Monday, March 28, 2016

@ 6:48 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்

என்னிடம் பிழைகாணப்பொழுதுகளில்
அந்த "பத்து சவரன்"தான் மதியம்மாவின் ஆயுதம்
என் தாய் பாசத்தின் வழுவழுப்பை எங்கேனும் கண்டாளென்றால் போச்சு
புலியினை உட்தேக்கிய பூனையாய் பத்தை இழுத்து வைத்து தீர்ப்பாள் திட்டி
நோவென்றாலும், வண்டி பஞ்சாராகி நிண்டாலும், நெருங்கி வரும் ஸ்கூல் பீஸு தேதியென்றாலும், அந்த பத்து இருந்தா? என பந்தாடுவாள்.
என் பயமெல்லாம் எங்கே சம்பாரிச்சு தொலைச்சு ஒரு நாள்
பளக்கும் அந்த பத்துதோடு போய் நின்னுடுவேனோ என்றுதான் - வரவனையான்

Monday, December 21, 2015

@ 11:24 AM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்

Friday, April 25, 2014

@ 7:34 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்


முதலில் வந்தது குமாஸ்தா ரங்கசாமிதான். நரிச்சிரிப்பு சிரித்துக்கொண்டு பம்பைத்தலையுடன் வரும் ரங்கசாமியைக்கண்டாலே கடற்கரைக்கு எரிச்சலாய் வரும். வக்கீல் பொன்மாயத்தேவர் ஏட்டுப்பள்ளியில படிக்கும் போதே ரங்கசாமியை குமாஸ்தாவாக்கிட்டாருன்னு கிண்டலா சொல்லுவாங்க, அவரு பொண்டாட்டியை விட ரங்கசாமிதான் அதிக நேரம் கூட இருந்திருப்பான். ஒரு நாளில்லாட்டி ஒரு நாளு காதோரம் கையை விட்டு பொடணி மண்டை பாகவதரு முடியை கொத்தா பிடிச்சி சொவத்துல நாலு இடிஇடிக்கனும்னு ரங்கசாமியை பாக்கும் போதெல்லாம் நெனப்பு வரும். ஒரு காரணமும் இல்லாம எதுக்கு இவனை கண்டாலே சுறுசுறுங்கிறது என்றும் தெரியவில்லை.

“என்னய்யா உங்க வக்கீலு நெலம ’கஞ்சிக்கு லாட்டரி கையில பேட்டரி’ன்னு ஆகிப்போச்சா, சாராயக்கேசுக்குல்லாம் வர்றீங்க”

“ என்ன கேசுக்குன்னு தெரியலை சார் ! நீங்க இருக்கிங்களான்னு எங்க சார் பாத்திட்டு வரச்சொன்னார், யாரோ முக்கியமானவுக போன் போட்டாக போல “

”வக்கீல் குமாஸ்த்தான்னா சார் போடுவீயா, அய்யான்னு சொல்றா வெண்ணை மவனே” மனதிற்குள் கறுவினார்.

” யோவ் ஸ்டேசனில் ஒக்கார வச்சிருக்கிறது ஒரு கேஸு, வேறென்னாத்துக்கு இங்க வர்றாராமாம், பம்பரம் வெளாடவா ? பழநி முன்சீப் கோர்ட்டுல ஒரு வேலை இருக்கு, நான் கெளம்பிட்டேன், சாயந்திரமா வரச்சொல்லு..

ரங்கசாமியின் தயங்கி எதோ சொல்ல வந்தான், படாரென எழுந்து இன்ஸ்பெக்டர் ரூமிற்குள் போன கடற்கரை
இன்ஸ்பெக்டரிடம் ” சார், வந்து முக்கா மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள வக்கீலை புடிச்சாந்திருக்காய்ங்க, இவய்ங்க லேசுப்பட்டவனுங்க இல்ல” என்றார்.

அப்படி சொன்னதன் பொருள் எதும் சிபாரிசின் பெயரிலோ , காசு வாங்கிக்கொண்டோ விட்டுவிடாதீர்கள் என்கிற மறைமுக எச்சரிக்கை. 57 வயதில் நிற்கும் இன்ஸ்பெக்டரின் அனுபவத்திற்கு இது புரியாமலில்லை. பொதுவாக இது போன்ற ஸ்டேசன்களில் கடற்கரை போன்ற சட்டம் தெரிந்த உதவி ஆய்வாளர்கள் வந்து விட்டால், ஓய்வு பெறும் வயதிலிருக்கும் இன்ஸ்பெக்டர்கள், மகன்கள் தலையெடுத்தபின் அமைதியாக ஈசி சேரிற்கு போய்விடுவதைப் போல எதிலும் பெரிதாக தலையிட மாட்டார்கள். கிட்டதட்ட உதவி ஆய்வாளர்கள் தான் ஸ்டேசனை இயக்குவார்கள். கடற்கரை இங்கு மாற்றலாகி வந்த புதிதில் ஒரு சம்பவம் நடந்தது, அதன்பின்னரே இன்ஸ்பெக்டர் கடற்கரையை மேலதிகாரம் செய்வதில்லை. அது சின்ன திருட்டு வழக்குத்தான் என்றாலும் அந்த பையனை விசாரிக்கையில் ஹேபிச்சுவல் அஃபெண்டர் என்று புரிந்தது. லாரி ஜாக்கி திருடி மாட்டியிருந்தான். நாலு இழுப்பு இழுத்தால் இதுவரை எத்தனை ஜாக்கியை ஆட்டைய போட்டிருக்கிறான் என்று தெரியவரும். ஆனால் அதற்கு முன்னவே அவனை பிடித்து வந்து புகாரளித்த லாரி ஷெட்காரர் யாரோ சொல்லியோ அல்லது மிரட்டியோ புகாரை வாபஸ் வாங்க வந்திருந்தார். இன்ஸ்பெக்டரின் நண்பர் என்கிற கோதாவில்

“சரி சரி, அந்த பையனை கொஞ்சம் கண்டிச்சு அனுப்பி வைங்க , நான் வாபஸ் வாங்கிக்கிறேன், பொருளு ஏய்ங் கைக்கு வந்துருச்சு ” என்றார் அசால்ட்டாக.

”யோவ் எந்திரிய்யா, எங்களை என்ன குடியரசு தினத்துக்கு டிரம்ஸ் வாசிச்சுகிட்டு போற குட்டப்போலீசுன்னு நினைச்சியா, ஸ்டேசன் கட்டி , உள்ளார லாக்-அப் வச்சு கொடுத்திருக்கிறது என்னாத்துக்கு எவளையும் வச்சு குடும்பம் நடத்துறதுக்கா, ரெண்டு பேரும் சேந்துதான் திருடினிங்கன்னு எழுதி ரிமாண்டுக்கு அனுப்பிருவேய்ன் ஓடியே போயிரு” என்று விரட்டி விட்டிருந்தார். வெளியே பாராவிடம் எதோ கிசுகிசுத்துவிட்டு போனார் அந்த லாரி ஷெட்காரர். அவர் போனவுடன் பாரா போலீஸ் உள்ளே வந்து “இன்ஸ்பெக்டர் அய்யா வீட்டுக்கு வழி கேட்டுட்டு போறாருங்க என்றான்.

மாலையில் வந்த இன்ஸ்பெக்டர், ரைட்டரை அழைத்து ”அதான்

கம்ப்ளைண்ட் கொடுத்தவன் நொணாம்னா கூப்பிட்டு வாபஸ் எழுதி வாங்கிட்டு அனுப்பவேண்டியதுதானே, பெரிய லா படிதான் ஊம்புவிகளோ ‘ என்று சிடுசிடுக்கும் சத்தம் கேட்டவுடனே அவரின் டேபிளில் நிரப்பிய எப்.ஐ.ஆரை கொண்டுபோய் வைத்துவிட்டு “சார், சைன் பண்ணிட்டா ரிமாண்ட்க்கு அனுப்பிறலாம்” என்றார் கடற்கரை. இன்ஸ்பெக்டர் டென்சனாகி எழுந்து போய்விட்டார். காலையில் கிரைம் மீட்டிங் மதுரையில் இருப்பதால் அங்கு போய்விடுவார். அந்த திருட்டு பயலை உக்காரவச்சு சோறு போட்டுக்கிட்டு இருக்கணும் இல்ல எப்.ஐ.ஆரை கிழிச்சி போட்டுட்டு துரத்திவிடனும் ரெண்டே வாய்ப்புதான் உள்ளது என்று மனதில் நினைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் போய்விட்டார். இது ஒரு வகை கெட்டிக்காரத்தனம். திடீரென மேலதிகாரிகள் ரெய்டு வந்தால் ஏன் அக்கூயுஸ்டை கோர்ட்டில் ப்ரொடியூஸ் பண்ணாமல் விருந்துபச்சாரம் செய்கிறீர்கள் என்று கடற்கரைக்குத்தான் மெமோ கொடுப்பார்கள். இதை யோசித்த கடற்கரை, டக்கென்று எப்.ஐ.ஆரில் தனது கையெழுத்தை போட்டு அந்த பயலை தனது புல்லட்டில் நடுவில் உக்கார வைத்து உடன் ரைட்டர் மணிமாறனையும் ஏற்றிக்கொண்டு ஜட்ஜ் வீட்டிற்கே கொண்டு சென்று ரீமாண்ட் புரொடியூஸ் செய்தார். இரவு 8 மணி என்றதும் வாட்சை பார்த்தவாறே ”அவசர அவரசமா ஜெயிலில் அடைக்கிற அளவுக்கு அவ்வளவு தொந்திரவான ஆளா ?” என்று கேட்ட படி காவலில் அடைக்க உத்தரவிட்டார். ஒட்டுமொத்த ஸ்டேசனுக்கும் ஹெட் கான்ஸ்டெபிளில் இருந்து எஸ்.ஐ வரை முதல் தகவல் அறிக்கை என்கிற எப்.ஐ.ஆரில் கையெழுயெழுத்து போட்டு வழக்கு பதியும் உரிமை இருப்பது கடற்கரையின் செய்கையால் தெரியவந்தது. அந்த சம்பவத்தோடு இன்ஸ்பெக்டர் அடங்கிக்கொண்டார். கடற்கரையை கேட்காமல் எதுவுமே செய்வதில்லை. அவரின் வேலை தினமும் காலையில் ரோல்காலின் போது யார் யாருக்கு என்ன டூயுட்டி என்று பிரித்தளிப்பதுதான்.

’ நாளைக்கு குருத்தோலை நாளாம் சர்ச்சிலர்ந்து ப்ரொடக்ட்ஷன் கேட்டிருக்காங்க. வரவர எதுக்குல்லாம் போலீஸ் பாதுகாப்பு கேக்குறதுன்னு ஒரு வகைதொகையில்லாம போச்சு, அவங்களை யாருய்யா வம்பிழுக்க போறாங்க. அடிச்சாலும் இன்னும் ரெண்டு போடுன்னு சொல்ற சாமி கும்பிடுறவுகளை” என்று நரை மீசைக்குள் பல் தெரிய சிரிப்பார்.

போலீஸ் ஸ்டெரந்த் கம்மியா இருக்குன்னு ரிப்ளை கொடுங்க சார், வேணுமின்னா ஹோம் கார்டு நாலு பேர அனுப்புறேன்னு சொல்லுங்க சார் ! “ என்று கடற்கரை சொல்லுவார்.

அதான் கடற்கரை வேணுங்கிறது “ என்று ஸ்டேசனில் அத்தனை போலீஸ் நிற்கும் காலை 7 ரோல்காலில் அந்த நிலைய அதிகாரி சொல்லும்போது மற்ற போலீஸ்காரர்களுக்கு இயற்கையாகவே கடற்கரை மீது மரியாதை வந்துவிடும்.

கடற்கரை உள்ளே வந்து வக்கீல் குமாஸ்த்தா வந்த விவரத்தை சொல்லவும், இன்ஸ்பெக்டர் எழுந்தபடி
’கடற்கரை, என் பொண்ணும் மாப்பிளையும் வந்திருக்காங்க நான் அவங்களை கவனிக்கனும்,வேலை இருக்கு இந்த கேசை நீயே பாரு, பொம்பளைய வேற ஒக்கார வச்சிருக்க – இழுக்காம முடிச்சுவிடு” என்றபடி தொப்பையின் கீழாக கிடந்த ஃபேண்ட்டை இழுத்து மேல் வயிற்றின் மேல் போட்டு டிரைவரை கூப்பிட்டு வண்டி எடுக்க சொல்லி கிளம்பிவிட்டார்.

’வாங்கடி மாப்ளைகளா, உங்க சாராயத்தை மட்டும் அவய்ங்க வாங்கி குடிக்கனும், அவனுங்களை அரசாங்கம் கொடுத்த நெலத்துகுள்ள கால் வைக்கவுட மாட்டீங்க . இருங்க இருங்க உங்க பருப்பை கடையுறேன் ’ என்று மனசுள் நினைத்தவாறே இன்ஸ்பெக்டரின் அறையை விட்டு வெளியே வந்தால் குமாஸ்தா ரங்கசாமி நின்றபடியே இருந்தான்.
கடற்கரைக்கு ரங்கசாமியின் சிரிப்புதான் பிடிக்காது, நெருப்பை அணைக்க சீமெண்ணை ஊத்தின கதையாய், அந்த சிரிப்புடனே அருகில் வந்தான்.

சார், கோவிச்சுக்ககூடாது இன்னிக்கு கோர்ட் லீவு, நாளைக்கு தேதிய இன்னைக்குன்னு நெனச்சுகிட்டு இருக்கிங்க போல, நீங்க தேவையில்லாம 40 மைல் அலையக்கூடாதுன்னுதான் சொல்றதுக்கு நின்னேன்ங்க சார்” என்றான்.

பகலில் பைக்கில் போகும் போதும் மறந்தவாக்கில் ஹெட்லைட் எரியவிட்டு ஓட்டி வந்தால் சின்னஞ்சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அது எதோ கொலைக்குற்றம் போல் எரியுது எரியுது என்பார்களே அதன் உட்பொருள் “ பகலு பளபளங்குது குருடான்னு வெளக்க போட்டுகிட்டு போறானே, இவன்லாம் எங்கிட்டு திருடன புடிக்கிறது “ என்கிற நக்கல்தான்.

எல்லா மயிரும் தெரியும், உம்ம வேலைய பாரும் – என்ற அடித்தொண்டையின் மெல்லிய உறுமலோடு கடற்கரை சொல்ல ரயில் பூச்சி சுருண்டு கொள்வதை போல ரங்கசாமி கூனிக்குறுகி ஓடிப்போனான்.

நேரே ரைட்டர் அறைக்கு போய் ” மணிமாறன், என் ரூமுக்கு வாங்க என்று சொல்லி விட்டு தன் அறையில் போய் அமர்ந்தார்.

ரைட்டர் மணிமாறன் வந்து, அய்யா சொல்லுங்கய்யா என்றதும்.

மோகன் போலீஸ் பலகாரம் சாப்பிட போயிருக்காப்ள வந்தவுடனே அவனுங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஸ்டேட்மண்ட் வாங்கிக்குங்க அதாவது கடுக்காய் வாங்கிட்டு வரச்சொல்லியிருந்தாங்க செவத்தியாரும், எங்க பக்கத்து தோட்டத்துகாரர் ஊர் பெரியதனம் சவரிமுத்துவும், சரின்னு சொல்லி வாங்கி கொடுத்திட்டு அந்த காச வாங்கத்தான் நின்னுகிட்டு இருக்கும் போது போலீசார் எங்களை கைது செய்தனர்ன்னு எழுதி கையெழுத்து வாங்கிடுங்க. மோகன் போலீசை வச்சு அங்க மச்ச அடையாளம் குறிச்சு டவுசரோட உக்கார வைய்யுங்க, நான் ஆயுத்தப்படை மைதானம் போய் லேடி போலீஸை அனுப்ப சொல்றேன், லேடி போலீஸை வச்சு அந்த பொம்பளைகிட்ட ஸ்கார் மார்க்கும் பாடி மார்க்கும் எடுங்க, அவளை அக்கூயுஸ்ட் முணா போடுங்க ஏ 1 செவத்தியாரு ஏ 2 சவரிமுத்து புரியுதா எப்.அய்.ஆர் எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ரெடியாகனும் புரியுதா, அப்படியே அந்தக் கண்டாரொலி மேல தனியா மோகனை அடிக்க வந்தா, கொலை செஞ்சுடுவேய்ன்னு மிரட்டினா, காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தான்னு 353ம் 506ம் தனி எப்.ஐ ஆரா போட்டு வைய்யு, குறைஞ்சது ஒரு வருசம் களி திங்க உட்டாத்தான் வாய் கொறையும் என்றார். கிட்டதட்ட 1000 சொற்கள் வரக்கூடிய செய்தியை முன்று வரிகளில் கடற்கரை சொல்லிவிட்டார். ஆனால் மணிமாறனுக்கு இதுபோதும் எப்படியெல்லாம் வார்த்தைகள் இருக்கவேண்டுமோ அப்படியெல்லாம் கோர்த்து எழுதிவிடுவார்.

பசிக்க துவங்கியது ரயில்வே கேட்ட்டில் காத்திருந்த போது சாப்பிட்ட டீ ஒரு மணி நேரத்துக்கு மேலவா தாங்கும். புல்லட்டை எடுத்து முத்தையா கடையை நோக்கி போனார். காலை 5 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் சூடான இட்லியும் ஆட்டு நெஞ்செலும்பு மிளகு சாப்ஸும் கிடைக்கும். இன்று ஞாயிறு என்பதால் நுரையிரலை பொடிசா வெட்டிப்போட்டு கடலைப் பருப்போடு காரமாய் பிரட்டல் வைத்திருப்பான். இட்லி அது பாட்டுக்கு கணக்கில்லாம உள்ளார போயிட்டே இருக்கும். முத்தையா கடை என்பது ஒரு தூங்கி வாகைமரத்தின் கீழ் பழைய லாரி தார்ப்பாயின் தயவில் முன்று பெஞ்சுகளில் நடக்கிறது, அவ்வளவே. ஆயுத்தப்படை போகவேண்டிய அவசியமில்லாமல் அதைச்சேர்ந்த ஹெட் காண்ஸ்டபிள் ஒருவரை வழியில் பார்க்க நேர்ந்தது, உடனே ஒரு பெண் போலீசை அனுப்ப சொல்லிவிட்டு கடை அருகே வண்டி நிறுத்தி தாழ்வாக கிடந்த தார்பாயினுள் தலையை விட்டு நுழைந்தார். உள்ளே பெரிய தூக்குப்போணியை காட்டியபடி “அஞ்சஞ்சு இட்லியா முணு பொட்டணம், இதுல ஒரு நாலு நுரையிரலு கொழம்பு ஊத்திரு, பொன்மாயன் வக்கீல் சாருக்கு” என்றபடி செவத்தியாரு நின்று கொண்டிருந்தான். சட்டை காலரை பின்னால் இருந்து பிடித்தபடி “இன்னோரு அஞ்சஞ்சா அஞ்சு பார்சல் அதே தூக்குப்போணியில அஞ்சு நுரையிரல் கொழம்பு ஊத்தி கட்டு முத்தய்யா, தூக்குப்போணி கொழம்புக்கு போதுமா ” எனக் கேட்டபடியே ‘சரிதானே செவத்தியாரு, இங்க அவியுது ஸ்டேசனில போய் சாப்பிட்டுக்கலாம் என்று சிரித்தார். ஆற்றாமைக் கண்களோடு அவரை ஏறிட்டான் செவத்தியார் .

( தொடரும் )

Wednesday, April 09, 2014

@ 12:50 AM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்

என்னாதான் முன்னமே பேசித்தான் வைத்திருந்தவைதான் என்றாலும் போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக ஏற்றும் போது ஏமாந்துவிட்டமோ என்கிற அச்சம் வந்துவிட்டது சார்லிக்கும் பெனடிக்கிற்கும். ஜீப்பின் இருக்கைகளுக்கு இடையே கீழே உக்கார வைக்கப்பட்டிருந்த இருவரின் கண்களிலும் வலையில் அகப்பட்டுக்கொண்ட முயல்களின் அச்சமிருந்தது. உருவத்திற்கு பொருத்தமில்லா கீச்சுக்குரலில் ’தீப்பெட்டிருக்கா என்று டிரைவர் காளிதாஸ் சைகையில் கேட்க ’இருக்குங்க’ என்றபடி பெனடிக் எடுத்து நீட்டினான்.”அது யாரு நெலம், உங்களுதுன்னு சொன்னீங்க” , சந்தேகமாக கேட்டார். ’சார், எங்களுக்கு கவர்மெண்ட்டு கொடுத்ததுங்க. நல்லமநாயக்கன்பட்டி வாத்தியாரு தோமஸ் அய்யாதான் எங்க சார்பா சப் கலெக்டருக்கும் தாசில்தாருக்கும் எழுதினது. போன கிறிஸ்துமஸுக்கு துணி வாங்க போனப்ப எங்ககிட்டவெல்லாம் கைநாட்டு வாங்கி மனுப்போட்டாரு. இந்த கிறிஸ்துமஸுக்கு மந்திரி ராகவன் ஆளுக்கு முணு ஏக்கரு கொடுத்தாருங்க. எங்களோட சேத்து 18 பேருக்கு கொடுத்தாரு. மித்தவுங்களுக்கெல்லாம் கொடுத்த இடத்தில இருந்து பாத்தா  ரெண்டெல்லப்பாறை பெரிய கோயிலு லைட்டு நல்லாத்தெரியுற மாதிரி காலனி பக்கத்திலயே இடம்.  எங்களுக்கு அடிவாரத்தில கொடுக்கிறேன்னுட்டு கடசில இங்கின கொடுத்திட்டாக “ என்றான பெனடிக் .
விழா நடந்த அன்று தாசில்தார் பட்டியலை ஒவ்வொருவர் பெயர் வாசித்து மேடைக்கு அழைத்த போதும் காலனி மக்களுக்கு ஒரே கூத்தாகயிருந்தது.  பெனடிக்கிற்கும் சார்லிக்கும் எப்பவும் ஆகாது, அவர்கள் பகை என்பது குடும்பப்பகை, ஜென்மப்பகை . விழா நடந்த நாளிற்கு முதல் நாள் கூட  இருவரின் மனைவியும் வெளக்குமாத்தால் அடித்துக்கொண்டனர். “ தோல் ஷாப்பு பாய் கூட படுத்தவளே “  - மணியடிக்கிற கோயில்பிள்ளைகூட   படுத்தவளே” என்று இருதரப்பின் ராஜாங்க ரகசியங்களை சனங்கள் நடுவே குன்றிலிட்ட விளக்காய் ஏற்றி வைத்தனர் .  குழாயடியில் பெனடிக் இருந்தால் சார்லி அந்த பக்கம் போகமாட்டான். தோட்டங்காட்டில் வேலை என்றாலும் பெனடிக் தலை தென்பட்டால் கஞ்சியில்லாம இருந்தாலும் இருக்கலாம் இவன் சகவாசம் வேண்டாம் என்று இருந்துவிடுவான்.  அப்படியே போனாலும் பெனடிக் சாடை பேசாமல் விடமாட்டான். சார்லியின் அம்மாள் அவன் தந்தையுடன் இருந்து பொழைக்கவில்லை.

சார்லிக்கு நேர்மார் அந்தாள். வேட்டைக்கு போறேன்னு சொல்லிட்டு போய் நரியை புடிச்சு உரிச்சு கேழையாட்டு கறின்னு , சாராயம் குடிக்க வந்தவய்ங்க கிட்ட நெருப்புல வாட்டி வித்துருவாரு. அந்த காசில சாராயத்தை குடிச்சிட்டு வந்து படுத்துகிட்டு ஒரே அலம்பலுதான். விடிஞ்சதும் எல்லா ஆம்பளைகளும் வேலைக்கு கிளம்பி போகும் போது இவரு வேப்பங்குச்சிய கடிச்சிகிட்டு 

” யாரவது காசு கொடுத்தா, எவன் பொண்டாட்டி எங்க போனா எத்தன தடவ ஏறினாளுன்னு டிரிப் சீட்டு எழுதி வைக்கிறேன்”னு சொல்லி கடுப்பை கெளப்புவாரு.  

“ எட்டணா காசு கொடுத்து மன்னாரில கப்பலேறினா மதியம் தாசய்யர் கடை ஊத்தாப்பம் சைசில ஊளி மீனு வறுவலோட சோறு போட்டு இந்தியாவுல இறக்கிவுடுவாய்ங்க கப்பல்லர்ந்து, அப்படியே இறங்கினா ரயிலு நிக்கிற இடத்திலர்ந்து, ராம்நாட்டில நல்ல படமா இல்ல மதுரையிலேயான்னு போஸ்டர் பாத்து டிரையினுல டிக்கட்டெடுத்து வந்து சினிமா பாத்துட்டுப்போவேன்”   

என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணில் நீர் துளிர்த்துவிடும் தன் குடிசையைப் பார்த்து “ஒரு நா ஓழுக்கு ஒடம்பட்டாளேங்கிற நன்றிக்கு வந்து இங்க சீப்படறேன்” என்று கத்துவார் . அந்த குடிசையில் அவர் மட்டும்தான் இருந்தாலும் அதில் அவரின் மனைவி இன்னும் இருப்பபது போலவே பேசித்திரிவார்.

அவரின்  இளமைக்காலம் நன்றாக இருந்தது என்று மட்டும் சுற்றியுள்ள பெரியவர்களுக்கு புரிந்தது. எப்போதுமே கொண்டாட்டக்காரனாய் இருப்பவனிடத்தில் ஒரு பெருஞ்சோகம் புதைந்திருக்கும் என்பதை முதலில் கண்டுபிடித்தது  விசுவாசம் தான். விசுவாசத்திற்கு 70 வயதாகியது,  மூன்று கணவன்களுடன் வாழ்ந்து முடித்திருந்தாள், “ ஏண்டாய்யா நல்ல பொழப்ப பொழச்சுபுட்டு இங்க வந்து கோமாளியாட்டமா ஆடிகிட்டு திரியுற,புடிக்கைலேன்னா எங்கிட்டாவது ஓடிப் போயிடய்யா !” என்றாள் யாருமில்லாத பொழுதின்றில். குடிவெறி கலைந்துவிடுமளவுக்கு  அழுதவாறே சொன்னான் “ மொத புள்ள அல்போன்சா மொகத்த பார்க்காம இருக்க முடியலம்மா, எங்க அம்மா போலவேயிருக்கா , ஒரு நா ராத்திரி இல்லைன்னா மக்க நா நெஞ்சிலேறி படுத்துக்கிறா. பொட்டப்புள்ள அப்பன் ஒடம்பு சூட்ட பழகிட்டா நாய்க்குட்டியாட்டம் கெண்டைக்காலை கவ்விகிட்டுவிடாதுங்கிறது சரியாத்தான் தாயி இருக்கு”

”தின்னவேலி தாண்டி வள்ளியூருக்கு தெக்கால எங்கிட்டோ கெடந்த சிறுக்கி தாயி அவ, ராம்நாட்டில இருந்து தங்கிச்சிமடத்துக்கு ஒரு டொங்கிரி லாரி போச்சு, காலையில ஒரு கப்பலு கெளம்புதுனு பேசிகிட்டாய்ங்க, செரி அங்கின போயி எவனையாது கெஞ்சிக்கெதறி ராமேஸ்வரம் போய் கப்பலேறிடலாம்ன்னு லாரியில ஏறின அன்னைக்கு பிடிச்ச கெரகம், அவளே போனாலும் விடமாட்டேங்கிது” 

அப்படியான குடும்பப்பகையாளிகள் இருவருக்கும் அடுத்தடுத்து அழைத்து கொடுத்த போதே கொல்லென்று சிரித்த மக்கள்,  அடுத்த நாள் தலையாரி வந்து யார் யாருக்கு எங்கெங்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும் போது சிரித்து குமித்துவிட்டார்கள்.    .கேணி மேட்டுக்கு போனவர்கள் வந்தனர். “ ஜீப்பின் அருகே வரவர ஃப்யூலா கெஞ்சிக்கொண்டே வரும் சத்தம் கேட்டது. பின்னாடிக்கதவை திறந்து படியே “ போறவெய்ன் வாறவேய்ன இவ படுக்க கூப்பிட்டானு கேசெழுதி திருச்சிக்கு அனுப்பு, அங்கதான் தேவெடியாவ பூராம் மொட்டையடிப்பாளுக” என்றபடியே அவளின் செம்பட்டை பாவியிருந்த கூந்தலை சுருட்டி பிடித்துக்கொண்டு வந்த கடற்கரை அதை வைத்தே ஃப்யூலாவை வண்டியிலேத்தினார்.

அய்யா சாமி என்று அதுவரை ஜீப்பினுள் புலம்பிக்கொண்டிருந்த ஃப்யூலா,  சிறுமலை செட் அருகே மூடிய  ரயில்வே கேட்டிற்காக ஜீப்பை நிறுத்தி அதிகாரிகளும், காவலர்களும் திசைக்கொரு பக்கம் புகைக்கபோன போது, பெனடிக்கிடமும் சார்லியிடமும் “பயப்பிடாதீங்க, மாமா கொஞ்ச நேரத்தில வக்கிலோட வருவாரு” என்றாள். 
( தொடரும் ) 
    Wednesday, April 02, 2014

@ 4:24 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


அந்த கிராமத்தின் பிரதான சாலை என்பது தெற்கிலிருந்து வரும் 15 அடி தார்ச்சாலை ஒன்றேவடக்கிலிருக்கும் நகரத்துக்கு போகும் அந்த சாலையின் இருபுறமுமாய் இருபது முப்பது வீடுகளும் ஒன்றிரண்டு கடைகளும் இருந்தன.இரண்டு முன்று சந்துகள் இவ்வளவுதான் அந்த கிராமத்தின் விஸ்தீரணம்கிட்டதட்ட ஒரே சாதிசனம்போஸ்ட்மாஸ்டர் மட்டும்தான் வெளியூர்காரர்.தோட்டங்களில் குடியிருப்போர் மாலை வேளைகளில் கிராமத்துக்குள் வந்தமர்ந்து பழமை பேசிவிட்டு போவதற்கு சிலுவைத் திண்ணை அருகில் சாவடியும் டீக்கடையும் இருந்தன.

சாராயக்கடைகள் அரசால் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும் இந்த பகுதிகளில் யாரும் குத்தகைக்கு எடுப்பதில்லை.காரணம் இந்த பகுதி 100க்கு 80 ஆண்களுக்கு நல்ல சாராயம் காய்ச்ச தெரியும்அவர்களுக்குள் சிண்டிகேட் போட்டு காய்ச்சிக்கொள்வதால் கடைகளுக்கு வருவதில்லைஎன்னாதான் நகரத்தில் அரசு சாராயம் கிடைத்தாலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சரக்கைப்போல் சுவையாகவும் ஸ்ட்ராங்காவும்மிக முக்கியமாய் மறுநாள் சொடக்கு எடுத்துவிட்டது போல அதிகாலை எழுந்து அவனனன் பொழப்பை பார்க்கலாம்தலை வலிப்பது உடல் வலிப்பது போன்ற எந்த தொந்திரவும் இருக்காதுவெள்ளைக்காரன் இதை சரியா கவனிக்கலைகவனிச்சிருந்தா இந்த சாராயத்தையும் ஒரு பிராண்டா ஆக்கிருப்பான்பாம்பேயில ஒருத்தர் வெள்ளைக்கார துரைக்கு பிரத்யோகமாக தயாரித்து கொடுத்த ஜின் வகைதான் பின்னாளில் பாம்பே  சஃபையர் ஜின் என்று உலக பேமஸாகியதுஆனால் ஒரிஜினல் பாம்பே சஃபையர் ஜின்னின் செய்முறை பாதாம் பருப்பினையும் குங்குமப்பூவும் ஊறலில் போட்டு தாயரிப்பதுஅதனின் முறைப்படி இன்று செய்தால் ஒரு 750 மிலி பாட்டில் 2000 ரூபா ஆகும் அது மாதிரித்தான் இதுவும்பின்ன சும்மாவா150 வருஷமா சொந்தமாக தயாரித்து விற்கும் பகுதியில் ஒரு சாராயச் சாவே நடக்கலைன்னா பாருங்களேன்பிரான்சில் இதுமாதிரி கிராமப்புற ஒயின் மதுபான செய்முறைகளை சாட்டூ கிராமம் ) என்று வகைப்படுத்தி உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தி வருகின்றனர்இங்கையே இது போன்ற கலைஞர்களை கள்ளச்சாராய ரெய்டு என்கிற பெயரில் வேட்டையாடி வருகிறார்கள்.

ஊருக்கு வடக்கே சாலைக்கு மேற்கே பொட்டல்காட்டில் ஒற்றையாக பரந்து விரிந்து நின்றிருந்த புளியமரத்தின் கீழ் கடற்கரை நின்று கொண்டிருந்தார்மணி எட்டே முக்கால்வெய்யில் ஆரவாரமாக அடித்துக்கொண்டிருந்ததுபுளியமரம் என்பதால் கூடுதலாக அவிந்ததுஆடு மேய்க்க போகும் கிழவிகள் ஏற இறங்க பார்த்துக்கொண்டே போனார்கள்.சார்லியுடன் வேறு இருவரும் வருவது தெரிந்ததுவந்தவர்கள் ரோட்டிலேயே நின்று கொண்டார்கள்சார்லி மட்டும் கையில் வெறும் சொம்புடன் வந்தான்.

ஏன்யா அந்த போஸ்ட் மாஸ்டர் சில்வர் சொம்பு கொடுத்துவிடமாட்டானாகொல்லைக்கு எடுத்து போற சொம்பு கணக்கா இருக்கு ”
அய்யாகாலையில பால் வாங்கின சொம்பாம்அவரு சம்சாரமே எடுத்தாந்து புளி போட்டு வெளக்கி கொடுத்துச்சுங்கய்யா,
ஹிம்இதப்பார்யாபோஸ்ட் மாஸ்டரு பசும்பாலில தான் வெளிக்கி போயிட்டு கால் கழுவுவானாமணியார்டருலாம் ஒழுங்காத்தான் கொடுக்கிறானான்னு பாக்க சொல்லனும்” 
இந்த நக்கலும், சந்தேகிக்கும் குணமுமே கடற்கரையின் இயல்பு.
யார்யா அவய்ங்கஉங்கூட வந்திட்டு ரோட்டிலையே நிக்கிறதுஉன் சொந்தகாரய்ங்களா”
இல்லிங்கய்யாஇந்த ஊரு கோல்காரர் ஆரோக்கியமும் அவருகூட வேலையாளுங்க !
என்னாவாம்யாநா இன்னாரு வந்திருக்கேன்னு ஊருக்குள்ள சொன்னியாக்கும் இம்சையா உங்கூட… 
அய்யாஅவருதான் இந்த ஊரில சரக்கோட்டுறாருநீங்க நிக்கறீங்கன்னு தெரிஞ்சுகிடவும் பின்னாடியே வந்துட்டாங்க.

சார்லி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கயித்து கட்டிலை ஒருவன் தலையில் வைத்து தூக்கிக்கொண்டு வந்து போட்டுவிட்டு போனான்.

கோல்காரர் இருபதடிக்கு முன்னாடியே வணக்கத்தை போட்டு கடற்கரையின் மறுமொழிக்காய் நின்றார்

என்னய்யா ஊர காப்பாத்துறேன்னு சிலுவத்தூணில சத்தியம் பண்ணி கோல்கார பதவி வாங்கிட்டு சாராயம் வித்துகிட்டு திரியுறியா”   

பொழப்பே அதுதான்னு ஆகிப்போச்சுங்கய்யாவெளியூருகாரங்களுக்கு விக்கிறதில்லை ட்யூபில ஏத்தி கரூர்,நாமக்கல்லுன்னு லைனுக்குதான் அனுப்புறேங்கய்யா” என்றார்

ஆமாமா அன்னிக்கு உங்கூருக்காரந்தான் ஒருத்தன் என் புல்லட் சவுண்டை கேட்டு வெரட்டுறேன்னு நெனச்சு டிவிஎஸ்50ல முறுக்கு முறுக்குன்னு முறுக்கி ஜல்லிக்கல் மட்டும் பாவுன மெட்டல் ரோட்டுல விழுந்தான்மீனை செதிலெடுக்க தரையில தேய்ப்போம்ல அது மாதிரி தேய்ஞ்சு எந்திருச்சான்பக்கத்து தொழுவத்துல மாட்டு கழுத்து புண்ணுக்கு போடவச்சிருந்த மஞ்சத்தூளை வாங்கி போட்டுவுட்டு அனுப்பினேன்” 

ஆமாங்க சார் ! இந்தா இவந்தாங்க அந்த பையன்அந்த புண்ணு பக்கு உதிரவே ஒரு மாசம் ஆச்சுங்கஆனா தெறமக்காரன் அந்த காயத்தோட டிவிஎஸை ஓட்டிகிட்டே போய் ஜேடர்பாளையத்துல ட்யூபை போட்டு காசையும் வாங்கிட்டு வந்திட்டான்இவந்தாங்கய்யா உங்களை அடையாளம் கண்டது என்றவர் கொஞ்சம் முன்னாடி வந்தார் பயம் விலகியவரை போல

சாமி சாப்பிடுறேன்னு சொன்னிங்களாம்தவக்காலம் முடிஞ்சன்னைக்கு போட்ட ஊறலில ஒரு சேவலை கழுத்த திருகி உள்ள போட்டு வச்சிருந்ததுவிடியத்தான் ஊறலை உடைச்சு எடுத்து அடுப்பை பத்த வச்சோம் வடிஞ்சுகிட்டு இருக்குது. டவுணு பக்கம் கெடைக்காத சித்துக்கோழி நிறைய மேயுதுங்க, புடிச்சு அடிக்க சொல்லுறேன்சூடா சாராயமும் சோறும் சாப்பிட்டுட்டு போங்க என்றார் ஆரோக்கியம்

இதுதான் இந்த பகுதியின் சிறப்பே கையில கிடைகிறதெல்லாம் பிடிச்சு ஊறலில் போட்டு வடிச்சுருவாங்க,ஒவ்வொன்னும் ஒரு சுவை,மனம்ஒரு முறை பூமார்க்கெட்டுக்கு கொண்டுபோக பறித்து பஸ் பஞ்சரானதால் மீதமாகிய மொட்டு மல்லிகையை ஊறலில் போட்டுவிட்டான் ஒரு பயபத்து நாளு கழிச்சு எடுத்து வடிச்சு கொடுத்துவிட்டாங்க வாசனை அப்படி ஒரு வாசனை மூக்கை துளைக்காத மெலிசான பூ வாசனை. மொத தடவ  
சாராய வாசனை வராத சாரயத்தை அப்பத்தான் கடற்கரை பார்த்தது. இயற்கையாகவே திராட்சை அதிகம் விளையும் பகுதி வேற, மண்ணுவாகு அப்படி. ஒரு கூடை சப்போட்டா பழத்தை ( 10 கிலோ ) மட்டும் ஒரு வாரத்துக்கு ஊறல் போட்டு வடிச்சா 600 மில்லிதான் வடிசல் தேறும். அதுனாலதான் வேலம் பட்டை, கடுக்காய்ன்னு போட்டு காய்ச்சிருராங்க. மத்த பக்கம் மாதிரி நமச்சாரம் பேட்டரிகட்டையெல்லாம் கிடையாது. 

வேலை பார்க்கும் காவல் நிலையத்தில் லாக்-அப் டெத் நடந்துள்ளதுதனக்கு கீழ் வேலை பார்த்த ஒரு போலீஸ்காரனையே உக்காரா வைத்திருக்கிறார்கள் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்  வந்தால் அவன் களி திங்க வேண்டியதுதான்அவனின் குடும்பம் கஸ்டப்படும்நேற்று காலையில் சென்னையில் போட்ட காக்கி பேண்ட்டும் டி-சர்ட்டும் வேறு கசகசக்கிறதுதன்னையும் வேறு ஸ்டேசனுக்கு மாற்றியுள்ளார்கள்இவ்வளவுக்கும் இடையில் சேவலில்வடித்த சாராயம்சித்துக் கோழி கறி என்று சல்லாபம் தேவையா என யோசனை ஓடியதுஇந்த சார்லியை ஒரு செம்பில் வாங்கிக்கொண்டு வாடா என்றுதானே சொன்னோம்அப்படி செய்திருந்தால் சட்டுபுட்டென்று சாப்பிட்டுவிட்டு இன்னேரம் வாழக்காய்பட்டி போயிருக்கலாம்இப்படி மேக்க போற ரோட்டிலில உட்டிருந்தா மொட்டணம்பட்டி கிட்டவேபோயிருப்போம்குளிச்சிட்டு பெரியாஸ்பத்திரி போய் ரிப்போர்ட்டுல் என்ன எழவ எழுதியிருக்கானுங்கன்னு பாத்துட்டு,சரி பண்ண முடியுதான்னு பார்க்கனும்சாயந்திரம் பெரியய்யா மதுரையில இருக்காரான்னு போன் பண்ணி கேட்டுகிட்டு போய் பார்க்கணும்ரெகுலர் டிரான்ஸ்பர் போட்டிருக்காங்களா இல்ல பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பரான்னும் பார்க்கனும்.ரெகுலர்ன்னா பதினைஞ்சு நாள் டைம் இருக்கு ஜாயின் பண்ணபனிஷ்மெண்ட்னா நாளைக்கே ஜாயின் பண்ணனும் என்று பலவாறாக எண்ணம் ஓடியதுஇதற்கிடையில் கோல்காரர் கடற்கரையின் சொல்லுக்காய் நின்றுகொண்டிருந்தார்.  

கயித்துகட்டிலை கொண்டு வந்தவன்இம்முறை வேட்டி ஒன்றையும் எடுத்து வந்து நீட்ட “அய்யாபுது எம்ஜியார் வேட்டிங்க.பொங்கலுக்கு ரேஷனில் கொடுத்ததுதான்கட்டிகிட்டு இருங்கசெத்த நேரத்தில சோறும் கொழம்பும் வந்துரும் என்றபடி கோல்காரர் கட்டிலின் எதிரே தரையில் அமர்ந்தார்.

தாமஸ்புரம் பெரியதனம் சவரிமுத்து என்னய்யா பண்ணுறாரு இப்ப,வெவசாயம்தானா” என்று வேட்டிக்கு மாறியபடி கோல்காரரை கேட்டார் கடற்கரை.
அய்யா அவரு மூஞ்சியிலதான் நீங்க சாணிய பூசின மாதிரி செஞ்சுபுட்டீகளே” என்றார் கோல்காரர்.
மிக்கேல்பாளையம் செபஸ்தியாரு மேல நீங்க போட்ட கேஸுல இந்த சார்லி பயலையும் பெனடிக்கையும் அக்கூயுஸ்ட் ரெண்டும் மூணும்ன்னு சேர்த்துவிட்டிகளா, அங்க புடிச்சது அந்தாளுக்கு கேடு காலம்’ என்றபடி கட்டைப் புகையிலையை எடுத்து கடித்தார்.

அன்று சொன்னது போலவே காலை மணிக்கெல்லாம் ஜிப்பில் போய் ரோட்டில் இறங்கி தோட்டத்துக்குள் கிழக்கோர கேணியை நோக்கி போகும் போது “கட்டியை தின்னிகசாண்டய குடிக்கிக எப்ப பாரு இந்த ஊரு பக்கமே ரெய்டு வந்து நோண்டிகிட்டே இருக்காய்ங்க” என்றபடி தனியாக வெண்டைக்காயொடித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மண்ணை வாரி தூத்தஅவளை விரட்டி பிடித்த ’ரெண்டு கோடு’ ஏட்டய்யா மோகன் அவளின் முலையை பிடித்தே இழுத்து வந்து மற்ற காவலர்கள் முன் விசிறியடித்தார்.”அய்யோ செத்தேன்” கத்திக்கொண்டே விழுந்தாள். “ ஏண்டி கண்டாரொலி முண்டை செய்யுறது லோலாயித்தனம்இதுல நாங்க கட்டிய திங்கணுமாம் ” என்று கறுவியபடி இன்ஸ்பெக்டர் அவளின் வயித்தில் மிதித்தார்.

எல்லா வீரமும் வலியுணரும் வரைதான்ஆனால் அந்த வலியை மனது எப்போது உணருகிறது என்பதில் இருக்கிறது.ஈவிரக்கமின்றி முலையை பிடித்து இழுத்து சுற்றி நின்று ஆறேழு ஆண்கள் அடித்து மிதித்து கொண்டிருக்கும் போது இந்த கணத்திலிருந்து மீண்டால் போதுமென்று அவளின் மனது முடிவெடுத்தது. ”அய்யா சாமி சாமிஎனக்கு தெரியாதுங்க,விட்டுடுங்கநான் தோட்டத்து வேலைக்கு வந்தேங்க” என்று அலறினாள் . “யோவ்புடிச்சு சீலையை உருவி வண்டியில ஏத்துஅரை மூட்டை கஞ்சா வச்சிருந்தான்னு ஜெயிலுக்கு அனுப்பிடுவோம், ” என்றார் இன்ஸ்பெக்டர். ”உன் புருசன் பேரு என்னாடி” கடற்கரை கேட்டார். ”செவத்தியாருங்க” என்றாள். ”பாருங்கய்யா இவ இந்த மிக்கேல்பாளையம் செபஸ்தியாரு பொண்டாட்டிதான்அதான் இம்பூட்டு சலம்பு சலம்பிருக்கா” என்றபடி அவளின் முதுகில் வெறும் கைகளால் அடித்தார் ஒரு போலீஸ்காரர்.

” சாமீ அந்தாளு இல்லிங்க இவரு டிரைவருங்க” என்றாள்உன்னை ஓட்டுற டிரைவரா என்றபடியே அவிழ்ந்துகிடந்த முடியினை கொத்தாக கையினால் சுருட்டி இழுத்துக்கொண்டு கிழக்கே அந்த ரெய்டு டீம் நடந்து சென்றதுஇதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சார்லிக்கும் பெனடிக்கிற்கும் அடிவயிறே கலங்கியதுஇப்படி போலீஸ்காரர்களால் இழுத்து வரப்படும் ஃப்யூலாதான் சார்லியையும் பெனடிக்கையும் அவர்களுக்கு அரசு இலவசமாய் ஒதுக்கியுள்ள இடத்தை காட்ட தலையாரி அழைத்து வந்த பொழுது திட்டோ திட்டென்று திட்டி விரட்டிவிட்டவள்.அவளுக்கே இந்த அடின்னாநாம போலீஸ் சொல்லித்தான் வந்திருக்கிறோம்ன்னு ஃப்யூலாவுக்கு தெரிஞ்சா நாளைக்கு இப்படி வந்து நெலத்தில நிக்ககூட முடியாம போயிடுமேபோலீஸ் காரனுங்களை நம்பகூடாதுன்னு சும்மாவா சொல்லுவாய்ங்க இது எதோ கரைச்சலுல போய்த்தான் முடியும் போலன்னு விதுக்கு விதுக்கு முழிச்சுகிட்டு நின்றார்கள்.அப்பத்தான் அந்த அதியசம் நடந்தது.

அய்யா அந்த நிக்கிற காலனிக்காரங்கள கேட்டு பாருங்கய்யாநான் வெண்டிக்கா ஒடிக்கத்தான் வந்தேன்” என்று ப்யூலா சார்லியையும் பெனடிக்கையும் காட்டினாள். 300 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்தனர் இருவரும்வேகமாக போனால் தப்பானவர்களாக இருந்தால் ஓடிவிட வாய்ப்பிருக்கு என்று கருதிய இன்ஸ்பெக்டர்இங்கிருந்தே கையசைத்தார்.

சார்லி முதல் நாளே எஸ்.ஐயுடன் பேசியுள்ளதால் ஒன்றும் ஆகாது என்கிறதால் கொஞ்சம் தைரியமாகவும் பெனடிக் லேசான அச்சத்துடனும் வந்தார்கள். ” எந்தூருடா நீங்க” என்றார் அரிஜன காலனிங்க என்றனர்.
இவளைத் தெரியுமா ‘ கொத்தாய் பிடித்திருந்த முடியுடன் ப்யூலாவின் தலையை ஆட்டி கேட்டார் மோகன்.

தெரியுங்க பெரியதனம் சவரிமுத்து அய்யாக்கு வேண்டப்பட்டவங்க

இந்த ஊரில பூராப்பேரும் அந்தாளுக்கு வேண்டப்பட்டவந்தான் – என்றார் டிரைவர் காளிதாஸ்

” நீ என்ன வேலைடா பாக்குற ” என்றார் கடற்கரை சார்லியை பார்த்து.
அவன் சூழலறியாமல் லேசா இளித்துக்கொண்டே “அதான் என்னை உங்களுக்கு தெரியும்ல சார்” என்றான்.
பொளேர் என்று கிறுகிறுத்து போகுமளாவிற்கு ஒரு அறை விட்டார்.
””கேட்டா பதிலை சொல்லுடா என்னாத்துக்கு இளிப்பு” ஒன்றுமே புரியவில்லை சார்லிக்கு ஐயாவென்று உக்காந்துவிட்டான்.

ஐயா இவனுங்க கடுக்காய் சப்ளை பண்றவைய்ங்க எனக்கு தெரியும் ஒரு தடவ தெத்துபட்டி கம்மாக்கரையில வெரட்டும் போது ஓடிட்டானுங்க என்றபடி இருவரின் சட்டையை அவிழ்த்து பின்னால் கட்டினார்.
காளிதாஸ்,கருப்புசாமி இவனுங்களை கொண்டு போய் ஜீப்பில உக்கார வையுங்ககேணி மேட்டுக்கு இவளை கூட்டிட்டுபோய் பாத்திட்டு வர்றோம் என்றபடி இன்ஸ்பெக்டரும், கடற்கரையும்ஜேம்சும் போனார்கள்.

தொடரும் )Saturday, March 29, 2014

@ 5:21 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்
சார்லியின் லூனா மொபட்டில் கடற்கரையும் சார்லியும் நகரத்தை

நோக்கி போய்க்கொண்டிருந்தனர். பசி வயிற்றைக் கிள்ளியது. ”8 மணிக்கே

வெயில் கொலை வெறியாய் அடிக்குது. இன்னைக்கு பொழுதுக்கும்

அடிக்கிற வெயிலு இப்பவே அடிச்சு முடிப்பது போல அடிக்குது”

என்றார்.ஆமாங்க சாமி ! என்று சார்லியும் ஒத்துக்கொள்ள இனி இவனிடம்

அமொதிக்கிற மாதிரி எதுவும் கேக்கக்கூடாது, எத சொன்னாலும்

வில்லுப்பாட்டுல துணையாளு மாதிரி ‘ஆமடி தங்கம்’ போடுவான்

என்று நினைத்தார். பிடிக்கும் என்றாலும் இப்போதைக்கு அவர் இருக்கும்

மனநிலையில் இது போன்ற ஜால்ரா சத்தத்தை விரும்பவில்லை. அவரின்

மனசெல்லாம் பெரியாம்பிளை ஏட்டய்யா ஏன் இப்படி செஞ்சாருன்னு

தெரியவரணும். அவருலாம் டூட்டியில இல்லாம போறது இந்த பகுதி

போலிசுக்குத்தான் சிரமம். களவு போன இடத்தை பாத்தோன்னே

சொல்லுவாரு “அய்யா பாத்தீங்களா அந்த கணக்கன்பட்டியான் பெயிலில்

வந்துட்டான் போல”ன்னு . எவன் எவன் எப்படி திருடுவான்னு

அத்தனையும் அவருக்கு அத்துப்படி. ஒரு தடவ இண்டர்-செக்கிங்

வந்த ஆங்கிலோ இந்திய டிஎஸ்பி இவரு திறமையை பாத்து என்

கூட மெட்ராஸ் வந்திடுய்யான்னு கூப்பிட்டாரு “இல்லைங்கய்யா என்

திறமையெல்லாம் இந்த பக்கத்து தெல்லவாரி நாய்ககிட்ட தான்ய்யா

வேலையாகும்” என்று மறுத்து விட்டவர்.


ஒம்போது ஒம்போதறைக்குல்லாம் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்

கொடுத்துருவாய்ங்க. நாம நேத்து அங்கின இருந்தாவாது எதாவது

சொல்லி காப்பாத்தி கொடுத்திருக்கலாம். சரி முதல்ல வீட்டில போய்

குளிச்சிட்டு பெரியாஸ்பத்திரிக்கு ஓடலாம்ன்னு முடிவு செய்தார்.

வண்டிதான் அவரோட மனசு வேகத்துக்கு ஒத்துழைக்கவில்லை.

ரோட்டின் ஓரத்தில் பனம்பழங்கள் கொத்தோடு சீந்துவாரற்று கிடந்தன.

தெக்கத்தி பக்கம் மாதிரி இங்கிட்டு பனம்பழத்தையெல்லாம் சாப்பிட

மாட்டேங்கிறாங்க. தூத்துக்குடி வள்ளியூரு செந்தூர் பக்கமெல்லாம்

இதை வச்சு இனிப்பே செய்வாங்க. இவனுங்க பாலையை சீவி கள்ளு

வடிச்சு குடிச்சிட்டு குப்புறபடுக்கத்தான் லாயக்கு.சீந்துவாரற்று கிடந்த பனம்பழங்களை பார்த்ததும் “செருப்பு

தெருவில் கிடப்பதும், சிறுக்கி சந்தில் திரிவதும் குத்துவாரற்று

குத்துவாரற்று” நேற்று இரவு ரயில் கழிப்பறையில் எழுதியிருந்த

வாசகம் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்தது . செருப்புக்கும் குத்துவார்

இல்லாட்டி போடமுடியாது, சிறுக்கிக்கும் குத்துவார் இல்லாட்டி

பொழப்போடாதுன்னு சொல்றான். கக்கூசு கக்கூசுக்கு இதுவே

வேலையா திரியுறாய்ங்க கிறுக்குப்பயலுக. அன்னைக்கு அப்படித்தான்

காசு கொடுத்து பேல்ற கக்கூசுல அந்த பக்கம் ஆம்பிளைக வரிசையில

கடைசி கக்கூசுல இருந்து இந்த பக்கம் பொம்பளைக கக்கூசுக்கு

வந்த தண்ணி பைப்ப சுத்தி ஆணியை வச்சு ஓட்டைய பெரிசு பண்ணி

பாத்திருக்கான் ஒருத்தன். அவனை புடிச்சாந்தாய்ங்க. ஏண்டா கால் இஞ்ச்

ஓட்டை வழியா மசுருகூட தெரியாதே எதுக்குடா இந்த வேலைன்னு

சூத்துலேயே மிதிச்சா “அய்யா பீடி வாசனை வந்ததுங்கய்யா,

என்னான்னு பாக்கனும்ன்னு ஆவலாயிடுச்சு:ங்கிறான். ஒரே நாள்

எப்படிடா அவ்வளவு நீள சொவத்துல ஓட்டை போட்டேன்னு கேட்டா 40-

50 நாளா டெய்லி கொஞ்சம் கொஞ்சமா நோண்டினேன்னான்.


பத்து காசு கக்கூசு அது . காசு கொடுத்து போறதுன்னாலும்

ஒரு அளவு இருக்கில்லையா போனவன் அரை மணி நேரமா

காணாமேன்னு கூப்பிட்டு பாத்திருக்கான். தட்டியும் பாத்திருக்கான்,வேற

வழியில்லாம கதவுல எட்டி பாக்கும்போது அய்யா ஆயிரத்தில் ஒருவன்

நம்பியாரு குழாய் பைனாக்குலரில பாக்குறது போல பொம்பளைக

கக்கூசை பாத்த்திட்டு இருந்துருக்கான். அங்ககே பொடனில நாலு

போட்டு வெரட்டி விடவேண்டிதானே பெரிய மனோகர சிவாஜிய

புடிச்சாரா மாதிரி இந்த வெண்ணைக்கு நாலைஞ்சு பேரு. போங்கடா

பொழப்பத்தவய்களான்னு விரட்டியதும் நினைவுக்கு வந்தது.”யோவ் நேரு, இவனை பி.எஸ்.ஆர் சர்ச் பண்ணி அண்ணாகயித்த

அத்து ஒக்கார வையி.. இவன் பேருல என்ன சுதந்திர போரட்ட

கேஸா போடமுடியும், தண்ணிய போட்டு அநாகரீகமா பேசுனான்னு

நியூசென்ஸ் கேஸை போட்டு கோர்ட்டுக்கு அனுப்பிவுடு””காசு வச்சிருக்கியாடா முன்சீப் அய்யா 20 – 30 ரூவா அவரு மூடை

பொறுத்து பைன் போடுவாருன்னு” கேட்டபடியே கான்ஸ்டபிள் நேரு

அவனது சட்டை டவுசர் பைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.


அய்யா இவன்கிட்ட இதாங்கய்யா இருக்குது என்று கைவிரித்து

காட்டினார் நேரு. 20 காசு ஐந்தும் 10 காசு ஐந்தும் மூன்று

வாரயிதழ்களில் கிழிக்கப்பட்ட தாள்களும் இருந்தன.


ஒரு தாளில் ”யோக்” பாடி பிரா விளம்பரம். ஒரு பெண் பாடியுடன்

நின்றிருந்தாள். மற்றொன்றில் இரட்டை ஜடை போட்ட ஒரு பெண்

ஊஞ்சலாடும் தொடர்கதை ஒன்றின் ஓவியம். இன்னொன்றில்

ஒய்.கே.சரோஜா என்கிற நடிகை அம்மனாக நடித்த படத்தின் ஸ்டில்

இருந்தது. ’ ரெண்டு ரூவா அம்பது காசுதான் இருக்கு, ரீமாண்ட்தாண்டி,

நீ போயி ஜெயிலில் களி தின்னுகிட்டே கக்கூசில ஓட்டை போட்டு

ஒண்ணுக்கடிக்கிறத சீன் பாத்த கதையை சொல்லு’ என்றபடியே இந்த

படத்தயெல்லாம் எதுக்குடா வச்சிருக்கிற என்றார்.


 இல்லங்ய்யா எப்பையாவது எடுத்து பாத்துகுவேய்ங்க என்றான். “

அய்யா, இவனை விசாரிட்டேன், பஸ்ஸ்டாண்ட சுத்தியிருக்கிற தெருவோர

ஓட்டலில எல்லாம் ராத்திரி பாத்திரம் வெளக்கி கொடுக்குறானாம், இவன்

பட்ட பெயரு கைமூட்டி கந்தசாமியாம்”ஓகோ அப்ப இந்த படமெல்லாம் அய்யா அப்பகைப்ப ’கரவேல் போற்றி’

பாடத்தானா, பாடி பிரா வெளம்பரம் சரி , இது எதுக்குடா பொண்ணு

ஊஞ்சலாடுறது. அத பாத்து என்னாவப்போவுது.


இல்லங்கய்யா ஒருதடவ சொந்தகார பொண்ண ஊஞ்சலாட்டிகிட்டு

இருந்தேன், அப்பத்தான் மொத மொத விசுக்குன்னு காத்துல பாவாடை

தூக்கனப்ப பாத்துபுட்டேன். அதனால தப்பான வேலை செய்யும்போது

ஞாபகம் வர்றதுக்காக இந்த படம் வச்சிருக்கென்.


குபுக்கென்று சிரிப்பு வந்தது. இது போன்ற அனுபவம் கடற்கரைக்கும்

ஒரு ஓடையொன்றில் ஏற்பட்டிருக்கிறது. குளித்து விட்டு எழுந்த ஒன்று

விட்ட அக்கா கையிலிருந்து விழப்போன துவைத்த துணியை பிடிக்கும்

முயற்சியில் வாயில் கவ்வியிருந்த பாவாடையை விட்டுவிட ஈர

உடம்பில் வெயில்பட்டு தகதகக்கும் பெண்ணின் மேனிதான் தெரிந்தது

உறவு முறையெல்லாம் மூளைக்கு எட்டவில்லை.


அதென்னாடா மூணாவதா சாமி படம், செய்யறதை செஞ்சிட்டு தலைய

செரச்சிட்டா போதுங்கிற மாதிரி மன்னிப்பு கேக்கவா என்றார் கடற்கரை.

'இல்லைங்க இந்த படம் ஒரு நாளைக்குன்னா அது ஒரு நாளைக்கு "

என்று கைமூட்டி கந்தசாமி சொல்லிக்கொண்டிரும்போதே நேரு போலீஸ்

லத்தியால் அவனின் முதுகில் அடிக்க ஆரம்பித்தார்.


” ஏண்டா கை அடிக்கிறதே தப்பு இதுல அம்மன் வேஷத்தில இருக்கிற

பொம்பிளை படத்த பாத்து வேற அடிப்பியான்னு” சுத்தி சுத்தி வந்து

அடித்துக்கொண்டிருந்தார்.


தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசார் விசாரணையின் போது

அடித்தால் கடற்கரை தடுப்பதில்லை. தடுத்தால் பின்னர் வேறு

விசாரனைகளின் போது ஒத்துழைக்கமாட்டார்கள். கடற்கரை

விசாரித்துக்கொண்டிருக்கையில் கைக்கடிகாரத்தை மேலேற்றினால்

பக்கத்தில் நிற்கும் போலீசார் அடிக்க வேண்டும் என்பது அந்த

கச்சேரியில் விதி. அது போல அவருக்கு கீழான போலீஸ்

அடித்துக்கொண்டிருக்கும் போது தடுக்ககூடாதென்பதும்

எழுதப்படாத விதி. தடுத்தால் இன்ஸ்பெக்டர் அய்யா நல்லவரு அந்த

போலீசுகாரன்தான் அடிச்சுகிட்டே இருந்தான் என்று பேச்சு கிளம்பும்.  ரொம்ப

ஓவராக போகும் போது மட்டும் ,  செத்துற போறாய்ன்யா என்பதான் கோர்ட்

வேர்ட், அப்பவும் அடி உடனே நிக்காது கொஞ்சம் கொஞ்சமாகத்தான்

குறையும்.


நேரு போலீஸ் சாமியாடி, அந்தாளு குலதெய்வம் கோயிலுல இவருதான்

பூசாரி வேற. மாசி செவன் ராத்திரிக்கு 21 நாளைக்கு முன்னாடி

இருந்தே கையில கங்கணம் மாலைன்னு ஸ்டேசனையும் சாமியார்

மடம் மாதிரி ஆக்கிருவாங்க. கூட தொணைக்கு பெரியாம்பிளையும்

சேர்ந்துகுவாப்ல. அந்தாளும் நேரு போலீசும் சாமி கும்புடற வகையில

மாமன் மச்சினைங்க. இதுல பெரியாம்பிளை பொண்டாட்டி பக்கம் பெரிய

கூட்டம் செய்முறை செஞ்சே தாலியந்து கெடக்குறாப்ல.


சின்ன போலீசு அடிக்கிறதை நிப்பாட்ட ஒரே வழி யோவ் அங்கிட்டு

கூட்டிட்டு போய் விசாரிங்கய்யான்னு சொல்லுறதுதான். அதுதான்

சிக்னலு. ஆனாலும் அவன் அந்த அம்மன் வேஷம் போட்ட நடிகையோட

படத்தையும் பாடி பிரா வெளம்பர மாதிரிதான்னு அந்த நேரத்தில

பயன்படுத்துறேன்னு சொன்னது கடற்கரைக்கு வியப்புத்தான் வந்தது.


இருக்காதா பின்ன பஸ் ஸ்டாண்டில பாத்திரம் வெளக்குற வெம்போடுக்கும்

டிகிரி முடிச்சி வேலைக்கு சேர்ந்து எஸ்.ஐயிலிருந்து இன்ஸ்பெக்டரான

தனக்கும் ஒரே ரசனை .இதை எந்த வகையில் சேர்ப்பது.


அன்னைக்கு ஒரு நாள் வடக்கே இருந்து மத்திய அமைச்சரும் அவரு

பொண்டாட்டியும் கொடைக்கானலுக்கு வந்து காஷ்மீரத்து சிங்கம்

வீட்டுச்சிறையாக அடைக்கப்பட்டிருந்த கோஹினூர் மாளிகையில்

தங்கி விட்டு டிரெய்ன் ஏற கொடைரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு

வர இருந்தனர். பந்தோபஸ்துக்காக திடீரென்று கடற்கரையை போக

சொல்லி மைக் ஒன்னிலிருந்து வயர்லெஸ்ஸில் தகவல். மைக்

ஒன் என்பது பெரியய்யா ஆபிஸு வயர்லெஸ். மைக் டூ என்பது

பெரிய்யாவொட வயர்லெஸ். போதையில சகதியில பொரள்ற

எருமையாட்டம் பொரண்டுகிட்டு இருந்தாலும் எந்த போலீஸ்காரனுக்கு

“மைக் ஒன் காலிங் “ என்றோ மைக் டூ காலிங் என்றோ வயர்லெஸின்

குரல் கேட்டால். சட்டுனு பூராப்போதையும் வடிஞ்சிடும். விவிஐபி

விசிட்டுக்குலாம் இப்படித்தான் திடீர்ன்னுதான் பந்தோபஸ்த் டுயூட்டி

போடுவாங்க. முன்னக்கூடி சொன்னா எதும் சதி செயலுக்கு துணை

போயிருவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஆனா ஸ்பாட்டுக்கு எஸ்.பி

இன்ஸ்பெக்டர், ( எஸ்.பி இன்ஸ்பெக்டர் என்பவர் எஸ்.பிக்கு மட்டும் பதில்

சொல்லும் கடமைப்பட்டவர் )  ரிசர்வ் போலீசுலாம் மொதல்லவே

போயிருவாங்க.

பெரியய்யாவுக்கு நம்பிக்கையான ஆளுதான் எஸ்.பி இன்ஸ்பெகடராக

இருப்பாங்க.

கடற்கரையை பந்தோபஸ்துக்கு போக சொல்லி வயர்லெஸ் தகவல்

வந்த அடுத்த நிமிசமே விஐபி எஸ்கார்ட் வண்டியில இருந்து

வயர்லெஸ் தகவல் வந்தது “வத்தலகுண்டு பாஸிங் ஓவர்” என்று.

ஏன்யா சின்னாளப்பட்டி ஸ்டேசன் இன்ஸ்பெகடர் என்ன வயசுக்கு

வந்திட்டானாமா, அவன் ஸ்டேசனிலிருந்து கொடைரோடு பத்து கிலோ

மீட்டருதானே, இங்கிருந்து 25 கிலோமீட்டரு இப்பவே வத்தலகுண்டு

தாண்டிட்டாய்ங்களாம், நம்ம உசிரத்தான்யா வாங்குறாய்ங்க என்ரு

டிரைவரிடம் அலுத்துக்கொண்டே ஜீப்பில் ஏறினார்.

கொடைரோடு ரயில்வே ஸ்டேசன் போனா பெரிய கூட்டமெல்லாம்

ஒன்ணுமில்லை. பெருசுகளா நாப்பது அம்பது பேரு இருந்தாங்க தாமிர

பட்டயத்துக்கு மனுக்கொடுக்க நின்னுகிட்டு இருந்தாங்க. மந்திரி

ரயிலுக்கு 2 நிமிசம் முன்னாடிதான் வந்தார். மந்திரி அஞ்சு அஞ்சரை

அடி இருப்பாரு, அவரு பொண்டாட்டி 6 அடிக்கு மேல இருக்கும்

கடற்கரைய விட உயரம்.

டிரையினில் ஏத்திவிட்ட பிறகு பென்சன் கேட்டு மனுக்குடுக்க வந்திருந்த

தியாகி ஒருத்தர் “ மினிஸ்டர் பொண்டாட்டி நல்ல கெடா சிறுக்கியா

இருக்கா, இவளை கட்டி மேய்க்கலாம் நமக்கு சத்து பத்தாதுப்பா, குண்டிய பாரு நல்ல பிரியாணி தேக்சாவாட்டம்  ” என்று

சொல்லிட்டே போனத கேட்டு ஆச்சரியமா ஆகிப்போனது. கிழடு

தட்டி தடுமாறி நடந்து போகும் தியாகி நினைத்ததைதான் நல்ல

ஓங்குதாங்கான ஆளான கடற்கரையும் நினைத்தார். பிடித்த பென்ணிடம்

ஒரு நிமிடம் மனதுக்குள் வாழ்ந்துவிடும் கெட்டபழக்கம் கடற்கரைக்கு

இருந்தது. அன்று தன்னை போன்ற மற்றொருவரை கண்டார்.


சரி சரி ! நீ எந்த ஊருடா’ என்று கைமூட்டி கந்தசாமியிடம் கேட்டார்.

படுகளம் அய்யா என்றான்.

ஊராளியா ?

ஆமாங்கய்யா…

 சரி இனிமே இங்கதான் இருக்கனும். தெனமும் ஸ்டேசனை கூட்டி

பெருக்கி வெள்ளிக்கிழமையாச்சுன்னா கழுவியுடனும் . போலீசார் டீ கீ

வாங்கியாரச் சொன்னா வாங்கியாந்து துணைக்கு இருக்கனும். சம்பளம்

தர சொல்லுறேன். யோவ் ஊட மாட வேலைக்கு வச்சுக்கங்க என்று

நேருவிடம் கந்தசாமியை கூட்டிட்டு போக சொன்னார். கந்தசாமியை

கடவுளை நினைத்து கையடிப்பவனாடா நீ என்று கொலைவெறியுடன்

முறைத்தவாறே அழைத்து போனார் நேரு போலீஸ்.


நடந்து போனாவனின் நடையை பார்த்து “டேய் இங்க வா ! அது

என்னாடா நெளிஞ்சுகிட்டே நடந்து போற “ன்னாரு

ரயிலிலே இருந்து கிழ விழுந்து இடுப்பில அடிவுழுந்து இப்படியாகி

போச்சுங்கய்யா என்றான்.

’சரி போங்கள் நெளிசல்’ என்றார் கிண்டலாக. இப்படித்தான் கைமூட்டி

கந்தசாமியின் நாமகரணம் நெளிசல் என்று மாறியது.


நிறுத்து நிறுத்து என்றார் சார்லியிடம். யாகப்பன்பட்டி போஸ்டாபீஸ்

வாசலில் இறங்கி உள்ளே போனார். போஸ்டாபீஸும் அதுதான் மாஸ்டர்

வீடும் அதுதான். சார்லி சத்தம் கொடுக்க மாஸ்டர் உள்ள இருந்தவாறே

எகத்தாளமாக என்ன என்று கேட்க இன்ஸுபெக்டர் அய்யா வந்திருக்காக

என்று கத்தினான். போஸ்டல் துறையிலும் இன்ஸ்பெக்டர் உண்டு

என்பதால் தடால்புடால் என ஓடி வந்தார் மாஸ்டர். வந்து கடற்கரையை

பார்த்து நிம்மதியானவர். சார் வாங்க, வாங்க என்று நாற்காலியை தானே

போய் தூக்கிவந்து துண்டால் தட்டி உட்காரச்சொன்னார்.


ஒரு போன் பண்ணனும் என்று கடற்கரை சொல்லவும் இடுப்பிலிருந்த

சாவியை எடுத்து போஸ்டாபிஸை திறந்தார். வீட்டுக்குள் போயும்

போகலாம். சார்லியை பார்த்தவுடன் இந்த வழியை திறக்கிறார் என்று

கண்டுகொண்டார்.


வீட்டு டெலிபோன் எண் 123 என்று இருந்தது ஒரு சௌகரியம்

மறக்கமாட்டோம். பழைய எண் 23 என்று இருந்தது. இதுதான் சுலபம்

ஒன்னு ரெண்டு மூணு சொல்லிகிட்டே டயல் செய்தார்.


மகனிடம் விபரங்கள் கேட்டுவிட்டு பெரியாஸ்பத்திரி நம்பர் கேட்டு

வாங்கி அங்கு டயல் செய்தார். பி.எம் ரிப்போர்ட் பெரிய டாக்டர்

கையெழுத்துக்காக வச்சிருக்கு, அவரு காலையிலதான் வருவாரு.

இன்னைக்கு மதுரை பெரியாஸ்பத்திரில ஆப்பரேஷனாம் அங்க

போயிருக்காரு என்று தகவல் கிடைத்தது.


அப்பாடா என்று இருந்தது. கொஞ்சம் நிம்மதி .


ரெண்டு ரூபா ஆச்சுங்க, ஆனா வேணாம் என்றார் போஸ்ட் மாஸ்டர்

ஏன்யா நோணாம் கஞ்சா கிஞ்சா விக்கிறீயா என்றார் பேண்டில்

தூளாவிக்கொண்டே.


இரண்டு ஒரு ரூபாய் எடுத்து சார்லி கையில் கொடுத்து மாஸ்டர்

கையில கொடுய்யா என்றபடி வெளியே வந்தார்.

பின்னாடியே வந்த சார்லியிடம், இங்க எங்கன சாராயம் விக்கிறாய்ங்க

என்றார்.


அய்யா… ஊருக்கு வெளிய விக்கிறாய்ங்கய்யா


வாய் மாத்த என்ன வைச்சுருக்காங்க


மொளகா வத்த கொழம்பும் அவிச்ச வாத்துமுட்டையுங்கய்யா


சரி போஸ்ட் மாஸ்டர் வீட்டில ஒரு சொம்பு வாங்கிட்டு போயி நான்

கேட்டேன்னு சொம்பு நிறைய சாராயம் வாங்கிக்க, ஏய்ம் பேர சொல்லி

நீயும் சாப்பிட்டுக்கா ரெண்டு முட்டையை அறுத்து மொளகா குழம்பு

ஊத்தி வாங்கிட்டு வா !

( தொடரும் )

Friday, March 28, 2014

@ 4:44 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்
வெள்ளோடு ரயில்வே ஸ்டேசனில் மீதமாகி போன தண்டவாளத்தின் நடுவே வரும் மர ரீப்பர் கட்டையால் செய்யபட்டிருந்த பெஞ்சில் அந்த காலை வேளையிலேயே புறமண்டையில் சுள்ளென்று அடிக்கும் வசந்தகால வெயிலில் அமர்ந்திருந்தார் கடற்கரை.

பாண்டியன் வெள்ளோட்டில் எப்போதும் நிற்காது. அன்று எதோ சிக்னல் கிடைக்காமல் வேகத்தை குறைத்திருக்கிறான், இறங்கிவிட்டார், அங்கிருந்து மெயின்ரோட்டுக்கு 2 மைல் இருக்கும் ஊருக்கு பஸ் ஏறனும்ன்னா மெயின் ரோட்டுக்குத்தான் போகனும் . கள்ளச்சாராய தடுப்பு பிரிவில் எஸ்.ஐயாக இருந்த போது இந்த பகுதி சாராய வியாபாரிகளை கடையோ கடையென கடைந்து வெண்ணை திரட்டியிருக்கிறார்

ரெய்டின் போது மாட்டிய வியாபாரிகளை ஊறல் பானையை தலையில் தூக்கி வைத்த படியே 8 மைல் இருக்கும் ஊரக காவல் நிலையத்திற்கு நடக்க வைத்தே அழைத்துச்செல்வார். ” என்னை அடிச்சுகூட கொன்னுக்கோ, பிட்டு நவர முடியாது”ன்னு யாகப்பன்பட்டி மேட்டில தலையில இருந்த பானையை டொப்ன்னு போட்டு உடைச்சிட்டு படுத்துகிட்ட சேவியரின் காதுல எதோ சொன்னார். அவன் சாவி கொடுத்த பொம்மையாட்டமா எந்திரிச்சு “அய்யா, சாமி சாமி அப்பிடி கிப்பிடி எதும் செஞ்சுடாதிங்கய்யா”ன்னு கையெடுத்து கும்பிட்டு உடைஞ்ச பானை ஓடுகளை பொறுக்கி தலையில் வச்சுகிட்டு மறுபடியும் ஸ்டேசன் இருந்த தெச பக்கம் நடக்க ஆரம்பிச்சான் .


சும்மா என்னேரமும் லத்தியெடுத்து சளார் சளார்ன்னு அடிச்சுகிட்டே இருந்தா காவாலி போலீசுன்னுதான் பேரு வாங்கனும். புத்தியையும் அப்பைக்கப்ப பயன்படுத்தலன்னாக்கும் மரியாதையில்லை. இப்ப பாருங்க சேவியரு காதில “நீ நல்ல சாதிமான் தானே, உன் கன்ணெதிரே உன் வூட்டுக்குள்ள சாராயம் இருக்கான்னு அந்தோணி போலீச விட்டு சர்ச்சிங் பண்ணவுடுவேன்”னு சொல்லவும் நடந்து செத்தாலும் பரவாயில்லைன்னு லொங்குடி லொங்குடின்னு சேவியர் போறதை.

அந்தோணி போலீஸ் என்பவரும் மனிதர்தான், அதிலும் அமைதியானவர். போலீஸ் என்றாலும் யாரையும் தேவையில்லாம அடித்து பார்த்ததில்லை, அதிகபட்சம் சத்தம் போடுவார் அவ்வளவே. அவர் சேவியருக்கு கீழான சாதி அதனாலாத்தான் கெரண்ட தொட்ட மாதிரி இம்புட்டு வெறப்பா போறான். ஆனா பத்து கி.மீ வழியிலிருக்கும் ஊர்களில் எல்லாம் அவன் டவுசருடன் வருவதையோ, ஒவ்வொரு கிராமத்திற்குள் நுழையும் போது லத்தியை சுழற்றி சுழற்றி பின்பக்கத்தில் ”இனிமே சாராயம் விப்பியா, விப்பியா “ என்ற கேள்வியோடு அடிவிழும் போதெல்லாம் “செய்யமாட்டேன்யா செய்யமாட்டேன்யா” என்றலருவதை ஊர் மக்கள் 
எல்லாம்வேடிக்கையாய் பார்ப்பது பற்றி துளியளவு எண்ணமில்லை, அவனைப் பொறுத்தவரை ஊரறிந்த அந்தோணி போலிஸு தான் வீட்டுக்குள்ள வரக்க்கூடாது.

போலீஸ் என்றால் இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் வஞ்சத்தோடு நடந்து கொள்ளவேண்டும். அவரை பொறுத்தவரைக்கும் சாதி ஒரு நல்ல ஏற்பாடு, கீழ இருப்பவனுக்கு அவனை மதிக்கிற மாதிரி ஆக்ட் கொடுக்கனும், மேலே இருப்பவனுக்கு லைட்டா பம்முற மாதிரி காட்டிகிட்டா போதும். ரெண்டு பயலும் சலாம் போடுவானுக. போலீசில் அப்படியல்ல மேல இருப்பவனுக்கு பம்மோ பம்முன்னு பம்மனும். கீழ இருக்கிறவன நாயினும் கீழ நடத்தனும்.

அன்னைக்கு அப்படித்தான் டிஎஸ்பி தோட்டத்துக்கு ஆட்டு புழுக்கை ரெண்டு லோடு அடிக்கனும்ன்னு சொல்லிருந்தாருன்னு ரெண்டெல்லைப்பாறை போயி ( போலீசில் இது போன்ற வேலையெல்லாம் சாதாரணம் – குண்டி மட்டும் கழுவிவிட சொல்லமாட்டாய்ங்க அந்தளவுக்கு சேமம் ) பேசி மாட்டு வண்டியேத்திவுட்டு வரும்போது பெனடிக்கும் சார்லியும் நடந்து வந்துகிட்டு இருந்தாய்ங்க.

இந்த பெனடிக்கிற்கும் சார்லிக்கும் பஞ்சமி ஜாரில கவர்மெண்ட் ஆளுக்கு முணு ஏக்கரா கொடுத்திருக்கு. அன்னைக்கு இத அளந்து கொடுத்த கணக்குப்புள்ளையும் சர்வேயரும் என்ன கணக்கில இந்த இடத்தை ஒதுக்குனாய்ங்களோ ரெண்டு பேரு இடமும் இப்படி குடியானவுக நிலத்துக்கு மத்தியில மாட்டிக்கிச்சு. அரசாங்கம் அவர்களுக்கு கொடுத்த இடத்துக்கு போறதே நரகல் மத்தியில பெருவிரல்களினால் கவனமா தாண்டித்தாண்டி நடந்து போற மாதிரி ஆகிப்போச்சு. நெரந்தர வெவசாயம் செய்யக்கூடாது, வெங்காயம், கடலைன்னு ஆசையா போட்டப்பலாம் விதைச்ச காட்டில மாடவுட்டு உழுதுப்புடுவாங்க. யாரு மேல பிராது சொல்லி என்ன பிரியோசனம். யாரு நல்லது கேக்கனுமோ அவருதான் செஞ்சிருப்பாரு.

ஞாயித்துகிழமை பூசை முடிச்சிட்டு போன சாமியாரு பின்னாடியே போய் ’அய்யா இப்படி அந்த சவரிமுத்து பெரியதனக்காரர் இப்படி பண்ணிட்டாக, கேட்டா இருநூறு குழி எனக்கு நெலம் இருக்கு நடுவுல என் கோவணத்து அளவுல வச்சிருந்தா யாருக்கு பிசாசே தெரியும், போ போயி ஓசியில கொடுத்த கவருமெண்டுகிட்டயே திருப்பி கொடு’ன்னு வெரட்டிவுட்டுடாருங்க என்று பிராது சொல்லிருக்கின்றனர்.

ரெண்டு பேரையும் உற்று பார்த்த சாமியார், ”பெனடிக்கு, குருமாரா படிச்சி வந்தோனே என்னை மொதல்ல அந்த பங்குகிற்குதான் பொறுப்பா போட்டாங்க. ஆர்ச் பிஷப் ஆபிஸுல யாரோ அந்த ஊருக்காரங்க இருப்பாங்க போல. அங்கேருந்து இங்க சொல்லி இந்த ஊருக்காரங்க லாரி புடிச்சு திருச்சிக்கே வந்து இந்த சாதிக்கார சாமியாரத்தவிர குடியான சாமியாருல யாரை வேணுமின்னாலும் போடுங்க இல்லைன்னா நாங்க மதம் மாறிடுவோம்ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம்தான் இந்த பங்கிற்கு வந்தேன். அவங்களுக்கு சேசப்பன் இப்படி தாழ்வான சாதின்னு தெரிஞ்சா மறு நிமிசமே அவரை தூக்கி போட்டுருவாங்க. உங்களுக்காக அந்தோணியப்பனை வேண்டுறேன், அவரு நமக்காக கடவுள்கிட்ட துதிப்பாரு” என்று அனுப்பி வைத்தார்.


புல்லட்டை நிறுத்தி இருவரையும் விசாரித்தார். மலையடிவாரத்தில் இருக்கும் கொழும்புக்கார பாய் தென்னந்தோப்பில் தென்னைமரத்துக்கெல்லாம் பழுது நீக்கி எரு வைத்துவிட்டுருவதாக சொல்லவும். வண்டியில் ஏறச்சொல்லி ஸ்டேசனுக்கு அழைத்து வந்தார். வரும் வழியில் மேற்சொன்ன சுயபுராணத்தை கடற்கரையிடமும் சொன்னார்கள். “அய்யா எங்களுக்கு கொடுத்த இடத்தை விக்கவும் முடியாதாமுல்ல, நாய் தேங்கா வச்சுகிட்டு உருட்டினமாரி இன்னும் 30 வருசத்துக்கு ஒண்ணு செய்ய முடியாதமுல, உண்மைகங்களா “ என்றனர். ஸ்டேசனும் வந்துவிட்டது.

ஸ்டேஷன் பின்னாடி அஞ்சு ஆறு மரம் இருக்கு ஏறி பழுது பாத்துட்டு எதுத்த புளியமரத்து கடையில் ஸ்டேசனில் சொல்லிவிட்டதா சொல்லி இட்டிலி சாப்பிட்டு வந்து வாசலில் ஒக்காந்திருங்க “ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

திரும்பி வந்த கடற்கரை அவர்களை உள்ளே வரச்சொன்னார். வேறு வேலையாக என்றாலும் காவல் நிலையத்துக்குள் போகும் போது பெனடிக் சார்லி போன்ற அப்பாவிகளுக்கு தானக கைகள் மார்பின் குறுக்கே போய் முதுகு சற்று குனிந்து விடுவது அவருக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவரின் மேலதிகாரியை பார்க்கப் போகும் அவரின் முதுகும் லேசாக கூன் விழுந்துவிடும். அங்கு அடிக்கும் சலாம்களை எல்லாம் இங்கு வந்து அவருக்கு கீழான நபர்களிட்ம் மீட்டெடுத்துக்கொள்வார்.

தரையைக்காட்டி இருவரையும் உக்காரச்சொன்னார். ”இங்க பாருங்க இப்ப ஒரு வெவரம் சொல்லுறேன் அதுபடி செய்யுங்க அப்பத்தான் உங்க நெலத்துக்கு போயி வெள்ளாமை வைக்கலாம், ஆனா என்னைய நம்பணும் என்னாங்கய்யா சொல்லுறீங்க”

சாமி, கடவுளாட்டம் நல்லது செய்யுறேங்கிறீங்க , இதுக்கும் கீழ என்ன கேவலப்பட்ட பொழப்புயா பொழச்சிட போறோம் சொல்லுங்க சாமீ “ என்றனர் இருவரும்

அந்தூரு பெரியதனம் சவரிமுத்து தோட்டத்தில கிழக்க இருக்கிற கேணிக்கு பக்கத்தில மிக்கெல்பாளையம் செபஸ்தியாரு ஊறலு போட்டிருக்கிறானாம். நான் ரெய்டுக்கு வருவேன் நீங்க உங்க நெலத்தில நில்லுங்க. ஊறலு எடுத்து அடுப்பு போட்டு வடிக்கிற வரைக்கும் எப்படியும் நோனி மகேன்ங்க யாரும் பக்கத்தில இருக்க போறதில்லை. உங்களை புடிச்சு ஊரில பாக்குற மாதிரி அடிச்சு இழுத்துகிட்டு வர்றேன்,” என்றார்.
சரிங்கய்யா ஜெயிலுக்கு ஏதும் அனுப்பிடாதீகய்யா, கண்ணு விடுக்காத பொட்டபுள்ள வச்சுருக்கேன் என்றான் சார்லி.

யோவ் ஒரு மாசம் உள்ள போகாம உங்க நெலத்துல நீங்க பீக்கூட பேலப்போவ முடியாது. சொல்லறத ஊளுன்னு கேளு இல்ல தலைக்கு ரெண்டு பிட்பாக்கெட் கேசு போட்டு இப்பவே ரிமாண்ட்டு அனு[ப்பிடுவேன்” கடற்கரை சட்டென்று போலீஸ்காரனாகினார் .

அய்யா அதுக்கு இல்லய்ங்கய்யா… என இழுத்தனர்.

நாஞ்சொன்னா நல்லதுக்குதான்யா சொல்லுவேன் – என்னைய யாருன்னு நெனச்ச என்ற படி சிகரெட்டுக்கு தீப்பெட்டி தேடி ரைட்டர் ரூமுக்கு போய்விட்டார்.

சார்லீ “யோவ் மாமா, அய்யா நம்மாளுகளா இருப்பாரா.. நமக்கு நல்லது யோசிக்கிறாரு” என்றான்

நேத்து முள்ளொடிக்க போறப்ப, வனத்து சின்னப்பருக்கு முழந்தாளில கோயில சுத்தி வந்து தென்னம்பிள்ளை வைக்கிறேன் என் நிலத்தில ஒரு நா ராத்திரி தூங்கினா போதும்ன்னு வேண்டினேன்” அவருதான் இவர அனுப்பிருக்காரு சின்னப்பரே தோத்திரமய்யா”என்றான் பெனடிக்.

நீராவி ரயிலிஞ்ஜின் மாதிரி முகம் எல்லாம் புகை கவிழ வந்தார் கடற்கரை.

நாளைக்கு 7 மணிக்கு வருவோம் நீங்க ரெண்டு பேரும் அங்க இருங்க புடிச்சாந்து கடுக்கா கேஸ் போட்டு உக்காரவைக்கிறேன். அப்புறம் பாரும் உங்க பிரச்சினை தன்னால முடிவுக்கு வரும் என்றார்.

கடுக்காய்ங்கிறது சாராய ஊறலுக்கு பட்டை, நாட்டு சர்க்கரை எவ்வளவு முக்கியமான பொருளோ அது போல இதுவும் . ஆனா கையளவு வச்சிருந்தா கேஸ் இல்லை மூட்டை கணக்கில வச்சிருந்தா வழக்கு போடலாம்.

சாமி, ஒரு வா ஒரே ஒரு வா என் நெலத்தில எடுத்த கம்புல கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு செத்து போயிருனும் சாமி “ சார்லி தேம்பினான்.

அதுலையே போட்டு பொதைக்கிற மாதிரி வழி பண்ணுறேன் போயிட்டு வா” – சோகமான சினிமா பாட்டுக்கே கண்கலங்கிவிடும் கடற்கரையின் இயல்பை காவல்துறை வடித்து எடுத்திருந்தது

அவர்களுக்கு கையில் காசிருந்தாலும் நிலம் வாங்கும் உரிமையில்லை ஆயிரமாயிரம் வருடங்களாக. அதை அவனால் தெளிவாககூட சொல்ல முடியவில்லை. ஒரு நாளேனும் தனக்கு சொந்தமான நிலத்தை ஆண்டுவிட்டு செத்துவிட ஏங்கும் ஆயிரமாண்டு ஏக்கம். கடற்கரையால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் அதிலேயே நெகிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக வறட்டு கேலி பேசி அடுத்த பேச்சுக்கு போய்விடுவார்.

ஆடு மாடு உள்ளே வராமல் இருக்கு தடுப்பிற்காக பாண்டியாட்டம் போல இங்கிட்டும் அங்கிட்டுமாய் மாற்றி மாற்றி ஊன்றப்பட்டிருந்த தண்டவாளங்கள் துண்டுகளை தாண்டி ஸ்டேசனை விட்டு வெளியே வந்தார்

வெளியே ஓலைக்கொட்டாய்யில் சின்ன காபிக்கடை. காபி குடிக்ககெனும்ன்னா குத்தவச்சுத்தான் குடிக்கமுடியும் அவ்வளவு தாழ்வா இருந்தது.சாணி மொழுகிய தரை. அதும் கடற்கரை 6 அடி ரொம்ப சிரமப்பட்டு குனிந்து யாருய்யா கடையில என்று சத்தமிட்டார்.
வெளிய வந்த பெண்மணி கடற்கரையை அடையாளம் கண்டுவிட்டாள்

சேசுவே.. மொதலாளில்ல வந்திருக்காரு” என்றபடி கும்பிட்டவாரே பத்தடி தள்ளி நின்றாள்.

இவருக்கு ஒன்னும் தட்டுபடலை அவள் யாரென்று. உம் புருசனை கூப்பிடும்மா என்றார்.

மாட்டுக்கு புல்லறுக்க போயிருக்கு, இருங்கெ மகனை தாட்டிவுடுறேன் என்று 7 வயது பயலிடம் சொல்லி அனுப்பினாள்.

நீ யாரும்மா, என்னை தெரியுமா

மொதலாளி ஒங்களாலதான் நல்ல கஞ்சி குடிக்கிறோம். எங்க நெலத்தக்குள்ள கொண்டு போய் ஒக்கார வச்சிகளே சாமி “

பெனடிக் பொண்டாட்டியா ?

அய்ய இல்லீங்க சார்லி சம்சாரங்க..

சார்லி வந்து சேர்ந்தான். வெள்ளைச் சட்டை கைலி கையில டீவி மோதிரம். ம்ம்ம் லேசா மஞ்சக்கொழுப்பு பாலாடை போல இப்பத்தான் அவனுக்கு கட்ட ஆரம்பிச்சிருக்கு என்று நெனைத்துக்கொண்டார்.

இந்த சுதந்திரம் கொடுப்பவர்களுக்கு அதை பெறுபவர்களின் கண்களுக்கு தெரியாமல் ஒரு எல்லையொன்றை வகுத்திருப்பார்கள். அதை சுதந்திரம் பெற்றவர்கள் தாண்டுவதாக தெரிந்தால் அவர்களின் சுதந்திரத்துக்கு முதல் எதிரியாக அவர்கள்தான் மாறுவார்கள். சார்லியின் கூன் கொஞ்சம் நிமிர்ந்திருப்பதாக பட்டவுடன் ”எலே, தாய்லீ உனக்கு வந்த வாழ்வா, கையில மோதிரம் தோளில துண்டா” மனசுக்குள் கருவினார் கடற்கரை. 

டேய் ஊருல டிவிஎஸ் 50 வண்டி எவனும் வச்சிருந்தா எடுத்கிட்டு வரச்சொல்லு டவுணில என்னை இறக்கிவுடனும் என்றார்.

அதுக்கு ஊருகுள்ள எதுக்கு சாமி போகனும் என்கிட்டவே லூனா இருக்கு.பின்னாடி நிக்குது எடுத்தாரேன். நீங்க ஓட்டுங்க சாமி நான் பின்னால உக்காந்து வாரேன்.

உக்காரும் இடத்தில் மொளகாய அரச்சு அப்புன மாதிரி இருந்தது கடற்கரை இன்ஸ்பெக்டருக்கு. ( தொடரும் )