Monday, April 24, 2006

@ 1:19 PM எழுதியவர்: வரவனையான் 10 மறுமொழிகள்

// 'ஆகவேதான் நாம் அப்படி சிந்திக்க வேண்டியுள்ளது , நம் தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத நடிகராக ,அதே வேளை அதிகம் சாதித்த மனிதராய் தனக்கான இடத்தை இதுவரை எவரும் எட்டி பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியும், தான் வாழும் காலத்திலேயே தன் பிடிவாதத்தால் அல்லது தனக்கென்று தானே உருவாக்கிகொண்ட தொழிற்ச்சார்ந்த விதிகளால் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னமும் ஆளில்லாமல் தானே , தன் பழம் பிரதிகளே அதை நிரப்பிக்கொண்டிருக்கும் நிலையை ரசித்தபடியே தன் சுயத்தை உறுதிசெய்த மனிதனை நாம் அவ்வளவு சுலபமாக தாண்டிச்செல்ல முடியாது.திரைப்படங்களில் விளிம்புகளின் மையத்தை நோக்கிய எள்ளல் மிகுந்த விமர்சனங்களாகவும்,அபத்தமான காட்சியமைப்புகளிலும் அவர் வீசுகின்ற ஒற்றை சொல்லின் அதிர்வுகள் இன்றைக்கும் "நகைச்சுவை" நேரங்களின் தயவால் மீண்டும் மீண்டும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் தனது பயணத்தை தொடர்ந்தபடியே உள்ளது //


மேலேயுள்ளது தமிழிலக்கிய உலகை புரட்டி(இப்பவே சிரிக்காதிங்க) போடப்போகும் எனது 42வது படைப்பு. புத்தகத்தின் பெயர் " கலகக்காரர் கவுண்டமணி ". இப்போதைக்கு நம்ம புது அரசியல்வாதி கம் பழைய இலக்கியவாதி ரவிக்குமார் புன்னியத்துல மறுவாசிப்புங்கிற பேர்ல யாரையாவது வம்பிழுத்து அதன் மூலமா இன்னும் அதிகமா "ரீச்" ஆகுறதுதான் லேட்ட்ஸ்ட் டிரண்ட். ரவிக்குமார் ரேஞ்சுக்கு பெரியார் கிடைத்தார், நம்ம ரேஞ்சுக்கு கவுண்டமணிதான் மாட்டுனாரு.இந்த புத்தகத்துக்கு கிடக்கிற வரவேற்ப பொருத்துதான் என் அடுத்த புத்தகமான " கட்டுடைப்புத்தளத்தில் கவுண்டமணியின் பங்கு" வெளியிடும் தேதிய நிர்னயம் செய்யலாம்ன்னு திட்டம். முதல் பிரதியை பெற்றுக்கொள்ள infosys நாரயனமூர்த்தியையும்(சாருநிவேதிதாக்கு நல்லி குப்புசாமின்னா நமக்கு இவருதான்) வெளியிட நம்ம ஷகீலாக்கா. ஆகவே என் இனிய இலக்கிய ரசிக மகா ஜனங்களே உங்களால் இயன்ற நிதியுதவியை அளிப்பதாக முன்வந்திர்கள் என்றால் நீங்கள் லண்டனில் இருந்தாலும் உங்கள் செலவிலேயே வந்து நேரில் பெற்றுக்கொள்ள சித்தமாய்யுள்ளேன்.

குறிப்பு: தலைப்புள்ள உள்ள Hexa லார்ஜ பத்தி எழுதலையேன்னு பாக்குறிங்களா அது நேற்று அடித்த அளவு

Saturday, April 15, 2006

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்செரிடா... நகராட்சி சேர்மனுக்கு நிக்க போறேன்னுட்டு உங்க ஆபிஸ்ல சொல்லிட்டியான்னே. "இந்தா ஆரம்பிச்சிட்ட பாத்தியா சத்தாய்க்குறதுக்கு,நான் எப்படா சொன்னேன் சேர்மனுக்கு நிக்கரேன்னு" - நான் கவுன்சிலருக்கு நிக்க போறேன்டான்னான். அப்படியா , செரி எந்த வார்டுக்கு நிக்க போற அதச்சொல்லு மொதல்லன்னேன். ஏன் நான் இருக்குற வாடுக்குதான் நிப்பேன், அசால்டா ஜெயிப்பேன்னான். நலத்திட்டங்களை திரும்ப வழங்கிய ஜெயலலிதா கணக்கா.

ஓன் வார்டுல எத்தன ஓட்டுடா இருக்குன்னுதான் கேட்டேன்.அவேன் போய்ட்டாய்ன்யா 1956க்கு.அப்பயிருந்து நடந்த எலெக்சேன் ரிசல்ட்ட பூரா "ரமணா" விஜயகாந்து மாறி விளக்கிகிட்டு இருந்தான். நானும் உட்டுடேன் நீ பேசுரா மகனேன்னு - நான் அவேய்ன் கணக்குல இன்னொரு கோட்டர வாங்கி சித்தேன் போக்கு செவேன் போக்குன்னு ஊத்திக்கிர்ந்தேன் நடுவுல அப்பைகப்ப "ம்ம்ம்ம்.....ஒ செரி.... ஆமான்ல .." அப்படினின்னு அவனுக்கும் வாங்கன கோட்டருக்கு வஞ்சனையில்லாம ஒத்து ஊதிகிட்டுருந்தேன். இப்ப புரியதா நான் நின்டாக்க ஈசியா ஜெயிச்சுருவேன்னு முடிச்சான்.சத்தியமா அவேன் பேசுனது எதுமே என் மண்டையில ஏறல . என் நெனப்பெல்லாம் முட்டை பொரியலு சொல்லி காம்மண்னேரம் ஆச்சு இந்த சனியென் புடிச்ச சப்ளையர கானாமேதான் இருந்துச்சு. எடேல ஒன்னு ரெண்டு வார்த்த நாபகோம் இருந்துச்சு, அத வச்சு சமாளிச்சேன், "அப்ப உங்க தாத்தா பேருல உங்க தெருவு இருக்குறனால ஜெயிப்பேங்கிற"ன்னேன். அது மட்டுமில்லடா எங்க வார்டுல எங்களாங்க ஓட்டு மட்டும் 90பெர்சன்டு பூரா வளைச்சு குத்திருவாய்ன்ங்கன்னான் நம்பிக்கை சிகரம் மாதிரி.நான் லேசா நமுட்டுசிரிப்பு சிரிச்சத பாத்துப்புட்டான். நம்ம ஜாதி பாக்குறதில்லடா ஆனா ஓட்டு போடறவேன் பாப்பான்லான்னு சாமாளிச்சான். "ஏண்டா பெரிய கம்மினுஸ்டு புடிங்கிங்கிற ஜாதி ஓட்ட பத்தி பேசுற"ன்னேன் . சரி சரி இதப்போயி அவன்ய்ங்க(அனார்சிஸ்டுகளிடம்) கிட்டே சொல்லிறாத அப்புறம் ஒரு வாரத்துக்கு என்னைய பாக்றபோதுல்லாம் ஓட்டுவாய்ங்க , அப்படின்னு பொது மன்னிப்பு கேக்குற ரேஞ்சுக்கு இறங்கி வந்தான். சீசீ நானெதுகுடா அவய்ன்ங்க கிட்ட பேச போரேன் , நீதான் ராத்திரி மட்டும் அவய்ங்க கூட சுத்தரையாம் சொன்னாய்ன்ங்க'ன்னேன். அவனுக்கு திகிலடிச்சமாதிரி ஆயிப்போச்சு. உனெகெப்டிடா தெரியும்னான். ம்ம்ம்... நீயி மொத ரவுண்ட போட்டுட்டா "டெரித்தா" ரேஞ்சுக்கு பேசுவே ஆனா எங்க இருக்கோம்கரத மறந்துவேல. நாலு நாளைக்கு முன்னாடி பஸ்ஸடாண்டுல ஒட்டல்ல சாப்ட்டு காச கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிருக்க, புரோட்டாலாம் "பூர்சுவா" உணவு இனிமே விக்க கூடாதுன்னு கடக்காரன மெரட்டிருக்க. அந்த கடக்காரன் எய்ன்ட சொல்லிவிட்டான் இனிமே தயவு செஞ்சு இங்கிட்டு வந்தர சொல்லிராதிங்க வந்தான் இனிமே கச்சி கிச்சிலாம் பாக்கமாட்டேன் பொள்ந்துருவேன்னு, ஏன்டா இந்த இம்ச பன்னுரிங்க.அப்படின்னு ஒரு கடி கடிச்சுவிட்டேன் புள்ள பயந்துட்டான். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவேன் "வேற என்ன சொன்னான் கடக்காரன்" அப்படின்னு ஈனசொரமா கேட்டான். நான் இருந்துகிட்டு சரி அத விடுறா எலக்ச்னுக்கு ஆகவேன்டியத பாப்போம்ன்னேன். பஸ்ட்டு சின்னம் போடனும்டா ஜெயக்குமாருட்ட சொல்லி பெயிண்ட மட்டும் வாங்கி கொடுத்திருவோம் அவேன் ஆளா வச்சு வரைஞ்சுருவான், உன் தேர்தலுக்கு அவேன் பங்களிப்புன்னு ஏதாவது இருக்கனுமே,சரி சின்னம் மேட்டர் ஒவர். அடுத்து பிரச்சாரத்துக்கு உங்க ஏரியாக்காரய்ன்களையே வச்சு பன்னு அதான் கரைட்டா இருக்கு(மனசுக்குள்ள எங்க பத்து நாளு நம்மள வரச்சொல்லி தாலிய அருத்துவானோன்னு பயம்) அதுக்கு அவேன் "டேய் ஏய்ன் ஏரியாக்காரய்ன்ங்களாம் பிஜேபிக்கு போய்ட்டாய்ன்கடா"ன்னான். அப்பவே சகுனம் செரியில்லையேன்னு நெனச்சேன், அப்ப எலக்ச்ன் வேலைக்கு என்னடா பண்ணப்போறன்னேன்.நீதாண்டா சொல்லணும்னான் . சரி வேற வழி வா சீனியையும் முருகனையும் பாக்க போலாம்னேன். சனியென் சடைய போட ஆரம்பிச்சது தெரியாம ,கனேசனும் "நல்ல அய்டியாடா "ன்னு சொல்ல, ரெண்டு பேரும் கெளம்புணோம்.

(அந்த கூத்த நாளைக்கு சொல்லுறேன்)

Friday, April 14, 2006

@ 7:14 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்
தேவீ.... காலைல வெள்ளன எழுப்பிவிடு , நாளைக்கு நம்ம கனேசேன் கவுன்சிலருக்கு மனுத்தாக்க பன்னப்போறான். போகனும் சரியா ! அப்படின்னு சொல்லிட்டு படுத்தேம்பா. எழுவெடுத்தவெனெ ராத்திரி பூரா ஊர மேய்ஞ்சிட்டு இப்ப வந்து எம்பேரக்கூட மாத்தி சொல்லுற, நாந்தான் காசுத்தரலெயே எவேன் வாங்கிகுடுத்தான் மூத்திரம் குடிக்கறதுக்கு'ன்னு கேகேனு சவுண்டகொடுத்தா எம்பொண்டாட்டி சந்திரா , எனக்கு போதேயே தெளுஞ்சுபோச்சுப்பா. சே சும்மான்னு வந்து படுத்திருக்காலாம் வாயிருக்கமாட்டாமே அவள உசுப்பிவிட்டு ரெண்டு வாங்கிகட்டுனதுதான் மிச்சம். வெசயம் வேறனொன்னுமில்லை எம் பிரண்டு ஒருத்தேன் இருக்கான் கம்முனிஸ்டு கனேசன்னு அவங்கூட முந்தா நா சாயங்காலமா வழக்கம்போல வாழமண்டிக்கு போயிட்டு வரும்போது தண்ணியப்போடலாமன்னு கேட்டேன் எப்பவுமே தண்ணியடிக்கனும்னா பஸ்ச புடிச்சு பக்கத்தூருக்கு போய்தாய் குடிக்கறவேன் அதிசயமா அன்னிக்கு செரின்னுட்டான். கணேசேன் தண்ணியடிக்கிறதே ஒரு திருவெளாவ இருக்கும் ,அவ்னுக்கு கம்னுஸ்டு கட்சில என்னமோ நகர் குழுவோ ,அணியோ அதுல பொறுப்ப கொடுத்திருந்தாய்ங்க அதனால அவேய்ன் கச்சி ஆபிஸ்ல கூப்பிட்டு எப்பா நீ இப்போ பொறுப்புக்கு வந்திட்டே அதுனால முந்தி மாதிரி இருக்க கூடாதுன்னு ஒர்ரே புத்திமதியா சொல்லிப்பாவம் பயல கொண்ட்ருக்காய்ன்க . அதுல இருந்து கனேசேய்ன் தண்ணியடிக்க எங்குரூக்கு வந்துருவான்.கணக்கு பாத்தம்னாக்க வாரம் பூரா வந்துருப்பான்.அதுவும் ஒரு கோட்டர குடிக்க நொருக்குதீனியே நூரு ரூவாய்க்கு வாங்கிட்டு வருவான். சரி மேட்டருக்கு வாரேன் .அன்னைக்கு என்னமோ தெரியல மனசா வாங்கிகொடுத்தான் நானும் மாடு கழனிதண்ணியெ குடிக்கிற மாதிரி குடிச்சுக்கிறுந்தேன். அப்பதான் சொன்னான் " நான் கவுன்சிலருக்கு நிக்க போறேன்டு" நான் புலுச்சின்னு வாயில இருந்த சரக்க எதுக்கைருந்தவேன் மேல துப்பிபுட்டேன்.சிரிப்பு வாராதா பின்னே. கனேசேன பாத்த எவனும் பக்கதுலகூட வரமாட்டான். குளிச்சிட்டு வெளியே வந்தாக்கூட பாத்தா ஒரு வாரம் குளிக்காதவேன் மாறியே இருப்பான். "ஏண்டா சிரிக்குற " அப்படின்னான். அதுக்கில்லப்பா செலவுக்கு என்னா பண்ணுவ , உங்கச்சிக்காரைங்க உண்டியல தூக்கி உங்கையில குடுத்திட்டு போயிருவாய்ங்க அதான் கேட்டேன்.அப்டின்னேன். செலவபத்தி நீ கவல படாத நாங்கைக்காச செலவுபண்ணப்போரேன்னான்.அந்தபார்லேயே தேர்தல் பணியை ஆரம்பிச்சிட்டோம்.

(மீதிக்கதயைய நாளைக்கு பேசுவோம்)

Thursday, April 13, 2006

@ 6:22 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்


எப்பா இந்த கருமத்த எப்படிப்பா குடிக்கறாய்ங்க ! சை , ஒரு கட்டிங்க போடுருதக்கே கால் கிலோ மிச்சர திங்கனும்போல, கருனாநிதி சொல்லுரது நாயந்தான்யா. இந்த பொம்பள நமக்கு புடிச்ச அயிட்டத்த பூரா நிப்பாட்டிட்டு அது சரக்கா அனுப்புதுய்யா, ஊரு பூர தேடுனாலும் ஓல்டு மங்கு கிடைக்கிறதுல்ல, எவய்ன்ட போ பவரு ,கேப்புடனு தான் இருக்குங்குறான். அத வாங்கி குடிக்கறதுக்கு குருனை மருந்த குடிச்சிட்டு படுத்தரலாம் ஒரேடியா போயிரலாம். செரி வேர வழி, சாராயத்த குடிச்சா எட்டுரூக்கு முன்னாடி வரும்போதே வாசன வீட்டுல போயி நிக்குது. கண்ட எழவ குடிச்சு கண்னு காது போயி தடவியீட்டு திரியப்போறன்னு அப்பப்ப திகில கெளப்புரா ஏய்ன் பொண்டாட்டி .அட அந்த இசும என்னானு சொல்ல மறந்துட்டேன் பாத்திங்களா. அன்னைக்கி பாருக்குள்ள போனேனா மொத ரவுண்ட போட்டுட்டு நிமுந்து பாக்கறேன் எதுத்த டேபிளுல முருகனும்,சீனியும் வந்து உக்காராய்ங்க , அப்பவே அடிவவுத்த கலக்குச்சு. எங்கிட்டோ போற மாரியாத்த எம்மேல வந்து ஏறாத்தாங்குர மாதிரி நம்ம எந்த கடைக்கு போனாலும் மை வைச்சு விட்ட மாதிரி பின்னாடியே திரியிராய்ங்கப்பான்னு நெனச்சேன். இவங்க கத உலக கத, மொத்தமே டவுனுல இவங்க கூட்டாளிக 10 பேர தாண்டுனா அதிகம்.ஆனா அவிய்ங்க அடிகிற கூத்திருக்கே ஒவ்வொருத்தனும் தன்னை பின்னவினத்துவவாதிய்ம்பாய்ங்க , ராத்திரில பிள்ளையாரு கோயிலுமேல மொன்டுவைக்கிறது ஜிப்பு போடாம பிரண்டு கல்யானத்துக்கு போயி அதிர்ச்சிய கொடுக்குறதுனு இவய்ங்க அட்டகாசம் தாங்காது. அவைங்க போதைல இருக்குறப்ப சிக்குனோம் செத்தோம். நம்மல ஒன்னுன் செய்யமாட்டாய்ங்க. ஆனா வேற எவனாவது மாட்டுனா அவெ அன்னைக்கு பார்த்திபன்ட மாட்டுன வடிவேலு கததான்.அதிலேயும் இந்த கம்னுஸ்டு கச்சிக்காரனுங்க சிக்கினா அன்னைக்கு ராத்திரி அவன் தென்னமர மாத்திரைய திங்க வேண்டியதுதான். "தோழர் எங்க நிலைப்பாடு என்னனா" அப்படின்னு எவனாச்சும் கேனத்தனமா மாட்டினா அவ்வளவுதான்."லெனினை உடுங்க மார்க்ஸ் மருமகன் ஒரு புத்தகம் எழுதிருக்காரு தெரியுமா? பெயரு - உழைப்பை ஒழிப்போம் அத படிங்க தோழர்" அப்படின்னு அந்த புத்தகத்த கையில கொடுதனுப்பிட்டு குண்டிக்கு பின்னாடி கொல்லுன்னு சிரிப்பாய்ங்க . அடுத்த வாரம் அந்த "தோழர்" இவய்ங்களோட பாருல உக்காந்து "தத்துவங்கள் செத்துவிட்டன" அப்படினு புலம்பிகிட்டு இருப்பாரு , இன்னைக்கும் எங்க ஊரு கம்னுஸ்டு கச்சில உள்ளவய்ங்க இவிங்க கூட நின்னு பேசினாக்கூட பேசுனவனை ஒரு மணிநெரம் வெசாரிச்சு இனிமே அவ்ங்க கூடசேரக்கூடாதுன்னு சொல்லி அனுப்புவாய்ங்க. நா கெடந்து சிரிச்சுக்கிறது வக்காலி வர வர இவங்களுக்கு மொத எதிரி அமெரிக்காகாரன் கெடையாது போல இவனுங்கதான்னு. ஆனா இவங்களும் அப்படித்தான் பன்னுறாய்ங்க பாருங்க போன மாசம் கம்மினுஸ்டு கச்சி கக்கூஸ்ல " தோழர்களே ஜாமயுங்கள் - ஜபர்ஜஸ்து ஜிங்காரோ பீர்" இந்த வெளம்பர ஸ்டிக்கர போயி ஒட்டிட்டு வந்துட்டாய்ங்க. செத்தவேன் ******* சொமந்தவேன் தலையிலங்கற கதையா அவய்ங்க கனேசன கூப்பிட்டு லெப்டு,ரைட்டு மன்னிச்சுக்கோங்க லெப்டு- லெப்டு வாங்கிட்டாய்ங்க.( கனேசன் புரட்சி வரும்னு இன்னமும் நம்புற விளிம்பு*) அடச்சை,என்னவோ சொல்ல வந்திட்டு எங்கையோ போயிட்டுருக்கேன் பாருங்க. அப்புறம் என்னாச்சுனா ,முருகேன் என்னைய பாத்துபுட்டு என்னப்ப ரொம்ப நாளா ஆள கானோம்னான் . நா எங்கப்ப போப்போறேன் இங்கிட்டுதான் திரியுறேனு சொன்னேன். அப்பறொம் அவிய்ங்களுக்குள்ளையே பேசி கெக்கெ பிக்கேன்னு சிரிச்சுக்கிருந்தாய்ங்களா, நானு வாயிருக்க மாட்டாமெ ஏப்ப என்னான்னு சொல்லு நானும் சிரிப்போமுல்ல அப்படினேன் அப்பதாய்ன்யா சொன்னான் ஒரு ஜோக்க, அவன் பிரண்டு ஒருத்தேன் ஒரு தோழர்கூட வழக்கபோல பேசிக்கிருந்திருக்கான் தோழர் வழக்கமான தயிர்சாத தோழர் இல்ல அவுரு மொளக பஜ்ஜி( மார்க்சிய லெனிஸ்டு) தோழர் . இவேன் பேச பேச கடுப்பாகி அவுரு சொல்லிருக்காரு புரட்சி வந்தா மொதல்ல உங்களத்தான் கழுவுல ஏத்துவோம்னு அதுக்கு அவய்ன்சொன்னானாம் .புரட்சி வராது அப்படியே வந்தாலும் நான் அண்ணா திமுக வுக்கு போயிருவேன், அப்பவும் அந்த கட்சியிருக்கும்னு. எனக்கு சிரிச்சு பொற ஏறிக்கிச்சு உங்களுக்கு.........

( மாட்டுக்கு தன்னிவச்சுட்டு வாரேன் )

@ 3:32 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


இது கெடக்க, முந்தாநா சாயங்காலமா காந்தி மார்க்கட்டு பக்கம் போயிருந்தேன் ,தக்காளில்லாம் இப்போ நல்ல வெலைக்கு போகுது சரி கமிசங்கடையில காச வாங்கிட்டு வரலாம்னு கெளம்பனேன். எம்பொண்டாட்டி பஸ்ஸாடப்புக்கே வந்து" காச வாங்கீட்டு ஒழுங்க வீட்டுக்கு வந்து சேரு" எவய்ன் கூடவாவது சுத்துனேனு தெரிஞ்சுச்சு அவனுக்கும் வெளக்கமாத்து அடிதான்" அம்பா சொல்லிட்டு போனா. தெக்கதானே போற நானு வாரேன்னு எங்கூட நின்டுக்கிட்டிருந்த பெருமாளு இதக்கேட்டதும் எதித்த பஸ்ஸ்டாப்புக்கு போயி வந்த வண்டில ஏறி வடக்க போயிட்டான். சும்மாயிர்ந்தத ஏதோ செஞ்சு கெடுத்த கணக்க இவ வேற ஞாபக் படுத்துறாளென்னு நொந்து போயி பஸ் ஏருனேன். அங்க போயி எறங்கனா எம் மகனும் அவன் கூட ஒரு நால பயலுகளும் காசு வாங்க நிக்கிறாய்ங்க. எப்போய் அம்மா தாம்பா காச என்னைய வாங்கிட்டு வர சொல்லுச்சு நாந்தான் வாங்கீட்டு போவேனு கடக்காரய்ன் முன்னாடியே நம்மள கேவலபடுத்துராய்ங்க. செரிடா இருந்து வாங்கீட்டு போன்னு சொல்லிட்டு அவய்ன் கிட்டேயே 100 கடனா வாங்கீட்டு ,டீ குடிக்கலாம்னு போனேன் - கொரங்க நெனச்சுகிட்டு மருந்த குடிக்காதங்கற கதையா நூர வாங்குனொனே காலு நேரா முனியான்டி மெடிக்கலுக்கு( டாஸ்மார்க்) தாம்பா போவேங்குது . அங்கெ போயிதான் ஆரம்பிச்சது பாரு ஒரு இசும -(கொஞ்சம் பொரு ஒர் ரவுண்ட போட்டுக்குறேன்)

Wednesday, April 12, 2006

@ 6:50 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்


அதாவதுங்க நம் ஊர்ல அரசியலு எப்பவுமே இந்த சினிமா மாதிரிதாங்க, மசாலா கொஞ்சம்,
சென்டிமன்டு கொஞ்சம்(உபயம்: வைகோ ),சண்ட கொஞ்சம்,சிரிப்பு கொஞ்சம்னு நம்ம
விஜய்,ரஜினி படம் மாதிரி விட்டா 200நாள் நிக்காம ஒடுற கண்டிசனுல இருக்குது.
இநத வருசமும் அதுக்கு கொறவு இல்லாம ஊரே களைகட்டுது.
கதாநாயகர்களோ கதநாயகிகளோ பபூன் காமிக்கோ ஒரே கூத்துதான் போங்க !
சரி இன்னையில இருந்து இந்த திருவிழாவில என்ன கூத்துதான் நடக்குதுன்னு பார்க்கலாம்னு முடிவு பன்னி காலைல 3 ருவா சாம்புக்கு பதில 2 ருவா சாம்பூ வாங்கிட்டு மீதி 1 ருவாய்க்கு 1ரூவா பேப்பர்(எங்க ஊருபக்கம் இப்ப தினகரனின் பெயர் 1 ரூவா பேப்பர்) வாங்கிட்டு வரும்போது சுன.பன.வைபார்த்தேன் "என்னடா புதுசா தமிழ்பேப்பர வாங்கிட்டு அலையற அப்படின்னான் சும்மாதாம்ப தேர்தல்வருதுல சரி ஒரு மாசத்துக்கு வாங்கிப்பாப்பமினுதான்ணேன். "அப்ப முடிவு பன்னிட்ட சூரியனுக்கு குத்தற்துனு " என்றான். என்னடா சொல்லுறன்னு கேட்டேன் சிரிச்சுகிட்டே போயிட்டான். நம்ம ஊரு அரசியல் வாதிகள்ளேயே வைகோ கொஞ்சம் வித்தியாசமானவ்ர் மாதிரி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சாரு, மாநாடுகள்ல அவர் மேடைக்கு வாரதும் ,தமிழ்நாடு
முழுக்க இருக்கிற 368 ஒன்றிய செயலாளர்களையும் 150 நிர்வாகிகளையும் எடுத்த எடுப்புல மைக்குல
பேச ஆரம்பிச்சவுடனே ஒருத்தர விடாம அவர்களே, இவர்களேன்னு சொன்னா நமக்கே தல சுத்தும், உர மூட்டைக்கு காசு கொடுத்தோமே அதுல நூறு ருவா சேர்த்து கொடுத்தமாதிரி இருக்கேன்னு வீட்டுக்கு வார வரைக்கும் கணக்கு பார்க்குற என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இதுலாம் என்னமோ ஜாலக்கு வித்த மாதிரி தெரியும்.அப்படியே ஒலக வாரலாறுல இருந்து உள்ளுர் தகராறு வரைக்கும் பொளந்துகட்டுவாரு, இந்திராகாந்திய கேள்வியாக்கேட்டு கொடஞ்சது,ராசீவகாந்திய இங்குலிசுலேயே ராவுனதுன்னு பட்டைய கெளப்புவாரு. கூட்டம் முடிஞ்சி வரும்போது ஓல்டுமங்கு கோட்டர ராவா (யாராவது இழுத்து பார்த்திருக்கீர்களா) இழுத்த மாதிரி இருக்கும். ஒழுங்க இருந்த மனுசன ஒரு நா கலைஞரு கச்சிய விட்டு விரட்டிடாருனாய்ங்க. அடப்பாவமே இப்படியெல்லாம் பண்ணலாமா? அந்த கச்சி- கச்சி தானே கெடந்தான் அந்த மனுசன்னு கவலபட்டேன். சரி அதுலாம் பழய கத. அது நடந்தும் ஆயிடுச்சி 13 வருசம் இப்ப பேப்பர பாத்தா இவரு அந்தம்மா பக்கம் இருந்துகிட்டு பழைய
மாதிரியே "ரிட்டையரான ராஜபார்ட்டு" போல ஜங்கு ஜங்குனு குதிக்கிறாரு. " என்னை சன் டீவில காட்டல, முரசொலி மாறன் குடும்பம் கொள்ளையடிக்குது, என்னை பெயிலில் வரவச்சசுது ஒரு அரசியல் சதி நான் சிறையில் நல்லாத்தான் இருந்தேன் " என்னாடா இந்த மனுசன் இப்படி ஆகிபோய்ட்டாரேன்னு நினைச்சுகிட்டு இருந்தப்பதான், எங்க ஊருக்கு பிரச்சாரத்திற்கு வந்தாரு . சரி சினிமாக்கு போயியும் ரொம்பநாளாச்சே, வைகோ மீட்டிங்காவது பார்க்கபோகலாம்னு போனா, அடக்கழுத ஒரு வாரம் ஊர் முழுக்க புலம்புனததாம்பா இப்பவும் புலம்புராரு. முந்தீ கச்சியை விட்டு துரத்துனபோது நீதி கேட்கிறேன்னு சொல்லி ஊர் ஊராய் வந்தாரு நாங்களாம் அப்போ அவரு பக்கம் தான் அப்பவும் இப்படித்தான் பேசுவாரு அப்போ சொல்லுவாரு " மகாபாரதத்திலே மாமன்
சகுனி ,கோபாலபுரத்திலே மருமகன் சகுனின்னு" நல்லா இருக்கும் பேச்சு அப்போ , வெள்ளோட்டுச்சாராயத்தை சுடச்சுட குடிச்ச மாதிரி, அதல்லான் ஒரு காலம். அப்புறோம் ஒரு நா எந்த மாறன "சகுனி சண்டாளப்பாவி" ன்னு திட்டினாரோ அந்தமாறன் செத்தன்னைக்கு டீவில பார்த்தா உடம்பங்காளி சின்னவயசுலெயே பிள்ளை குட்டியேல்லாம் விட்டிட்டு திடீருனு செத்த மாதிரி எழவுவீடே பொணத்த கவனிக்கறத விட்டிட்டு இவரா தூக்கிற மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பன்னுனாரு, இப்ப பழைய படி "தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா" ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு. இப்படியே பேசிட்டே போயி கடைசில சொல்லுவாரு பாருங்க நான் சூரியன் FM க்கு போன் பன்னி எம்ஜிஆர் பாட்டு கேட்டேன் அவுங்க போடல இது எனக்கு எதிரான சதின்னு......... . இதுல இன்னோரு புதிய புத்தர் சரத்குமார், அது ஒரு தனிக்கத ,அவரு ஏன் விலகனேன்னு சொல்லுற காராணத்த கேட்ட எவனும் வாய்ல சிரிக்கமாட்டான், மெர்க்கன்டைல் பேங்கு பிரச்சினைல அவரு சரியா நடந்துக்கல, ராதிகாவுக்கு பாதுகாப்புபில்லைனு விடுராருப்பா ரீலு. நீங்களே சொல்லுங்க நம்ம நெலம சிரிக்கிறதா அழுவுறதா. ராதிகாவுக்கு பாதுகாப்பிலைங்கற மேட்டருக்காவே ஒரு நாள் லாட்ஜ்"ல ரூம் போட்டு சிரிக்கனும் , இது போக அந்த பேங்கு பிரச்சினை முடிஞ்சி 5 வருசமாக போகுது இப்ப சொல்லுறாருப்பா அதுல எனக்கு மனவருத்தம்னு. ஏப்பா வுட்டா கலைஞரு சின்னப்புள்ளையா இருக்கும்போது செஞ்ச தப்பகூட காரணம் சொல்லுவிங்க போல. ரெண்டு பேரும் உக்காந்து யோசிச்சிருக்காய்ங்க போல........................ காரணத்த.

(சரி நாளைக்கு பேசுவோம் மீதிக்கதைய )