Saturday, December 30, 2006

@ 4:42 PM எழுதியவர்: வரவனையான் 27 மறுமொழிகள்


சிவகாசி பயணியர் தங்கும் விடுதி, திமுக தொண்டர்களும் தி.க உள்ளிட்ட தோழமை இயக்க தோழர்களும் அயர்ச்சியாய் உட்கார்ந்து வானொலி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். தொலைபேசி ஒலிக்கிறது. தடா.ஓ. சுந்தரம் ஓடிச்சென்று எடுக்கிறார். எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என வினவுகிறது எதிர் முனை. "இல்லண்ணே , அண்ணே தோத்துட்டாரு" என்கிறார் சுந்தரம். "உந்த தமிழ்நாட்டு ஆக்களுக்கு எப்பவுமே அறிவு வாராது" என்று கோபமாய் சொல்லி தொலைபேசியை எறிகிறார். நிச்சயம் அது உடைந்திருக்கும் என்று ஒ.சுந்தரம் பின்னர் தெரிவித்தார். தொலைபேசியை உடைத்தவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம். தேர்தலில் தோற்றதாக சுந்தரம் அண்ணன் குறிப்பிட்டது வைகோ அவர்களை. திரு.பாலசிங்கம் அவர்களின் மறைவைத்தொடர்ந்து வைகோவின் மதிமுக விற்கும் எழுந்துள்ள சில பிரச்சினைகள் இயல்பானதொன்று என்றே கொள்ளலாம்.

வைகோ கொலைப்பழி சுமத்தி திமுக'வில் வெளியேற்றப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் நேரில் பார்த்தேன். மதுரை திமுக பவள விழா மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாய் பேரணி வண்டியூர் தெப்பக்குளத்தில் துவங்கியது. அங்கு நான் படித்த பள்ளியின் முன் பேரணியில் கலந்து கொள்ள நானும் நின்றிருந்தேன். கருப்பு நிற அம்பாசிடர் காரில் மதிய உணவுக்கு பின் வெத்தலை போட்டிருந்த வாயுடன் வந்திறங்கினார் வைகோ.( அப்போது நான் பார்த்த மற்றோரு சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வு) . என் பள்ளியின் அருகில் வக்கில் பாபு என்பவரின் வீட்டின் முன் இறங்கிய வைகோ ஒரு சொம்பில் தண்ணிர் வாங்கி வாய் கொப்பளித்தபடி தன் காரின் டிக்கியில் இருந்து ஒரு துணிப்பதாகையை எடுத்து சிலரிடம் கொடுத்து ஏதோ உத்தரவிட்டு கொண்டிருந்தார். வைகோ வைகோ என என்னுடன் இருந்தவர்கள் ஓட நானும் ஓடி கைகொடுத்து மகிழ்ந்தேன். அடுத்த பத்தாண்டுகள் நான் அதிகம் உச்சரிக்க போகும் பெயர் அது என அப்போது தெரியாது.

அவரின் பேச்சுக்கள் என் ரத்தத்தை திராவகமாய் மாற்றின, ஈழப்பிரச்சினையில் அவரின் உறுதி (இன்று வரை) இயல்பாய் அவரிடம் கொண்டு சேர்த்தது. ஸ்பார்ட்டகஸும் நெப்போலியனும் கிரேக்க வரலாறுகளும் அவரின் குரலில் மேலும் ஏகாந்தம் பூசிக்கொண்டு வெளிவந்தன. காளிமுத்து திமுக வை விட்டு வெளியேறிய போது கலைஞரை மேடையில் இருத்தி " ஒரு வீபிடனன் போனாலென்ன, ஓராயிரம் இந்திரஜித்துகள் இங்கே இருக்கிறோம்" என பேசிய அவரின் பேச்சு செவிபுலன் நன்கமையப்பட்ட எந்த தமிழனைத்தான் ஈர்க்காது. ராசிவ் கொலை காரணம் காட்டி ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மாநில மத்திய ஆள்தூக்கி சட்டங்களால் வேட்டையாடப்பட்ட போது பிரபாகரனும் புலிகள் இயக்கமுமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என தமிழ்நாட்டு தெருக்களில் முழங்கித்திரிந்த வைகோ எப்படி என் போன்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் .


எல்லாம் முடிந்தது, வைகோ நீக்கபட்டார், தான் தான் உண்மையான திமுக என உரிமைகோரினார். திருச்சியிலே போட்டி பொதுக்குழு கூட்டினார். நானும் இருந்தேன் அங்கு. சரியாய் நினைவிருக்கிறது அந்த பொதுக்குழு முகப்பில் இருந்த வாசகம் " பாடி வீட்டில் கூடி நிற்கிறோம்' போர் நடத்த இது ஒத்திகை - பகைவருக்கு இனி ஏது நித்திரை" வாசலில் நாஞ்சில் சம்பதண்ணன் நின்று கொண்டு அனுமதி சீட்டு சரி பார்த்து உறுப்பினர்களை அனுமதித்துக்கொண்டிருந்தார். அதன் பின் ஏப்பிரல் 16- 1994 அன்று சென்னையில் பேரணி நடத்தி தனது வலிவை காட்ட முனைந்தார். தமிழகம் அது வரை கண்டிராத மாபெரும் பேரணி அது.

அந்த பேரணி முடிவில் துவங்கியது வைகோவின் ஊசலாட்ட அரசியல், அந்த பிராமாண்ட பேரணி முதல்நாள் மதியம் 2 மணிக்கு துவங்கி அடுத்தநாள் காலை 8 மணிவரை தொடர்ந்து கொண்டிருந்தது. வைகோ கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் மறுநாள் காலை5.55 க்கு துவங்கிய உரையில் தெரிந்தது, அந்த கூட்டம் வைகோ எனும் தங்களின் ஆதர்ச தலைவனின் நீக்கத்துக்கு எதிராயும் அதற்கு புலிகளை குற்றம் சாட்டிய தங்கள் இயக்கத்துக்கு எதிராயும் திரண்டிருந்தது. தன் பேச்சின் இடையே கூட்டத்தினை பார்த்து கேட்டார் "நமது அரசியல் எதிரி யார்?" என்று. கூட்டம் கருணாநிதி என ஆர்ப்பரித்தது. அதற்கு வைகோ " இல்லை ஜெயலலிதா" என விடையுரைத்து தன் முதல் தவறினை அரங்கேற்றினார். அந்த பேரணிக்கு பிறகு மே மாதத்தில் புதிய இயக்கம் துவங்கினார். அன்றைய ஜெயலலிதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என சூளுரைத்து ஜூலை மாதத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் துவங்கினார். நானும் துவக்கம் முதல் நாள் இனைந்தேன் பயணத்தில்.
Photobucket - Video and Image Hosting
வைகோவுடன் 95 நடைபயணத்தில்


அடுத்த வருட ஏப்பிரலில் தேர்தல் வந்தது, திமுகவில் வைகோவின் பிளவை "செங்குத்தான பிளவு" என வர்னித்து சுய இன்பம் அனுபவித்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்ஸிட்) யுடன் மறுமலர்ச்சி திமுக கூட்டணி கண்டது. " தோற்பதற்கு இனி தொகுதிகள் இல்லை" என நாஞ்சில் சம்பத் அண்ணன் கிண்டலாய்ச்சொல்லுவார் அது போன்றதொரு தோல்வி கண்டது அக்கூட்டணி. மதிமுக தொண்டர்களை பற்றிய பெருமிதமான மதிப்பீடு ஒன்று எப்போதுமே ஒன்று எனக்குள் உண்டு,அது அவர்களின் தோல்விகளை தாங்கும் பக்குவம். இன்னும் இருபது தேர்தல்களை கூட சந்தித்து தோத்தாலும் அவர்கள் துவள மாட்டார்கள் என்பது திண்ணம்.
( தொடருவேன் )

Tuesday, December 19, 2006

@ 4:29 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

Photobucket - Video and Image Hostingஎன் ஊரின் அருகே உள்ள சிறுமலைக்கு கடந்த வாரம் போயிருந்தேன். மொத்தம் 23 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட செங்குத்தான மலை அது. 10 வளைவுகளை தாண்டியதும்தான் 2 மணி நேரத்தில் ஆன் லைன் வருகிறேன் என்று தோழிக்கு உறுதியளித்தது நினைவுக்கு வந்தது. எது பெரிது என ஒரு நொடி சிந்தனை !!! சந்தேகமேயில்லை அவள்தான் என்று ஊர் திரும்பினேன். ஹிஹிஹி

போகும் வழியில் எடுத்த வீடியோ


விரைவில் நன்றாக எடுத்து போடுகிறேன்.

Monday, December 18, 2006

@ 10:27 AM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்

முதலில் கவிதைகளில் துவங்குவோம், எனக்கு பிடித்த கவிதைகள் மட்டும். இதில் வரிசை படுத்த ஒன்றுமில்லை. நினைவு அடுக்குகளில் இருந்து துவங்குகிறேன். கவிதை எழுதிட்டு இருக்கும் போதே அப்படியே உருகி வழிஞ்சிட்டாருன்னா மீதி யாரு எழுதுறதுன்னு எனக்கு ஒரு கவலை வரும், அப்படி ஒரு கவலையை ஏற்படுத்தும் கவிஞர் பிரியனின் இந்த கவிதை

வித்தியாசமாகவும் புதிய பார்வையில் உவமை படுத்த யாகூவை பயன்படுத்தியது நன்றாகவே இருந்தது. இரண்டுக்கும் மேற்பட்ட தடவை

வாசித்த கவிதை


நானும் அவனும் சமவயது, இருவரும் நண்பர்கள், இருவருமே காதலுற வில்லை 7 கழுதை வயசாகியும் . எனக்கான கவிதையை அவன் எழுதியது போல் உணர்ந்தேன். அது இதுதான்


அப்புறம் நம்ம பொன்ஸ் அக்காவின் இந்த கவிதைகள் , ஒரு வரி கூட மறக்காமல் நினைவிலேயே இருக்கிறது.

//நானே ரசிக்காத
என் கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்..

படிக்கவும்
ரசிக்கவும்
நிமிடங்கள் இல்லை என்னிடம்

புதுப் புதுக்
கவிக்கணங்கள் மட்டும்
கிடைத்து விடுகின்றன,
இடைவெளியில்லாத
நமது நட்பில்!//

//கவிதைக்குள்
மறைத்துக்
கொள்கிறேன் என்னை..

சொல்ல விரும்பாமல்,
தயங்கித் தயங்கி
மறைக்கும்
ரகசியங்களைக்
கண்டுபிடித்து விடுவாயோ என்று //

இன்னோரு கவிதை தமிழ்நதியின் கவிதை , அதை தேடிகிட்டு இருக்கேன். கிடைத்ததும் இணைக்கிறேன். என்ன இருந்தாலும் மண்டே மார்னிங் என்பதால் கொஞ்சம் வேலையும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்ளோதான்.

தமிழ்நதியின் அந்த கவிதை இதுதான் நீண்ட நாள் அதன் தாக்கம் இருந்தது, பெண்மொழி வெறும் துயர் மட்டுமா பேசும், இப்படியும் இருக்கும்


அதுபோல் சுகனின் அந்த "நாய்" கவிதைக்காக வெறுப்பில் இருந்த என்னை இந்த அரசியற்கவிதை வெகுவாக ஈர்த்தது.

Monday, December 11, 2006

@ 1:31 PM எழுதியவர்: வரவனையான் 12 மறுமொழிகள்

பேராசை பெருந்தகையே போற்றி !
பேசா நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
தந்திர மூர்த்தியே போற்றி !
தாசர் தம் தலைவா போற்றி !
வஞ்சகவேந்தே போற்றி !
வன்கணநாதா போற்றி !அம்மன் கோவில் திருவிளக்கு பூசை பாடல் வரிகள் அல்ல, மேலுள்ளது. ஆயிரமாண்டுகளின் அடிமைத்தனத்தை தன் நெருப்பு வார்த்தைகளால் உடைத்தெறிந்த அறிவாசான் தந்தை பெரியாரின் தகைசால் மாணாக்கன் வாதக்களங்களில் இவனை மிஞ்சுவரில்லை எவரும் எதிர் நின்றால் என்கிற பெயரோடு பெரியாரியம் பரப்பிய அறிஞர் பெருந்தகை அண்ணா எழுதிய " ஆரியமாயை" எனும் வரலாற்றுச்சிறப்பு மிக்க புத்தகத்தின் துவக்கவரிகள் தாம் அவை.

அப்புத்தகத்தை கையில் வைத்திருந்தால் உடன் உங்கள் கைகளில் காப்பு நிச்சயம். எழுதிய அண்ணாவிற்கு 6 மாத கடுங்காவல். தடை தடை தடை. பேராய கட்சியால் திராவிட இயக்கம் வேட்டையாடபட்டது. அண்ணாவின் பேச்சுக்கு தடை, பெரியாரின் பேச்சுக்கு தடை , கலைஞரின் முழக்கத்துக்கு தடை என சூழ்ந்த தடைகளை தகர்த்தெறிந்து வீறுகொண்டெழுந்தது திராவிடப்பேரியக்கம். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டியது அது, வலதுசாரி ஆதிக்கபுரிகளின் கோட்டை கொத்தளங்கள் திராவிட அறிவியக்க கேள்விகளால் நொறுங்கிப்போனது. தன் அதிகாரம் பறிக்கப்படுவதை எந்த ஆதிக்கவாதியும் விரும்புவதில்லை, அதைப்போன்றே பார்ப்புகளூம் புழுங்கினர், "அது ஒரு நிரந்திர அரிப்பாகவே மாறிப்போனது" . இன்றும் அமெரிக்கவில் செட்டில் ஆன முணு தலைமுறைக்கு முந்திய பார்ப்புகளின் பிள்ளைகள் கூட சொல்கிறது திராவிடம் டௌன் டௌன், இடஒதுக்கீடு டௌன் டௌன் என்று.

ஆறா ரணமும் குறையா அரிப்பும் சொறிய சொறிய சுகமளிக்கிறது. அரிப்பை அடக்க துக்ளக்கும் தினமலரும் தேவைப்படுகிறது. எதெல்லாம் பார்த்து எரிச்சலுற முடியுமோ அதெல்லாம் பார்த்து இன்னும் அடங்கா அரிப்பாய் உரசி பார்க்க துணிந்து காந்தியைக்கொன்ற கூட்டம் , பச்சைத்தமிழன் காமராஜரை உயிரோடு எரிக்க முனைந்த கூட்டம் தன்னை எதிர்ப்போரின் ரத்தம் குடிக்க துடிக்கும் கூட்டம் இன்று வந்து நிற்பது பெரியார் முன். அது சிலையல்ல கந்தககோட்டை,தன்னை எரித்து தமிழர் தரணிக்கு வெளிச்சம்காட்டிய தலைவன் அவன். தன் நீண்ண்ண்ட நாள் அரிப்பை சொறிந்து கொள்ள இடம் தேடிய இந்த அக்கிரமகாரத்து "பசு மாடுகள்" நின்ற இடமே பெரியார் சிலை. இதில் ஒரு பருப்புக்கு***யின் கண்டுபிடிப்பு வேறு " திருவரங்கம் பெரியாருக்கு பாதுகாப்பில்லை" என்று திருவாய் மலருகிறது. இது போதாதா சொம்புதூக்கி "சற் சூத்திர்களுக்கு" ( சற் சூத்திர விளக்கம் பின்னர்) என்னாதான் ஓய் ஆகப்போகிறது இடித்துதான் பார்ப்போமே' என தொட்ட வேலை, இதை செய்வது சூத்திரன், இவர்களோடு பொருத போவதும் சூத்திரர்கள் நம் வேலை வழியும் ரத்தத்தினை நக்குவது மட்டுமே என்க்காத்திருந்த ஓநாய்கள் திடுக்கிடும் வகையில், " நீங்கள் எங்கள் வாலை மிதித்தால் நாங்கள் உங்கள் தலையை மிதிப்போம் " என்ற வார்த்தைகளை உண்மையாக்கி காட்டிவிட்டனர் கைதாகியுள்ள தோழர்கள். அலறுகிறது தினமலர், விஷமி என்கிறது அமைதியை விரும்பாத சக்திகள் என்கிறது. ஏனய்யா கைதாகியுள்ள குற்றவாளிகள் இந்துத்துவா வாதிகள் என்கிற உண்மையை ஏன் மறைக்கிறீர்கள் என்ன தயக்கம் ? ."பெரியாருக்கு சீறிரங்கம் பாதுகாப்பு இல்லை"னு எந்த வேலை அது சொல்லியதோ அதன் எதிர்வினைகள் பார்ப்பனருக்கு தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்புக்கு உறுதியளிக்க முடியாது என்கிற வருத்தமளிக்கும் நிலமை ஏற்பட்டது. இவை நாகரீகம் பெற்ற மனிதனாக இருந்து சிந்தித்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். எவனோ செய்த தவறுக்கு அப்பாவிகள் விலை கொடுக்கும் கொடுமையை மறுக்கமுடிவில்லைதான் அதே நேரத்தில் புரியும் மொழியில் பேசினால்தான் புரிந்து கொள்வேன் என்பவர்களுக்கு புரியவைக்க பட்டதாய் தான் இதை எடுத்துக்கொள்ளவேண்டுமா என்று தெரியவில்லை . மாநில அரசின் மீது கெட்ட எண்ணத்தை உருவாக்கும் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நன்மையே.


Dedicated To "பார்ப்பானை அய்யனெனும் காலமும் போச்சே" என பாடிய பாரதிக்கு*********************************************************
நான் எழுத துவங்கி சற்றேறக்குறைய 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை தனிபட்ட முறையில் யாரையும் திட்டியதில்லை கருத்தெழுதியவர்களை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுதான் விமர்சனம் வைத்திருக்கிறேன். "விடாது கருப்பு" பஞ்சாயத்தில் எனது கருத்தை தமிழ்மண நிர்வாகத்திற்கு சொல்லியிருந்தேன்.அது என் உரிமையும் கடமையும் ஆகும். அதே பதிவில் பின் வந்த ஒரு அனானி ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதினார். மிக்க மகிழ்ச்சி துவக்கத்தில் நான் குறிப்பிட்ட "ஆரியமாயை"யும் தடை செய்யப்பட்டது பின் அதுவே நாட்டுடைமையாக்கி போற்றப்படுகிறது. புரிந்தால் சரி. அது போல் நான் ஒரே பெயரில் மட்டுமே எழுதுகிறேன் என் இன்னொரு வலைப்பதிவைனை எழுதுவதில்லை அதன் பெயர் தம்பியுடையான். ஆகவே "கின்னர கிம்புருடர்கள் வரவேற்க வைகுந்த பிராப்தி" அடையும் காலத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து மகரநெடுங்குலைக்காதனின் பழியை தேடிக்கொள்ளவேண்டாமென்று மாறா கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனானி
December 6th, 2006 | 2:32 am
வரவனையானே நீக்கப்பட வேண்டியவர்தான்….பார்த்தீர்களா அவரது சமிபத்திய பதிவினை….உணர்ச்சிபூர்வமான எழுதுவதாக நினைத்து அடுத்தவர்களை அடித்து நொறுக்கும் இவரது வாதத்தினை இங்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது கோரிக்கை
.

.அது சரியா? வரவனையானன் என்ற நியோ அன்ற அயோக்கிய ராஸ்கல் ஒருவனின் அசிங்கமான பதிவு இன்று வரை அனுமதித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள், இதற்கு மேலும் உங்களுக்கு மானம் மரியாதை இருக்குமானால் தமிழ்மணத்தில் ஒரு ஷண மேனும் இருப்பீர்களா? உங்கள் மனசாட்சியைக் கேட்டு பதில் சொல்லுங்கள். பின்னூட்டத்தை விட சோற்றிலே உப்புப் போட்டு சாப்பிடும் நமக்கெல்லாம் மானம்

@ 11:29 AM எழுதியவர்: வரவனையான் 25 மறுமொழிகள்

திண்டுக்கல்லில்

அய்யா சிலைக்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டு முன்னோட்டம் பார்த்த கூட்டம், தற்போது திருவரங்கத்தில்... இடையில் 100 அடி இருக்கும்போதும் எங்கே அரங்கன் தீட்டுப்பட்டுவிடுவானோ என்ற ஐயத்தில் , அவரது சிலையை சேதப்படுத்தி இருக்கிறது . உச்சநீதி மன்றம் வரை குதித்துப் பார்த்தும் ஒன்றும் பலனில்லை எனவே உடைத்துப் பார்த்து பூரிக்கிறது . இந்த சமூக விரோதச் சக்திகள், மதத்தின் பெயரால் இப்படி சேட்டை செய்து சட்டம் , ஒழுங்கு சீர்குலைந்தால் கலையும் , கவிழும் திமுக ஆட்சியென கணக்குப்போடுகிறது ... பகுத்தறிவு பகலவனின் ஒளி பல்லாண்டு கடந்தும் பலரை பொசுக்கிக்கொண்டிருப்பதற்கான சான்றுகள் இவையெல்லாம்.


பெரியார்

சிலையை அமைப்பதற்கான இடம் கோவில் நிலம் போல் எந்த மன்னனிடம் இருந்தும் இனாமாகப் பெற்றதில்லை. திராவிடர் கழகம் விலை கொடுத்து வாங்கிய நிலம் . 1973 ஆம் ஆண்டு திருவரங்கத்தில் சிலை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டு , அரசு அனுமதி பெறப்பட்டது. ( இதே காலகட்டத்தில்தான் மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் தந்தைப் பெரியாரின் சிலை திறக்கப்பட்டது.). பல தடைகள் தாண்டி, மீண்டும் 1996 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது . அனைத்து ஆதிக்க வழக்குகளையும் , எதிர்ப்புகளையும் மீறி, நவம்பர் மாதம் 23 ந்தேதி சிலை அமைப்பதற்கான பீடம் அமைக்கப்பட்டது. 29 ஆம் தேதி சிலை நிறுவப்பட்டது . டிசம்பர் 1 ஆம் நாள் திறப்பு விழாவென அறிவிக்கப்பட்டு, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளை அணுகியதால் திறப்புவிழா டிசம்பர் 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிலையை விஷமிகள் திட்டமிட்டுச் சேதப்படுத்தியதால் (சிலை அவமதிப் பிற்கு முன் இதனை தூண்டிவிட்டவர்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதி சொல்கிறார் " பெரியாருக்கு சீறீரங்கம் பாதுகாப்பான இடமில்லை " என்று.) 8 அடியில் நிறுவப்பட்ட சிமெண்ட் சிலை மாற்றப்பட்டு , லால்குடியில் நிறுவ வைக்கப்பட்ட 4 அடி வெண்கலச் சிலை மீண்டும் அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பலகாலம் இருந்த பண்பாட்டுச் சின்னம் பாபர் மசூதியை தகர்த்த கூட்டம் , அந்நினைவு நாளில் காவலர்களின் கவனம் வேறுவகையில் இருக்கும் என எண்ணி இதைச் செய்திருக்கிறார்கள் .
இந்நிகழ்வைத்

தொடர்ந்து நடந்துவரும் கலவரங்கள் , பல தலைவர்கள் அமைதி காக்க வலியுறுத்தியும், சமூக விரோத சக்திகளின் மனம் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்விற்கு முன்னும் (மற்றும் இந்த மூன்று நாட்களுக்குள்) திருநாகேஷ்வரத் தேரோட்டம். அறவக்குறிச்சித் தேரோட்டம். நாமக்கல் ஆஞ்சினேயருக்கு வெள்ளிக் கவசம் சாத்தும் விழா , தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துகொண்ட நீடாமாங்கலத்தில் நடந்த குடமுழுக்கு விழாவென நாளுக்கொரு தேரோட்டம், பொழுதுக்கொரு குடமுழுக்காகிய அனைத்து ஆன்மீகச் செயல்பாடுகளும் அமைதியாகத்தான் நடந்து வந்தன.
தனது

95 ஆவது வயதில், குடல் இறக்க நோயால் பதிக்கப்பட்டு, அத்தனை உடல் வேதனையிலும், அவர் மறைவதற்கு பதினாரே நாட்களுக்கு முன்னர், பெரியார் கூட்டிய இரு நாள் எழுச்சி மாநாட்டிற்குப் பெயர் "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு", ஐந்து நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராயநகரில் எப்போதும் போல் எவ்வித சமரசமும் இல்லாமல் அவர் ஆற்றிய பேருரை தமிழர் நலனுக்காக . வயோதிகம் எட்டிப் பார்த்தவுடன், கொள்கைகளை கொட்டிக் கவிழ்த்து அனைவருக்கும் உத்தமராய் நடந்து கொள்ளும் தலைவர்கள் பலர். நினைக்குபோதெல்லாம் சிலிர்ப்பூட்டும் , இறுதி வரை சமூக நீதியை எவ்வித சமரசமும் இன்றி வெளிப்படுத்திய அய்யாவின் கொள்கைகளின் மேல் சமூக மறுமலர்ச்சியின் பயனை அனுபவிப்பவர்கள் கொண்ட பற்று எந்த ஒரு மதவாதியும் அவர்களது மதத்தின் மேல் கொண்ட பற்றிற்குச் சற்றும் குறைவானதல்ல.... ஆனால் மதப்பற்றைப் போல் கண்மூடித்தனமாது அல்ல அவர் கொள்கைகளின் மேல் கொண்ட உறுதியான, எக்காலத்தும் உயிர்ப்பான பற்று. உடைத்தால் சிலைதான் உடையும்.

Tuesday, December 05, 2006

@ 5:47 PM எழுதியவர்: வரவனையான் 24 மறுமொழிகள்

ஒரு ஆராய்ச்சி குறிப்பொன்று சொல்கிறது கன்னட மொழி தமிழின் 69 விழுக்காடு வார்த்தைகளை கொண்டிருக்கிறது. தெலுங்கின் 63 விழுக்காடு சொற்கள் தமிழினுடையது என்றும் மலையாளத்தின் 91 விழுக்காடு தமிழ்தான் என்றும் துளுவின் 47விழுக்காடு, சிங்களத்திலும் வங்காளத்திலும் ஏன் சம்ஸ்கிருத்ததிலும் தமிழின் வேர்ச்சொற்கள் பெருந்தொகையில் உண்டு. துணைக்கண்டமெங்கும் வியாபித்திருக்கும் 100 க்கும் மேற்பட்ட பழங்குடிகளின் ஆதி மொழிகளில் தமிழை இலகுவாக கண்டறியலாம். மலையாளம் தோன்றி 700 முதல் 800 ஆண்டுக்குள்தான் இருக்கும் என்றும் கன்னடம் தோன்றி 800 முதல் 850 ஆண்டே இருக்கும் என்றும் தெலுங்கு தோன்றியது 900 ஆண்டுகளுக்கு முன் என்றும் கூறி செல்லும் அதன் பக்கங்களை தவிர்த்து நாம் சமகாலத்துக்கு வந்தோமானால் தமிழிசையும் கர்நாடக இசையும் சமகாலத்தவை என்னும் அபஸ்வரம் எழுவதைக்கேட்கலாம். சமகாலத்தைவை என்றால் ஒரே நேரத்தில் தோன்றியவை எனும் பொருளில் அந்த அபஸ்வரம் ஒலிக்கிறது. அது எப்படி தனக்கென ஒரு இலக்கன நூலையே 4000 வருடத்துக்கு முன் உருவாக்கிய சமூகம் தனக்கென ஒரு பண்பாட்டு இசை இல்லாமல் வரலாற்றை கடந்து வந்திருக்க முடியுமா ?

கர்நாடக இசை என்று பார்த்தால் அது கொண்டிருக்கும் அனைத்து விடயங்களும் தமிழிசையிலிருந்து திருடிக்கொண்டவையாகவே இருக்கிறது. அதன் ராகம் - பண் என்கிற தமிழ் பதத்திலிருந்து சுடப்பட்டு மறுபடியும் இங்கே விற்கபடுகிறது. தாளம், ஸ்வரம்,ஆரோகணமும்,அவரோகணமும் முறையே தாளம் , பதம், ஆரோசை அமரோசை என்று இங்கிருந்தே போனவையாகும் . அந்த ஆராய்ச்சியை இன்னும் கொஞ்சம் உட்சென்று பார்த்தோமானால் அவ்விசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ச , ரி,க,ம,ப,த,நி முறையே இளி ,விளரி,துத்தம் ,கைக்கிளை ,குரல் ,உழை, தாரம் என்கிற தமிழ் சுரங்கள்தானே.கொஞ்சம் செவிமடுத்தோமானால் அது சாம வேதத்திலிருந்து ( கவனிக்கவும் - ஷாமா அல்ல) வந்தது என்று சொல்கிறார்கள். ஷாமாக்கு ,ச்சா ... சாமவேத காலத்துக்கு முன்பே தமிழில் மூவகை உண்டு . இயல், இசை, நாடகத்தமிழ் என்று அதில் இசைக்கென்றே தனி தன் மொழியில் ஒரு பிரிவை ஏற்படுத்தியவன் இசை குறித்த அறிவு இல்லாமல் இருப்பானா? அதிலும் பிற இரு தமிழிலும் இசை உண்டு. இதை மேலும் கொஞ்சம் உள்ளாய்ந்து பார்த்தால் சிந்து சமவெளிப்பகுதியில் கிடைத்த இசைக்கருவிகள் அதன் சின்னங்களும் திராவிட நாகரீகம் இசையுடன் வாழ்ந்த உண்மையை உரைக்கின்றன. அதிலும் குறிப்பாய் தமிழரின் மற்றோரு அடையாளமாகி விட்ட " யாழ் " கிடைத்தது. தோற்பறைக்கருவிகள் கிடைத்தது. முழவு கிடைத்தது. இவை ஒன்றும் பிற நாடோடிக்கும்பல்களிடம் இருந்து ஒன்றும் பறிக்க படவில்லை. இசைக்கருவிகள் மட்டுமா கிடைத்தது நடனமாடும் பெண்ணின் சிலையும் கிடைத்தது. இசை இன்றி நடனம் வர வாய்ப்பு இல்லை.

சற்றேறக்குறைய (அன்மையில் !!! ) அதாவது 5000 வருடங்களுக்கு முன் முதலாம் தமிழ்ச்சங்கத்தில் "பெருநாரை" "பெருங்குருகு" போன்ற நூல்கள் இசைக்கென்றே இருந்தன. இவைகொண்டு இசை வளர்க்கபட்டது.2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் குழல் வருகிறது, ஆம் புல்லாங்குழல் வருகிறது. புல்லினால் ஆகும் குழல் என்று அந்த இசைக்கருவிக்கு பெயர். மூங்கில் லில் இருந்து வருபவை எப்படி புல்லினால் ஆகும் குழலாக முடியும், மூங்கில் மரமாக இருந்தாலும் அது ஒரு புல் வகையே ஆகும் என்பது தாவரவியலின் கூற்று. தமிழன் தாவரவியலும் கொஞ்சம் தெரிந்து இருந்தான் என்பது மகிழ்வே. இதனை சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டத்தில் - ஆய்ச்சியர் குரவையில் வரும் கீழ்கண்ட வரிகள் இன்னும் கொஞ்சம் சிறப்பானவை "கொன்றையன் தீங்குழல் கேளாமோ தோழி"
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி
முல்லைய்ந்தீங்குழல் கேளாமோ தோழி " என்கிற வரிகள் புல்லாங்குழலை தீங்குழல் என்கிறது. தீக்கொண்டு துளையிடுவதால் அதை தீங்குழல் என்று பாடுகிறார்கள்.


இதுவும் ரவி சாஸ்த்திரிய சங்கீதத்தோடு ஒன்றாக பிறந்ததா என்று அறிவீலிஜிவிகளீடம் கேட்கவேண்டும். "சுப்ரபாதம் முதல் சுப்புலட்சுமி" வரை எல்லாமும் இங்கிருந்து சுடப்பட்ட கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்

Monday, December 04, 2006

@ 3:30 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


Sunday, December 03, 2006

@ 3:21 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

என்னாது அவரே சொன்னாரா என்னடா சொல்லுற, வெளியே போயி தனியா சரக்க ஏதும் போட்டு வந்துட்டியான்னு டென்சன் ஆனேன்.

இல்லடா இன்னும் நாலு நாள்ல நான் போய் சேர்ந்துடுவேன்னு சொன்னாருடா அன்னைகேன்னான்.

சரி ஆகவேண்டியத பார்ப்போம், தோழர் நீங்க போய் கட்சி ஆபிஸுல எழவு சொல்லிட்டு வாங்கன்னு கற்பனையரசுவை கிளப்பிவிட்டேன். அவருக்கு திடீருன்னு அவர "எழவு சொல்லி"யாக்குனத்துல கொஞ்சம் மனவருத்தம் அடைஞ்சமாதிரி தெரிஞ்சது. தோழர் ஒன்னும் பிரச்சினையில்லைல நீங்க போய் சொல்லுறதுலன்னு கேட்டேன், அதுக்கு அவரு "ச்சா எனக்கென்னங்க பிரச்சினை நீங்க போனாத்தான் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சினை" ( என்னுடன் சேரக்கூடாதுன்னு அவய்ங்க ஆபிசில் சொல்லிவச்சுருக்கானுங்க)ன்னு சொல்லிட்டே கிளம்பி போனவரு டக்குன்னு திரும்பி வந்து "கணேசன் தோழர் உங்க தம்பிகளுக்கு சொல்லிட்டிங்களா"ன்னு கேட்டாரு. கணேசன் எதோ அவரு இவன பாத்து சுப்பிரமணிய சாமி கட்சியில சேரலாமான்னு கேட்ட மாதிரி திகிலாகி பார்த்தான். நான் உள்ள புகுந்து 'என்ன இருந்தாலும் கணேசா அவய்ங்களுக்கு சொல்லாம விட்டா நல்லாயிருக்காதுன்னு' சொன்னேன். அரை மனசா சரின்னு சொன்னவன். இருடா சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டு வந்திடுறேன் என்றபடி கீழே இறங்க போனவனின் ஓரக்கண் ட்க்கீலா பாட்டிலையும் கவனிக்க தவறவில்லை.

அவன் தம்பி இரண்டு பேரும் ரெண்டு மாதிரி கிறுக்கனுங்க, மூத்தவன் கஞ்சா இழுவை பார்ட்டி( அவன் பேரே ஏரியாக்குள்ள "சிவன் செல்வம்னு" மாறி போய்யிடுச்சு - மதுரையில டோப்பு, சிவன், சைலென்ஸ் என்கிற குறிச்சொற்கள் கஞ்சாவைக்குறிக்கும் )இன்னொருத்தேன் வேற மாதிரி மென்டலு, ஒரு பொம்பள புள்ளையை விட மாட்டான், வெரட்டி வெரட்டி "லவ் லெட்டரு கொடுத்து பொது மாத்து வாங்காம ஒரு மாசம் கூட கடந்ததில்லை. அவனுங்களை எகனை போட்டு பாத்தா கணேசன் எவ்வளவோ தேவலை, என்ன இவன் "புரட்சி வரும்"னு மட்டும்தான் நம்புவான். அதுக்கு கஞ்சாவே அடிச்சிட்டு போலாம்பேன். " u too an utopian assole " comrade, நான் அடிக்கடி சொல்லுற டயாலாக்கு கணேசன பார்த்து.

- To be concluded with in Two days

Thursday, November 30, 2006

@ 12:56 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

சோதனைப் பதிவு

Tuesday, November 28, 2006

@ 3:35 PM எழுதியவர்: வரவனையான் 94 மறுமொழிகள்


அது ஒரு பத்திரிக்கை அலுவலகம், அவசர அவசரமாக அடுத்த நாளைக்கான தலையங்கத்தையும் , துணை தலையங்கத்தையும் அதன் ஆசிரியரும் துணை ஆசிரியரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். துணை ஆசிரியர் தனது கட்டுரையை ஆசிரியரிடம் காட்டுகிறார். அவர் படித்துவிட்டு நல்ல எழுதிருக்கே அது மாதிரி நல்ல தலைப்பை எழுதிட்டு வா... இதையே தலையங்கமா போட்டுரலாம் என சொல்ல து.ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தலைப்பு எழுதி காட்டுகிறார். ஆசிரியர் அவரை அருகே அழைத்து ஒரு சின்ன கொட்டு ஒன்றை தலையில் இட்டு " இந்த ஆனாக்கு ஆனா போடுற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் ' ஒழுங்க வேற தலைப்பு எழுதிட்டு வா" என்கிறார்.

துணை ஆசிரியர் மாற்றி எழுதிய தலைப்பை பார்த்து 'சபாஷ்' என்ற படி அச்சேற்ற அனுப்புகிறார் அந்த கட்டுரையை. அக்கட்டுரைக்கு முதலில் வைத்த தலைப்பு " அண்ணாமலைக்கே அரோகரா " ஆசிரியர் மெச்சிய புதுதலைப்பு " தீட்டாயிடுத்து ". ஆசிரியர் பெரியார், துணை ஆசிரியர் கலைஞர் , நாளேடு குடியரசு வருடம் 1943

தண்டபாணி தேசிகர் தியாகய்யர் விழாவில் தமிழில் பாடியதால் அந்த மேடையை கழுவி விட்டு தீட்டு கழித்த பார்ப்புகளை கண்டித்து கலைஞர் எழுதிய அந்த கட்டுரை தமிழிசையின் தேவையையும் அதன் உரிமை ஆதிக்க வெறியோடு மறுக்கபடுவதையும் இந்த மண்ணின் இசையை கழிசடை போல் கருதுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியது.

"இசைக்கு மொழியேது ? எதற்கு ? " இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுப்பப்படும், இந்த டிசம்பரிலும் எழும்.இந்த கேள்விதான் பாரதிக்கெதிராய், பாரதிதாசனுக்கெதிராய் மானுடம் அழகு பெற விரும்பும் அனைவருக்கும் எதிராயும் எழுப்பப்படுகிறது. மொழியற்ற ஒரு இசைக்கு சரசரக்கும் பட்டு புடவையும் , ஜிமிக்கியும் வாய்கொள்ளாச்சிரிப்பும் போண்டா சாப்பிட மாமிகளும் எதற்கு ? ஒரு நல்ல கழுதை போதாதா?

"சரி பாடித்தான் தொலையறதுகள்" நமக்கென்ன என்று போகலாம் என்று பார்த்தால் பத்தாதற்கு பத்திரிக்கைகளில் பேட்டி வேறு "அதான் துக்கடா பாடறமொன்னோ அப்புறம் என்ன" என்று குந்தித் தின்ற கொழுப்பை குதப்பி துப்பும் திமிரோடு.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒருத்தர் வயலின் இசைத்தே மழைவரச்செய்கிறேன் என்று சவால் விட்டு ஏரிக்குள் சென்றமர்ந்தார். மழையற்ற முன்றாம் உலக நடுகள் இவரே மீட்பர் என ஆச்சரியத்தில் ஆழ்ந்த படி நடக்கப்போகும் அதிசயத்தை காண காத்திருந்தன. வந்தது மழையல்ல கைவலி.தன் இசைத்திறமையை சல்பர் டைஆக்ஸடுடன் ஒப்பிட்டுக்கொண்ட அவரை கண்டு நாம் பரிதாபம்தான் பட முடிகிறது.

தான் சேன் தீபமேற்றினான் என்பது அவன் இசைத்திறமை குறித்து மிகைத்து சொல்லப்பட்ட வார்த்தை அவ்வளவே. நானும் மழை வரவைப்பேன் என்பது அவருக்கு வேதியல் குறித்து வகுப்பெடுக்கபட வேண்டிய அவசியத்தை மட்டுமே நமக்கு காட்டுகிறது.

இசையென்பது சிலருக்கு பொழுதழிக்கும் வேலை. உழைக்கும் மக்களுக்கோ அது வாழ்விலோர் அங்கம் . பிறப்பும் இறப்பும் உழைப்பும் இசையுடனே கலந்து நிற்கும் பாட்டாளி மீனவர்கள் துடுப்புவலிக்கும் ஏலோலோ ஐலசா வில் மொழியையும் பொருளையும் தேட வேண்டிய அவசியமில்லை. ஆனால் " கிருஷ்னா நு பாரோ" வின் அர்த்தம் எத்தனை மாமிகளுக்கு தெரியும் எத்தனை சிறுவர் சிறுமிகளுக்கு அவை விளக்கத்துடன் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
"உன் கைகள் பட என் தனங்கள் ஏங்குகிறது" இது தெலுங்கு கீர்த்தனையில் வரும் வரி , மொழிதெரியாச்சிறுமிகளிடம் ( அவர்கள் யாராக இருந்தாலும்) அர்த்தம் விளங்காமல் சொல்லிக்கொடுப்பதும் அவர்களை சபையில் பாடச்சொல்வதும் ஒரு சமூக குற்றமில்லையா. தமிழில் பாடுவதற்கு என்ன பிரச்சினை ஜெயசிறீ யும் நித்தியசிறீயும் சினிமாவில் மட்டும்தான் தமிழில் ( ! ) பாடுவேன் என்பது திமிரில்லாமல் வேறு என்ன. பிருந்தாவனம் எனும் ஆல்பம் வெளியிட மட்டும் பாரதியின் பாட்டுத்தேவை ஆனால் சங்கீத விழாக்களில் 90 ஆண்டுக்கு முன் பாரதி கேட்ட தமிழ்ப்பாட்டுக்கு மட்டும் இன்னும் இடமில்லை.அப்படியன்ன கர்நாடக சங்கீதம் உய்ர்ந்தது, தமிழிசையை விட எவ்விதத்தில் உயர்ந்தது. எது தொன்மையும் பண்மையும் கொண்டது. அடுத்த தொடர்ச்சியில் பார்ப்போம்.

(தோழி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைப்பை மாற்றியுள்ளேன் )

@ 2:24 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


முன்பொரு நாள் ஸ்பார்டகஸுவின் படையிலிருந்தேன்
இருவருக்குகொடுத்த இறைச்சி துண்டை - ஒருவனே உண்டேன்
தண்டித்தான் ; பின் கொல்லப்பட்டான் நானும்தான்
பின் ஏசுவுக்கு பரிந்து பேசி, கல்லால்
அடித்துக்கொன்றார்கள் , பாண்டியமன்னனுக்கு
எதிராய் கலகம் செய்தவன் எனச்சொல்லி
கழுவிலேற்றினர் ; ஒரு யூதனை காப்பாற்றப்போய்
500 யூதர்களுடன் புதைக்கப்பட்டேன் ஜேர்மனியில்
நல்ல நிலாக்காலத்தில் வட அமெரிக்க பாடலொன்றை
பாடி உளவாளி பட்டத்துடன் சுட்டுவீசப்பட்டேன்
கியூபாவில் ; உத்தமபாளையம் தாபாலபீஸ் மீது
தமிழ் வாழ்க எனச்சொல்லி தார் பூசும் போது
சுடுவேன் என்ற காவலன் முன் சட்டை கிழித்து காட்டி
செத்துப்போனேன் , வயது அப்போது 14
வெள்ளைக்காரனின் வண்டி மீது கல்லெறிந்தேன்
நாயைப்போல் சுட்டு போட்டனர் ,ஆப்பிரிக்க கிழக்கில்
Primary attack துவங்கினால் முதல் வீரமரணம்
எனக்குத்தான் தெரிந்தும் பாயிண்டில்
நிற்கிறேன் , யுத்த நிறுத்தகால முடிவுக்காக
நாளை இவனை எதிர்த்தும் களத்தில் நிற்பேன்
இவன் ஆதிக்கவாதியெனப்பட்டால்
என் பெயர் பெரியார்

Thursday, November 23, 2006

@ 2:34 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

ஓட்டல் அருணா- வில் நடைபெற்ற "திடீர்" சந்திப்பு வரவு செலவு அறிக்கை :

கலந்து கொண்டோர் - 10 நபர்கள்
வேடிக்கைப்பார்த்தோர் - 2 நபர்கள்

ஹோட்டல் பில் - ரூபாய் 2649.00

ஃபீடிங் நிப்பிள் (மாம்ஸுக்கு ) - ரூபாய் 5.00

வாகன நிறுத்த காவலாளிக்கு இனாம் - ரூபாய் 10.00

ஆக மொத்தம் - ரூபாய் 2664.00

மொய் எழுதியோர் :-

முத்து (தமிழினி) - ரூபாய் 2649.00

ஓகை - ரூபாய் 500.00
தங்கவேல் - ரூபாய் 500.00
வரவனையான் - ரூபாய் 15.00

மொத்த வரவு ரூபாய் 2664.00

செலவு போக மீதி கல்லா இருப்பு ரூபாய் 1000.00

மறுநாளும் தொடர்ந்த பார்ட்டியினால் கலாய்க்கப்ட்டோர், முத்து(தமிழினி) , ஓகை, யெஸ்.பாலபாரதி உள்ளிட்டோர்.

நீதி : கல்லாவில் இருப்புத்தொகை வைக்க கூடாது.

Sunday, October 29, 2006

@ 10:20 PM எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்மிகுந்த ஆவலாய் எதிர்பாத்துகிட்டு இருந்ததை வாங்கிட்டு வந்து கொண்டிருப்பதாக மியாமி ஏர்போர்ட்டிலிருந்து மயில் போன் செய்தவுடன் மனசு பரபரப்பாகி அதை எப்படி கொண்டாடுவது என யோசிப்பதிலேயே பொழப்பு பூராம் கெட்டு போச்சு. ஒரு ரெண்டுநாளு கழிச்சு மும்பை வந்திட்டேன் பங்காளின்னு திரும்பவும் போனு." ஏலே இவேன் ஒருத்தேன் ரயிலு கணக்க அங்க வந்துட்டேன், இங்க வந்துட்டேனுகிட்டு" வாரவேன் ஊருக்கு வந்துட்டு கூப்பிடவேண்டியதுதானே. அத விட்டுபோட்டு சும்ம இசுமைய கூட்றாய்ங்க " அப்படின்னு சொல்லி போன வச்சுட்டேன்.

அடுத்த நாளு மதுர வந்துட்டு கூப்பிட்டான் போயி நலம் விசாரிச்சுட்டு அப்படியே நான் சொல்லிவிட்டு அவன் வாங்கிட்டு வந்த மேட்டரை வாங்கிட்டு கெளம்பும்போது டேய் இந்த இதயும் எடுத்துட்டு போன்னு சொன்னான், என்னானு பாத்தா ஜானி வொக்கர் ரெட் லெபிள். இதல்லாம் இங்க விக்கிற சுப்பர் ஸ்டார் ரேஞ்சுப்பா . வேற என்னா வச்சுருக்கேன்னு கேட்டேன்.

திருதிருன்னு முழிச்சான் சரி இனி விடக்கூடாதுன்னு நோண்டி துருவுன, அப்புறம் சொல்றான் பக்கார்டி சூப்பிரீயர்னு ஒன்னு மட்டும் இருக்கு மத்ததெல்லாம் வேற பிரண்ட்ஸ்க்கு கொடுக்கனும்டான்னு சொல்லிட்டு அதையும் எடுத்து கொடுமையேன்னு கொடுத்துத்தொலைச்சான். வாங்கிட்டு ஊருக்கு வந்து பாத்தா அது "மெய்ட் இன் போர்ட் டோ ரிகா'ன்னு போட்டு இருந்துச்சு அத பார்க்கவும் நமக்கு மேலும் கிளுகிளுப்பா ஆகிபோச்சு ஆகாதா பின்ன. அதுதான் நம்ம J.LO ஊராச்சே . அந்த made in என்கிற வார்த்தை என் கண்ணுக்கு maid in manhattan ந்னு தான் தெரிஞ்சுச்சுனா பாத்துகோங்களேன்.


அன்னைக்கு சாயுங்காலமே அந்த பக்கார்டி சுப்பீரியருக்கு போத்தலில் இருந்து விடுதலைப்பெருவிழா நடத்தி முடிச்சு வாயெல்லாம் வாழைப்பழ மணம் கமழ வீட்டு போயி மாத்து வாங்கிட்டு படுத்தேன். ( .... எம்பூட்டு ஒசத்தி சரக்கடிச்சாலும் கண்டு பிடிச்சுப்புடுறாய்ங்கப்பா )

மறுநாள் மதியம் "வெட்டும்புலி" தீப்பட்டி படம் வச்சுருகிற பிரண்ட தேடிப்போயி கடன் கேப்போமே அது மாதிரி போண்டா கணேசன் , தோழர் கற்பனையரசு ரெண்டு பேரும் கணேசனின் டூபாக்குர் டிவிஎஸ் 50 ல வந்தாய்ங்க. வந்த உடனே எங்க வீட்ல ரெய்டு அவனுங்களுக்கு அதும் எப்படி " என் கூட சேர வேண்டாம்னு " அப்பப்ப எங்க வீட்ல இப்படித்தான் திகில கெளப்புவாய்ங்க. டயலாக்க கேளங்க உங்களுக்கே புரியும். " ஏண்டா கனேசா உனக்கென்ன வயசு,அரசு உனக்கும் அவனுக்கும் 15 வயசி வித்தியாசம், ஏண்டா அவன் பின்னாடி அலையிறிங்க, அவவேன் கூட சேர்ந்து எவனும் உருப்பிட்டதா சரித்திரமே கெடயாது" இம்பூட்டு பேச்சும் வாங்கியும் மழையில நிக்கிற எருமை கணக்க என் ரூமையே பார்த்துகிட்டு இருந்தாய்ங்க. அப்பதான் குளிச்சிட்டு வெளியே வந்தேன். " சமஸ்தானம் தூங்கி எந்திரிச்சு வர நேரத்த பாரு, இதல்லாம் வெளங்குமா" எங்க வீட்டின் தினமும் வரும் வசனமாகியதால் சாப்பிட உக்காந்தேன் .


டேய் டக்கீலா வச்சுருக்கியமே, எடுத்துட்டு வாடா போலாம்னு ஆரப்பிச்சான் கம்யூனிஸ்ட் கனேசன் ( எ) போண்டா. சாப்பிட்டு வீட்டருகே தம்மடிக்கும் போது.கூட தோழர். கற்பனையரசும் ஊம் கொட்டினார்.

"யோவ் நான் என்ன ரஷ்யன் ஓட்கா வா வச்சுருக்கேன், காம்ரேட் ரெண்டு பெரும் இப்படி அலையிறிங்கன்னு" கலாய்தேன்.

இல்லடா டக்கீலா இன்னும் அடிச்சதே இல்லப்பா அதான் கேட்டேன்'னான் கற்பனை.

நாங்க மட்டும் என்ன டெய்லி ரெண்டு "ஹாட் ஷாட் " அடிச்சுட்டுதான் வெளியேவே கிளப்புறேனாக்கும். நானே கொடைக்கானலில் அந்த பிரெசில்காரியோட அடிச்சது. அதுக்கபுறம் போன வருசம் மயிலை பிளைட் ஏத்தும்போது சொல்லிவிட்டு அது இப்பதான் வந்துருக்கு i am going to drink lonely என்றேன்.இந்த வாக்கியம் முடிக்கும் போது தோழர் கற்பனையரசுவின் கண்களில் ஒரு வெறி வந்து மறைந்தது. சரக்கு தரமாட்டேனு சொன்னதுக்கு அவரு கோபப்படலை, அந்த "பிரெசில்காரி" காரிங்கிற வார்த்தை அவர டென்சனாக்கியது . ( தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர் மாதிரி பிரேசில்காரியும் மேட்டரும் ஒரு நல்ல மூடில்தான் எழுதனும் விரைவில் )

காரணம் அவரு பிரெசிலின் சகல வெளிப்பாடுகளுக்கும் ரசிகர், பிரேசில் புட்பால்,ரொனால்டொ,ரிவால்டொ,ரொமாரியோ என அவரின் கதாநாயகர்கள் மாறியபடியே இருப்பார்கள். அந்த கர்லி பிரெசிலியன் பொண்ணுகள் தான் அவரின் ஆதர்ச நாயகிகளே. இதுமில்லாம அப்பப்ப சம்பா,ஸல்சான்னு ஆடியோ சிடி வாங்கி வந்து இயக்கத்திக்கு (அவரின் மொழியில் - ஸ்தாபனம்) தெரியாமல் கேட்பார். என்கிட்ட அடிக்கடி அவரு மனம் நொந்து போய் சொல்லும் வார்த்தை. வீ மிஸ் காம்ரெட், லத்தின் அமெரிக்காவில் பிறக்காமல் போய்விட்டோம் என்று .

அங்க பிறந்தாலும் இப்ப இருக்கிற மாதிரி ஒரு வீணாப்போன இயக்கத்தில தான் நீங்க இருப்பீங்க தோழர்னு கிண்டலடிப்பேன் சரி மேட்டருக்கு வருவோம்

அழுது அடம் புடிச்சி டக்கீலாவை எடுத்துட்டு வர வச்சுட்டானுங்க. எங்கடா போறது குடிக்கன்னு கேட்டேன். அது நாங்க பாத்துகிறோம் அத எப்படி குடிக்கிறது அத சொல்லு,அதுவுமில்லாம இந்த டக்கீலாக்கு மட்டும் அப்படி என்ன தனி சிறப்பு அதையும் சொல்லுனான் கணேசன்.

அதாவது கணேசா, டக்கிலாங்கிறது மெக்ஸிக்கோவில் மட்டும் கிடைக்கும் சரக்கு எப்படி நம்ம வெள்ளோடு சாராயம் ( 150 ஆண்டுகளாக சாராயச்சாவே நடந்ததில்லை) வேற எங்கையும் கிடைக்காதோ அது மாதிரித்தான் அதுவும் அந்த நாட்டு அரசே உற்பத்தி செஞ்சுட்டு இருக்குது. ரெண்டு,முணு தனியார் கம்பெனிங்க மட்டுமே தனியாக உற்பத்தி செய்யுது.

"நீல அகேவ்" என்கிற கத்தாழைக்கிழங்கு வகையில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான மெக்சிக்கோ நாட்டு சரக்கு இது. நாலு டேஸ்ட்தான் இதுல இருக்கு . பிளான்கா, கோல்ட், ரெஸ்பாடோ , ஆனெஜோ அப்படின்னு பேரு.இது இல்லாம 5 வதா ஒன்னு இருக்கு அது "ரிசேர்வ" அது 8 வருசம் ஊரல் போட்டு வாரது. கொஞ்சம் காஸ்ட்லி.


குடிக்கும் போது நவ்வாப்பழம் உப்பு போடாம சாப்பிட்டா ஒரு மாதிரி துவர்க்குமே அது போல இதுவும் துவர்க்கும். அதுனாலதான் ராவா டக்கீலா அடிச்சா கையில உப்ப வச்சுகிட்டு நக்குவானுங்க, அதுக்கு பேரு தான் "ஹாட் ஷாட்" . சொல்லி முடிக்கிறேன் போண்டா வீடு வந்துருச்சு. ஏண்டா நம்ம இங்கையா குடிக்கபோறோம்னேன். ஆமா இதுதான் செலவுமில்லா அப்படியே பிளாட் ஆனாலும் கவலையில்ல என்றார்கள் .

கணேசன் வீடு என்று சொன்னது தவறு அது ஒரு வணிகவளாகம். நகரின் இதய.... ம்கூம் அதையும் தாண்டி வென்டிரிக்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு சொத்து இருப்பதால்தான் அவனை மனிதனாக மதித்தார்கள்.அதன் பின்புறம் கிழே இரண்டு அறைகள் மேலே இரு அறை அதுதான் அவன் வீடு, கீழே கணேசனின் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள் . தாத்தாவுக்கு 96, பாட்டிக்கு 84. அவர்களுக்கு யார் வருகிறார் போகிறார் என்றேல்லாம் தெரியாது. ஆனால் கணேசனின் வண்டி எழுப்பும் வினோத சத்தம் மட்டும் நன்கு கேட்க்கும். அவன் வண்டி ஓடத்துவங்கினால் தப்பு சத்தம் கேட்க்கும்.

மேலே போயி உக்காந்தோம், ஏண்டா வரவனை இந்த காக்டெய்ல்'னு சொல்லுறாய்ங்களே அது நீ செய்வியாடான்னு கேட்டார் தோழர் கற்பனையரசு. ஓ நிறைய படிச்சிருக்கேன் , குடிச்சும் இருக்கேன் ஆனா இந்த பிராண்ட்ல போட்டதில்ல. ஒரு டைப் இருக்கு இன்னைக்கு போடலாம்.


ஆனா அப்படி குடிச்சா கணேசனுகே இந்த புல் பத்தாவது அதை நம்ம ஸ்டைலில் மாத்திபோடுவோம். ஒகே.

சரி முதலில் போய் திராட்சையும்,ஆரஞ்சும் வாங்கிட்டு வா. அப்படியே கொறிக்க ஏதாவது வாங்கிட்டு வாடா, என்னாலைலாம் உன்ன மாதிரி கட்டிங்க ராவா அடிச்சிட்டு செவுத்த நக்கிட்டு போக முடியாதுன்னு சொல்லி அனுப்பினேன்.

போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சு வந்தான் சொல்லிவிட்ட மாதிரியே எல்லாம் வாங்கி வந்தவன். கொஞ்சம் டல்லா இருந்தான் என்னாடனு கேட்டேன்.


"தாத்தா செத்து போயிட்டாருடா"ன்னான்

உடனே பக்கதுல இருந்த தோழர் கற்பனைஅரசு முஷ்டி மடக்கி செவ்வணக்கம் வச்சாரு,

யோவ் நீ ஒருத்தேன் நேரங்கெட்ட நேரத்துல,அவங்க தாத்த காங்கிரசு காரருயா'ன்னு எரிச்சலா சொல்லிட்டு " கணேசா நீ பாத்தியா"ன்னு கேட்டேன்.

"பாத்தேண்டா அவரே சொன்னாருடா'ன்னான்.


( விரைவில் முடிக்கிறேன் )

இனிமேல் குடித்ததை எழுத போவதில்லைனு நண்பர்களுகு கொடுத்த உறுதி வன்மையாக மீறப்பட்ட பதிவு இது. நண்பர்கள் மன்னிக்கவும்.

Friday, October 27, 2006

@ 4:51 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த வழக்கில் ஜெய்ஸ்-இ-முகமது என்னும் அமைப்பைச் சேர்ந்த முகமது அப்சல் குரு என்கிற இளைஞர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அக்டோபர் 20 ஆம் நாள் அப்சலைத் தூக்கி லிடுமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அப்சலுக்கு மரண தண்டனை என்ற செய்தி பரவியதுமே காஷ்மீர் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. பிரிவினைவாத அமைப்புகள், ஆளும் கூட்டணிக் கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், பெண்கள், மாணவர்கள் - அனைவருமே அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

கடையடைப்பு, பேரணி, போலீசாருடன் மோதல் என்று ஒவ்வொரு நாளும் வேகம் பரவி வருகிறது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் குலாம் நபி ஆசாத்தும் “முகமது அப்சலுக்கு குடியரசுத் தலைவரின் மன்னிப்பைப் பெற்றுத் தருவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்ற முடியும். பிரதமர் மன்மோகன் இதற்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான தாரிகமி “அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலலை செய்து அவருக்குக் கருணை காட்டலாம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஜம்மு காஷ்மீரில் அமைதி முயற்சிகள் எதிர் மறையாகச் செல்லவும் வழி வகுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மார்க்சியர்கள் பிரிவினைவாதிகளோ, பலாத்கார நடவடிக்கைகளில் நம்பிக்கையுள்ளவர்களோ அல்லர். மத நல்லிணக்கத்திலும், தேச ஒற்றுமையிலும் பற்றுறுதி வாய்ந்தவர்கள் என்பதால் தாரிகமியின் ஆலோசனை ஆழ்ந்த அக்கறையுடன் கவனிக்கத் தக்கது. காஷ்மீரில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ள நேரத்தில் அப்சலின் குடும்பத்தினர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவும் அளித்திருக்கிறார்கள்.

அப்சலைத் தூக்கிலிடக் கூடாது என்று போராட்டங்களும் கருத்துருவாக்கங்களும் நடந்து கொண்டிருக்கும் அதே சமயம் அப்சலைத் தூக்கிலிட்டே தீர வேண்டும். கருணை காட்டக் கூடாது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயிலைப் போன்றது. அதன்மீது தாக்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அந்தக் கொடுமையைச் செய்தவனை மன்னிப்பது தேச விரோத நடவடிக்கை என்று பா.ஜ.க.வும், சங்கப் பரிவாரங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

“நாடாளுமன்றத் தாக்குதலின்போது எங்கள் கணவரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். கணவரை இழந்து வாடும் எங்கள் கண்ணீருக்கு என்ன பதில்?” என்று தாக்குதலின்போது இறந்த காவலர்களின் மனைவியரும் அப்சலுக்குக் கருணை காட்டக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தயார்படுத்தி முன்னிறுத்துகிறவர்கள் பரிவாரங்களே என்பது ரகசியமல்ல.

“உணர்ச்சி வேகத்தில் கொலைகளைச் செய்த ஒருவன் அந்த உணர்ச்சி நீர்த்துப் போனதும் வருத்தம் கொள்கிறான் மனச்சோர்வு அடைகிறான்.

ஒரு தீவிரவாதியோ, குறிப்பிட்ட பயங்கரவாத இயக்கத்தின் நோக்கத்துக்காக நாட்டின் பொது அமைதியைச் சீர்குலைக்கும் கொலைத் தொழிலைச் செய்து முடித்த பின்னர் அங்கே உயிரிழப்பு பற்றிய வருத்தங்கள் இருப்பதில்லை. மாறாக அச்செயல் கொண்டாடப்படும் வெற்றியாக அமைகிறது.

உணர்ச்சி வேகத்தால் கொலை செய்த மனிதனின் தண்டனையைக் குறைத்தாலோ அல்லது அவனை விடுதலையே செய்தாலும் அதனால் சமூகத்தில் யாருக்கும் ஒன்றும் ஆகிவிடாது.

ஆனால், ஒரு தீவிரவாதியின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றினால் சிறைக்கூடத்தில் இருந்தபடி தன் அடுத்த திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தொடர்கதைதான் நிகழும்.” என்று சில சங்கப் பரிவார ஆதரவு ஏடுகளும் எழுதுகின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது குறிக்கோள், இலட்சியம், அரசியல்சார்பு எதுவும் இல்லாத ஒரு தனிமனிதனுக்குக் கருணை காட்டுவதும், ஓர் இயக்கத்துக்காக, அதன் இலட்சியங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதி ஒருவனுக்குக் கருணை காட்டுவதும் வெவ்வேறு தன்மையுடையவை என்று தோன்றலாம். ஆனால், உணர்ச்சி வேகத்தில் கொலை செய்தவனைத் தூக்கிலிடுவதால் அந்தக் குற்றவாளியின் குடும்பத்தார்க்கு மட்டுமே இழப்பும் துயரும் நேரும்.

தீவிரவாதியைத் தூக்கிலிடும்போது அவருடைய குடும்பத்தினர்கூடச் சமயங்களில் வருந்தமாட்டார்கள். ஏடுகள் குறிப்பிடுவதுபோல் அது ஒரு வெற்றியாக - வீரவணக்கத்துக்குரியதாகவும் மாறலாம். தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளைக் கொன்றதற்காக கோட்சேயும் வருந்தவில்லை. அவனைத் தூக்கிலிட்டதற்காக அவன் குடும்பத்தாரும் வருந்தவில்லை. மாறாக அவனை வீரன் என்றும், எதிர்காலம் கொண்டாடும் என்றும் அவனது சகோதரர் கோபால் வெற்றிக் களிப்புடன் பேசினார்; எழுதினார். இதுவரை கோட்சேயைக் கண்டித்து எந்த அத்வானியும், வாஜ்பேயியும், சோவும், குருமூர்த்தியும் பேசவில்லை; எழுதவில்லை.

கோட்சேக்கு மரண தண்டனை வழங்கிவிட்டதால், சாதுக்களும், சங்கப் பரிவாரங்களும், அத்வானிகளும் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்திவிடவில்லை. அதுபோலவே அப்சலின் மரணத்தால் அவன் சார்ந்த இயக்கமும் முடங்கிப் போய் விடப் போவதில்லை. தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் தீவிரவாதம் குறைவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் துயரங்கள் தேசத்தையே உலுக்கி விடுகின்றன.

அப்சலின் நடவடிக்கை நியாயமானது என்று யாரும் வாதிட முடியாது. ஆனால், நாடாளுமன்றத் தாக்குதல் என்கிற குற்றச் செயல், இருவேறு மதங்களின், இருவேறு கருத்துக்களின், தொடர் நிகழ்ச்சி என்பதை மறுத்துவிட முடியாது. காஷ்மீருக்குள் மாத்திரமே ‘சுதந்திரப் போராட்டம்’ என்கிற முறையில் நடந்து கொண்டிருந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் இழுத்து விடப்பட்டது எப்படி? சங்கப் பரிவாரங்களின் தீவிரவாதத்துக்கு இதில் பொறுப்பில்லையா?

இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கண்டிக்கிற உரிமை அதாவனிக்கோ, குருமூர்த்திக்கோ இல்லை. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பிறகுதான் கோவையிலே குண்டு வெடித்தது. மும்பையிலே குண்டு வெடித்தது. அப்சலைத் தூக்கிலிடு என்று ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதன் அருகிலேயே அத்வானியைத் தூக்கிலிடு என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சரியானதே! ஆனால், தூக்குத் தண்டனை வழங்குவதால் மக்கள் தொகை குறையலாமே தவிர, இங்கே எரியும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து விடாது.

‘சிறுபான்மை’ மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ‘பெரும்பான்மை’யினர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது. இந்தியாவில் ‘பெரும்பான்மை’ என்கிற பேரிரைச்சலுக்குள் புகுந்திருப்போர் உண்மையில் மிகமிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களே! பார்ப்பன வெறியர்களின் நலன்களே, ஆதாயங்களே இங்கே இந்திய நலன்களாகச் சித்திரிக்கப்படுகின்றன.

உண்மையிலேயே இந்திய நலனில், சமூக ஒற்றுமையில் அக்கறை உண்டென்றால், முதலில் இங்கே சங்கப் பரிவாரங்கள் தடை செய்யப்பட வேண்டும். பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புதிதாய் அந்த மசூதி கட்டப்பட வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கைகளே இஸ்லாமியரின் அச்சங்களையும் ஆவேசங்களையும் குறைக்கும். இந்தியாவைப் போல் நமக்குப் பாதுகாப்பான நாடு எங்கும் இல்லை என்று இஸ்லாமியர்கள், அல்லது அசாமியர்கள், மணிப்பூரிகள், தெலுங்கானா மக்கள், தமிழர்கள், நக்சலைட்டுகள் என அனைத்துப் பிரிவினரும் நம்பும் போதுதான், தீவிரவாத தேவையற்று உதிரும்.

‘காரணம்’ அறியாமல், ‘காரியத்தை’ நிறுத்த முடியாது. தீவிரவாதம் ஏன் தொடங்குகிறது என்று யோசிக்க மறுத்தால், மரண தண்டனைகளை வழங்கிக் கொண்டே இருக்கலாம்.

அப்சலுக்குக் கருணை காட்டக் கூடாது. ஏனென்றால் அவன் தனி மனிதனல்ல. ஒரு தீவிரவாதியின் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றினால், சிறைக் கூடத்தில் இருந்தபடியே தன் அடுத்த திட்டத்தை நடத்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்குவான் என்று வாதிடுவோர் வசதியாக ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

தீவிரவாதியின் மரண தண்டனையை ரத்து செய்தால் ‘அடுத்து என்ன’ என்று அவன் சிந்திப்பான். அவனை தூக்கிலிட்டு விட்டால் ‘அடுத்து என்ன’ என்று மற்றவர்கள் சிந்திப்பார்கள். “அப்சல் விவகாரத்தைப் பொறுத்தவரை, ‘தகுந்த சாட்சி, ஆதாரத்தின் அடிப்படையில்தான் தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்பது மட்டுமே நியாயமான வாதமாக இருக்க முடியும்” என்று எழுதுகிற ஏடுகளும் உண்டு.

அதாவது ‘தூக்கிலிடுங்கள். ஆனால், அதை நியாயப்படுத்துங்கள்” என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
ஆதிக்க சக்திகள் நினைத்தால், அரசுகள் விரும்பினால், எதையும் எப்படியும் நியாயப்படுத்த முடியும்.
நியாயப்படுத்தப்பட்ட தீர்ப்புகள் எல்லாமே வரலாற்றில் ஏற்கப்பட்ட தீர்ப்புகளாகி விடுவதில்லை.

அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வது, தீவிரவாதத்துக்கு முன் ஓர் அரசு பணிந்துவிட்டதாக மக்கள் எண்ண மாட்டார்களா? - கேட்கலாம். ஆனால், “தூக்குத் தண்டனை வழங்கிய அரசுகள் நிமிர்ந்துதான் நிற்கின்றனவா?” - இப்படியும் மக்கள் கேட்பார்கள்.


: தோழர் இளவேனில் செய்திமடலில் எழுதியது

Wednesday, October 25, 2006

@ 6:57 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

தீவாளிக்கு அடிச்ச கூத்த எழுதலாம்னு உக்காந்தா போன் போட்டு போட்டோ என்னாச்சு ! வீடியோ என்னாச்சு'னு உசுர வாங்குன அன்பு வலைபதிவர்களே (வல்லினம் மிகவில்லைன்னு யாரும் அடிக்கவராதிங்கப்பா) ஒரு வழியா ஃப்லோக்குல ஏத்துதறுக்குள்ள நான் பட்டப்பாடு இருக்கே "டவுசர் கிழிஞ்சுருச்சு "அது இருக்கட்டும், இப்போ படம் போட்டாச்சு வீடியோவையும் தரவேற்றியாச்சு அதல்லாம் சரி இப்போ அந்த வீடியோவுல ஆடியோ கேக்குதா நான் வேல பார்த்த கணீணி'ல சன்டிவி வருது,சூரியன் FM எடுக்கலை. அதாங்க ஒலி வரவில்லை. இது என் நாதஸ்வரத்துல மட்டும்தானா இல்ல எல்லா நாதஸ்வரத்துலையுமான்னு கொஞ்சம் சொல்லுங்கப்ப

ரெடி ஜூட்......

இந்த பதிவுல கமென்ட் மட்டுமே, கலாய்த்தல் விரைவில். உள்ளார ரண்டி....


Photobucket - Video and Image Hosting

8 மணி பாஸஞ்சர பிடிக்க 7 மணிக்கே வந்தா அது 2மணி நேரம் லேட்டு'னு கேள்விப்பட்டு, பே'ன்னு உங்க்காந்து இருப்போமே , அது மாதிரி எல்லோரும் உக்காந்துருக்கிற இடம் அமெரிக்கன் காலேஜ் சிற்றுண்டிச்சாலையின் அருகே.

மருதைக்குள்ளையே 20 வருசம் இருந்தாலும் என் காலடி படாத புண்ணியபூமி.Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

இந்த ரயில்வேயே இப்படித்தான் என்றபடி கடைசி பஸ் பிடிக்க கிளம்புமும் கூட்டம்போல் கலைந்து கிளம்புவது வலைப்பதிவர் கூட்டம் முடிந்து கூட்டம் முடிந்து. ( அந்த அவசரத்திலும் பயன்படுத்தாத பெப்சி கிளாசை சேகரிக்கும் தருமியும் முத்து(தமிழினி)யும் ! எல்லாம் உடனே அப்படி கணக்கு :))))போட்டுராதிக எல்லாம் சூழலியல் நோக்கில்தான் )

தெளிவான சிந்தனை, இளமையான முற்போக்கு எண்ணம் கொண்ட தோழர் . முத்து(தமிழினி)யுடன் ( பழனிச்சாமியின் மொழியில் "கேரளாக்காரர்" (ஸ்பெசல் காரணம்- பின்னர் விளக்கப்படும் )


தலைக்கும் மீசைக்கு கருஞ்சாந்து இட்டு காலையில் காலையில் கோரிப்பாளையம் பேருந்து நிறுத்ததில் வந்து நின்றால், காலேஜ் பசங்களுக்கு இவர் எதிரியாகி போவார். பின்ன... லேடி டோக் காலேஜ்,மீனாட்சி காலேஜ் மெடிக்கல் காலேஜுன்னு கிராஸாகிற பொண்ணுங்களுக்கு இவர்தான் "ரெமொ". ( வாங்கிக்கொடுத்த ரெண்டு வில்ஸ்க்கு இவ்வளவுதான் பில்டப் குடுக்க முடியும் - வெரி ஸாரி :)))))) )

இவரின் நட்பு என்பது ஒரு இளைஞனின் அனுகுமுறையுடன் இருப்பது இன்னும் சிறப்பு.

பேராசிரியர். நண்பர் தருமியுடன் அடியேன் வரவனையான்


எனக்கு இடதில் சகோதரர் ராம், அவருக்கு இடதில் ஞானவெட்டியான் , அன்று அய்யா ஞானவெட்டியானை அதிகம் கலாய்த்தது நாந்தான் , ஆனால் அவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன் என்கிற அதிர்ச்சியான செய்தியை அவருக்கு சொல்லவில்லை
தருமி நடுவிலிருக்க குறுந்தாடியுடன் வலதுப்பக்கம் முனைவர் சைலஸ் ( ப்ரொபோசர் ரமணா (விஜயகாந்து) அல்லது தாகூர் ( சிரஞ்சிவி) படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பார் போல் தெரிகிறது - இவருக்கும் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, விட்டால் அப்சலை கதற கதற கழுவில் ஏத்திவிடுவார் போலிருந்தது :))) ) இடப்பக்கம் என் தோழன் கவிஞன்.சுகுணாதிவாகர்.

"வந்து நின்னது குத்தமாடா" என்று சிந்திக்கிறாரோ என்னவோ தோழி.வித்யா (லிவிங்ஸ்மைல்)இனிமேல் ஆன்மீக பதிவு போட்டால் அவ்வளவுதான் ஆட்டோ வரும் என்று பதிவர் ஜி.ராகவனை மிரட்டுகிறார் வித்யாநம்ம வரவனையான் மிக்ஸிங்கு கரெக்ட்டா இருக்கும் நம்பி அடிங்க என்கிறார் ராம் பதிவர்.ராஜ்வனஜிடம்,

பக்கதுல ஒருத்தர் " ஒன்ஸ் மோர் ரவுண்டு போலாம முத்து" என்கிறார் அது ஞானவெட்டியான்Photobucket - Video and Image Hosting

பதிவர் வழக்கறிஞர். பிரபு ராஜதுரை ஒரு ரவுண்டுதான் அடிச்சாலும் நொம்ப நேரம் பேசினார்.

அவ்வளவும் பயனுள்ளதாய் இருந்ததுதான் சிறப்பே


ரவுண்டு, மிக்சிங்கு எல்லாம் ஒன்லி பவுண்டோ என்பதுதான் கொஞ்சம் வருத்தற்குரிய விஷயம் :(((

ஆனால் அதுக்கும் தீபாவளி பலகாரம் சைடு டிஸ் சப்ளை செய்த பதிவர் மகேஸ் என் கேமிராவில் சிக்காததுதான் வருத்தமே.இந்தளவிற்கு விரைவாய் படங்களை அப்லோட் செய்ய உதவிய பொன்ஸ்'க்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆன்லைனில் இருந்து உதவினார்.


Sunday, October 15, 2006

@ 3:13 AM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்

ஜெயகாந்தனுக்கு 10 நாவல் எழுதுனபிறகுதான்ய ஞானச்செறுக்கு வந்துச்சு, இப்ப என்னடான்னு பார்த்தா, முணு சும்மாகாஞ்சி பதிவு போட்டு தமிழ்மணத்துல தன்னோட ப்லோக்கை இணைச்சவுடன் தாந்தான் "சோ" " கஞ்சாகுடிக்கி ஜெயகாந்தன் " ( அவனுங்க ஒன்னும் பெரிய டுபுக்குக இல்லையென்றாலும் ) என்றேல்லாம் மல்லாக்க படுத்துக்கொண்டே முடிவு பன்னிக்கிறாங்க. பொதுவாய் வலையுலகில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனபடுத்த முயன்றதில்லை, அது எனக்கு பிடித்த வேலையுமல்ல. அதே நேரத்தில் பொதுக்கருத்தெழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடிப்பதை பார்த்துக்கொண்டும் இருக்கமுடியவில்லை. வலைப்பதிவர் செல்வன் உள்ளாட்சித்தேர்தலில் நடைபெற்ற கலவரங்களை முன்வைத்து பொங்கியெழுந்து ஒரு பதிவு போட்டிருந்ததை படிக்க நேர்ந்தது ( ஆம் நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்) அதற்க்கான எதிர்வினை என்றே இப்பதிவை முன்வைக்கிறேன். கொஞ்சம் வாத முறையிலான பதிவாக .


"செல்வன்"
//
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பெரும் வன்முறையிலும், கலாட்டாவிலும் முடிந்திருக்கிறது. குறிப்பாக சென்னை ஒரு பீகாராகவே ஆக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சிறையிலிருந்த குண்டர்களையும், ரவுடிகளையும் பரோலில் கொண்டுவந்து ஓட்டுசாவடிகளை காலையிலேயே கைப்பற்றி அதிமுகவினரை அடித்து, விரட்டி போலிஸ் உதவியுடன் மானாவாரியாக கள்ள ஓட்டுக்களை போட்டு தள்ளியிருக்கின்றனர்.

இந்த கேவலமான கலாச்சாரத்தை உள்ளாட்சி தேர்தலில் ஆரம்பித்து வைத்த முழு பெருமையும் ஜெயலலிதாவையெ சேரும். 2001 உள்ளாட்சி தேர்தலில் ஸ்டாலினை தோற்கடிக்க சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து தோற்றது அதிமுக. இப்போது மகத்தான கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுகவும் அந்த வழியையே பின்பற்றுவது கேவலத்திலும் கடைந்தெடுத்த கேவலம் என்று தான் சொல்ல முடியும்.//

செல்வன் முதலில் தமிழகத்தில் என்கிற வார்த்தையை "சென்னையில் நடந்த" என்று மாற்றுங்கள் ;) . ஏனெனில் சென்னை தவிர வேறு எங்கும் பெருத்த வன்முறை நிகழவில்லை என்பது செய்தி. ம்ம்... அப்புறம் இந்த பீகார், பீகார் என்கிறீர்களே அது கேள்வி ஞானத்தின் அடிப்படையில் என்றுதான் நினைக்கிறேன். பீகாரில் மாநிலத்தின் நகரம் தவிர்த்த ஊரக பகுதியிலேதான் நீங்கள் குறிப்பிட்ட "மாதிரி " தேர்தல் முறைகள் கையாளப்படும். பாட்னாவில் அல்ல ( பாட்னா தேர்தல் முறையை பிறகு விளக்குகிறேன் ).
அதுவும் அந்த பகுதில் மிகுந்துள்ள மேற்சாதியினர் சொல்லும் நபருக்கு வாக்களிக்கவேண்டும், அந்த மேற்சாதியினருக்குள் நிகழும் யார் பெரியவன் என்கிற மோதலே இங்குள்ள ஊடகங்களால் வன்முறை என்று பெரிது படுத்தப்படுகிறது. மற்றபடி அங்குள்ள தலித் மக்கள் தங்கள் நிலத்தின் பண்ணையார் யாரைச்சொல்கிறாரோ
அவருக்கே வாக்களித்து விடவேண்டியதுதான் இதுதான் பீகார் பாணி தேர்தல். அடுத்ததாக ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளீர். நன்றி.

அம்பிகள் எல்லாம் " அதாவது கீர்த்தனராரம்பத்திலே கருணாநிதி ஆரம்பித்து வைத்ததாக" என்று புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் சிம்பிளாக ஜெ'விலிருந்து துவங்கியுள்ளீர்கள் நன்றி. அதே வேளை கடைந்து எடுத்த கேவலமாக நீங்கள் முன்வைப்பது குறித்து உங்கள் பதிவில் ஜால்ரா அடித்துள்ள அம்பிகள்
மற்றும் அதன் உப பருப்புகள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதைப்பற்றி வாயேஏஏஏஏஎ திறக்கவில்லையே ஏன் ?
"செல்வன்"
//
83 வயதான தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதி ஆட்சியில் போலிஸ் இந்த அளவுக்கு வன்முறை வெறியாட்டம் நடத்தியிருப்பது மிகுந்த கேவலமான செயலாகும்.//

அப்போ 78 வயதான ஒரு கிழவனை , தமிழரின் கடைசிக்கும் கடைசி கையிறுப்பை தெரு நாய் போல் அடித்து இழுத்து சென்றார்களே அப்ப இந்த ஜனநாயக காவல் நாய்கள் வீதிக்கு வந்து நீதி கேட்டனரா? தினம் மலம் திங்கும் தினமலர் முதலாளி அப்போதும் தின்று கொண்டிருந்தானா மலத்தை. அப்ப எங்க போச்சு உங்க கேவலம்.// கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர்கள் இருக்கும் கூட்டணியே இப்படிப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினால் அப்புறம் இவர்களுக்கும் அதிமுகவுக்கும் என்ன வித்யாசம்? இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள், எந்த வித்யாசமுமில்லாத வன்முறை கும்பல்கள் என்று தான் சொல்ல முடியும்.//

"வன்முறை என்பது மக்களின் நீதி" என்பது நீட்சே ரசிகரான உங்களுக்கு தெரியவில்லையா செல்வன். வன்முறைகும்பல்கள் இல்லாத தேர்தலை இந்தியா போன்ற அரைகுறை ஜனநாயக நாட்டில் எதிர்பார்ப்பது அபத்தமாக இல்லையா. ;))))))))))))))))


//ஓட்டு போட மக்கள் வருவதே அருகி வரும் இந்த சூழலில் ஓட்டுசாவடியை கைபற்றி இந்த குண்டர்கள் ஆட்டம் போட்டால் இனி பொது மக்கள் வரும் காலங்களில் ஓட்டு போடவே அஞ்சும் சூழ்நிலை தான் உருவாகும். தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லாத தேர்தல் வன்முறையை அறிமுகப்படுத்தியதே திராவிட கட்சிகள் தான்.//

யார் சொன்னது தமிழ்நாட்டில் ஓட்டுப்போடும் வழக்கம் அருகி வருகிறது என்று அதெல்லாம் 45% கிழே போனால் விட வேண்டிய டயலாக்கு நண்பா.

என்னாது தமிழ்நாட்டுக்கு பழக்கமில்லாத தேர்தல் வன்முறையா? இந்த "உட்டாலக்கடி கிரி கிரி" வேலைதானே வேணாங்கிறது. 1952 ல திமுக தேர்தல் பாதைக்கு வந்த நாள் முதல் 67 வரை பேராயக்கட்சியிடம் (congress) வாங்கின மாத்து பற்றி அண்ணா உங்களூக்கு தெரியுமாங்ணா.........
//
அதை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா. அதை பீகார் லெவலுக்கு கொண்டு சென்று காட்டு மிராண்டித்தனமான உள்ளாட்சி தேர்தல் கலாச்சாரத்தையும், பிகார் பாணி வெறியாட்டத்தையும் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திமுக.//

"பீகார், பீகார் , பீகார்" வைகோ மாதிரியே நீங்களும் கொஞ்சம் படம் போடுறிங்கண்ணா


//ஒழுங்காக தேர்தல் நடந்திருந்தால் கூட்டணி பலத்திலேயே திமுக ஜெயித்திருக்கும் என நம்பியிருந்தேன். ஆனால் இந்த வெறியாட்டம் ஆடியதை கண்ட பின் இப்படி ஒரு பெரும் கூட்டணியை வைத்திருந்தும் இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.//


ஏன் ராசா, திமுக 100 நாள் ஆட்சிக்கு பிறகுமா உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரனும். வெறியாட்டம் என்பதல்லாம் ஓவர் பாபுகாரு ! 2001 t0 2006 உள்ளார இருந்தீகளா.......//இந்த தேர்தலை போல் சாதகமான சூழல் திமுகவுக்கு எந்த காலத்திலும் நிலவவில்லை. சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அடியிலிருந்து அதிமுக இன்னும் மீளவில்லை. மாபெரும் கூட்டணி பலம், மக்கள் நல திட்டங்கள், மத்திய, மாநில ஆட்சி என அனைத்து அதிகாரமும் திமுக கையில். போதா குறைக்கு திருமாவளவன் வேறு கடைசி நேர ஜம்ப் செய்து திமுகவுக்கு வலு சேர்த்தார்.//உஷ்ஷ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே.......

உங்க வார்த்தைபடியே பார்த்தாலும் திமுக மிக வலுவாகவே உள்ளது அப்புறம் ஏன் பிரச்சினை செய்யவேண்டும். தேர்தல் சமயத்தில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று எண்னும் பிரிவே பிரச்சினை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும் பட்சத்தில் ஏன் பாபுகாரு அ.தி.மு.க செய்திருக்ககூடாது, அதுவும் திருமா வேற கடைசி நேர ஜம்ப் செய்திருக்கும்போது.


//
மேயரை மகக்ள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி ஜனநாயக ப்டுகொலை செய்தது, அதிமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகளை சுழற்சி முறையில் பெண்கள் தொகுதியாக திட்டமிட்டு ஒதுக்கியது, இதுவரை தமிழகத்தில் நடக்காத கொடுமையாக ரவுடிகளையும், கொலைகார சிறை கைதிகளை பரோலில் கொண்டு வந்து தேர்தல் சாவடிகளை கைப்பற்றியது என மடை திறந்த வெள்ளம் போல் அராஜகத்தை அவிழ்த்து விட்டுள்ளது.//

அது எப்படிங்க , மேயர மக்கள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி ஜனநாயகபடுகொலையா ........ சும்மா இருங்க நண்பா கேக்குறவன் வாயில சிரிக்கமாட்டான். மக்களால மட்டும் தேர்ந்தெடுக்கபட்ட ஆள விட்டிங்களா? அப்ப மயிறு புடுங்கிட்டு இருந்தானா இந்த தினமலம்.

சரி தங்கம் , பெண்கள் தொகுதியா மாத்தினா அதிமுக வெற்றி பெறாதா?

எப்ப இருந்து இப்படி கிளம்பிட்டிங்க. கலைஞர் கேட்ட துரைமுருகன விட்டுதான் சிரிக்கவுடுவார். (அவ்வளவு பெரிய வாய் அவருக்குதான் இருக்கு)

அந்த மூணாவது கருத்தை ஆதரிக்கிறேன், உங்க மறைமுக ஆதரவு கட்சி மேடம் "வெளியே" இருக்குற ரவுடிகளை வச்சுத்தான் ஆள வெட்டுவாங்க,ஆசிட் ஊத்துவாங்க........ எல்லாம் செய்வாங்க

//
சென்னையில் நடந்த இந்த கேவலத்தை மத்திய அரசு தட்டி கேட்காது என்பது உறுதி. சென்னை ஐகோர்ட்டு உடனே இந்த தேர்தலை தள்ளுபடி செய்து மாநில தேர்தல் கமிஷனரை டிஸ்மிஸ் செய்து புதிதாக மத்திய தேர்தல் கமிஷன் தலைமயில் தேர்தல் நடத்தவேண்டும். வெளி மாநில போலிஸ் அல்லது ராணுவ உதவியுடன் தேர்தல் நடக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு ஓட்டு போட துணிவே வரும்.

இந்த கேவலத்தை பற்றிய தினமலர் செய்தியை படியுங்கள். எந்த அளவு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தெரியும்.//


இன்னும் நீங்க அந்த "லெட்டர் டூ தி எடிட்டர் " காலத்தை மறக்கல போல, அரசு என்ன முடிவெடுக்குனும் சொல்லற திமிர் எந்த ரத்ததுல வரும்னு எங்களுக்கு தெரியும் நண்பரே.

இதை கேவலம் சொல்லுற நீங்க அதை படிக்க சொல்லுறது, பார்ப்பனர் கு***டி தொடச்சி போட்ட பேப்பர .

மன்னிக்கவும் செல்வன்

த்தூ.......

Sunday, October 08, 2006

@ 12:58 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்
In certain situations, there is a classical function and responsibility there that must not be avoided, even if it is just to appeal to good sense.
- Jacques Derridaதலித் கலை விழாக்கு மதுரை இறையிறல் கல்லூரிக்கு போய் கலந்துகிட்டு திரும்பும் போது நடந்த மேட்டரு இது.

" டேய் இருக்குறது வெறும் முன்னூரு ரூபாதாண்டா, அளவா குடிங்கடா" சுகுணா பொலம்பிக்கொண்டிருந்தான். உட்காந்து குடித்து கொண்டிருந்தது "கபடி கருப்பையா ஒயின்ஸ்" ஆரப்பாளையம் பஸ்ஸாடண்டுக்கு பக்கத்துல. நானும் ,கண்ணீர் புகை இருவரும் "டெரித்தா"வின் டவுசரை நார் நாராய் கிழித்துகொண்டிருந்தோம் , அவன் குரலை காதுல வாங்காம. பொறுமை தாங்காம எந்துரிச்சு நிக்கறது, பெருமுச்சு விடுறதுன்னு டிராஹன் எபெக்ட் கொடுத்தவனை பார்த்து எரிச்சலாகி கன்ணீர் புகை எழுந்து போலாம் வரவனை என்றார். சரி என்று கிளம்பி வெளியே வந்தோம். வைகை இங்க தானே ஓடுது, பக்கத்துல என்றார் க.பு. ஆமாம் அதோ தெரியுது பாருங்க என்றேன். அப்போது மழை பெய்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டார். சரி வாங்க போகலாம் என்று அருகில் போனோம். நான் வாய் சும்மா இருக்க மாட்டாம, " அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்கதான் இஞ்சி விப்பாங்க " நம்ம அடிக்கிறதுலாம் என்ன சரக்கு அது ஒரு லார்ஜ் அடிச்சா ஆஃப் அடிச்ச மப்பிருக்கும்"( பொட்"டீ"க்கடை note the point) அப்படின்னு சொல்லிப்புட்டேன். அத புடிச்சுகிட்டாரு க.பு, சரி வாங்க போலாம் நானும் ஸ்கூல்ல படிக்கும்போது அடிச்சதுன்னு சொல்லி நடையகட்டுனோம். டேய் காசில்லடான்னு சுகுணா பொலம்பல ஆரம்பிக்க." ராசா அங்க உட்கார்ந்த்து குடிச்சாலும் ஆளுக்கு 30 ரூவாய்க்கு மேல் குடிக்க முடியாது' பேசாம வா ன்னு சொல்லி போய் உட்காந்தோம்.

மல்லிகா அக்கா கிழவியாகி போயிருந்துச்சு, அப்பலாம் பாத்தா அவ்வளவு அலம்பல கொடுக்கும், மாமூல் வாங்க வர போலீசு கூட உடுப்பில் வரக்கூடாதுன்னு கண்டிசன் போட்டுரூக்குன்னு கோசிப் சொல்லுவாய்ங்க. சிங்காரவேலன் படம் மிட்லேண்ட் தியேட்டரில் ரீலிஸ் ஆனப்ப இது கடைக்கு சாராயம் , இஞ்சி, குடிக்க வந்தவங்கலாம் லைன்ல நின்னுதான் வாங்கிட்டு போகனும் சொல்லிடிச்சு. அப்ப ரெண்டு லைன் நிக்கும் ஒன்னுபடம் பாக்க , ஒன்னு இஞ்சி குடிக்க. நான் இஞ்சி குடிக்க லைன்ல நின்னு வீட்டுல யாரோ போட்டு குடுத்துட்டாய்ங்க. வீட்டுக்குபோனா செம பரைடு , படம் பாக்க போனேன் வரிசை மாறி நின்னுட்டேன்னு சொல்லி தப்பிச்சது தனிக்கதை.

ஆளுக்கு ரெண்டு கிளாஸ் அடிச்சோம் , சரி போலாம் மணீ 11 என்றான் சுகுணா , என் டிரசும் அவன் டிரசும் மழையில் நனைந்து பார்த்தவுடன் சந்தேக கேசுல கூட்டிட்டு போய் உக்கார வைக்கிற மாதிரி இருந்தோம். க.பு குறுந்தாடி, சங்கிலியுடன் கூடிய கண்ணாடி ,இன்ஷர்ட், பார்மல் ஷு என்று "விஞ்ஞானி முருகன்" கெட்டப்பில் இருந்தார். பொறமையாக அவரை பார்த்தபடி பஸ்ஸடாண்ட் வந்தோம். கூட இருந்த இன்னொரு நண்பர் டைட்டாகி படுக்க இடம் தேடினார். அவரை தாங்கிபிடித்த படி பேருந்துக்குள் ஏறினால் நடத்துனர் ஏற்றவில்லை. அவரிடம் பயணிகளுக்கான உரிமைகள் குறித்து பொங்கியெழுந்து கொண்டிருந்தார் க.பு , அப்போது அங்கு வந்த ரோந்து போலிசாரிடம் புகார் சொன்னார் நடத்துனர். எங்களுக்கு லேசா டர்ரு கிளம்பிச்சு. போலிசுகாரய்ங்க எங்கள பாத்து இங்க வாங்கடான்னு கூப்பிட்டாய்ங்க. நானும் சுகுணாவும் பக்கத்துல போயி என்ன சார்னோம்.
அந்த நடத்துனர் வந்து இவைங்க நல்லவனங்க சார் ! அங்க நிக்கிறானே கண்னாடி அவந்தான் ரூல்ஸ் பேசுறான். ரூல்ஸ் பேசுனானா " எவேய்ன் அவேன் " என்று லத்தியை வாகாய் எடுத்து க.பு'வின் கு***யில் நாலு இழுப்பு வைத்தார். தன் பேண்ட்'ன் பின்புறத்தை தடவி விட்டவாறே உட்டாரு ஒரு டயலாக்கு, ஊருக்கு வந்து ஒரு வாரம் சிரிச்சோம் நானும் சுகுணா திவாகரும்.

" இப்ப நீங்க யாரை அடிச்சிங்க தெரியுமா' தமிழ்நாட்டோட மிகமுக்கியமான எழுத்தாளர" என்றபடியே நீவிக்கொண்டிருந்தார் பின்புறத்தை. அந்த போலீஸ்காரன் பாவம் பயந்து போயி ஸாரி சார் ! உங்களை பார்க்கறப்பவே நினைச்சேன், இவர பாத்துதான் தப்ப கணக்கு போட்டுடேன் என்றான் எங்களைப்பார்த்து. அதைக்கேட்டு க.பு மேலும் டென்சனானார். சார் வாங்க ஒ.பி(புறக்காவல் நிலையம்) ஸ்டேசன் போயி முகத்த கழுவிட்டு போலாம் என்றபடி அழைத்து போனார். அங்கு சென்று லெமன் ஜூஸ் அந்நேரத்துக்கு எங்கிருந்தோ வாங்கி வந்து குடிக்கச்சொல்லி உபசரித்துக்கொண்டிருந்த போது உள் நுழைந்தார் அக்காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர். எங்க நேரம் அன்னைக்கு சாயுங்காலந்தான் அந்த எஸ்.ஐ பொண்டாட்டியை எவனோ தண்ணியைப்போட்டு லந்த(கிண்டல்) கொடுத்துருக்கான். உள்ள வந்தவரு எங்கள ஒரு மாதிரியா பாத்துட்டு அந்த போலீச்காரன் பக்கம் திரும்பி என்ன கேசு, இது ? உக்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்னு எரிச்சலா கேட்டான். அதுக்கு அந்த போலீசு' எழுத்தாளர்களாம் சார், அரசரடி மாநாட்டுக்கு வந்துருக்காங்க கொஞ்சம் ஓவராச்சு போல அதான் உங்காந்துட்டு போங்கய்யான்னு உக்காரா வச்சுருக்கேன் என்றான்.

யோவ் பஸ்ல ஏத்தி வெரட்டி விடுயா, சாயுங்காலத்துல இருந்து குடிச்சவுனங்களை கண்டாலே வெறி வருது என்றபடி , க.பு'வை அழைத்து எந்த ஊருயா நீ ! என்றார் . சென்னை என்றார், சுகுணாவும் சென்னை என்றே சொல்ல நான் எனது ஊரைச்சொன்னேன்.

சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.

சரி என்னா பொஸ்தகம்யா எழுதிருக்கே என்றார்? உழைப்பை ஒழிப்போம் என்கிற புத்தகத்தை ஜெர்மன் லருந்து மொழி பெயர்த்திருக்கேன் சார் என்றார் க.பு'

புத்தக தலைப்பைகேட்டு பொறுமையிழந்த எஸ்.ஐ. சுகுணா திவாகரை நீ என்ன எழுதிருக்கே என்றார். நான் கவிஞன் சார் என்றார். அப்போ ஒரு கவிதை சொல்லியிட்டு போ என்றார்.

*பறக்க இயலா சிறகுகளின் ஓலத்தை
மேலும் கேட்டபடி தொடர்கிறது பயணம்
மாட்டுவண்டிகளின் தடம் நம் வாழ்க்கை
போல் காய்ந்த தரையில் இருக்காது
விழிகள் மூடு செவிகள் திற...

அவரு அவனையே பாத்துகிட்டு இருந்தாரு. புரிஞ்சுச்சா புரியலையான்னே தெரியல. சரி ஒழுங்க ஊரு போயி சேருங்க என்றபடி அனுப்பி வைத்தார்.

என்ன ரொம்ப போரடிச்சிட்டேனா, இனிமேதான் இருக்கு நம்ம "பஞ்ச்"

நாங்க போயி அடுத்த பஸுக்கு காத்துகிட்டு இருந்தோமா, அப்போ ஒரு நாலு பேரு கடலைவண்டி காரனுடன் போதையில் வம்பிழுத்துக்கொண்டிருந்தனர். நம்ம எஸ்.ஐ அங்க வந்தவர் அவனுங்களை கூப்பிடு விசாரித்து கொண்டிருந்தார். எதோ ஓவியர் மாநாடுக்கு கோவில்பட்டி போயிட்டு ரிட்டர்ன் ஆயிருக்கானுங்க போல


எஸ்.ஐ நம்மள பாத்து சிரித்துக்கொண்டே என்னய்ய இன்னைக்கு பூராம் கலைஞர்களா வந்து நம்ம தாலிய அறுக்குறிங்க என்றபடி அவனுங்களை அழைத்து எச்சரித்து ஒழுங்காய் ஊர் போய் சேரும் படி சொல்லிவிட்டு அவனுங்களை ஒருத்தன கூப்பிட்டு ஓவியம் வரைஞ்சுகாமிச்சுட்டு போ என்று உத்தரவிட்டார்.

நான் சிகரட் வாங்க போயிட்டு வந்து பாக்கறேன் , அவன போட்டு வெளுத்துகிட்டு இருக்காரு. 'ஏது அம்மன படம் வரஞ்சிட்டான் போலன்னு பக்கத்துல போனா, " யாருகிட்டடா பொய் சொல்ற பிராடுகாரா என்றபடி திரும்பவும் அடிக்கிறாரு. அப்படி என்னாதான் வரஞ்சானு பாத்தா

பாவம்யா அவனுங்க நவீன ஓவியர்கள். அவனுக்கு தெரிஞ்சத வரைஞ்சுருக்கான். அதுக்கு இந்த எஸ்.ஐ அவனிடம் "ஏண்டா சாயத்தை பூராம் கரச்சு ஊத்திட்டு ஓவியம்னா சொல்றன்னு அடி பின்னிருக்காரு.

( சந்திப்போம்)

Wednesday, October 04, 2006

@ 6:24 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


ஒடுகிற ஆளைப்பார்த்து " பிடி, பிடி " என்றவாறே ஒரு கூட்டம் ஓடியது.
கடைசியில் அரங்கின் சுற்றுசுவர் அருகே அவரை பிடித்து உள்ளே இழுத்து வந்தனர்.

அருகில் போய் பார்த்தால் "மாம்ஸ்" .

என்ன மாம்ஸ் டோண்டுவ பார்த்து இந்த ஓட்டம் ஓடுற என்றேன்.

அப்பவும் கபடி கபடி சொல்லுற மாதிரி அவரும் "பிடி, பிடி"ன்னு சொல்லிகிட்டு இருந்தாரு .

மாம்ஸ் ஒடுனது நீங்க, நீங்களே பிடி, பிடின்னு சொல்லிகிட்டு இருந்தா எப்படி?ன்னு ஒரு செம கேள்வி கேட்டேன் ( விதி பட வாட்ச்மேன் ஸ்டைலில்).

அப்பவும் அவரு வாசல பாத்து "பிடி, பிடின்னு" சொல்லிகிட்டு இருந்தாரு. சரி அங்க திரும்பிபாத்தா டோண்டு குரூப்புக்கு பின்னால பொன்ஸ் தலைமைல பா.க.ச உறுப்பினர்கள் நின்று கொண்டிருந்தனர். போதா குறைக்கு மதுரை மாவட்ட செயலாளர் லீவிங் ஸ்மைல் வேறு பா.க.சங்க கொடியுடன் வந்திருந்தார்.

இப்ப புரியுதுங்க அவரு ஏன் "பிடி, பிடி" சொல்லிட்டு இருந்தாருன்னு என்றார் நா.கணேசன் . என்னானு சொல்லுப்பா" எனக்கேட்கவும் சொன்னார் .

" தலைவா, பிடி என்றால் பிடின்னு மட்டும் பொருள் இல்லை. தமிழ்ல பிடி என்றால் பெண்யானை என்றும் ஒரு பொருள் உண்டு" இப்போ வாசலை பாருங்க, இவரு ஓடினதுக்கும் ,பொலம்புனதுக்கும் அர்த்தம் விளங்கும்'ன்னாரு.

ஆக அப்ப பெண்யானை படம் வச்சுருக்கிறது பொன்ஸ்தான் ,சென்னை பாக.ச தலைவி. அதான் புள்ள பயந்திருக்கு...

மாம்ஸ் அது பா.க.ச தான். பா.வெ.ச ( பாலாவை வெளுப்போர் சங்கம்) இல்ல பயப்பிடாதேள்.

என்றபடி கேண்டீன் பக்கம் போனால். போண்டா வியாபாரம் தூள் பறக்குது, " நீங்க உடுப்பி ஹோட்டலுல போண்டா போட்டுகிட்டு இருந்தவரு தானே" என்று கேண்டீன் சமையல்காரரிடம் நலம் விசாரித்து கொண்டு இருந்தது டோண்டு டீம். நாமளும் ஒரு போண்டா சாப்பிடுவோமே , அப்படி என்னாதான் இருக்கு இதில அப்படின்னு ஒரு வாய் பிச்சு வாய்க்குள்ள போடப்போனேன். ஒரு கை தடுத்தது.

யாருடான்னு பாத்தா தல, சொல்லுங்க முத்து(தமிழினி) என்றேன் ,

இந்த கொடுமைய வந்து பாருங்க என்றார்.

என்ன மாம்ஸ் இன்னொரு தடவை ஓடியிருப்பார். அவ்வளவுதானே என்றபடி வாசலுக்கு போனா " கமலஹாசன் பட்டம் பெறப்போகும்" வலைப்பூ கமலஹாசன் லக்கியார் அவர்களே வருக வருக அப்படின்னு ஆளுயர ஹோல்டிங்ஸ் வச்சுட்டு போயிருக்காய்ங்க....

வழக்கம் போல் "அதர் ஆப்சன் இயக்கம்" இந்த சம்பவத்துக்கும் பொறுப்பேற்று கொள்வதாக துண்டறிக்கைகளை எறிந்து விட்டு போயிருந்தது.

என்னங்க இது உட்டா இன்னைக்கே கட்சி ஆரம்பிச்சுருவாய்ங்க போல தெரியுது, வழக்கமா ஓட்டு போடுறதுதான் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லுவாய்ங்க. இவைங்க கட்சில உறுப்பினர இருந்தாக்கூட யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஏதும் விதி வச்சுருப்பாய்ங்களோ என்றார் முத்து கவலையுடன்.

சரிங்க , நீங்க இங்கையே இருங்க நான், லக்கியை தேடி பிடிச்சு கூட்டிட்டு வாரேன் அவரையே கேட்போம் என்று முத்து(தமிழினி) கிளம்பி போனார்.

திரும்பி வருகையில் லக்கியிடம் வரவனை, மாம்ஸ் உள்ளிட்ட பார்ட்டிகள் எகிறி கொண்டிருந்தனர். முத்து வந்து விலக்கி விட்டார். விடுங்கப்பா நான் தான் கேக்குறேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள ஏன் தகறாறு பண்ணுறிங்க என்றார் பொறுமையாக.அதுக்கு மாம்ஸ் சொன்னார் " தகராறுலாம் பண்ணலைங்க லக்கி எங்க பிரதர் மாதிரி, என்ற மாம்ஸை வரவனை இடைமறித்து "இல்லை லக்கி எனக்கு சகோதரர் மாதிரி அப்படின்ன மாம்ஸ்க்கு மாப்ளை மாதிரி " என்றார்.

லக்கி கண்கலங்குவதை பார்த்த முத்து(தமிழினி), தானும் நெகிழ்ந்து "லக்கி பாருங்க நம்ம எதோ மன்சுல தோனுனத எழுத வந்தோம், எப்படி உறவுகள் கிடச்சிருக்கு பார்த்திங்களா" என்றார்.

லக்கி டென்சனாகி " அதுக்கில்லைங்க நான் லீவிங் ஸ்மைல பற்றி ஒரு பதிவு போட்டேன் அதுக்கு இங்க வந்து ரெண்டு பேரும் மிரட்டுராங்க அதான் என்றார். முத்து திரும்பி முறைக்க ரெண்டு பேரும் வூடு ஜுட்.....

விழா துவங்கி விட்டதால் எல்லோரும் இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கு கிளம்பலாம் என்று நினைக்கிறேன்.

Friday, September 29, 2006

@ 5:21 PM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்


விழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் திரைக்கு பின் நடப்பவைகளை பார்ப்பதே ஒரு கிக்'தான். இதோ "எக்மோர் சியர்ஸ் பார்" வழங்கும் வலைப்பதிவர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் . விழாவின் போது விருது பெற வந்திருந்த பதிவர்களின் சுவாரஸ்யமான சந்திப்பு.

மணி :05.48.45
வர: ஏய் எல்லாரும் வந்தாச்சா ? லக்கி வாசல்ல நிக்காதிங்க உள்ள வாங்க . இப்பதான் போன் வந்துச்சு "உங்கள தூக்கிட்டு போயி ஒரு வாரம் மூச்சு திணர திணர வெளுக்க" ஒரு குரூப் அலையுதாம்.

முத்து: அதாங்க நானும் சொல்றேன் ,

என்றதும் லக்கி அவரை கலவரமாக பார்க்கிறார்.

வர: என்ன தலைவா , நீங்களே "நம்ம" லக்கிய இப்படி சொல்லிட்டீங்க. "உள்குத்து"தான் குத்திட்டு இருந்திங்க, "இப்ப வெளிகுத்து குத்தவும் ஆள் செட் பண்ணிடிங்களா?

முத்: ஏய் ஏய் இல்லப்பா , நான் சொல்லவந்தது எனக்கும் போன் வந்துச்சு , அதான் உள்ள வர சொன்னேன்

வர: சரி நீங்க விழா ஏற்பாடெல்லாம் சரியான்னு பாருங்க . நான் இப்ப வந்துடுறேன்

முத்: வரவனை "அதுல்லாம்" ராத்திரி பாத்துக்குவோம் இப்பவே ஆரம்பிச்சுடாதிங்க , என பாரா உஷார் விசிலடித்தார்.அவர் சொன்ன பிறகுதான் எனக்கும் கட்டிங்போடும் மூடே வந்தது.வூடு ஜுட்

மணி: 06.12.31

முத்து : வரவனை எங்கய்ய போயி தொலைஞ்சிங்க , நீங்க பாட்டுக்கு விட்டுட்டு போயிட்டிங்க

வர : (பல்லை இளித்தபடி) சும்மாதான் அப்படியே வெளியே.......

முத்: என்ன சரக்கடிச்சிங்க ? இந்த நாத்தம் நாறுது

வர: அது வந்துங்க.....

முத்து: (மறித்து) வேணாம் இங்கையே ஒரு ஆறு பதிவு போட ஆரம்பிச்சுடுவிங்க விடுங்க அந்த மேட்டர, சரி போகும் போது டிரஸ்சிங் ரூமை பூட்டிட்டு போனிங்களா?

வர: ஆமா என் சூட்கேஸ் இருக்கு அதுனாலதான் பூட்டினேன்

முத்து: அது சரி, லைட்ட ஆஃப் பன்னிட்டுதானே போனிங்க ,ஆனா நீங்க பூட்டுனது பாத்ரூமை , உள்ள பாலா இருக்குறாரு . பார்க்காம பூட்டிட்டு போயிட்டிங்க. பாவங்க அவரு.

வர: (குஜாலாகி) மாம்ஸ் இங்கதான் இருக்காரா ஆஹா !

டாய்லட் வாசலில் லக்கி நிற்கிறார், ம்ம் ம்ம் என்று உம் கொட்டியபடியே நின்றவரிடம் யாரிடம் பேசிகிட்டு இருக்கிங்க என்றேன் . பாலாவிடம் என்றார். கையிலிருந்த சாவியால் கதவை திறந்து விட்டேன். வெளியே வந்த பாலா யாரையும் கண்டுகிடாமல் ஈசானிய மூலையில் நின்று கொண்டு வழக்கம் போல் "கடலை வறுவல் செய்வது எப்படி " என்று "யாரிடமோ" விளக்கிகொண்டிருந்தார்.

லக்கி : ச்சை நீங்க தாழ்ப்பாள் போட்டு போயிட்டிங்களா , சரி ஒரு கம்பெனிக்கு பேசிக்கிட்டு இருப்போம்ன்னு பேசிக்கிட்டு இருந்தேன் இப்பதான் தெரியுது, இவ்வளவு நேரம் வேற யார்கூடவோ பேசிகிட்டு இருந்திருக்காருன்னு, என லக்கி பாலாவை பார்த்து டென்சனானார்.

வர: வுடுங்க லக்கி மாம்ஸ் " எப்பவுமே இப்படித்தான்"

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வாசலுக்கு போனால், பொட்"டீ"க்கடை, குழலி உள்ளிட்ட கீழை மார்க்சீய ச்சை தூரக்கிழக்கு நண்பர்கள் விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினார்கள். கானா பிரபா, பேஃன்ட் போட்டிருந்தாலும் கையில் ஒரு சிறுபையில் திருநீறு வைத்துக்கொண்டு எதிர்வருபவர்களின் நெற்றியில் பூசிவிட்ட படி இருந்தார். பக்கத்தில் ஒருவர் குதிரையில் வந்து இறங்கினார் யார் என்று பார்த்தால் சின்னக்குட்டி. நட்சத்திர வாரம் கொண்டாடி கொஞ்சம் ஆள் பூரிப்பில் இருந்தார்.

முத்துக்குமரன்,பரஞ்ஜோதி எல்லாம் ஒரு கும்பலாய் கும்மி அடித்துகொண்டிருக்க, அவர்களுக்கு அனானி ஆஃப்சனின் நன்மை தீமைகளை விளக்கிகொண்டிருந்தார் லக்கி.

மாம்ஸ் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்

பாலா: மாப்ளை ஒரு நிமிசம் இங்க வா ,

வர: என்ன மாம்ஸ் பங்சன் ஆரம்பமாக போகுது மூணாவது ஆள் நீயிதான் இன்னும் இங்க திரியுற

பாலா : பவுடர் ஒகே யா, சொல்லு என்று கண்ணைமூடி முகம் காட்டினார்

வர : கன்னத்தில் திருஷ்டி பொட்டு ஒன்னுதான் பாக்கி. மாம்ஸு போயி மொகத்த கழுவிட்டு மேடைக்கு போங்க. இவ்வளவு பவுடரு அடிச்சுகிட்டு போனா நீதான் அனானி சங்க தலைவன்னு நினைச்சுக்க போறய்ங்க என்றேன்

பால: அப்ப பொட்டு வச்சுகிட்டு போகனுங்கிற ஒகே, என்றபடி நகல வரவனை தலையில் அடித்து கொள்கிறார்

வர: இன்னைக்கு எத்தனை பேருக்கு "இருள்" அடிக்க போகுதோ

டோண்டு மற்றும் குழுவினர் உள்நுழைய அவசரமாக யாரோ பின்வழியால் குதித்து ஓடுவது தெரிகிறது.

(இந்த டரியலும் தொடரும்)

@ 12:41 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

எதிர்பார்த்ததைவிட அதிக கும்மிகள் அடிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு வெற்றிகரமான பதிவு என்றே கொள்ளலாம். அதே வேளையில் நான் குறிப்பிட்டுள்ள பாலா,பிரியன், செந்தழல் ரவி ஆகியோர் எதிர்வினை ஆற்றாத காரணத்தால் வரும் பதிவுகளில் அவர்கள் மீதான காலய்த்தல் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் ( இதில் பாலா எனது பதிவை படித்து விட்டு "வக்காலி மாப்ளே உனக்கு இருக்கு" என்று கறுவியதாகவும் ஒரு வதந்தி உலவுகிறது ) சரி இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் பா.க.ச அங்கத்துவராக முடியுமா?

போட்டி முடிவுகளுக்கு போவோமா........

1) முதன் முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்து எஸ்.வி.ரங்காராவ் & எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இரு பட்டங்களை தக்க வைக்கிறார் முத்து(தமிழினி)

2) லக்கிலுக் - தனக்கு வழங்கபட்ட கமலஹாசன் என்கிற பட்டத்தையும் இதயக்கனி என்கிற விருதையும் பெருமிதத்தோடு வாங்கி செல்கிறார்

3) எஸ்.பாலாபாரதி - (.......சிரிப்பை அடக்கமுடியவில்லை) "ஜெமினி" பட கலாபவன் மணி ஸ்டைலில் அனகோண்டா போல் வந்து விருது வாங்குகிறார்.

4) பிரியன் - தமிழ்படங்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல் கோட் சூட்டில் வந்து விருது வாங்கி பார்வையாளர்களை பார்த்து கை அசைத்து செல்கிறார்

5) செந்தழல் ரவி - MARRY ME என்கிற எழுத்துள்ள பனியன் போட்டு பெர்முடாஸுடன் மேடைக்கு வருகிறார். வருது ச்சை விருது வாங்கி "பெண்கள்" பக்கம் பார்த்து கையசைத்து, மாதவன் & "தென்னகத்து ஜேம்ஸ் பான்ட்" ஜெய்சங்கர் ஆகிய விருதுகளை வாங்கி செல்கிறார்

6) டோண்டு மெல்ல மேடையேறி வருகிறார். ஓம்காளி, ஜெய்க்காளி என்று "சாமி" வந்தவர் போல் ஒருவர் பார்வையாளர் வரிசையில் இருந்து கத்திக்கொண்டு குதிக்கிறார். SCREAM பட வில்லன் கெட்டப்பில் ஒருவர் அவரைனோக்கி ஓடிவருகிறார்.இருவரையும் அமரவைக்க காவலர்கள் படாத பாடு படுகின்றனர்.கடைசியில் அவர்கள் இருவரும் முறையே ம்யூஸ் மற்றும் விடாது கருப்பு என்று தெரியவருகிறது.ஜெமினி கணேசன் & சாவலே சமாளி பட்டங்களை பெற்று கேண்டின் நோக்கி மெல்ல நடை போடுகிறார்

( டரியல் தொடரும் )

Wednesday, September 27, 2006

@ 1:03 PM எழுதியவர்: வரவனையான் 42 மறுமொழிகள்

"தத்துவ தரிசனம்" என்பார்களே அது போல் வாசகர்களுக்கு படிக்கும் பொழுது உள்ளுக்குள் சில மாற்றங்கள் நிகழம்,அது எந்த எழுத்தாளர்களை படிக்கிறார்கள் என்பதை பொறுத்து மாறும். உதாரணமாய் எனக்கு எஸ்.ராமகிருஷ்னனை படிக்கும்போது முதுகில் வெயில் அடிப்பதை போல் உணர்வேன். அதுபோல் ஜெயமோகனை படித்தால் காட்டுக்குள் ஆந்தைகளின் அலறலோடு படிப்பதுபோலும் மை டியர் சாருநிவேதிதாவை படித்தால் ஒரு நல்ல டாஸ்மார்க் பாரில் உட்கார்ந்து இருப்பதை போன்றும் தோன்றும் இதே விடயத்தை நமது வலைப்பதிவர்களிடம் பொறுத்தி பார்க்கும் பொழுது நினைவுக்கு வருவது சினிமா நடிகர்கள். ஆகவே நம் பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டபெயர் அளிக்கலாம் என்றும் இதில் நான் மட்டுமல்லாமல் அனைத்து வலைப்பதிவர்களும் பங்கு பெறலாம். ஆனால் தாங்கள் வைத்த பெயரையும் அதற்கான காரணத்தையும் சிறு அளவில் எனக்கு பின்னூட்டமிட்டால் உங்கள் பெயரில் ( அனானிகளும் வரவேற்க படுகிறார்கள்) எனது பதிவில் இனைப்பேன். முதல் கும்மாங்குத்தை ஆரம்பிக்கிறேன்.


முத்து(தமிழினி) - எஸ்.வி.ரங்காராவ் ( எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதால்,டோண்டுவிலிருந்து போலி டோண்டு வரை "எல்லாருக்கும் நல்லன்" அடுத்தவர்களின் கருத்துகளுக்கு இவர் மதிப்பளிக்கும் தன்மை மிகச்சிறந்த நற்பண்பு )

லக்கிலுக் - கமலஹாசன் (உபயம்: தம்பியுடையான்) இவருக்கு அவர் பெயர் சூட்டியது மிக பொருத்தமாய் உள்ளது(அடிக்கடி கெட்டப் மாற்றுவதாலும் ). வயது மூத்த வலைபதிவாளர்களின் சார்பாய் நான் கேட்க விரும்புவது "தம்பி நீங்க நல்லவரா கெட்டவரா?" லக்கியிடம் நான் வியக்கும் விடயம் அவரின் கருத்துகளுக்காக போராடும் குணம்.

எஸ்.பாலபாரதி - கலாபவன் மணி (சமயத்தில் வில்லனாகவும், ஹிரோ போல் பதிவிட்டாலும் பா.க.ச'வின் அட்டகாசத்தால் காமெடியனாக்கபடும் பரிதாபத்துக்குரிவர்) ஒருவரிடம் முதல் சந்திப்பிலேயே இவர் கொள்ளும் சினேகத்தன்மை வியக்கவைக்கிறது. எல்லாத்தளங்களிலும் இயங்குவதால் இவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

பிரியன் - அமெரிக்க மாப்பிளை(தமிழ் சினிமா) பல்வேறு பணி நெருக்கடியிடையே இவரிடம் வெளிப்படும் கவிதைகள் அற்புதம். இயல்பான இந்த "கோவைத்தம்பி" என் அன்புக்குரியவர்.

செந்தழல் ரவி - மாதவன் ( கொஞ்சம் ஜொள்ளுப்பார்ட்டிதான் இருந்தாலும் என்னை போல் வெட்டி அரட்டை அடிக்காமல் உருப்படியான பதிவுபோடும் இவருக்கு நன்றிகள், கீப் இட் அப் யுவர் ஜொள்ளு & ஃபைன் ஆர்டிக்கல்ஸ் )

அனானிகளே & அன்பான பதிவர்களே இனி நீங்களே "வூடு கட்டி அடிங்கள்" இறுதிப்பட்டம் "காலாய்த்தல் கிங்" எனது கையால் வழங்கப்படும்.

( "கலக மொழி பேசும் ஸ்ஃபூபி சினிமாக்கள் " என்கிற சிரியஸ் கட்டுரை எழுதுவதால் கொஞ்சம் காமெடிக்கு இது )

Tuesday, September 26, 2006

@ 2:28 PM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

நானும் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவன் என்கிற காரணத்தினாலும், அலோபதி மருத்துவத்தில் இதற்கு பாரசிடமால் மற்றும் டைக்குளொஃபெனாக் என்கிற வலிநிவாரனியைத்தவிர வேறு குறிப்பிட்ட மருந்துகள் இந்நோய்க்கு கிடையாது என்பதினாலும் இத்தகவலை இங்கு பதிவு செய்கிறேன்.

அது போல் இந்த நோய் ஒரு ஆட்கொல்லி நோயல்ல என்பதனையும், அதீத காய்ச்சலினால் மட்டுமே உயிராபத்து நிகழம் வாய்ப்பு ஏற்படும் என்பதனையும்.சாதாரண காய்ச்சல் மாத்திரை உட்கொண்டாலே போதும் உயிர் போகும் வாய்ப்பு ஏற்படாது என்கிற தகவலையும் திரு.வைகோ அவர்களுக்கு பிரத்தியோகமாய் தெரிவித்து கொள்கிறேன்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் வைகோ


( சரியான காரணத்திற்கு போராடும் போராட்டமே மக்களுக்கானது )


Single-dose-cure for CHIKUN GUNYA disease


Go to any homoeopathic medical store and show the matter given below:

5 ml pills
POLYPORUS PINICOLA-200
(or)
POLYPORUS OFFICINALIS-200


Both the above names mean one and the same medicine. Dont ask orally.
Either he gets confused or he will confuse you.
WRITE DOWN on paper and ask.

5 ml pills contains about 250 pills. Give two pills (chewable) for a dose;
just one dose (irrespective of age) any time, not necessarily before/after food.
This one dose completely cures fever and body pain of Chikun Gunya.

No need to take repeatedly. Just one dose! Fever subsides,
so also joint pains. Myself and my students have so far cured
hundreds of cases of Chikun Gunya with
just one single dose of Polyporus Pinicola-200.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

In rare cases (say one in 300), fever subsides but joint pain continues.
In that case only, just give one dose
(2 pills for a dose chewable, irrespective of age)
of another homoeopathic medicine called
Kali-Mur-1000. In the homoeo drug store ask as under:

5 ml pills
KALI MUR - 1000

[See Calvin B. Knerr's Repertory: Fever, sequelae: Kali-mur.]

Thousands of cases of Chikun Gunya are being cured by
my students with one dose of (2 pills)
POLYPORUS PINICOLA-200

(sometimes called POLYPORUS OFFICINALIS).

Monday, September 18, 2006

@ 6:01 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

பல நாள் தேடுகைக்கு பின் , மிகுந்த சிரமத்திற்கு பிறகு மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டருக்கு பின்னால் கஞ்சா வித்து கொண்டிருந்த வரவனையானை கண்டு பிடித்து நமது சிறப்பு நிருபர் பேட்டிக்கு நேரம் கேட்டார்.வியாபாரம் வெகு பிசியாக இருப்பதால் தன்னால் பேட்டிக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றும் வேண்டுமானால் லக்கிலுக்கின் முகவரி தருவதாகவும் சொன்னார். அவரை கண்டுபிடிக்க நாம் பட்ட சிரமங்களை சொன்னதும் ஒரு மினி பேட்டிக்கு மட்டும் ஒப்புதலளித்தார்.

குரங்கு : வணக்கம், வரவனையான்

வர : வணக்கம்

குர : நாங்கள் குரங்கிலிருந்து வருகிறோம்

வர: நாங்க மட்டும் என்ன கழுதையில இருந்தா வர்றோம், நாங்களும் குரங்குல இருந்து வந்தவைங்கதான்

குர: மன்னிச்சுக்குங்க, நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்கன்னு நெனைக்கிறேன். நாங்க "குரங்கு"கிற இலக்கிய பத்திரிக்கைல இருந்து வர்றோம்.

வர: என்னாது குரங்குன்னு ஒரு பத்திரிக்கையா? ஏன்யா வேற பேரு ஏதும் கிடைக்கலையா? உங்க பத்திரிக்கை வாங்க போறேன்னு சொல்லக்கூட முடியாதே,

இப்ப பேட்டி குடுத்துகிட்டு இருக்கேன், நாளைக்கி படிச்சிட்டு வேணுமுன்னே "போண்டா கனேசேன்" போன் போட்டு " நீ குரங்குக்கு குடுத்த பேட்டி சூப்பர்ன்னு" சொல்லுவான்.

குர: இல்லைங்க ரொம்ப நாளாவே வருது.

வர: என்னாது குரங்கா ? எங்கேருந்து.......


( பேட்டி தொடரும் )

Wednesday, September 13, 2006

@ 12:43 PM எழுதியவர்: வரவனையான் 28 மறுமொழிகள்


இதுவும் ரொம்ப நாளைக்கு முன்னால நடந்த கதை. நம்ம சியர்ஸ் ! பார்ட்டி ஊரில் கிறிஸ்த்துமஸ் விழா. நம்மாளுக்குத்தான் கடவுள் பிடிக்காதே தவிர கலை ஆர்வம் அதிகமாச்சே . கிறிஸ்த்துமஸ் விழாவில் நாடகம் நடத்த அழைக்கபட்ட அழைப்பை ஏற்று . யூப்ரிட்டிஸ் , சேக்ஸ்பியரை எல்லாம் ஒரு வாரமாய் கரைத்து குடித்து கொண்டிருந்தார்.

நவீன நாடகம் மீதான தனியாத ஆர்வத்திற்கு கிடைத்த பெருந்தீனியாய் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முனைந்து நிறைய ஹோம் ஒர்க்கெல்லாம் செய்து கொண்டிருந்தார். 'மெடியா' நாடகத்திற்கான ஒத்திகையும் தனியாக பார்த்துக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்து ஆட்கள் தேர்வு செய்து தரும் படி சர்ச் நிர்வாகத்திடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது நடக்கபோவது ஏசுவின் கடைசி விருந்து நாடகம் என்று. நம்மாளுக்கு கடும் அதிர்ச்சி.அதை விட அதிர்ச்சி அதில் இவருக்கு ஒரு சிறு வேடம் மட்டுமே. ஏசுவை சிலுவையில் அறைந்து விட்டு இறங்கி போகவேண்டும். இருந்தாலும் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு நாடகம் நிகழும் நாளுக்கு காத்திருந்தார். இடையில் அவ்வப்போது ஒத்திகை வேறு .


நாடகத்திற்கான நாளும் வந்துச்சு, மனிதர்களின் பாவத்திற்கு சிலுவை சுமந்து கொண்டு ஏசு வருகிறார் அங்கு கூடியிருக்கும் மக்கள் கண்ணீர் வழிய ஏசுவை பின் தொடர்கின்றனர். பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் கண்ணீர் வழிய காட்சிகளை உள்வாங்கி கொண்டிருந்தனர்

ஏசுவின் சிலுவை நடப்படுகிறது. ரோமானிய படைவீரன் வேடமிட்டு நமது டவுசர் ஆயுத்தமாயிருந்தார். இவர் நின்றிருந்த பக்கம் அதிவெளிச்ச விளக்கு போடப்பட்டதும் "நம்மாளு"க்குள் "சிவாஜி" உட்புகுந்து விட்டது போல் ஒரு ஃபீலிங். உண்மையாகவே ஏசுவை சிலுவையில் அடித்தவன் கூட அவ்வளவு நேர்த்தியாய் அடித்திருக்கமாட்டான். அந்தப்பக்கம் நின்றிருந்த இன்னொரு படைவீரன் தொடர்ந்து ஒரு வாரம் "வயித்தாலே" போனவன் மாதிரி இருந்தான். இதைப்பார்த்தும் நம்மாளுக்கு உள்ளுக்குள் லேசா ஒரு அல்ப சந்தோசம். நாம் எவ்வளவு மிடுக்காய் இருக்கிறோம் என்று.

ஏசு ஏற்றப்படுகிறார். இவரும் ஒரு ஸ்டூலில் ஏறி "சிவாஜி கனேசன் " போல் ஆணியின் கூர்மை எல்லாம் சரி பார்க்கிறார். இயேசுவின் தலைக்கு மேலிருந்து ஒரு மைக் தொங்குகிறது. இயேசு "ஏலீ ஏலீ லாமா சமக்தாமி" என்று முனகிக்கொண்டு இருக்கிறார். இயேசுவின் கை இருக்கும் இடம் நம்மாளுக்கு எட்டவில்லை,குதிகாலை தூக்கி அடிக்க துவங்குகிறார். அப்பவும் எட்டவில்லை .இவர் நின்றிருந்த இடத்துக்கு அருகே சிலுவை மரத்தில் இயேசுவைக்கட்டிய கயிற்றின் பின் பகுதில் கால்வைத்தார் அது கொஞ்சம் வாகாய் இருந்தது.

ஆனால் இவர் கயிறில் கால் வைக்கிறோம் என்று நினைத்து இயேசுவின் அரை முழ வேட்டியில் கால் வைத்து கொண்டிருந்தார். இயேசுவாக நடிப்பவரினால் சொல்லமுடியவில்லை . முன்னால் மைக் வேறு இருக்கிறது. காட்சியோ மிக முக்கியமானது.லேசாக முணு முணுக்கும் குரலில் இயேசு இவரிடம் சொல்லிபார்த்தார். ஆனால் இவர்தான் உண்மையில் ரோமானிய படைவீரனாக மாறி நெடு நேரமாகி இருந்ததே.

இரண்டு ,மூன்று முறை இயேசுவும் "கிசு கிசு"க்கும் மொழியில் சொல்லி பார்த்தும் இவர்காதில் ஏறவில்லை பொறுமை இழந்த இயேசுவாக நடிப்பவர் மைக்கில் அடுத்த ஊருக்கும் கேட்கும் டெசிபளில் சொன்னது

"வேட்டி அவுருதுடா தா............ழி"

அன்னைக்கு ஊரே சேர்ந்து இயேசுக்கும் இவருக்கும் கொடுத்த மாத்து இருக்கே அது ரெண்டு கிருத்துமஸுக்கு தாங்கும்( god bless them)

Tuesday, September 12, 2006

@ 5:55 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்


"பொது மாத்து" என்று மதுரைப்பகுதில் பரவலாக வழங்கப்படுகிற சொல் தமிழ்கூறும் உலகெங்கும் " தர்ம அடி " என்னும் வடமொழி கலந்த சொல்லாக பயன்படுத்த படுகிறது. இதனை பெறுவதும் அல்லது வழங்குவதும் கொஞ்சம் கிளு கிளுப்பான விடயம் தான். பொதுவாய் பேருந்துகளில் பெண்களை உரசுவோர்,இருக்கையின் இடைப்பகுதில் கையைவிட்டு மாட்டிக்கொள்ளுபவர்கள் நையப்புடைக்கபடுவார்கள். அதுவும் அந்த பெண் கொஞ்சம் சுமாரான பிகராய் இருந்து மாட்டிக்கொள்ளுபவர்கள் நிலை பரிதாபம்தான். தனியாய் நிற்க முடியாத பெருசு கூட ஏறி ஏறி மிதிப்பார்.இது பற்றி ஆராய்ச்சி கட்டுரையே ( பஸ்+பெண்+தர்ம அடி ) எழுதும் அளவுக்கு "ஞானம்" இருந்தாலும் ( ஞானம் என்பது சொந்த அனுபவம் மட்டும் கிடையாது;) ) அதை பற்றி வேறு ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருப்பதால் இப்போதைக்கு நான் வாங்க போகிற பொது மாத்து குறித்து விளக்கிவிடுகிறேன் . எனது பதிவுகளில் நான் வழமையாக இலக்கியவாதிகளையும் மார்க்சீய தோழர்களையும் என்னாலான கிண்டல் தொனியில் எழுதுவதற்கான காரணம் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும் ,மரியாதையும் தான் காரணம். அதே வேளை சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை போல் வாழும் இந்த எளாக்கியவாதிகளையும் அவர்களுடனான எனது அனுபவங்களும் கிஞ்சித்தும் அவர்களை அறியாத பதிவர்களும் படிப்போருக்கும் வாழ்வின் சுவை கூட்டும் நம்பிக்கையென்றி வேறு ஏதும் கள்ள உணர்வு இல்லை. பொது மாத்து கட்டுரையினால் பாதிக்கப்படும் எளாக்கியவாதி ஏதோ பாரில் சந்தித்து எனக்கு வழங்குவார் என்கிற நம்பிக்கையுடன் முதல் பகுதியான நம் செல்ல டவுசர் பாண்டிகளின் ரவுசுகளுடன் துவங்குவோம்.


சியர்ஸ் வித் டவசர்ஸ்

அம்பேத்கர்2000 என்கிற நிகழ்ச்சி நண்பன் சிவா கட்டுரை வாசிக்கவிருக்கிறான் பல தாசப்தங்களுக்கு பிறகு, பரீட்ச்சைக்கு ரெடியாகிற பையனைப்போல் கட்டுரைய மொத நா சாயங்காலத்துல இருந்து மனப்பாடம் பன்ன வேண்டியது, அப்புறம் ஒப்புச்சு பார்க்கவேண்டியதுன்னு இப்படியே போச்சு ஒரு நாளு . நிகழ்ச்சி அன்னைக்கும் சும்மாதானே இருக்க நீயும் வாடா'ன்னு என்னையும் கூட்டிட்டு போனான் . போயி கொஞ்ச நேரம் உங்காந்து இருந்தேன். கரைக்ட்டா 7 மணி ஆச்சு மண்டைக்குள்ள குருவி கத்த ஆரம்பிச்சது "டைம் டூ டிரிங் " என்று . சிவாவை பார்த்தா இரட்டை வாக்குரிமை வாங்கிட்டுத்தான் மேடையை விட்டு வருவான் போலிருந்தது. நானும் கீழ நின்னு பிகர பிக்கப் பன்னுற மாதிரி மேடைய பார்த்து சைன(sign ) போட்டுகிட்டே இருக்கேன் அவேன் கவனிக்கவேயில்ல. அப்புறம் ஒரு வழிய தம்மடிக்க கீழே வந்தவன் கிட்ட போயி போலாம்பா "மண்டைக்குள்ள மணி அடிக்க" ஆரம்பிச்சுருச்சுன்னு சொன்னேன்
எனக்கும் தான் என்று சொன்னவன் " நம்ம " கடைய நோக்கி நடைய போட்டான். உள்ள போயி பாத்தாக்க,ஊரே இங்கதான் இருக்குங்கிற மாதிரி பயங்கர கூட்டம். அதுல நம்ம மக்களும் இருந்தாய்ங்க "சரி வாடா அந்த டேபிளுக்கு போவோம்னு" அவய்ங்களோட போயி உக்காந்து சரக்கு வாங்கறதுக்கு எங்க பங்கு காச கொடுத்தோம். சரக்கும் வந்துச்சு . டம்முளருல ஒரு டவுசரு ஊத்தினாரு , சோடா வாராதுக்கு முன்னாடி ஒரு தோழர் தன்னோட கிளாச மட்டும் எடுத்துகிட்டு ஓரமாய் போயிட்டு வந்தாரு(ஈழத்து father). இங்க இருந்த நம்மாளு அந்த தோழர கோவிச்சுகிட்டான் . எங்களுக்கு இன்னும் சோடா வரலை அதுக்கு முன்னாடி உங்களுக்கு மட்டும் என்ன அவசரம் தோழர்" அப்படின்னும் அதுக்கு அவரு சொன்னாரு ஒரு மருத்துவகுறிப்பு ' தோழர் நீங்க அடிக்கிற சரக்கு எவ்வளவு பாதிப்பு தெரியுமா? லிவர், கிட்னி, எல்லாம் வீக்காயிடும்" அதான் ஒரு மாற்று மருத்துவத்தையும் சேர்த்து நான் குடிப்பேன் நீங்க வேனும்னா முயற்சி செய்து பாருங்கள் என்றார்.

வாயி சும்மாருக்க மாட்டாமெ என்னான்னு நான் கேட்டுப்புட்டேன். அவரு சொன்னதுக்கப்புறம் யாரும் எங்களுக்குள்ள சியர்ஸ் சொல்லிக்கில்ல, அவ்வளவு ஏன், அதுக்கப்புறம் அவேன் அவேன் கிளாசைக்கூட கீழ வைக்கல.


மாறிகிச்சுனா என்ன பன்னறதுன்னுதான்.

வரு சொன்ன மருத்துவ குறிப்பு : முதல் கட்டிங்யுடன் கொஞ்சம் சிறுநீர் சேர்த்துக்கொண்டால் சாராயத்தின் தீங்குகள் அண்டாது என்பதாகும். அதுக்குத்தான் நான் ஓரமாய் போய் வந்தேன் என்பதாகும்

அதுக்கப்புறம் அந்த பாரில் எவனுமே கிளாச கீழ வைக்கல சியர்ஸ்சும் சொல்லிக்கல....


(சியர்ஸ், சீ யூ ஸார்ட்லீ)

Sunday, September 10, 2006

@ 3:37 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

11) அமைப்பாக்கம்,வன்முறை, அபத்தம், நிறுவனமயமாக்கல், கட்டமைப்பு , கட்டுடைத்தல்,முரண், நகைமுரண், விளிம்பு,தொல்லை, பெருங்கதையாடல், நுண் அரசியல், பேரரசியல், அதிகாரம், மாற்றுக்கான தேடல் போன்ற வார்த்தைகளை 4ஆம் வாய்ப்பாடு போல் மனப்பாடம் செய்து வைத்து கொள்ளவேண்டும்.( நடுவில் ஆங்காங்கே மானே, தேனே , பொன்மானே என்று போட்டுக்கொண்டாலும் ஒ.கே)

12) திருமண வயது தாண்டும் தருவாயில் கண்டிப்பாய் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். மனைவி அரசுப்பணியில் இருப்பவராய் இருந்தால் நீங்கள் இலக்கியவாதியாய் தொடரலாம் இல்லையெனில் "இயல்பு வாழ்க்கைக்கு" திரும்பநேரிடும் அவலம் ஏற்படும்.

13)நல்ல மப்பில் தான் செய்யும் அனைத்து அட்டகாசங்களுக்கும் காலையில் தெகிரியமாய் விளக்கம் சொல்லும் திறமை வேண்டும். "யாரு ஒழுங்குன்னு சொல்லு நான் தப்பு பன்னினேனு ஒத்துக்கிறேன்"என்று கேள்வி கேட்டவரிடம் கடைசி ஆயுதத்தை பயன் படுத்தலாம்

14) 10 கிலே மீட்டர் பயணமானலும் கையில் குறைந்தது இரண்டு புத்தகம் எடுத்துச்செல்லவேண்டும். பக்கத்து சீட்டுகாரர் படிக்க கேட்டால் புன்சிரிப்புடன் கொடுத்துவிடவேண்டும்.தமிழ்புத்தகமாயினும் அதை இரண்டு பக்கங்கள் புரட்டிவிட்டு "இருள்" அடித்தது போல் அவர் திரும்பதரும் அழகை ரசிக்க கண்கோடி வேண்டும்.

15)குடியிருக்கும் தெருவில் பிச்சைகாரனிடம் கூட கடன் பாக்கிவைத்திருக்க வேண்டும். எ.க: என் நண்பரொருவர் காலையில் வீட்டை விட்டு கிளம்பி 50 மீற்றரில் இருக்கும் பேருந்து நிறுத்ததை அடைய 1 கிலோ மீற்றர் சுற்றி வருவார். எனக்கு விளங்காமல் ஒரு நாள் கேட்டே விட்டேன், " ஆமாங்க வீட்டுக்கு பக்கத்தில் பொட்டிகடையில் சிகரெட் பாக்கி கொஞ்சம் இருக்கு அந்த பக்கம் போனா தொல்லை அதான்" என்றார். குடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் எவ்வளவுங்க ஒரு 200 ரூபாய் இருக்குமா " நானே தந்துடுறேன்" என்றேன் . அதுக்கு அவரு சொன்னாரு 3800 ரூபாய் தரனும் என்று. அன்னையில இருந்து அவரை பார்ப்பதில்லைன்னு முடிவு செய்திட்டேன்.

16) கண்டிப்பாய் புலிகளை எதிர்க்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு புலி எதிர்ப்பாளராக நீங்கள் இருப்பது உங்களின் மேதைமைகு மெருகு சேர்க்கும். அரச பயங்கரவாதம் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வது எப்படி என்று "பாதுகாப்பான சூழலில்" நல்ல பார்களில் உட்கார்ந்து நாலு லார்ஜ் போட்டுகொண்டு சாவுகாசமாய் விவாதிக்கவேண்டும்.

17) மார்க்சீயத்தை கடுமையாக விமர்சிக்கவேண்டும். "மார்க்ஸ் செத்து போனது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை மார்க்சீயம் செத்துப்போனதும் " என்று "கலகம்" செய்யவேண்டும்.

18) அதே நேரத்தில் பிரபாகரன் ஏன் ஒரு காஸ்ட்ரோ போல் இல்லை , அவர் கம்யூனிசத்தை பின்பற்ற வேண்டியதுதானே என்று அபத்த கருத்துகளையும் முன் வைக்க வேண்டும். அப்போதான் நீங்க இலக்கியவாதி குறிப்பா பின்நவீனத்துவவாதி

19) வெள்ளாள பாசிசம், கவுண்டர் பாசிசம், செட்டிமார் பாசிசம் என்று வர்த்தைகளை பேசாத நாள் ஒரு நாளா என்கிற கொள்கையுடன் இருக்க வேண்டும்

20) காஃப்கா, டெரித்தா, நீட்ஷே,ஹெய்டெக்கர், காண்ட்,பூக்கோ, துப்ரோவ்ஸ்கி, டிராட்ஸ்கி, நெருதா, மார்ட்டின் லூதர்,ஹெகல்,பிக்கேல் , சாண்டி ஸ்டோன்,எட்வர்டு செய்த், ல்க்கான்,ஃபிராய்ட், ஜங்,குபான்,ஹாரவே ,பிரெய்ன் ழாக்ஸ்,கிட்லர் , லாண்டான், எக்கோ,ஹாசன் , ஜாய்ஸ் , பெல் ஹுக்ஸ். இது போல இன்னும் ஒரு இருபது பெயர்கள் மனனம் செய்து கொண்டு நீங்கள் கந்த சஷ்டி கவசம் சொன்னால்கூட இந்த பெயர்களையும் சேர்த்து சொல்லிவிட்டீர்கள் ஆனால் கண்டிப்பாய் நீங்களும் இலக்கியவாதிதான்.(தொல்லை தொடரும்)

Friday, September 08, 2006

@ 3:54 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்
நான் என்னமோ டாஸ்மாக் 5 கிலொ மீட்டரு தாண்டி இருக்குன்னு வண்டியெல்லாம் எடுத்து கிளம்பினா, அது இந்த பார்ல இருந்து வாக்கபிள் ஸாரி கிராவபிள் ( போகும் போதே போதையில் போனால் அது கிராவபிள் டிஸ்டர்ன்ஸ் தானே) டிஸ்டர்ன்ஸ்ல தான் இருந்தது. உள்ளே போயி எம்சி குவாட்டர் என்றேன். அவன் ஜானெக்க்ஷா தான் இருக்கு என்று கொடுத்தான். லக்கி இதையேல்லாம் திருவிளா பார்க்குற குழந்தை மாதிரி "பே"ன்னு பார்த்துக்கிட்டு இருந்தாரு. சரின்னு மேட்டர "அவசர அடி ரங்கா" மாதிரி டக்குன்னு முடிச்சிட்டு வாங்க அவங்க தேடிகிட்டு இருக்கபோறாங்கன்னு திரும்ப சியர்ஸ் பாருக்குள்ள போயி பாத்தா அப்பவும் சாயந்திரமே "அவசர" பட்ட பார்ட்டி இன்னும் அந்த ஒத்த பீர வச்சுக்கிட்டு முத்தம் கொஞ்சிகிட்டு இருந்தாரு. நாம வேற ஏற்கனவே கிச்ன்னு இருக்கமா , லக்கி' என்றேன். இப்போ எங்கே கூட்டிட்டு போயி கழுத்த அறுக்க போறனோன்னு நினைச்சுகிட்டே பரிதாபமாய் ,சொல்லுங்க என்றார்.

"பக்கத்துலுல எங்கையாவது ஜெனரல் ஸ்டோர் திறந்திருக்குமா" என்றேன். ஏங்க எதுனா வேனுமா எக்மோர் போனால் இருக்குங்க என்றார். 'ஆமா லக்கி , நிப்பிள் வாங்கனும்' என்றேன். லக்கிக்கு புரியவில்லை , அப்படின்னு புதுசா பாக்கு வந்திருக்கா என்று கேட்டார். இல்லப்பா இந்த குழந்தைங்க பீடிங் பாட்டிலில் மாட்டுவாங்களே அது வாங்கனும் என்றேன்.

'பால் ரப்பரா' அது கிடைக்குங்க வாங்கிறலாம் போகும் போது என்றார். இல்ல லக்கி அத வாங்கிட்டு வந்தாத்தான் நாம போகமுடியும் என்றேன். இதுக்கு மேலும் குழப்ப விரும்பாமல் விளக்கினேன்.

மொதல்ல அந்த நிப்பிளை வாங்கி அந்த பீர் பாட்டிலில் மாட்டிவிடுங்க அவரு சாவுகாசமா வீட்ல போயி தொட்டிலில் படுத்துக்கிட்டே குடிக்கட்டும் , பாத்தா இப்பைக்கு முடிக்கிறமாதிரி தெரியலைன்னேன். சிரிச்சு சிரிச்சு லக்கிக்கு வயித்த வலி வந்திருக்கும்.

பில்லு வந்துச்சு போயி எட்டிபார்த்தேன் தலை சுத்திருச்சு தொகைய பார்த்து இல்ல மொத்தமே நானும் அந்த பீர் பார்ட்டியும் தான் சரக்கடிச்சுருக்கோம் அடப்பாவி "திராவிட ராஸ்கல்லுகளா" எல்லாரும் தண்ணிய போட பாருக்கு போனா நீங்க சாப்பிட வந்திருக்கீங்களே இதுலாம் வெளங்குமா...........
**************************************************************************************


இதுக்கிடையில முத்து கூட பேசிகிட்டு இருக்கும் போது அவரு குஷ்பு-வோட தீவிர ர்ர்ர்ரசிகர்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பேச்சு அப்படியே கற்பு- பெரியார் - தமிழர் பண்பாடு என்று நீண்டு கொண்டே போனது. அப்பத்தான் ரொம்பநாளைக்கு முன்னால நடந்த சம்பவம் ஒன்னை சொன்னேன் மெய்சிலிர்த்துட்டாரு.

சென்னை லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்க அ.மார்க்ஸும் வளர்மதியும், கூட அல்லக்கையா நானும் போயிருந்தோம் . அவங்க ரெண்டு பேரும் 2000 ரூவாய்க்கு குறைஞ்ச புத்தகத்த கையில கூட தொட மாட்டடோம்னு சத்தியம் செய்ஞ்சவுங்க மாதிரி அங்கேயே தேடிகிட்டு இருந்தாங்க. சின்ன பரபரப்பு எழுந்து அடங்குச்சு. என்னான்னு பாத்தா நம்ம குஷ்பு ' புத்தகம் வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள்ள எனக்கு "நாட்டிங்ஹாம் ஹில்" ஹு கிரான்ட்'னு நினைப்பு வந்துருச்சு போய் பக்கத்துல நின்னு ஸ்டீவ் மூர் எழுதிய ஜஸ்ட் கிஸ் புத்தகத்தை கொடுத்து படிங்க நல்லாயிருக்கும் என்று ஜொள்ளினேன். அவங்க அத பார்த்துட்டு ஸாரி படிச்சிட்டேன் என்றபடி நகர்ந்து போனார்.

இதப்போயி வளரிடமும் மார்க்ஸிடமும் சொன்னேன் ஃபயர் அலாரம் கேட்டதுபோல் ரெண்டு தடதடன்னு ஓடிப்போயி குஷ்பு விடம் இருவரும் கையெழுத்து வாங்கினார்கள், தங்கள் கையில் வைத்திருந்த புத்தகங்களில். இதைப்பார்த்து சிரித்துக்கொண்டேன். இரண்டு புத்தக ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய சூழலில் நன்கு இயங்குபவர்கள் இப்படி ஒரு செலிபிரட்டிக்கு ஆலாய் பறக்குகிறார்களே என்று.

இதைச்சொல்லி முடித்தபின் ஒரு ஏக்க பெருமூச்சு விட்டு முத்து(தமிழினி) சொன்னார் " ஹீம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த புத்தகம்" என்று.

5 நிமிட ஆழ்ந்த மௌனத்திற்கு பிறகு நான் சொன்னேன் வளர்மதி கையெழுத்து வாங்கிய புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா?
promiscuities தமிழில் "வரையற்ற பாலுறவுகள்" என்று அர்த்தம்.

Thursday, September 07, 2006

@ 1:41 PM எழுதியவர்: வரவனையான் 15 மறுமொழிகள்

பின்நவினத்துவவாதி என்று அழைத்துக்கொள்வதுதான் இப்போ லேட்டஸ்ட் டிரண்ட். அதன் நீட்சியாக அதற்க்கான தகுதிகளை(!) வளர்த்து கொள்ள உதவும் குறிப்புகள் தான் அடியில் நீங்கள் காண்பது.

1) முதலில் உங்களை வீட்டில் தலையில் தண்ணிர் தெளித்து விட்டிருக்கவேண்டும். அல்லது சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாறு ( அ )துடைப்ப கட்டையால் அடித்து ஊர் எல்லைவரை உங்கள் குடும்பத்தினரோ அல்லது ஊர்ப்பெரியவர்களோ வந்து வழி (?) அனுப்பி வைத்திருக்கவேண்டும்.

2) ஓரளவுக்கு கல்வித்தகுதி இருக்கவேண்டும். குறைந்தது இளங்கலை.

3) சென்னையில் வீணாய் போன நாலு எழுத்தாளர்களையோ அல்லது கவிஞர்களையோ கண்டிப்பாய் அறிமுகம் இருக்கவேண்டும்

4)தனது காசானுலும் அடுத்தவன் காசானுலும் வஞ்சனையே இல்லாமல் குடிக்க பழகி இருக்கவேண்டும். குறைந்தது ஒரு ஆஃப்.

5) தமிழில் ஒரு முழுமையான நாவல் இன்னும் வரவில்லை என்கிற வார்த்தையை தினமும் படுக்க போகுமுன் 1000 முறை உச்சாடணம் செய்யவேண்டும் ( ஏற்கனவே மப்ஃபில் இருப்பதால் உளறுவதாக அருகே இருப்பவர் நினைத்துக்கொள்ளும் நன்மையும் இதில் உண்டு)

6) எவனோ ஒரு அரை லூசு எடுத்த 13 3/4 நிமிட குறும்படத்தை பற்றி 2 மணி நேரம் கட்டுரை வாசித்து பீதியைக்கிளப்ப வேண்டும்

7) அகிரோ மாதிரி இன்னோருத்தர் சான்ஸே இல்ல. மலையாள 11 மணிக்காட்சி வாசலில் நின்றாலும் கெத்து குறையாமல் டயலாக் உடனும்.

8)மார்க்சீய-லெனிய கம்முனிஸ்ட் இயக்கங்களில் சிறிதுகாலம் பணியாற்றி இருக்கவேண்டும்.

9)அந்த ஆபீஸுக்கு டீ கொண்டு குடுக்கும்போது அவய்ங்க தாடிய பார்த்து ஈர்க்கபட்டதை மறைத்து விட்டு. லெனின் தான் என்னை ஈத்தார் என்று பீலா விடவேண்டும்

10) "நானும் ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவன் தான் தோழர்" என்று அகஸ்த்மாத்தாக சிக்கிக்கொண்ட தோழரிடம் "கட்டிங்குக்கு" அடி போட வேண்டும்

( இன்னும் 100 குறிப்புகளுக்கு மேல் இருக்கு கண்டிப்பாய் தருகிறேன்)