டுமில்லடா எங்க வார்டுல எங்களாங்க ஓட்டு மட்டும் 90பெர்சன்டு பூரா வளைச்சு குத்திருவாய்ன்ங்கன்னான் நம்பிக்கை சிகரம் மாதிரி.நான் லேசா நமுட்டுசிரிப்பு சிரிச்சத பாத்துப்புட்டான். நம்ம ஜாதி பாக்குறதில்லடா ஆனா ஓட்டு போடறவேன் பாப்பான்லான்னு சாமாளிச்சான். "ஏண்டா பெரிய கம்மினுஸ்டு புடிங்கிங்கிற ஜாதி ஓட்ட பத்தி பேசுற"ன்னேன் . சரி சரி இதப்போயி அவன்ய்ங்க(அனார்சிஸ்டுகளிடம்) கிட்டே சொல்லிறாத அப்புறம் ஒரு வாரத்துக்கு என்னைய பாக்றபோதுல்லாம் ஓட்டுவாய்ங்க , அப்படின்னு பொது மன்னிப்பு கேக்குற ரேஞ்சுக்கு இறங்கி வந்தான். சீசீ நானெதுகுடா அவய்ன்ங்க கிட்ட பேச போரேன் , நீதான் ராத்திரி மட்டும் அவய்ங்க கூட சுத்தரையாம் சொன்னாய்ன்ங்க'ன்னேன். அவனுக்கு திகிலடிச்சமாதிரி ஆயிப்போச்சு. உனெகெப்டிடா தெரியும்னான். ம்ம்ம்... நீயி மொத ரவுண்ட போட்டுட்டா "டெரித்தா" ரேஞ்சுக்கு பேசுவே ஆனா எங்க இருக்கோம்கரத மறந்துவேல. நாலு நாளைக்கு முன்னாடி பஸ்ஸடாண்டுல ஒட்டல்ல சாப்ட்டு காச கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிருக்க, புரோட்டாலாம் "பூர்சுவா" உணவு இனிமே விக்க கூடாதுன்னு கடக்காரன மெரட்டிருக்க. அந்த கடக்காரன் எய்ன்ட சொல்லிவிட்டான் இனிமே தயவு செஞ்சு இங்கிட்டு வந்தர சொல்லிராதிங்க வந்தான் இனிமே கச்சி கிச்சிலாம் பாக்கமாட்டேன் பொள்ந்துருவேன்னு, ஏன்டா இந்த இம்ச பன்னுரிங்க.அப்படின்னு ஒரு கடி கடிச்சுவிட்டேன் புள்ள பயந்துட்டான். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவேன் "வேற என்ன சொன்னான் கடக்காரன்" அப்படின்னு ஈனசொரமா கேட்டான். நான் இருந்துகிட்டு சரி அத விடுறா எலக்ச்னுக்கு ஆகவேன்டியத பாப்போம்ன்னேன். பஸ்ட்டு சின்னம் போடனும்டா ஜெயக்குமாருட்ட சொல்லி பெயிண்ட மட்டும் வாங்கி கொடுத்திருவோம் அவேன் ஆளா வச்சு வரைஞ்சுருவான், உன் தேர்தலுக்கு அவேன் பங்களிப்புன்னு ஏதாவது இருக்கனுமே,சரி சின்னம் மேட்டர் ஒவர். அடுத்து பிரச்சாரத்துக்கு உங்க ஏரியாக்காரய்ன்களையே வச்சு பன்னு அதான் கரைட்டா இருக்கு(மனசுக்குள்ள எங்க பத்து நாளு நம்மள வரச்சொல்லி தாலிய அருத்துவானோன்னு பயம்) அதுக்கு அவேன் "டேய் ஏய்ன் ஏரியாக்காரய்ன்ங்களாம் பிஜேபிக்கு போய்ட்டாய்ன்கடா"ன்னான். அப்பவே சகுனம் செரியில்லையேன்னு நெனச்சேன், அப்ப எலக்ச்ன் வேலைக்கு என்னடா பண்ணப்போறன்னேன்.நீதாண்டா சொல்லணும்னான் . சரி வேற வழி வா சீனியையும் முருகனையும் பாக்க போலாம்னேன். சனியென் சடைய போட ஆரம்பிச்சது தெரியாம ,கனேசனும் "நல்ல அய்டியாடா "ன்னு சொல்ல, ரெண்டு பேரும் கெளம்புணோம்.

(அந்த கூத்த நாளைக்கு சொல்லுறேன்)

4 மறுமொழிகள்:

 1. 3:18 PM  
  Anonymous said...

  please update ur blog quickly

 1. // நீயி மொத ரவுண்ட போட்டுட்டா "டெரித்தா" ரேஞ்சுக்கு பேசுவே ஆனா எங்க இருக்கோம்கரத மறந்துவேல. //

  சிரிப்ப அடக்க முடியல..

  குறிப்பா // நாலு நாளைக்கு முன்னாடி பஸ்ஸடாண்டுல ஒட்டல்ல சாப்ட்டு காச கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிருக்க, புரோட்டாலாம் "பூர்சுவா" உணவு இனிமே விக்க கூடாதுன்னு கடக்காரன மெரட்டிருக்க. //

  கஷ்டம் என்னால அடக்க முடியல office ஆளுங்க என்ன என்ன-ன்னு கேட்க கேட்க சிரிச்சுட்டே இருந்தேன்..

  ரொம்ப அனுபவப்பட்டுருக்கிங்கன்னு தெரியுது...

 1. நன்றி தோழியர் வித்யா உங்கள் கருத்துக்கு

 1. நன்றி தோழியர் வித்யா உங்கள் கருத்துக்கு